Advertisment

அதிர்ஷ்டமான அவிட்டம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/lucky-you-melmaruvathur-s-kalaivani

னிதனின் வாழ்வியலில் ஒவ்வொரு மணித்துளியை யும் தீர்மானிக்கும் கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 23-ஆவது நட்சத்திரமாகவும், செவ்வாயின் மூன்றாவது நட்சத்திரமாகவும் அவிட்டம் பிரதிபலிக்கிறது.

Advertisment

இது உடைபட்ட நட்சத்திரமாகவும், பெண் நட்சத்திரமாகவும், திகழ்கிறது.

இது பூமிகாரகன், சகோதர காரகன், ரத்த காரகன் என்று அனைவராலும் அறியப் பட்ட செவ்வாயின் நட்சத்திரமாகும்.

Advertisment

வேகமும், விறுவிறுப்பும், துடிப்பும் கொண்ட செவ்வாயின் நட்சத்திரமானது.

அமைதியும், ஸ்திரத் தன்மையும், பொறுமை யும் கொண்ட கர்மகாரகன் சனி வீட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இதன் தமிழ்ப் பெயர் அவிட்டம், பல தமிழ் நிகண்டுகளில் பறவை, காக்கை, புல், ஆவணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் தனிஷ்டா என்று அழைக்கின்றனர்.

செவ்வாய், சனியின் மகர ராசியில் உச்சம், உச்சத்திற்கு இடம்கொடுத்த சனியினைத் தன் வீடான மேஷத்தில் நீசமடைய வைக்கும் செவ்வாய், இது முரண்பாடான செயலாக இருந்தாலும் இதில் அநேக ரகசியங்களை அடக்கி வைத்துள்ளது ஜோதிடவியல்.

இதில் ராசிநாதன் சனி பகவானாகவும், நட்சத்திரநாதன் செவ்வாயாகவும், நவாம்ச நாதர்களாக அவிட்டம் ஒன்றென்றால் சூரியனும், இரண்டென்றால் புதனும், மூன்றென்றால் சுக்கிரனும், நான்கென்றால் செவ்வாயும் அமையப்பெறுவார்கள்.

மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு ஞான உபதே

மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு ஞான உபதேசம் செய்தது ஆவணி மாதத்தில் வரும் அவிட்டத்தில் என்கின்றது புராணம். இதனால்தான் அன்று பூணூல் மாற்றிக் கொள்வதாக ஒரு ஐதீகமுண்டு.

vv

பூதத்தாழ்வார், புதன், திருமூலர், பொதுஜன மக்களால் போற்றப்படும் மர்லின் மன்றோ போன்றோர் இந்த அவிட்டத்தில் பிறப்பெடுத்தவர்களே. இந்த அவிட்டம் சனியின் கர்மப் பதிவினைக் கொண்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத் தில் பிறப்பவர்கள் பிறப்புமுதல் வாழ்க்கை யில் இறுதிவரை சனியின் கட்டுப்பாட்டி லேயே இருப்பார்கள்.

இவர்களின் வம்சாவளியில் ஆயுள் பங்கம் ஏற்பட்டோர் இருக்க வாய்ப்புகள் அதிகம். 45, 50 வயதுகளில் இறந்தவர்கள் இந்த வம்சாவளிகளில் இருப்பார்கள். ஊனமுற்றோர்களும், நிரந்தர பணி அல்லது தொழில் அமையப்பெறாதவர்களும் இந்த வம்சாவளிகளில் இருக்கப்பெறுவார்கள்.

இவர்கள் உணவில் கசப்பு சம்பந்தப் பட்ட சுவையினை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமையும், 8-ஆம் தேதியும், இணைந்து வரும் நாளில் முக்கிய விஷயங்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்வது சிறப்பினைத் தரும்.

மேலும் இவர்கள் திருநள்ளாறு செல்வது, எல்தீபம் போடுவது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இவர்களுக்கு ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி பெரும் பாதிப்பினைத் தந்துவிடாது. ஏனென்றால் இவர்களின் கர்மப் பதிவே சனிதான். இவர்கள் எப்பொழுதுமே ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் பயணிப்பார்கள். அவர்களின் வீரமானது ஒரு கட்டுக்குள்ளேயே நின்று தனக்கு வேண்டியவற்றை சாதிக்கும் விவேகமான, வீரமாக அறியப்படுகிறது.

இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை அஷ்ட வசுக்களாகும்.

நம் வாழ்வில் பல ஜோதிடப் பழமொழிகளைக் கையாண்டவர்கள் அவிட்டத்திற்கு, அவிட்டத்தில் பிள்ளை பிறந்தால் தவிடு பானையெல்லாம் தங்கமென்று சொல்வார்கள். இது அவிட்டத்தில் பிறந்த வர்களின் விடாமுயற்சி எண்ணத்தை பறைசாற்றுகிறது.

இவர்கள் எந்த சூழ்நிலையிலும் எடுத்த செயலை முழுவதுமாக முடிக்காமல் உறங்கச் செல்லமாட்டார்கள். எனவே இந்தப் பழமொழி உருவாகியிருக்கலாம்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பார்கள். இவர்களை வைத்து கடை திறப்பது, முதல் வியாபாரம் செய்வது போன்றவை சிறப்பினைத் தரும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமைக்காலம் அவ்வளவு சிறப்பானதாக அமையப் பெறுவதில்லை.

காரணம் இளமையிலேயே வரும் ராகு தசை கல்வி கற்கும் காலத்தை தனக்கு உரியதாக்கிக்கொண்டு பல இன்னல்களையும், இடர்களையும், தரும். இவர்களால் ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வியினை சரிவர நிலைநிறுத்தி பயன்பெறுவது சற்று கடினமே. இன்னும் சில கிரகங்களின் கூட்டு மற்றும் பார்வையினைக்கொண்டு அவற்றின் சிறப்பை அறியமுடியும்.

இவர்களின் வாழ்வானது 24 வயதுக்குப்பிறகுதான் பெரும் சிறப் பினைத் தொட ஆரம்பிக்கும்.

இவர்கள் கடந்த பிறவியில் தொழிலுக்கு துரோகம் செய்தவர்கள், இந்தப் பிறவியில் தொழில் இவர்களுக்கு துரோகம் செய்யும்.

அவிட்டம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கன்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப்பெறும். இங்கு சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சனி ஆகியோரின் கூட்டு நிகழ்வதனால் அதிகாரம்மிக்க தொழில் மற்றும் பணியிடங்களில் மற்ற கிரகங்களின் நிலைக்கேற்ப இவர்களுக்கு தொழில் அமையும். பெரும்பாலானோர் அரசாங்க வேலையை எதிர்பார்த்து அதில் ஏமாற்றம் அடையும் சூழ்நிலையும் இந்த அவிட்டம் ஒன்றாம் பாதத்திற்கு நிகழ்கிறது. மகரத்திற்கு அஷ்டம ஸ்தானமான சிம்மம் நவாம்ச வீட்டில் தொடர்பு பெறுவதால், அரசு, அரசு சம்பந்தப் பட்ட நிகழ்வுகளில் சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பினைத் தரும். இந்த சனி, செவ்வாய் ஆகியோரின் கூட்டானது பொறியியல் துறையில் பெரும் சிறப்பினை எட்ட வழிவகுக்கும். மேலும் குற்றவியல் போன்ற துறைகளிலும் இந்த அவிட்ட நட்சத்திரக்காரர்கள் சிறப்படைவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

அவிட்டம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் புதனின் வீடான கன்னியில் அமையப்பெறும். இந்நிலையானது கல்வி கல்வியினால் உயர்வு, சேவை மனப்பான்மையுடன்கூடிய தொழில், தொடர்புகள் சம்பந்தப்பட்ட தொழில், தரகு, உயர்கல்வி, கதை, கட்டுரை, இலக்கியம் சார்ந்த தொழில் போன்றவை அமையப் பெறும், மேலும் பொறியியல் துறையில் பெரும் சிறப்பினை இவர்கள் அடைவதை கண்கூடாகக் காணமுடிகிறது.

அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சுக்கிரனின் வீடான துலாத்தில் அமையப் பெறும் இந்நிலையானது பயணம், பயணம் சார்ந்த தொழில், அழகியல் சார்ந்த தொழில் கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, ஆர்க்கி டெக்ட் போன்ற துறைகளில் இவர்கள் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.

அவிட்டம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும். இந்த நிலையானது அதிகாரம், அரசியல், விளை யாட்டு, ராணுவம், தீயணைப்புத்துறை போன்ற அதிகாரம் மிகுந்த, ஆளுமை மிகுந்த இடங் களில் தங்களை பொருத்திக்கொள்கிறார்கள்.

இந்த நட்சத்திரத்தின் சின்னமாக மத்தளம் மற்றும் உடுக்கை வருகிறது. எனவே பணி புரியும் தளங்களிலும், தொழில் கூடங்களிலும் இந்த சின்னத்தை லோகோவாக பயன்படுத்தி பொருளாதார உயர்வினைப் பெறலாம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள் பெரும் துன்பத்திலிருந்து விரைவாக விடைபெற எமகண்ட நேரத்தில் வன்னி இலைகளைக் கொண்டு மாலை தொடுத்து விநாயகருக்கு சாற்றிவர பெரும் இன்னலிருந்து விரைவாக விடைபெறலாம்.

வணங்கவேண்டிய தெய்வம்: எல்லை தெய்வங்கள் மற்றும் பரமேஸ்வரன்.

அணிய வேண்டிய ரத்தினம்: பவளம்.

வணங்கவேண்டிய மரம்: வன்னி மரம்.

(அடுத்த இதழில் சதயம்)

செல்: 80563 79988

bala120523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe