இப்போதைய கோட் சாரத்தில் இன்னொரு வியப்பும் உள்ளது. குரு தனுசில் சஞ்சரிப்பவர்; வக்ர மடைந்து மகரத்திற்குச் செல்வார். அங்கு குரு நீசமடைவார். ஆயினும் குரு வக்ரமடைந்தபிறகு, தனது நீச ராசியில் அமர்கிறார்.
ஜோதிட விதிப்படி, எந்த கிரகம் வக்ரமடைந்து நீசமாகிறதோ, அது உச்ச பலனைக் கொடுக்கு மெனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி தற்போது குரு உச்ச நிலையில் சஞ்சரிப்பதாகக் கொள்ளலாம். ஆக, செவ்வாய் உச்சம், குரு உச்சம் என இரு கிரக உச்ச நிலைகள். சூரியன் உச்சமெனினும் பயனற்ற தன்மையாக அமைந்துள்ளது. (செவ்வாய் மார்ச்- 23 முதல் மே 4 வரை உச்சமாக இருப்பார்.)
மகரம் என்பது கால புருஷனின் 10-ஆம் வீடு. அதில் உச்ச செவ்வாய், உச்ச குரு மற்றும் திருக்கணிதப்படி சனியும் உள்ளனர். (வாக்கியப்படி, சனி தனுசில் உள்ளார்).
10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம். அதில் இத்தகைய கிரக அமைப் புகள் இருக்கும்போது, தொழில் சம்பந்த முன்னெடுப்புகள் அதிகமாகும்.
செவ்வாய் ஒரு ராசியில் அமரும் நாட்கணக்கு 45 நாட்கள்தான். அதுவரைதான் அவர் சூரியனைப் பார்ப்பதும், உச்ச குருவுடன் அமர்ந்திருப்பது மென இருக்கும். எனவே, இந்த குறுகிய காலகட்டத் திற்குள் பெரும் விளைவுகளை சாதிக்க முடியாவிட்டாலும், சாதனைகளுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுவிடலாம் அல்லவா.
நற்பலன்கள்
எனவே தொழில் நடத்துவோர் இந்த காலகட்டத்தை (21-3-2020 முதல் 4-5-2020 வரை) பயன்படுத்திக்கொண்டு தங்களின் நீண்டகால லட்சியங்களைத் தொடங் குங்கள்.
புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோர் இக்காலத்தினைப் பயன் படுத்துங்கள்.
வீடுகளைக் கட்டி விற்கமுடியாமல் தவிப்பவர்கள் இந்நேரத்தில் முழுமுயற்சி எடுத்தால் அனைத்தும் விற்றுவிடும்.
உயர்கல்வி, பி.எச்டி எனும் முனைவர் கல்வியில் தடைகள் உள்ள வர்கள் இக்காலகட்டத்தில் முனைப்பாக செயல்படுங்கள். தடைகள் தவிடுபொடி யாகும்.
நிலத்தடியில் எண்ணெய் இருக்கு மிடமும், தங்கம் இருக்குமிடமும் கண்டு பிடிக்கப்படும்.
சில வங்கிகள் திவால் எனும் நிலை யிலிருந்து மீண்டுவரும்.
திரிகோணங்களில் மேன்மையான இடம் 9-ஆமிடம்; கேந்திரத்தில் சிறந்தது 10-ஆமிடம். எனவேதான், 9, 10-ஆம் அதிபதிகளின் சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனைகளை தர்மகர்மாதிபதி யோகம் எனக்கூறுவர். இதன்படி காலபுருஷனின் 9-ஆம் அதிபதி குருவும், 10-ஆம் அதிபதி சனியும் 10-ஆமிடத்தில் ஒன்றுகூடி, தர்மகர்மாதிபதி யோகத் தைத் தருகிறார்கள். இதில் செவ்வாய் உச்சம்பெற்று அமர்ந்திருப்பதும் பாதி நன்மை தரும் அமைப்புதான். ஏனெனில் செவ்வாய் காலபுருஷனின் 8-ஆம் அதிபதி. எனவே சற்றே இடர்ப்பாடுகள், சற்று வில்லங்கம் ஏற்பட்டாலும், உங்களின் முழுமுயற்சி நல்ல பலன்தரும். மின்சாரம் சம்பந்தமான ஒரு நல்ல மாறுதல் இருக்கும்.
கெடுபலன்கள்
எப்போதும் சனி, செவ்வாய் சேர்க்கை ஜோதிடத்தில் விரும்பத்தக்கதல்ல.
ஆயினும், இப்போதைய கோட்சா ரத்தில் செவ்வாய் உச்சமாகியும், சனி ஆட்சியாகவும், குரு உச்ச நிலையிலும் இருப்பது ஒரு அபூர்வ அமைப்புதான். ஒரேவீட்டில் இரு கிரகங்கள் உச்சமடைய வாய்ப்பே கிடையாது. எனினும் இது போல் எப்போதாவது அதிசயமாக நிகழ்வதுண்டு.
அப்படியென்றால் சனி, செவ்வாய் சேர்க்கை ஒரு கெடுதலும் செய்யாதா எனில், சற்று யோசிக்கத்தான் வேண்டும். சில நேரங்களில் கடுமையான விபத்து, நோய்த்தாக்கம், திருட்டு, பொதுமரணம், தீவிரவாத பயம், பூமி அதிர்ச்சி, நெருப்புத் தாக்கம், பூமி விரிசல் போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சனி, செவ்வாய், வக்ர குரு இருப்பது நில ராசியில். எனவே நிலத்துக்கு பாதிப்புகள் உண்டு.
இதில் இன்னொரு ஜோதிட நிலையும் ஏற்படுகிறது. வாக்கியமோ, திருக்கணிதமோ- மார்ச் கடைசி வாரத்திலிருந்து, ஏப்ரல் முதல் வாரம்வரை செவ்வாய் மகரத்தில் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
கூடவே குருவும் சனியும் அதே உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றனர்.
உத்திராடம் என்பது சூரிய சார நட்சத்திரம். சூரியன் காலபுருஷனின் ஐந்தாம் அதிபதி. சூரியனும் சரி; 5-ஆம் வீடும் சரி- ஆரோக்கியத்தைக் குறிப்பது. இவரின் பாதத்தில் செவ்வாய், சனி, குரு மூவரும் செல்வது, ஒருவிதத்தில் மக்களின் சுகக்கேட்டுக்கு வழிவகுக்கும். ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் அமர்ந்து, கிரகயுத்தம் பெற்று, நன்மையான பலன்களைக் கிடைக்கவிடாமல் செய்து விடுவர்.
மேலும், சனி நோயைக் குறிக்கும் கிரகம். மகரம் கால் மூட்டுகளைக் குறிப்பார். செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பார். குரு கொழுப்பு, குடல், ஈரலைக் குறிப்பார். சாரம் வாங்கிய சூரியன் தலை, கடுமையான காய்ச்சல், ரத்த அழுத்தம் ஆகியவை சம்பந்தமான வியாதிகளைத் தருவார்.
எனவே மகரத்தில் செவ்வாய் செல்லும்போது, மக்களுக்கு மேற்கண்ட நோய்களால் ஏதேனும் ஒருவகையில் பாதிப்பு ஏற்படலாம்.
மேற்கண்ட (தற்போதைய கோட்சாரத்தில்) கிரகங்கள் குறிக்கும் சில மருந்து வகைகள்.
சனி: நல்லெண்ணெய், பார்லி, கருப்பு நிற தானியம், எள், நிலக்கடலை, பனை.
செவ்வாய்: வேம்பு, முள் மரம், கருப்புக்கட்டி, பாகற்காய், பூண்டு, கடுகு, கொத்தமல்லி, குரு: மஞ்சள், வாழை, தேங்காய், பழம், எலுமிச்சை, தேன், வெற்றிலை, அரசமரம்.
சாரம் வாங்கிய சூரியன்: பெருங்காயம், ஏலம், பாதாம்பருப்பு, ஓமம், மிளகு, சாதிக்காய், மசாலாப்பட்டை, சில புற்கள், இஞ்சி, பூண்டு, தனியா.
ஒரு ஜோதிடர் என்ற முறையில், மக்களுக்கு ஏற்படப்போகும் நோய்களின் அடிப்படையையும், அது சார்ந்த கிரகங்களின் மருத்துவ குணமுள்ள பொருட் களையும் தொகுத்தளித்துள்ளேன்.
ஆயினும், ஒரு மருத்துவர்தான் மேற்கண்ட பொருட்களை உரிய விகிதத்தில் சேர்த்து அதனை நல்ல மருந்தாகத் தயாரித்து மக்களின் பிணிபோக்க இயலும்.
மக்களுக்குப் பணி செய்வது, மகேசனுக்கே பணி செய்வதாகும். மருத்துவர்கள் மேற்கண்ட பொருட்களைக் கொண்டு கஷாயம் போன்றவை தயாரித்து உதவவும்.
பரிகாரங்கள்
மகர ராசியில் செவ்வாயுடன் சனி, குரு சேர்க்கையின்போது செய்யவேண்டி யவை:
முருகர் வழிபாடு அவசியம். பழனி, திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற தலங்கள் சென்று வழிபடுவது நல்லது. மேலும் இந்த புனிதத் தலங்களில் மக்களின் உடல்நலன் பொருட்டு, சிறப்பு வழிபாடு, யாகங்கள், சிறப்புப் பூஜைகளை அரசே நடத்த ஆவன செய்யலாம். மகரத்தில் செவ்வாய் இருக்கும்வரைகூட செய்தால் போதும். முடிந்தால் குரு வக்ர நிவர்த்தியாவதுவரை செய்தால் மிக நன்று. 28-3-2020 முதல் சுமார் ஆறு மாதகாலம் குரு வக்ரகதியில் செல்வார்.
முடிந்தவர்கள் அனைவரும் செவ்வாய்க் கிழமை விரதமிருக்கவும்.
கந்தசஷ்டிக் கவசம், ருத்ர ஸூக்தம், ஆதித்ய ஹ்ருதயம், ஸ்ரீருத்ரம் மற்றும் சிவ புராணங்கள் பாராயணம் செய்ய, அனைவரும் பலன் பெறுவர்.
உலக நன்மை பொருட்டு, சத்சங்கங்கள் மிருத்யுஞ்ஜய ஜபம் செய்யலாம்.
பசுக்களுக்கு அகத்திக்கீரை அளிக்கவும்.
சிவன் கோவில்களில் நிறைய தீபமேற்றவும். கோவில் நிர்வாகங்கள் இதற்கான வசதியை செய்துகொடுக்கவேண்டும்.
மேல்புத்தூர் நாராயண பட்டதிரி என்பவர் வாத ரோகத்தால் மிக அவதியுற்றார்.
அவர் குருவாயூரப்பன் சந்நிதியில் பத்து சுலோகங்கள் கொண்ட ஒரு தசகம் எனும் எண்ணிக்கையில் நூறு தசகங்கள் பாடினார்.
பின் குருவாயூரப்பன் அருளால் அவரது ரோகம் தீரப்பெற்றார். இந்த செய்யுட்களே, ஸ்ரீமந் நாராயணீயம் எனப் போற்றப்படுகிறது. இது கிருஷ்ணனே இயற்றியதாகவும் சிலர் கூறுவதுண்டு. ஒவ்வொரு தசகத்தின் முடிவிலும், "என்னை நோயிலிருந்து காப்பாற்றுவாய், என்று நாராயண பட்டதிரி குருவாயூரப் பனை வேண்டுவதோடு பூர்த்திபெறும். எனவே, முடிந்தவர்கள் ஏகாதசி விரதம் இருப்பதோடு, ஸ்ரீநாராயணீயம் பாராயணம் செய்வது மிக நல்லது.
ஸ்ரீமந் நாராயண பாராயணக் குழுக் களும், சற்றே உலகமக்கள் நோயிலிருந்து விடுபட ஸ்ரீகுருவாயூரப்பனிடம் இறைஞ்சிக் கேளுங்கள். அந்த அழகு குழந்தை தெய்வம் நமது வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்.
செல்: 94449 61845