Advertisment

அதிர்ஷ்டம் தரக்கூடிய சத்தங்கள்! கவிதா பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/lucky-sounds-kavitha-balajiganesh

த்தம் என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்குவதற்கு முக்கிய காரணம் இந்த சத்தம்தான். அத்தகைய வலிமை மிகுந்த சத்தத்தில் சிலவற்றை நம் காதில் கேட்டால் மிகவும் அதிர்ஷ்டம் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது எந்தவகையான சத்தங்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

இந்த சத்தத்தை ரம்யமானது, தெய்வீகமானது

என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அது கோவில் மணியோசைதான். இந்த ஓசை உங்கள் காதில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இர

த்தம் என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்குவதற்கு முக்கிய காரணம் இந்த சத்தம்தான். அத்தகைய வலிமை மிகுந்த சத்தத்தில் சிலவற்றை நம் காதில் கேட்டால் மிகவும் அதிர்ஷ்டம் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது எந்தவகையான சத்தங்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

இந்த சத்தத்தை ரம்யமானது, தெய்வீகமானது

என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அது கோவில் மணியோசைதான். இந்த ஓசை உங்கள் காதில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அது நிச்சயம் அதிர்ஷ்டத்தை தரும். அது மட்டுமின்றி கோவில், திருமணங்களில் மீட்டப்படும் மங்கல இசை, அதுவும் அதிஷ்டத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோல் யானை நடந்து வரும்போது அதன் கழுத்தில் ஒலிக்கும் அந்த மணி ஓசை. இது உங்களுக்கு தொடர்ச்சியாக நடந்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும். இவையெல்லாம் நாம் தினமும் கேட்கும் சத்தங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது.

Advertisment

dd

சத்தங்களுக்கெல்லாம் அதிபதியானவர் சிவபெருமான். அவருக்கு பிடித்த ஒளி என்றால் அது சங்கு நாதம்தான். இந்த ஒளியானது உங்கள் காதில் விழுந்தால் அத்தனை பெரிய அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்திருக்கிறது என்று தான் அர்த்தம். இப்போதெல்லாம் சங்கு நாத ஒளியே வேறுவிதமாக கூறுகிறார்கள்.

ஆனால் சங்கு நாதம் என்பது இறைவனை வணங்குவதற்குரிய சத்தம். இந்த சத்தம் கேட்பதும் மிகவும் நல்லது.

அதேபோல் வீட்டில் எப்போதும் இந்த சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தால் வீடு லட்சுமி கடாட்சத்துடன், சுபிட்சமாக இருக்கி றது என்று நினைத்துக்கொள்ளலாம். அது வேறொன்றுமில்லை. கொலுசு சத்தம்தான். வீட்டில் பெண்கள், குழந்தைகள் எப்போதும் காலில் கொலுசு அணிந்து நடக்கும்போது அந்த சத்தம் காதில் கேட்பது அதிர்ஷ்டம். அது மட்டுமின்றி சிலருக்கு இரவில் வீட்டைச் சுற்றி கொலுசு சத்தம் கேட்கும். இப்படி கேட்டால் நிச்சயம் அந்த வீட்டில் சுப தேவதைகள் உலகுவதாக அர்த்தம். சினிமாக்களில் மட்டும்தான் கொலுசு சத்தம் வந்தால் பேய் வருகிறது என்று அர்த்தம்.

வீட்டில் நம்மை சுற்றி கொலுசு சத்தம் கேட்கிறது என்றால் சுப தேவதைகள் அல்லது உங்கள் குலதெய்வம் போன்றவர்கள் உங்கள் வீட்டில் உதவுவதை உணர்த்துவதுதான் இந்த கொலுசு சத்தம். அது மட்டுமின்றி இந்த கொலுசு சத்தம் கேட்கும் இடத்தில் தேவதைகளும், மகாலட்சுமியும் வாசம்செய்வதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் நம் முன்னோர் கள் வீட்டில் குழந்தை பிறந்தவுடன் கொலுசு அணியும் பழக்கம் வைத்திருந்தார்கள்.

இந்த சத்தங்கள் எல்லாம் உங்களுக்கு தொடர்ந்து கேட்குமானால் விரைவில் உங்களை தேடி அதிஷ்ட தேவதை வர போகிறாள் என்று அர்த்தம்.

செல்: 98425 50844

bala290923
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe