Advertisment

அதிர்ஷ்டம் தரும் கல் உப்புப் பரிகாரம்! பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/lucky-rock-salt-remedy-b-balajiganesh

னிதனின் தேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே அன்றி ஒருநாளும் குறைவது கிடையாது. அதிலும் இந்த நம்முடைய பண தேவையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத ஒரு நிலைதான் அனைத்து இடங்களிலும் நிலவுகிறது. அதுமட்டுமின்றி வருமானத்தை மீறிய செலவும், வீண் விரயங்களும் இன்னொரு புறம் நம்மை இழுத்துச்செல்கிறது.

Advertisment

இவற்றில் இருந்து எல்லாம் தப்பித்து நாம் சம்பாதிக்கும் பணம் பல மடங்காக பெருகவும் பெருகிய பணம் வீட்டில் இன்னும் பல மடங்காக பெருகவும் சில பரிகாரங்கள் உண்டு. அதில் ஒன்றைதான் இப்போது நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Advertisment

cc

வருமானம் பெருக பரிகாரம்

எந்த ஒரு தேவையையும் பூர்த்தி செய்துகொள

னிதனின் தேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே அன்றி ஒருநாளும் குறைவது கிடையாது. அதிலும் இந்த நம்முடைய பண தேவையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத ஒரு நிலைதான் அனைத்து இடங்களிலும் நிலவுகிறது. அதுமட்டுமின்றி வருமானத்தை மீறிய செலவும், வீண் விரயங்களும் இன்னொரு புறம் நம்மை இழுத்துச்செல்கிறது.

Advertisment

இவற்றில் இருந்து எல்லாம் தப்பித்து நாம் சம்பாதிக்கும் பணம் பல மடங்காக பெருகவும் பெருகிய பணம் வீட்டில் இன்னும் பல மடங்காக பெருகவும் சில பரிகாரங்கள் உண்டு. அதில் ஒன்றைதான் இப்போது நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Advertisment

cc

வருமானம் பெருக பரிகாரம்

எந்த ஒரு தேவையையும் பூர்த்தி செய்துகொள்ள பணம் ஒரு கருவியாக செயல்படுகிறது. அதை எவ்வளவுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறோமோ அவ்வளவு செலவும் ஆகிறது. அப்படியா னால் நாம் வருமானத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும். அது சரிதான். ஆனால் அதை எப்படிபெறுவது. நம்மால் முடிந்தமட்டும் பாடுபடலாம். நாம் படும்பாட்டுக்கு பலன் கிடைக்கவேண்டும் அல்லவா. அதை இந்தப் பரிகாரங்கள் செய்துகொடுக்கும்.

முதலில் சம்பளம் கைக்கு வந்தவுடன் நாம் செய்யும் செலவு மிக முக்கியமானது. அது மாத சம்பளமாக இருக்கட்டும் அல்லது தினக்கூலிகளாக இருப்பினும் நம்முடைய வருமானமாக கையில் பணம் வந்தவுடன் நாம் செய்யும் செலவு மிகவும் முக்கியம். ஆகையால்தான் நம் முன்னோர்கள் சம்பளம் வாங்கியவுடன் சில பொருட்களை வாங்க சொல்லி நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அது பணத்தையும் நம்முடைய செல்வ நிலையும் உயர்த்தும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது.

அந்தவகையில் முதல் இடத்தில் உள்ளது கல் உப்புதான். சம்பளம் வாங்கியவுடன் முதலில் வாங்கவேண்டியது கல்லுப்புதான். தினமும் கூலி வாங்குபவர்கள் தினமும் கல் உப்பு வாங்கமுடியுமா? என்று கேட்கலாம். அப்படி வாங்க முடியாதுதான். அதற்காகத்தான் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் கல் உப்பு வாங்கவேண்டும். மாத சம்பளம் வாங்குபவர்கள்கூட வெள்ளிக்கிழமையன்று கல் உப்பை வாங்கி பூஜையறையில் வைத்து பூஜை செய்யவேண்டும்.

அப்படி பூஜைசெய்த கல்லுப்பை சமையலறையில் மண் பானை அல்லது பீங்கான் இரண்டில் ஏதாவது ஒன்றில் உங்கள் இரண்டு கைகளால் எடுத்து அதில் போடவேண்டும். ஆண்களைவிட பெண்கள் இப்படி கைகளால் கல்லுப்பை போடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் கல் உப்பானது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு வீட்டின் பெண்களும் மகாலட்சுமிதான்.

இதைக்கேட்பதற்கு மிகவும் எளிய ஒன்றாகதான் இருக்கும். ஆனால் இதை செய்யசெய்ய இதற்கான பலன் பலமடங்காக இருக்குமென்று சொல்லப்படுகிறது. இப்படி கைகளால் கல் உப்பை எடுத்து நாம் சமையலுக்கு பயன்படுத்தும்போதும் நம்முடைய பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நம்முடைய கைகளில் மகாலட்சுமி தாயார் வாசம்செய்வதாக ஐதீகம் உண்டு. கல் உப்பிலும் தாயார் வாசம் உண்டு. இவையெல்லாம் ஒன்றிணைவது நம்முடைய வீட்டின் செல்வநிலையில் பல மடங்கு பெருகும்.

அத்துடன் நீங்கள் செய்யும் முதல் செலவே இந்தக் கல்லுப்பு வாங்குவதாக இருக்கும்போது வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும். சம்பளம் வாங்கும் வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும். தொழில் செய்வதாக இருந்தால் அதன் லாபம் அதிகரிக்கும் அல்லது இவற்றையெல்லாம் பெருக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும்.

நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த முறைகளும் இந்தப் பரிகாரங்களும் கேட்கும்போது என்ன இவ்வளவுதானா என்பதுபோல இருக்கும். செய்து பார்த்தால்தான் அதன் பலன் புரியும். இந்தப் பரிகாரமும் அதுபோல ஒன்றுதான். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனடையுங்கள்.

செல்: 98425 50844

bala230224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe