"நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப்படும்.' (குறள்: 511)

நன்மை- தீமையாகிய இரண்டையும் ஆராய்ந்து, நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக் குரியவனாக) ஆளப்படுவான்.

இன்றைய நாளில் கைபேசியினால் நன்மைகளும், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளும் நாம் அறியாததல்ல. ஒவ்வொரு செயலுக்கும் அவர்களை நேரில் பார்த்துக் கூறுவதைவிட, ஒரு தொடர்புமூலம் பல விவரங்கள் முடிவு கட்டப்பட்டுவிடும். அதைப்போலவே தீய செயல்களுக்கும் "சிம் கார்டு'கள் துணைபோவது யாவரும் அறிந்ததே. எனவேதான் வள்ளுவர் கூறுகிறார்-

Advertisment

"இதனை இதனால் இவன் முடிக்குமென்று

ஆய்ந்து அதனை அவன்கண் விடல்' (குறள்: 517)

என்று. இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்து, பிறகு அவனை அத்தொழிலுக்குரியவனாகும் படி ஒப்படைக்க வேண்டும். இப்படிப்பட்ட செயலுக்கு கைபேசி உற்றதுணை புரியும் எனலாம்.

Advertisment

எண்கணித முறை யில் ஒன்றுமுதல் ஒன்பதுவரையிலான எண்கள் நம் வாழ்க்கை யோடு இணைந்தவை.

பிறந்ததேதி, வாகன எண், வீட்டு எண், அஞ்சல் குறியீட்டு எண் என எல்லா கோணத்திலும் எண்கள் நம்மை வழிநடத்துபவை. அதில் பத்து இலக்க கைபேசி எண்ணானது நவயுகத்தில் முக்கியமானது.

சிறு உதாரணம்: 1, 8 ஆகிய எண்கொண்ட கடையில் "ஹார்ட் வேர்' கடை நடத்தலாம். லாபம் வரும். 9, 18, 27 எண் கடைகளில் "புக் ஷாப்' வெற்றி தரும். 2, 7, 11, 16, 25 எண்ணுள்ள இடங்களில் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யலாம். மால்களில் எல்லாமே விற்கலாம். நவகிரகங்களின் எண்கள் துணைபுரியும்.

சூரியன், சந்திரன் ஆகிய இரு கிரகங்களுக்கு சொந்த வீடு தனித்தனி. ஆனால் பிற செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கு இரு வீடுகள் உண்டு. எனவே அவற்றுக்கு வக்ரகதியுண்டு. ராகு- கேது நிழல் கிரகங்கள். அதனையும் மனதில் கொள்ளவேண்டும்.

நேராகத் தலைப்புக்கு வருவோம்...

உங்கள் கைபேசியில் பத்து எண்கள் அடக்கம். அதன் கூட்டு எண் முதலிடம் வகிக்கும்.

உதாரணமாக: 94371 86210 என வைத்துக்கொண்டால், அந்த மொத்த எண்களையும் கூட்டினால் 41 வரும்.

அதையும் கூட்டினால் 5. அதுவே அந்த அலைபேசியின் ஆதார எண். இனி ஒவ்வொரு எண்ணின் விசேஷத் தன்மைளைக் காண்போம்.

phonenumbers

எண்: 1

இது சூரிய ஆதிக்கம் கொண்டது. சாதனை புரியும் எண். திறமையை வெளிப்படுத்தும். பிறரின் எண்ணங் களை உள்வாங்கி செயல்படும் தன்மை யுடையது. வாழ்க்கையில் வீரச்செயலுக் குத் துணைபுரியும். தன்னம்பிக்கையூட்டும். புகழ், வெற்றிக்கு அயராது பாடுபடும் எண். அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு, திங்கள், வியாழன்.

மிக அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 3, 7, 9.

துரதிர்ஷ்ட எண்: 4, 6, 8.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள், தங்க நிறம்.

எண்: 2

சந்திர ஆதிக்கம் கொண்டது. நேசம், விட்டுக்கொடுக்கும் மனோ பாவம், இருமணம் கொண்ட எண். வெற்றி- தோல்விக்குத் துணைபோகும். கலைஞர்களுக்கு உற்ற துணைபுரியும். ஆடம்பரப் பொருள் வியாபாரத்துக்கும், ஆடம்பரச் செயல்களுக்கும், பெண் அரசியல்வாதிகளுக்கும், திருமணத் தரகர்களுக்கும், அழகு சாதனம் விற்பவர்களுக்கும் திறம்பட உதவிபுரியும் எண்.

அதிர்ஷ்ட தினம்: திங்கள், செவ்வாய்.

மிக நல்ல நாள்: வெள்ளி.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 3, 7.

துரதிர்ஷ்ட எண்: 4, 5.

அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளநீலம், தூயவெண்மை.

எண்: 3

குருவின் ஆதிக்கம் கொண்டது. விடாமுயற்சியும், வெற்றியும் சுலபமாகும். எந்த எதிர்வினையையும் சமாளிக்கும். திருமணத்தடையைப் போக்கும். சமாதானத் தூதுவராக செயல்படும். காதலர்களுக்கு ஏற்ற எண். மூளைத்திறனை அதிகரித்துத் துணைபுரியும். பரந்த மனப் பான்மை தரும். எதிரிகளைத் தன்வசப்படுத்தும். முன்வைத்த செயலைப் பின்வைக்காத எண். பள்ளி மாணவர்கள், மத போதகர்கள், ஆலய புரோகிதர்களுக்கு உற்றதுணை புரியும் அற்புத எண்.

அதிர்ஷ்ட தினம்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

மிக நல்ல நாள்: செவ்வாய்.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 3, 9.

துரதிர்ஷ்ட எண்: 5, 6.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வைலட்.

எண்: 4

ராகுவின் ஆதிக்கம் கொண்டது. திட நம்பிக்கைக்கு ஏற்ற எண். விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இல்லா எண். திருமணமாகாத பிரம்மச்சாரிகளுக்கு ஏற்ற எண். பிறரால் சகிக்கமுடியாத செயலுக்குத் துணைபோகும். பணவரவையும் செலவுகளையும் உருவாக்கும். ஆரோக்கியச் செயல்களை உருவாக்கும். வேதனைகளைக் கட்டுப்படுத்தும். கடின உழைப்புக்குத் துணைவரும். ரகசிய- தீய செயலுக்கும் துணைபுரியும்.

அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு, திங்கள், சனி.

மிக நல்ல நாள்: சனிக்கிழமை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 5, 6, 7.

துரதிர்ஷ்ட எண்: 1, 3, 8.

அதிர்ஷ்ட திசை: தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்: கிரே, புளூ, கோல்டன் பிரவுன்.

எண்: 5

புதனின் ஆதிக்கம் கொண்டது. புத்திசாலி யாகத் திகழவைக்கும் எண். எப்போதுமே "பிசி'யாகவும், தடையின்றியும் செயல்படும் எண். வியாபாரத்திற்கு அதிலும் பணப் புழக்கம் சார்ந்த பணிகளுக்கு ஏற்ற எண். எல்லாத்துறையிலும் பிரகாசமாக வாழத் துணைபுரியும். அந்நிய நாட்டுத் தொடர்பு, வியாபாரத்துக்கு நிரந்தர உதவி புரியும். அதிசயிக்கத்தக்க மாற்றம் ஏற்படுத்தும். மந்திரம், தந்திரம், புரோகிதம், பிறருக்கு போதனை செய்ய முயல்வோருக்கு தக்க துணைபுரியும். பண வரவை அதிகரிக்கச் செய்யும். பணக்காரராக வாழ மன உந்து தலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட தினம்: புதன், ஞாயிறு, வெள்ளி.

மிக நல்ல நாள்: புதன்.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 5, 6, 7.

துரதிர்ஷ்ட எண்: 2.

அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை.

எண்: 6

சுக்கிர ஆதிக்கம் கொண்டது. தன்னம் பிக்கையும், அடுத்தவருக்கு அனுசரணையும், சொந்த பந்தம் நிலைக்கவும் பாடுபடும் எண். நண்பர்களை ஒன்றுசேர்க்க அயராது பாடுபடும் எண். நேர்மைக்கு குந்தகம் விளைவிக்காத அற்புத எண். அமைதிக்கு தொடர்ந்து முயற்சிக்கும். மகிழ்ச்சி, ஆனந்தம் அதிகரிக்கும். வருங்காலத்தை செப்பணிட ஏற்றது. நல்ல சூழ்நிலை நாடிவரச் செய்யும். இன்டீரியர் டெக்கரேஷன், அழகுநிலையம், இசை சார்ந்த தொழிலுக்கு மேன்மை தரும் எண்.

அதிர்ஷ்ட தினம்: வெள்ளி, திங்கள், செவ்வாய்.

மிக நல்ல நாள்: வெள்ளி.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 6, 8.

துரதிஷ்ட எண்: 1, 2.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை (மேகநிறம்).

எண்: 7

நெப்டியூண் ஆதிக்கம் கொண்டது. ஆயுள் தொடர்புடைய செயலுக்குத் துணைவரும். எண்ணங்களை நனவாக்கும். சர்வதேசரீதியாகவும், பயணத்திற்கும் உற்ற துணைபுரியும். வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்வான வாழ்வைத்தரும். உலகில் எங்கு பிறந்தாலும் ஏற்றம் தரும் எண். பெரும் முதலாளி, தொழிலாளர் நலம் போன்ற சமுகச் செய்கைக்குத் துணை நிற்கும். சுபிட்சமாக வாழ தக்க தருணத்தில் நல்வழி காட்டும். வாடகை வாகனம் வைத்திருப்போருக்கு வருமானத்தையும் நல்ல வாடிக்கையாளரையும் பெற்றுத்தரும் எண். கற்பனை வளம் பெருகும்.

அதிர்ஷ்ட தினம்: திங்கள், புதன், சனி.

மிக அதிர்ஷ்ட நாள்: திங்கள்.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7, 8.

துரதிர்ஷ்ட எண்: 2, 9.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், தங்க நிறம். (கோல்டன் எல்லோ).

எண்: 8

சனி ஆதிக்கம் கொண்டது. பிறர் உதவி யின்றி சொந்த முயற்சியில் மட்டும் வெற்றி பெறச் செய்யும் எண். கடின உழைப்புக்குத் துணைவரும். மனப் போராட்டத்தை சீர்செய்ய உதவும். காலதாமதமான வெற்றிக்குத் துணைபோகும். திடீர் பணவரவைத் தர இயலாத எண். அசையா சொத்து விற்பனை, ரியல் எஸ்டேட் தொழில்புரிவோருக்கு ஏற்ற எண். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களின் வெற்றிக்குப் பாடுபடும். மிகக்கடின உழைப்புக்குத் துணை வராது. 35 வயதைக் கடந்தவர்கள் இந்த எண்ணைப் பயன்படுத்தினால் நல்ல உதவிபுரியும்.

அதிர்ஷ்ட தினம்: திங்கள், செவ்வாய்.

மிக நல்லநாள்: திங்கள்.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 6, 8.

துர்திர்ஷ்ட எண்: 1, 2, 9.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, நீலம், பர்பிள் வைலட்.

எண்: 9

செவ்வாயின் ஆதிக்கம் கொண் டது. எல்லாவித செய்கைகளுக்கும் மிகப் பொருத்தமான எண். வசதி யுள்ள குடும்பத்தில் பிறந்தோர் இளமையில் வைத்துக்கொண்டால் சுலப வெற்றிக்குப் பாடுபடும். அரசுத் துறையில் பணிபுரிவோர் வைத்துக் கொண்டால் மென்மேலும் புகழடை யச் செய்யும். மத போதகர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆடிட்டர்கள், பணத்தைக் கையாள்வோர் வைத்துக் கொள்வது நன்மை தரும். பொதுவில் இந்த எண்ணை எல்லா துறையினரும் வைத்துக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட தினம்: திங்கள், செவ்வாய், வியாழன்.

மிக நல்லநாள்: திங்கள்.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 3, 9.

துரதிஷ்ட எண்: 4, 5, 7.

அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள், கோல்டன் எல்லோ.

உங்களுடைய பிறந்ததேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டு எண்ணும், உங்கள் கைபேசி எண்ணும் ஒன்றெனில் இரட்டிப்பு பலன் கிட்டும்.

செல்: 93801 73464