மீனம்

அறிவுக் கூர்மையுள்ள மீனத்தார் மிக்க அழகுள்ள பெண்ணையே மனைவியாக்க விரும்புவர். இவர்கள் காம விவகாரங்களில் ஆர்வமுடையவர்கள். இவர்களின் துணை மீதான வீண் சந்தேகத்தால், இவர்களின் காதலும் அன்பும் மறையும்; மடியும். முகஸ்துதியை விரும்பக்கூடிய இவர்கள் அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடிய துணையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. உபய ராசியாதலால் சில நேரங்களில் பிரியமுள்ளவர்களாகவும், சில நேரங்களில் பாசமில்லாதவர்கள் போலும் நடந்துகொள்வர். இவர்கள் இரக்க குணமும் கருணையுள்ளமும் மற்றும் விசுவாசமுள்ளவர்களாகவும் விளங்குவர். தைரியமானவர்கள்; வீரமிக்கவர்கள் மற்றும் சுதந்திர எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பர். இவர்கள் தங்களைப்போலவே வெற்றிகரமாகவும், பாசமிக்கவர்களாகவும் வாழ்வில் வெற்றிபெறும் தன் குழந்தைகள்பால் அன்பைப் பொழிவர்.

123

Advertisment

கணவர்கள்

மீனக் கணவர்கள் பாசமிக்கவர்கள். இரக்கமுடையவர்கள். முழு அன்பையும், காதலையும் பொழிபவர்கள். ஆனால் சந்தேக குணமுடையவர்கள். இவர்களின் சந்தோஷகரமான, முன்னேற்றகரமான வாழ்க்கைக்கு தங்கள் துணையை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்திடல் வேண்டும். வாழ்க்கை முழுவதும் காமத்தின்மீது கவர்ச்சியுடையவர்களாகவே இருப்பர். இவர்கள் உண்மையானவர்கள். உதவிகரமானவர்கள். குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டுபவர்கள்.

பெண்கள்

அழகிய பெரிய கண்களையுடைய, அழகுமிக்க பெண்கள் இவர்கள். காமம்மிக்கவர்கள். அதிக சுதந்திர மனப்பான்மையுடையவர்கள். இவர்களின் கட்டுப்பாடற்ற தன்மை காரணமாகவும், எல்லையற்ற சுதந்திரமுடையவர்களாக இருப்பதாலும், சில நேரங்களில் சமூக விரோதிகளிடம் மாட்டிக்கொண்டு வாழ்கையை இழக்க நேரிடலாம். எனவே இவ்விஷயத்தில் தாராள மனப்பான்மையோடு நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் இனிமையை விரும்புபவர்கள், சமூக அக்கறையுடன் நடந்துகொள்பவர்கள், இளகிய மனமுடையவர்கள், நவநாகரீக நாரீமணிகள். புதிய யுக்திகளாலும், நாகரீகத்தாலும் சுலபமாகக் கவரப்படுவர். மொத்தத்தில் குடும்ப வாழ்க்கைமீது அதிக பற்றுடையவர்கள், காதலுடையவர்கள்.

சீர்மிகு பொருத்தம் கன்னி, கடக ராசிக்காரர்கள் மிகப் பொருத்தமானவர்கள்.

செல்: 94888 62923