விருச்சிகம்
விருச்சிகத்தார் காதலில், காமத்தில் விருப்பமுள்ளவர்கள். சுறுசுறுப்பானவர்கள். சக்திமிக்கவர்கள். ஆனால் சிக்கலான- மாறுபட்ட மனதுடையவர்கள். இவர்கள் இரக்கமில்லாதவர்களாய் இல்லாத பட்சத்திலும், நன்கு புரிந்துகொள்ளும் தன்மையற்றபோதும், நிரந்தரமாகப் பாசத்தைக் காட்டாதபோதும் இவர்களைத் திருத்தி நற்பழக்கங்களைக் கொண்டுவராவிட்டால், இவர்களால் எதிர்பாலருடன் ஒரு மிருதுவான மற்றும் சந்தோஷமான வாழ்க்கை வாழமுடியாது. ஆனால், தனது துணைக்கு முழுவதுமான வசதி வாய்ப்புகள் செய்துதருவதில் இவரைக் குறை சொல்லமுடியாது. விருச்சிக மனைவி நேர்மையானவளாகவும், உண்மையானவளாகவும், பொதுவாக அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பாள். ஆனால் 2, 7, 11-ல் தீய கிரகங்கள் இடம்பெற, இவர்களது இல்லத்தில் இன்னல்களே அதிகமிருக்கும் எனலாம்.
கணவர்கள்
தன் மனைவியின் நற்குணங்களைப் பாராட்டுபவர்கள். மனைவியை மிகவும் காதலிப்பவர்கள். குடும்ப மரியாதை யையும், கௌரவத்தையும் பேணிக்காப்பதில் அக்கறையுள்ளவர்கள். விருச்சிக ராசிக் கணவர்கள், லக்னத்தில் செவ்வாய் இருக்க, அதை தீய கிரகங்கள் பார்க்கக்கூடிய நிலை யுடைய பெண்ணை ஒருபோதும் மணக்கக்கூடாது. ஆனால் லக்னம் நல்ல கிரகப் பார்வை பெற்றால், விருச்சிகப் பெண்ணை விட அவருக்கு நல்ல மனைவி கிடைக்கமாட்டாள்.
பெண்கள்
இவர்கள் தங்கள் கணவரை எங்ஙனம் மகிழ்விப்பது எனறு அறிந்தவர்களாகவும், தாஜா செய்து சரிக்கட்டுவதிலும் வல்லவர்கள். இப்பெண்கள் கடின உழைப் பாளிகள்; உண்மையானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் லக்னம் பாதிக்கப் பட்டிருந்தால் திடீரென உணர்ச்சிவசப் பட்டு, தன்நிலை மறந்து, தன் கணவன் எவ்வளவு உயர்ந்த நிலை யிலிருந்தாலும் அவனை கர்ஜனையோடு பாய்ந்து கத்தி, கடித்துக் குதறியெடுத்து விடுவார்கள். மேலும், இவர்கள் காமம்மிக்கவர்கள் ஆவர்.
சீர்மிகு பொருத்தம் விருச்சிகத்தார் மீனம் அல்லது கடகம் ஆகிய ராசி களுக்கு பொருத்தம் மிக்கவர் கள். மேலும் கன்னி, மகரம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக் காரர்களுக்கும் பொருத்த முடையவர்கள் ஆவர்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் மணவாழ்க்கை பொதுவாக மகிழ்ச்சிகரமானதாகவே இருப்பதோடு, முன்னேற்ற கரமானதாகவும் இருக்கும்.
இவர்களின், இனிய சிரிப் பினாலும் நகைச்சுவை உணர்வாலும், எல்லோரிட மும் சுலபமாக நட்புகொண்டு விடுவார்கள். இவர்கள் மனைவியாலும், நண்பர் களாலும் மிகவும் விரும்பப் படுவார்கள். இவர்கள் வீட்டி லிருப்பதை விரும்பமாட் டார்கள். ஆனால் வெளிவட் டாரத்தில் சுற்றித்திரிவதை மிகவும் விரும்புபவர்கள். இவர்கள் நல்ல மனைவி அமைய ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். வயதாக வயதாக, தன் குழைந்தகள் பால் அன்புசெலுத்தி, நன்கு கவனித்துக்கொள்வதில் ஆர்வங் காட்டுவார்கள். இவர்களின் சுதந்திரத்தை தடைசெய்யக்கூடாது. அப்படி செய்தால் இவர்களின் பிடிவாதகுணம் அதிகமாகும். தங்கள் குழந்தைகளைக் கையாள்வதில் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டி வளர்க்கவேண்டும்.
கணவர்கள்
திடீரென ஆத்திரங்கொள்ளும் தனுசுக் கணவர்கள் வெகுசீக்கி ரமே ஆத்திரத்தை அடக்கிக்கொள் வார்கள். விளையாட்டிலும், கேளிக்கை விடுதிகளிலும் ஆர்வங் கொண்டவர்கள். குடும்ப வாழ்க்கையைவிட இதுபோன்ற குதூகலங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்புவபர்கள். நல்லொழுக்கமும், கௌரவமும் உடையவர்கள். நேர்மை தவறாத வர்கள். ஆனால், வயதானபின்னரே இவர்களுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்படும். எல்லாரிடத்தும் ஒற்றுமையை நிலைநாட்டுவார்கள். தனுசுப் பெண்ணை மணந்தால் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் தனுசுப் பெண்ணிடம் கருணையுள்ள மும், அடக்கமும் மிகுந்திருக்கும் என்பதேயாம்.
பெண்கள்
கணவனின் நடவடிக்கைகளில் தலையிட விரும்பாத பெண்கள் இவர்கள். வீட்டை நன்றாகப் பேணிப் பராமரிப்பதில் வல்லவர்கள். தன் கணவன் விரும்பிக் கேட்டாலன்றி, அவனுக்கு எவ்வித ஆலோசனையையும் தாங்களாகவே முன்வந்து வழங்கமாட்டார்கள். கணவனுக்கு உதவக்கூடிய, அவனை அனுசரித்துச் செல்லக்கூடிய நற்குணம் கொண்டவர்கள். தனுசுப் பெண் புத்திசாலி; திறமை மிக்கவள் மற்றும் மரியாதை மிக்கவள் ஆவாள். நம்பிக்கையுடையவள், கடமையுணர்வுள்ளவள். பணிவுள்ளவளுமாவாள். 2 மற்றும் 11-ஆமிடங்கள் செவ்வாயால் பாதிக்கப்பட்டிருந்தால் இவள் கணவன் மற்ற பெண்களோடு தொடர்பு வைத்திருக்கலாம்.
சீர்மிகு பொருத்தம்
தனுசுக்கு, தனுசு சிறந்த பொருத்தமாகும். மிதுனமும் மிக நல்ல பொருத்தமாகும். மேலும், சிம்மமும் பொருந்தும். இவர்களுக்கு துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளோடு நன்கு புரிந்துகொண்டு வாழும் தன்மை ஏற்படும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...