Advertisment

12 ராசியினருக்கும் பேரதிர்ஷ்டம் தரும் ஜோடி பொருத்தம்! -எஸ். விஜயநரசிம்மன் சென்ற இதழ் தொடர்ச்சி..

/idhalgal/balajothidam/lucky-match-all-12-zodiac-signs-s-continuation-vijayanarasimhans-previous-0

மகரம்

மெதுவாக, மிகவும் எச்சரிக்கை யுடன் எதிர்பாலரை அணுகுவார்களே யன்றி, எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். இவர் கள் மூர்க்கத்தனமா கவோ, தைரியத்துடனோ எதிர்பாலரை அணுகும் திறமையற்றவர்களாதலால், இவர்களை விரும்புபவர்கள் மிகவும் வருத்தமுறுவர். இதற்கு இவர்களின் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையுமே காரணமாகும். துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். பாசமிக்கவர்களாய் இருந்தாலும், காம விவகாரங்களில் விவரமானவர்கள் அல்ல.

Advertisment

கணவர்கள

மகரம்

மெதுவாக, மிகவும் எச்சரிக்கை யுடன் எதிர்பாலரை அணுகுவார்களே யன்றி, எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். இவர் கள் மூர்க்கத்தனமா கவோ, தைரியத்துடனோ எதிர்பாலரை அணுகும் திறமையற்றவர்களாதலால், இவர்களை விரும்புபவர்கள் மிகவும் வருத்தமுறுவர். இதற்கு இவர்களின் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையுமே காரணமாகும். துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். பாசமிக்கவர்களாய் இருந்தாலும், காம விவகாரங்களில் விவரமானவர்கள் அல்ல.

Advertisment

கணவர்கள்

இவர்கள் குறைவான காம உணர்ச்சி யுடையவர்களானாலும், தங்கள் துணைக்குத் தேவையான அனைத்து சுகங்களையும் நிதானமாகவும், சீராகவும் வழங்குவதில் வல்லவர்கள். தன் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும் இவர்கள், யாரையும் முழு நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பல மகரத்தாருக்கு, முகமறிந்த நண்பர்கள் இருந்தாலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மதிக்கக்கூடிய- உண்மையான நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். காம விவகாரங்களில் மந்தத் தன்மையும், பயங்கலந்த தன்மையுமுடைய இவர்கள், மறுப்பற்ற- நிச்சயமான வழிகிடைக்காமல் எந்தவொரு விஷயத்திலும் இறங்கமாட்டார்கள்.

Advertisment

22

பெண்கள்

சனி பலம்பெற்றிருக்க, சுயநலம் மிக்க வர்களாகவும், சிக்கனம் மிக்கவர்களாகவும் இருப்பர். குடும்ப பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதிலும், கடினமாக உழைப்பதிலும் சிறந்தவர் களாக இருப்பார்கள். 7-ஆமதிபதி சந்திரன் பலமாக இருந்தால் பயந்த சுபாவமுடையவர்களாகவும், தேக ஆரோக்கியம் குறைந்தவராகவும் இருப்பர். தனது கணவர் மற்றும் குடும்பத்தார் மிகவும் பாசமாக நடந்துகொண்டாலும், இவரது இருப்பிடம் மாறிக் கொண்டேயிருக்கும்; நிரந்தரமானதாக இருக்காது. இவர் கருணையுள்ளவர். பொறுமையானவர். எப்போதும் கணவரின் உதவியை நாடுவார். கணவனுக்கும் உதவிக்கரம் நீட்டுவார்.

பதினொன்றாமதிபதி செவ்வாய்- சந்திரன், சனியைவிட பலம்மிக்கவராக இருந்தால் இப்பெண் நவநாகரிகமாக வும், சதைப்பிடிப்புள்ளவளாகவும், திறமை மிக்கவளாகவும், உண்மையான மனைவி யாகவும், கடின உழைப்பாளியாகவும், தன் குடும்பத்தை பேணிக்காப்பவளாகவும் விளங்குவாள். ஆனால் தன் கணவனைமட்டும் சுதந்திரமாக இருக்கவிடாமல் அடக்கியாள்வாள். இந்நிலை, சீக்கிரமே இளமையிலேயே திருமணமாவதைக் குறிகாட்டுகிறது.

சீர்மிகு பொருத்தம்

மகரத்துக்கு கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் சிறப்பான பொருத்தமாகும். சித்திரை, மிருகசீரிடம், அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களும் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். ரோகிணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களும் சீர்மிகு பொருத்தம் உடையவர்களே.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94888 62923

bala231222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe