உலகத் தில் நமது பிறப்பின் பலனே வளர்ந்து படித்து ஜீவ னம் என்ற தொழில் செய்து மதிப்புடன் இவ்வுலகில் வாழ்வதுதான் இறைவன் நமக்கு இட்ட கட்டளை. ஒவ்வொருமே ஒரு ஜாதகத்தின் முக்கியமாக அறிவது நமது தொழில் என்ன, எந்தவகையில் நாம் பிரகாசிக் கலாம், நமக்கு வேலையா (சர்வீஸ்) அல்லது சுய வியாபாரமா (பிஸ்னஸ்), கூட்டு முயற்சியான தொழிலா எந்தவகையில் நாம் பாரிணமித்தால் இவ்வுலகில் செல்வம் செல்வாக்குடன் திகழமுடியும் என்பதை ரத்தின சுருக்கமாக வாசகர்களுக்கு விளக்குவதே இக்கட்டுரை.
ஒரு ஜாதகருக்கு உத்தியோகம் என்பது லக்னத்திற்கு 6-ஆமிடம் ஆகும். 7-ஆமிடம் கூட்டாக செய்யும் தொழில்களைக் குறிப்ப தாகும். 10-ஆமிடம் என்பது சுயமான தொழில் மற்றும் வியாபாரம் இதனைச் செய்வது இந்த வகையில் முன்னேற்றம் அடைவது முக்கியம். அதனால் தான் சாஸ்திர கர்த்தாக்கள் 10-ல் ஒரு பாபியேனும் (பாபர்கள் அல்லது பாம்பாவது ராகு, கேதுக்கள்) இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
உங்க ஜீவன ஸ்தானத்தில் அல்லது 6-ஆமிடத்தில் சூரியன் பலமாக இருந்தால் இல்லாமல் இருப்பின் அரசு சார்ந்த எந்தத் துறையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும்.
இதேபோல் சந்திரன் 6, 10-ஆமிடங்களில் இருந்தால் இவர்களும் அரசுத் துறையில் பரிணமிக்கமுடியும். இது நீர், உணவு, வாகனம், அன்றாடம் மக்களுடன் தொடர்புடைய தொழில், மீடியா, மலைவாழ் வஸ்த்துக்கள், நேவித்துறை, பார்மஸி, சரீரம் இதன் ஜீவனமாக இருக்கும்.
இதேபோல் செவ்வாய் 6, 10-ஆமிடங்களில் இருந்தால் தண்டிக்கக்கூடிய தொழில்கள் குறிப்பாக காவல், இராணுவம், மருத்துவம், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகவும், பூமி சம்பந்தப் பட்ட படிப்பு மற்றும் சிவில், ஆர்க்கிடெக், வனத்துறை, கால்நடைகள், நெருப்பு இதன் ஜீவனமாக இருக்கும்.
இதேபோல் புதன் 6, 10-ஆமிடங்களில் இருந்தால் ஐ.ஆர்.எஸ், பத்திரிகைத்துறை, ஐ.டி நிறுவனம், வருவாய்துறைகள், சட்டம், எழுத்து கணிதம், பேச்சு பத்திரிகை, லீகல் அட்வைசர், கல்வி நிறுவனங்கள்.
இதேபோல் குருபகவான் 6, 10-ஆமிடங் களில் இருந்தால் பணம் புழங்கும் துறைகள், மந்திரி, அரசு சக்கரத்தை முக்கியமாக ஆளக்கூடிய அதிகாரிகள், ஜட்ஜ், ஆசிரியர், ரெவின்யூ, ஆன்மிகம் போன்ற துறைகளில் இருப்பார்கள்.
இதேபோல் சுக்கிரன் 6, 10-ஆமிடங்களில் இருந்தால் கலைத்துறை, நீர், லக்சூரி, டெக்ஸ்டைல்ஸ், பட்டை தீட்டும் தொழில் கள், வாகனம், வீட்டிற்கு தேவையான நவீன உபகரணங்கள், அட்வைசர்கள், அழகுபடுத் தும் தொழில், உணவு, ஓட்டல், கைடு போன்ற துறைகளில் இருப்பார்கள்.
இதேபோல் சனி 6, 10-ஆமிடங்களில் இருந்தால் அதிகமாக உழைக்கக்கூடிய வேலையாட்கள், சர்வண்டுகள், மக்களோடு தொடர்புடைய தொழில், ஜெர்னலிஸ்ட், இரும்பு எந்திரம், சுரங்கம், கெமிக்கல், பெட்ரோலியம், கருப்பு நிறப்பொருட்கள், கால்நடை விவசாயம், மருத்துவம், தண்டித் தல், இம்போர்ட், எக்ஸ்போர்ட் போன்ற துறைகளில் இருப்பார்கள்.
இதேபோல் ராகு, கேது 6, 10-ஆமிடங் களில் தொடர்புகொண்டால் வரி, அரசு தொடர்புடைய அமைப்புகளில் ஏஜென்டு கள், முக்கிய பதவிகள், தூதுவர்கள், அட்வைசர் கள், வருவாய்துறை அதிகாரிகள், தனிக்கை செய்பவர்கள், தண்டனை கொடுப்பவர்கள், தோல், கெமிக்கல், லாகிரி பொருட்கள், ஆகாயத்தொடர்பு, ஆன்மிகம், ஆலயம், மணி மந்திர, தந்திர, தாந்திரிகம், சரீரம் போன்ற துறைகளில் இருப்பார்கள்.
குறிப்பு: சொல்லப்பட்டுள்ள பாவங்களில் குறிப்பிட்டுள்ள கிரகங்கள் நீசம், பகை, வேறு கிரக பலவீனம், அஸ்தங்கம், வக்ரம், திதிச்சூனியம், சட்பல பலவீனமாக இருப்பது. இப்படி இருந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜீவனங்கள் ஆண்- பெண் இருபாலருக்கும் சரியாக அமையாமல் போகும். பலமுடன் இருந்தால் அத்துறையில் நன்கு பரிணமிக்க முடியும்.
இதை மனதில்கொண்டு ஜீவன பாவ கிரகங்களை எடை போடவேண்டும். பலம் என்பது ஆட்சி, உட்சம், மூலத்திரிகோணம், நட்பு, சுபர் தொடர்பு, பார்வை சேர்க்கை யோகம், தாரா பலம், சிறப்பு பலம், சட்பலத்தில் இவை அனைத்தும் அமைந் திருப்பது.
குறிப்பு: விதி, மதி, கதி அடிப்படையில் (லக்னம், சந்திரன், சூரியன்) மூன்றின் அடிப்படையிலும் 6, 7, 10-க்குடையவர்களாக வருபவர்கள் குறிப்பாக 10-க்குடைய அதிபதி அவர்கள் நின்ற பாவத்தில் குறிப்பாக அந்த 6, 7, 10-ஆமிடங்களில் இந்த அவஸ்தைகளில் இருக்கவேண்டும். அப்படியிருந்து அவர்களது தசாபுக்தி நடைமுறையில் இருந்தால் ஜெனனத் துடன் கோட்சாரமும் சப்போட்டாக இருந்தால் கண்டிக்காக அவர்களின் படிப்பு, திறமை, பணிகள், பிறர்மூலம் ஒத்துழைப்பு சுயமான தொழில், வியாபாரங்கள் இதில் ஈடுபட்டு இவ்வுலகில் செல்வம், செல்வாக்குடன் வாழ்வார்கள்.
ஆண் ராசிகளில் கிரக அவஸ்தை டிகிரி
பால்ய அவஸ்தை சுபம் 1- 6 பாகை வரை
கௌமார அவஸ்தை சுபம் 7- 12 வரை
யவன அவஸ்தை சுபம் 13- 18 வரை
விருத்தா அவஸ்தை அசுபம் 19- 24 வரை
மிருத்தி யூ அவஸ்தை அசுபம் 25- 30 வரை
பெண் ராசிகளில் கிரக அவஸ்தை டிகிரி
மிருத்தி யூ அவஸ்தை அசுபம் 1- 6 பாகை வரை
விருத்த அவஸ்தை அசுபம் 7- 12 வரை
யவன அவஸ்தை சுபம் 13- 18 வரை
கௌமார அவஸ்தை சுபம் 19- 24 வரை
பால்ய அவஸ்தைசுபம் 25- 30 வரை சுபம்
பால்ய அவஸ்தை
சுக போஜன பிராப்தி தரும். விருது உபசாரங்கள் பலமாக அமையும். தன் தானிய சம்பந்தம் அன்னதானமும் குறைவின்றி அமையும். ஆடை, ஆபரண சேர்க்கைகளும் உண்டு. வருவாயும், வாய்ப்பும் கௌரவ பதவியும் உண்டு. இவ்வுலகில் எதையும் நன்கு அனுபவிக்கும் பிராப்தம் அமையும் சிறப்பான பலன் தரும்.
கௌமார அவஸ்தை
வாகன யோகம், சித்திக்கும் தீர்த்த யாத்திரை குறைவு இல்லை. எதுவும் நிறைவாய் நடைபெறும். இடமாற்றம்மூலம் பல நல்ல அம்சங்கள் கிட்டும். மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு குறைவு இல்லை. பலமுடைய பாராட்டுக்கள் சாதனைகள் உண்டு. ஏதேனும் ஒரு துறையில் நீங்கள் பேசப்படக்கூடியவர்.
யௌவனா அவஸ்தை
ங.க.ஆ., ங.க.ஈ., ங.ட., கவுன்சிலர், நகராட்சி. பல சங்கங்கள் கட்சி இப்படி இதில் பதவிகளைப் பெறுவார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் ஆகக்கூடும். குலகௌரவம், குடும்பகௌரவம், சிறப் படையும். கிராம- நகர ஆளுமை தகுதிக்கு ஏற்ப அமையும். செல்வம், செல்வாக்கும் இருக்கும். அரசு மரியாதை உண்டு.
விருத்த அவஸ்தை
களத்திர விரோதம் காட்டும், சதா நித்திரையில் காலம் கழியும். அதிர்ஷ்டம் குறைவு. குடும்பம் ஒற்றுமையில்லாமல் செயல்படும். திருமணம் கூடிவருவது, தோஷம் பிரிவு பிரச்சினைகளைத் தரும். ஜீவன யோகம் போதிய பலன் தராது. வாழ்வில் லட்சியத்தை அடைவது கடினம்.
தக்க உபாயம், இறைசக்தி, தர்மம், உங்க குடும்ப ஜாதகத்தின் அமைப்பை பொருத்து இந்த அவஸ்தை உண்டான பலன்களில் இருந்து தப்பமுடியும். குலதெய்வ பூஜை, ஓமம், வசீகர டாலர், மோதிரம் அணியவேண்டும்.
மிருத்தியூ அவஸ்தை கண்டம்
விஷ பயம், ஆயுதம், கால்நடைமூலம் பாதிப்பு, அதிக அளவு எச்சரிக்கை தேவை. அரசு பணிகளில் தண்டனை, அபராதம், அவமதிப்புகள், பகை, நோய், கடன், வழக்கு பிரிவு பிரச்சினைகள் இத்தகைய பாதிப்புக்கு இடமுண்டு. வாழ்க்கையில் நீங்கள் முன்னேற பிறர் உதவி, உபாயம், பக்தி, தெய்வ வழிபாடு, பூஜை புனஸ்காரம், நல்லோரின் நட்பு, எல்லோரையும் அரவணைத்து போக வேண்டும்.
தொழில் வளர்ச்சிக்கு உண்டான வழிபாடுகள்
குறிப்பு: உங்கள் ஜாதப்படி எண் கணிதத்தில் ஆய்வுசெய்து அதிர்ஷ்ட எண்களில் உங்கள் பெயர், நிறுவனம், தொடர்பு, அதிர்ஷ்ட சின்னங்கள், மொபைல், வாகனம், வங்கி தொடர்பு, இது எல்லாம் வசீகர பிரமீடு எண்களுக்குள் இருக்குமாயின் தனது ஜீவனத்துறையில் ஆண்- பெண் யாராக இருந்தாலும் இறைவன்- இறைவி அருளால் முன்னேறுவார்கள்.
வியாபார, தொழில் ஸ்தானத்தில் இருக்கவேண்டிய அம்சங்கள்
வலம்புரி சங்கு, ஸ்வஸ்திக், ஜாதி ருத்ராட்சம், வேல், குதிரை, யானை, தாமரை, பிரமீடுகள், குபேர பொம்மை, லிங்கம், மூலிகையாலான கணபதி, பவள விநாயகர், முருகன், தீபம், பழங்கால சின்னங் கள், வீணை, பிறை நிலா, தந்தம், அன்னம், மயில், கோமாதா, கருடன் வசீகர வாஸ்து, பஞ்சபூத அட்சரங்கள்கொண்ட பட்சி நேரங்கள் பார்த்து முறைப்படி செய்து ஒரு மண்டலம் பூஜித்து பின் அதனை தொழில் ஸ்தானங்களில் வைத்துகொள்ள வேண்டும்.
தங்கம், வெள்ளி, காப்பர், பஞ்சலோகம் இதில் எந்திரம் இடம் பெற்றிருந்தால் மிக சிறப்பு. தர்மம் 100 பேருக்கு குறையாமல் ஒரு வருடத்தில் அவசியம் செய்யவும்.
பூஜிக்கவேண்டிய வசீகர மூலிகைகள்
அருகம்புல், வில்வம், துளசி, மரிக் கொழுந்து, மல்லிகை, செந்தாமரை, வன்னி, கொன்றை, மந்தாரை இந்த விருட்சகம் உள்ள ஆலயத்திற்கு பட்சி பார்த்து தரிசித்தால் தொழில் லாபமே.
தொழில்கள்- அதில் இருக்கவேண்டிய இறைவன் படங்கள் எல்லா தொழில்களுக்கும்- ஸ்ரீ மகா கணபதி, அருட்பெருஞ்ஜோதி தீபம். பூமியை மையமாக வைத்து செய்யும் தொழில் - ஸ்ரீ முருகப்பெருமான், ஓம்சக்தி, வராஹி, வாஸ்து பகவான்.
உணவு சம்பந்தமான தானியங்கள்-
ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ அஷ்டலட்சுமி.
கலைகள் தொடர்புடைய இசைக்கருவி- ஸ்ரீ கலைவாணி, ஸ்ரீ பிரம்மா, ஹயக்ரீவர், காயத்ரி.
காப்பகம், படிப்பு, டிரஸ்டு இதன் தொடர்பு பத்திரிகை, மீடியா, விளையாட்டு- ஸ்ரீ கலைவாணி, ஹயக்ரீவர் தட்சிணாமூர்த்தி, லட்சுமி நரசிம்மர், குருமகான்கள்.
ஆபரணம், வட்டித்தொழில், ஆடையகம், பணத் தொடர்புகள், பதப்படுத்தும் தொழில் -குபேரன், மகாவிஷ்ணு, சொர்ணாகர்ஷண பைரவி (காளி).
வாகனம், ஏற்றுமதி- இறக்குமதி இவற்றிக்கு-
ஆஞ்சனேயர், ஐயப்பன், மகாலட்சுமி, துர்க்கை, நடராஜர், முனீஸ்வரர், ரிஷி சித்தர், புருஷர்கள்.
நெருப்பைக்கொண்டு செய்யும் தொழில் கள்- ஜலகண்டேஸ்வரர்- அம்பிகை, லட்சுமி நரசிம்மர், முனீஸ்வரர், ஐய்யனார், கருமாரி.
காற்றை மையமாக வைத்து செய்யும் தொழில்- பஞ்சமுக ஆஞ்சனேயர், பஞ்சமுக கணபதி அல்லது ஹேரம்ப கணபதி, சங்கர நாராயணன், அஷ்ட பூஜை மகாலட்சுமி, பிச்சாடனர்.
பொதுவாக எல்லா தொழில்களுக்கும்- கணபதி, முருகன், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரியதேவி, பெருமாள், சிவ பெருமான், நந்தீஸ்வரர், கருடாழ்வார், தத்தாத்ரேயர்.
சட்டம், நீதி, ஆராய்ச்சி, தன் மூளை யைக்கொண்டு பிரதானமாக செய்யும் தொழில்கள் (கன்சல்டிங்) ஞான சரஸ்வதி, சித்திபுக்தி கணபதி, வலம்புரி கணபதி, சயனத் திலுள்ள பெருமாள், யோக பைரவர், மாரியம்மன், குரு, தட்சிணாமூர்த்தி.
மருத்துவம், சரீர தொடர்புகள்- தன்வந்திரி, முருகன், சக்தி, நரசிம்மர், பைரவர், பைரவி, பஞ்சமுக சிவன், அனுமான், கருப்பன்.
செல்: 94868 68485