விண்வெளியில் இயங்கும் கிரகங்கள்தான் நாம் வாழும் பூமியில் தங்கள் ஈர்ப்புசக்தியால் பஞ்சபூதங்களை சலனப்படுத்துகின்றன என்பது விஞ்ஞானம். பஞ்சபூதங்களால் உருவான மானுட உடலை கிரகங்களின் கதிர்வீச்சுகள்தான் ஒரு நிலைப்பாட்டின்படி சிந்தித்து செயல்பட வைக்கின்றன என்பது ஜோதிட நியதி. நம்மில் சிலரை நல்லவராகவும் வல்லவராகவும், பலரை துஷ்ட சிந்தனையாளராகவும் பிறப்பெடுக்கச் செய்வதே கிரக சஞ்சார சாஸ்திர சூட்சுமம். குறிப்பிட்ட சில தமிழ் மாதங்களில் பிறப்பவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை மற்றும் தொழில் பார்ட்னர்களை அமைத்துக்கொண்டால் அதிர்ஷ்ட வாழ்வு அரவணைக்கும் என்பதை குருவருளால் விளக்குகிறேன்.

Advertisment

சித்திரையில் பிறந்த, மேஷத்தில் சூரியனைக்கொண்ட யோக ஜாதகர்களுக்கு, ஆவணி மாதம் (சிம்ம சூரியன்), மார்கழி மாதம் (தனுசு சூரியன்), மாசி மாதம் (கும்ப சூரியன்) பிறந்த ஜாதகர்களுடன் திருமண பந்தம், தொழில் கூட்டு, தொடர்பு அமைத்துக்கொண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆதாயமே.

saraswathi

சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு மணவாழ்வில் பிணக்கு, தொழில், வர்த்தகக்கூட்டில் மனஸ்தாபம் யாருக்கெல்லாம் அமைகிறது எனக் கேட்டால், ஆடி மாதம் (கடகம்), புரட்டாசி மாதம் (கன்னி ராசி), ஐப்பசி மாதம் (துலாம் ராசி) பிறந்தவர்களுடன் இல்லற பந்தம், தொழில் பார்ட்னர்ஷிப் வைக்கக்கூடாது. பலவகை சச்சரவு, கஷ்ட நஷ்டம் அனுபவிக்க நேரும். திருமணத்தேதி மற்றும் தொழில் நிறுவன ஆரம்பத் தேதியை 9, 18, 27-ல் அமைத்துக்கொண்டால் நீங்களும் மிக அதிர்ஷ்டசாலிகளே.

Advertisment

வைகாசியில் பிறந்தவர்களுக்கு உடலும் மனமும் சுக்கிர அம்சமாக சிறப்பாகவே அமையும். உடல்ரீதியாக தாம்பத்ய சல்லாபம், மணவாழ்வு அதி விரைவில் அடைய விரும்புவார்கள். வைகாசி பிறப்பாளர்களுக்கு கைராசிக்காரர்கள் யார் எனக் கேட்டால், திருமணம் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு (Dealership and contracts) ஆடி மாதம் (கடக ராசி), புரட்டாசி மாதம் (கன்னி ராசி), தை மாதம் (மகர ராசி) பிறந்த யோக ஜாதகர்கள் நல்ல அதிர்ஷ்டமாக அமைவார்கள். வெகு இணக்கமான கோடீஸ்வரர் ஆவார்கள். (Made for Each other)

உங்களின் மணவாழ்வுக்கும் தொழில் கூட்டிற்கும் ஒத்துப்போகாத பாதகமான நபர்கள் ஆவணி, கார்த்திகை, மாசியில் முறையே சிம்மம், விருச்சிகம், கும்பத்து சூரியனில் பிறந்தவர்கள்தான். இவர்களைத் தவிர்த்தால் நிம்மதி எதிலும். திருமணம் மற்றும் தொழில் ஆரம்பத் தேதிகள் 6, 15, 24-ல் வெள்ளிக்கிழமைகளில் அமைய ராஜயோகம்தான்- வைகாசியில் பிறந்த அனைவருக்குமே.

ஆனி மாதம் சூரியன் மிதுனத்தில் உலவும்போது ஜெனித்த யோக ஜாதகர்களுக்கு திருமண பந்தம் மற்றும் தொழில்கூட்டு, பங்கு முயற்சிகளுக்கு உடலும் உள்ளமும் உவகை கொள்ளவும், தனவிருத்தி தாராளமாக அமையவும் ஐப்பசி மாதம் (துலாம்), மாசி மாதம் (கும்பம்) பிறந்த ஜாதகர்களைத் தேர்வு செய்வது உத்தமம்.

நல்ல முன்னேற்றமான, லாபப் பலன் தரும்.

Advertisment

ஆனால் வைகாசி, கார்த்திகை, ஆடி, தை மாதங்களில் பிறந்தவர்களுடன் உங்களுக்கு நிலையான கவர்ச்சியோ சுவாரசியமான ஈடுபாடோ ஏற்படுவதில்லை. இந்தமாதப் பிறப்பாளர்களுடன் உங்களுக்கு அட்ஜெஸ்மென்ட் (விட்டுக்கொடுத்துப்போதல்) ஒத்துவராது, சொல் ஒன்றும், செயல் வேறாகவும் அமையும்.

ஆனி மாதம் பிறந்த பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கு நின்றபோதும், புரட்டாசி, மார்கழி, பங்குனியில் பிறந்த வரன்களைத் தவிர்ப்பது உத்தமம். குடும்பக் குழப்பங்களையும் சச்சரவுகளையும் மணவாழ்வில் தவிர்க்கும்முறையாக புதன்கிழமையிலும், 5, 14, 23-ஆம் தேதிகளிலும் திருமணம், தொழில் ஆரம்பம் செய்தால் சுபிட்ச வாழ்வேதான்.

ஆடி மாதம் கடகத்தில் சூரியன் நின்றபோது உதித்த அன்பர்கள், அறிவியல் மற்றும் அரசியல் ஞானம் மிக்கவர்கள்.

பிறரைத் தமது கைப்பிடிக்குள் வைத்து ஆளும் வித்தை தெரிந்த சாதுரியர்கள். உங்களுக்கு வாழ்க்கைத்துணையாக, நட்பு மற்றும் தொழில் கூட்டாளியாக வைகாசி (ரிஷப சூரியன்), கார்த்திகை (விருச்சிக சூரியன்), புரட்டாசி (கன்னி சூரியன்) மாதங்களில் பிறந்தவர்களை அமைத்துக்கொண்டால் ராஜயோகமே. சுபப்பலன் விருத்தி, இனிய மணவாழ்வு உண்டு. விதிவசத்தால் சித்திரை (மேஷம்), ஐப்பசி (துலாம்), தை (மகர சூரியன்) மாதங்களில் பிறந்தவர்களுடன் மணமாலை ஏற்றால், சகிப்புத்தன்மை குறைபட்டு விவாதங்கள், சோதனைகள், பிரிவினை, துயரங்கள் இல்லறத்தில் ஏற்படும். தொழில்கூட்டும் நீடிக்காது. நீங்கள் திங்கள், புதன்கிழமைகளையும், 11, 20, 29 ஆகிய தேதிகளையும் மணநாள் மற்றும் தொழில் ஆரம்பத்திற்குத் தெரிவுசெய்வது அதிர்ஷ்டம் சேர்க்கும் அமைப்பு.

ஆவணியில், சிம்மத்தில் சூரியன் நிலவும் ஜென்மத்தார்களுக்கு, கம்பீரமும் கவர்ச்சியும் இறைவன் தந்த பரிசு. அதிகாரம் செய்து அரசுவகையில் அதிக அனுகூலம் அடைபவர்கள் ஆவணியில் ஜெனித்தவர்களே. திருமணம் மற்றும் தொழில் கான்டிராக்ட்களுக்கு சித்திரை, ஆனி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் பிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்தால் மிக அதிர்ஷ்டமான வாழ்வே! தொழில் முன்னேற்றமாக நடக்கும். ஆனால் வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் பிறந்தவர்களுடன் குணபேதத்தால் விட்டுக்கொடுத்துப்போக இயலாது.

இவர்களுடன் விவகாரங்களும் வில்லங்கங்களுமே மிஞ்சுமாகையால், மனதிற்கும் தொழில் இணக்கத்திற்கும் உகந்தவர்களல்ல; தவிர்க்க வேண்டும். ஆடி மாதம், பங்குனி மாதம் பிறந்தவர்களை வாழ்வில் சற்றே தூரத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். பிரிவும் பிணக்கும் அணுகாது. திருமணக்கிழமை மற்றும் புதிய தொழில் ஆரம்ப நாட்களை ஞாயிற்றுக்கிழமையில், 10, 19, 28 ஆகிய தேதிகளில் அமைத்துக்கொண்டால், அவனியில் பிறந்தவர்கள் ஆவணியில் பவனி வரலாம். உங்களின் சுக்கிரன் உச்சமாகி 6-ஆமிடம், 2-ஆமிடங்களில் சூரியன் அல்லது குருவின் சம்பந்தமும் பெற்றால், வாழ்வில் அனைத்து ஐஸ்வரியமும் உங்களுக்கு நிச்சயம் கிட்டும். சூரியன் நட்பு வீடுகளில் உள்ள நபர்களுடன் வியாபாரம், தொழில் கூட்டு வளம் சேர்க்கும் என்பது நியதி. மற்ற மாதங்களில் பிறந்தவர்களுக்கான பலன்களை அடுத்த இதழில் காண்போம்.

செல்: 94431 33565