அகத்திய மாமுனிவர் அருளிச்செய்த பல ஆரூடச் சக்கரங்களால் எளிய முறையில் ஆரூடப் பலன்களை அறியலாம். அவற்றுள், ஆரூடச் சக்கரம், நட்சத்திர யோகச் சக்கரம், பாய்ச் சிகை சாத்திரம், பலகரை ஜோதிடம், பாதப் பலன் கணிதம் எனப் பல வகைகள் உண்டு. நட்சத்திரப் பாதப் பலன் கணிதமே எளிமை யானதும், துல்லியமானதுமாகும். இந்த முறையானது ஜாதகம் இல்லாதவர்களுக்கும் பலனளிக்கும். அபிஜித் முகூர்த்தக் காலமான பகல் முடிந்து உச்சிக்காலம் ஆரம்பிக்கும் முகூர்த்தக் காலம் நல்லதையும் வெற்றியையும் தேடித் தரும்.
பகல் 11.45 மணிமுதல் 12.15 மணிவரையுள்ள நேரமே அபிஜித் முகூர்த்த மாகும். இந்த முகூர்த்தக் காலத்தில் பூஜையறையில் விளக்கேற்றி , நம் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வேண்டி, ஏதேனும் 108 அல்லது அதற்கு மேற் பட்ட ஆன்மிக ஸ்தோத் திரம் அல்லது புராணப் (ராமாயணம், பகவத் கீதை, மகாபாரதம், சுந்தர காண்டம் போன்றவை) புத்தகத்தை எடுத்துப் பக்தியுடன் திறக்க வேண்டும். அதில், ஆரூடம் பார்ப்பவர் பெண்ணாகில் இடதுபுறம் வரும் எண்ணையும், ஆணாகில் வலதுபுறம் வரும் எண்ணையும் குறித்துக்கொள்ளவும். அந்த எண்ணை, கீழே கொடுக்கப்பட்டுள்ள- பழங்கால ஓலைச்சுவடிகளிலிருந்து ஆராய்ந்து எடுக்கப்பட்ட பாத சாரப் பலன் கணித அட்டவணையில் பார்த்து, அதன்மூலம் பலன்களை அறியலாம்.
எண் பலன்கள்
1 குடும்பத்தில் நஷ்டம், பாதுகாப்புக் குறைவு.
2 சுபகாரியங்களில் தடை, பெண்களால் குழப்பம், தன லாபம் குறைவு.
3 மின்விபத்து, மின்தடை, நெருப்பால் ஆபத்து.
4 மகான்கள் தரிசனம், புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செல்லுதல்.
5 பெண்களால் உயர்வு, விபத்தால் சிறிய காயம் உண்டாகும்.
6 கல்வியில் தேர்ச்சி- பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
7 பெண்கள் எதிரிகள்யாவார்கள்.
8 தவறான பழக்கங்களால் தொல்லை.
9 பணப்பற்றாக்குறை, அளவுக்கதிமான கடன் வாங்குதல்.
10 மனசங்கடம், சோதனை, அரசுக்கு அபராதம்கட்ட வேண்டிவர

10 மனசங்கடம், சோதனை, அரசுக்கு அபராதம்கட்ட வேண்டிவரும்.
11 அரசாங்க விரோதத்தால் தண்டனை, அண்டை வீட்டாரால் தொல்லை.
12 பணியாட்களால் தொல்லை, வெகுஜன விரோதம் உண்டாகும்.
13 மனைவிமூலம் அசையா சொத்து லாபம், மிகுந்த பண வரவு.
14 சுபச்செலவு, உல்லாசப் பயணத்தால் மகிழ்ச்சி.
15 பெண்களிடம் வாக்குவாதம்-சண்டை.
16 ஒருமித்த மனது, புத்திக்கூர்மை, முயற்சி களில் பெரிய வெற்றி.
17 அரசாங்க ஆதரவு, பெரியோர்நட்பு.
18 நூதன முயற்சிகளில் வெற்றி.
19 பெண்களால் வம்பு, வழக்கு உண்டாகும்.
20 மறைமுக எதிரிகளால் தொல்லை, தொலைத் தொடர்பு சாதனம் காணாமல் போகுதல்.
21 ஆடம்பரப்பொருள் நாசமாகும்,நெருப் பால் ஆபத்து, எதிர்பாராதத் தொல்லை.
22 மனப்போராட்டம், சித்தப் பிரம்மை.
23 வெளிநாட்டில் வேலையில் வெற்றி, மேலதிகாரி செய்த தவறுகளால் பாதிப்பு.
24 தீய எண்ணங்களால் வீண்சண்டையை விலைக்கு வாங்குவது.
25 மகான்கள் தரிசனம், புண்ணியத் தலங் களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
26 தவறான செயல்களுக்குத் துணை போவதால் வரும் எதிர்காலப் பிரச்சினை களை எதிர்கொள்வது.
27 வாதநோய், வாயுத் தொல்லை, வயிறு சம்பந்தமான தொல்லை.
28 நல்ல சேவைக்கு பாராட்டு, சமுதாயத்தில் மதிப்பு உயரும்.
29 அரசாங்கத்தால் வழக்கு, அபராதம், தண்டனை உண்டாகும்.
30 தீயஎண்ணம், அகம்பாவம், வீண்வைராக் கியத்தால் ஊருடன் பகை உண்டாகும்.
31 வழக்கில் வெற்றி, முதியோர்களால் ஆதாயம் உண்டு.
32 மறைமுக சண்டை, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு.
33 பேராசையால் அபாயம், பணவரவில் தடையுண்டாகும்.
34 தவறான செயல்களால் பொருள் நஷ்டம்.
35 கொடுக்கல்- வாங்கல், பணப் பரிவர்த் தனையில் சண்டை.
36 முதலீடு நஷ்டம், பெரும் கடன் உருவாகும், தந்தை, முதலாளியோடு மனக்கசப்பு.
37 புண்ணியப் பலன், பாதுகாப்பு, தந்தை யால் மகிழ்ச்சி.
38 எதிர்பாராத லாபம் உண்டு, பெண்களால் செலவு.
39 முதலீட்டில் லாபம், கடன் வசூலாகும்.
40 தாயார் மற்றும் குழந்தைகள் உடல்நல மின்மை, பொருள் விரயம்.
41 தொழிலில் வெற்றி, அரசாங்க ஆதரவு, பரிசுபெறும் யோகம்.
42 மனமகிழ்ச்சி, கல்வித்துறையில் லாபம்.
43 புது முயற்சி வெற்றி, ஆன்மிகத்தில் பின்னடைவு, வழக்கில் வெற்றி.
44 தகாத நட்பு, மறைமுக உறவு, செரிமானக் கோளாறு.
45 புனித யாத்திரை, ஆன்மிகத்தில் ஈடுபாடு.
46 தாயுடன் மனக்கசப்பு, வீடு-வாகனம் பழுதாகுதல், கல்வியில் பின்னடைவு
47 புத்திரருடன் சண்டை, குலதெய்வ வழிபாட்டில் தடையுண்டாகும்.
48 தவறுசெய்ததால் வழக்கில் தோல்வி, அவமானம், கௌரவம் பாதிக்கப்படும்.
49 அரசாங்கக் கோபம், தண்டனை, அபராதம். 50 பூர்வீகச் சொத்தினால் ஆதாயம், கொடுக்கல்-வாங்கலில் இருந்துவரும் பிரச்சினைகள் தீரும்.
51 பணப்புழக்கம் அதிகமாகும், பொன், பொருள் சேர்க்கையுண்டாகும்.
52 அதீதப் பணலாபம், வியாபார செழிப்பு, நோய் தீருதல்.
53 பதவிக்கு ஆபத்து, மேலதிகாரியுடன் விரோதம்.
54 வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது, வசதி பெருகும்.
55 நீண்டநாளாக இருக்கும் ஆசை நிறை வேறும். அந்நியர்களால் ஆதாயம்.
56 தண்டனை, மறைந்துவாழ்தல், குடும்பத்தில் குழப்பம், பண நெருக்கடி.
57 அண்டைவீட்டாருடன் பகை, வன்முறை யால் பொருள் சேதம்.
58 பில்லிசூனியம், பேய்ப் பிடித்தல், கண்திருஷ்டி போன்றவற்றால் தொல்லை.
59 புதிய நண்பர்களால் தீயபழக்கங்கள் உண்டாகும்.
60 பொய்வழக்கால் பழிபாவங்கள் உண்டாகும்.
61 ஆசிரியர் மற்றும் தந்தையுடன் விரோதம்.
62 கேளிக்கைகளால் மனமகிழ்ச்சி.
63 இறைவழிபாட்டால் வெற்றி, பிரார்த்தனை நிறைவேறும்.
64 கடவுள் அருளால் குடும்ப அமைதியும், சுகமான வாழ்க்கையும் கிடைக்கும்.
65 அரசு மற்றும் மேலதிகாரியால் தண்டனை பெறும் ஆபத்து உண்டு.
66 வேலையாட்களின் ஆதரவால் வெற்றி, பதவி உயர்வு.
67 சகோதர உறவுகளால் செலவு, தூக்க மின்மை, ஆரோக்கியம் கெடுதல்.
68 சக ஊழியர்களின் ஆதரவால் வெற்றி, நண்பர்களின் ஆதரவு.
69 புதிய பொருட்களில் ஆர்வம், ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும்.
70 தொழிலில் தோல்வி மற்றும் மன வேதனை.
71 குடியிருக்கும் வீடு பழுதாகுதல், திடீர் பயம் உண்டாகும்.
72 நண்பர்களுடன் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை.
73 நண்பர்களால் பெயர் கெடும், எச்சரிக்கைத்தேவை.
74 எதிர்பாராத ஊதிய உயர்வு, பழைய கடன் வசூல்.
75 தொலைத்தொடர்பு சாதனங்கள் பழுது, முக்கியமான பொருட்கள் தொலைந்து போகுதல்.
76 மனப்போராட்டம், மனக்குழப்பம், தேவை யில்லாத கவலைகள் உண்டாகும்.
77 பெண்களின் ஆதரவால் வெற்றி கிடைக்கும், நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.
78 பெண்களின் ராஜ்ஜியம்.
79 வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி, பொருள் சேர்க்கை.
80 தந்தை அல்லது மேலாளர் அல்லது முதலாளியின் ஆதரவால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
81 பெண்களால் பண நஷ்டம்.
82 முன்கோபத்தால் பகையுண்டாகும், புதிய விரோதிகளால் தொல்லை.
83 தந்தைக்கு ஆபத்து, ஆரோக்கியக் குறைவு.
84 பெற்றோர்-பெரியோர் ஆதரவால் வெற்றியுண்டாகும்.
85 கோபத்தால் நஷ்டம், வாகனத்தில் பழுது, தாயுடன் விரோதம்.
86 பிள்ளைகளால் மகிழ்ச்சி, நண்பர்கள் ஆதரவு, சமூகத்தில் நற்பெயர், போட்டிகளில் வெற்றி.
87 முதலீடு விரயம், முயற்சிகளில் தோல்வி.
88 குடும்பத்தில் மகிழ்ச்சி, உறவினரால் ஆதாயம்.
89 தந்தையின் ஆதரவால் ஆதாயம், மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
90 மறைமுக விரோதம், முக்கிய பொருட்கள் தொலைந்துபோகும்.
91 எடுத்த காரியங்களில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம்.
92 கல்வியில் வெற்றி, பெண் தெய்வ வழிபாட்டால் நன்மை.
93 புதிய நண்பர்களால் லாபம்.
94 எதிர்பாராத நிகழ்வுகளால் மன வேதனை மற்றும் நஷ்டம்.
95 தீய பழக்கங்களால் தொல்லை.
96 பணத்திற்காக விபரீதக்கூட்டு, ஆபத்து, வெளிநாட்டவரால் தொல்லை.
97 தீவிர முயற்சியால் வெற்றி.
98 வீடு, வாகனச் சேர்க்கை, புதிய ஆடைகள் கிடைக்கும்.
99 கூடாநட்பால் தொல்லை, வீண்முயற்சி களால் பணவிரயம்.
100 நெருங்கிய நட்பால் ஆதாயம், தீய பழக்கங்களைக் கைவிடுதல்.
101 வழக்கு, கடன் பிரச்சினைகளால் மனக்கவலை.
102 புதிய வேலைகளுக்கான வாய்ப்பு கிடைக்கும்.
103 தவறான செயல்களால் தண்டனை யுண்டாகும்.
104 பாதுகாப்பில் கவனம் தேவை, தந்தை உடல்நலத்தில் அக்கறை வேண்டும்,
105 உறவினர் மற்றும் நண்பர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
106 பூர்வீக சொத்தால் லாபம், போட்டியில் வெற்றி.
107 தவறான செயல்களால் அவமானமடைதல், நல்ல நண்பர்களை இழக்க வேண்டிவரும்.
108 பெரும் கடன், நோயால் அவதியுண்டாகும்.
மேற்கண்ட ஆரூடத்தில் நற்பலன்கள் ஏற்படு மாயின், அகத்தியருக்கு நன்றி உரைத்து பின், அந்த வாய்ப்பை உபயோகித்து பழைய எண்ணங்கள் மற்றும் தவறுகளை நினைந்து வருந்தாமல், அகத்தியர் துணைநிற்பதால் மன திடத்துடன் வாழ்க்கையை முன்னேற்றபாதை நோக்கிச் செலுத்தவும். தெய்வம் துணைநிற்கும்.
இதுவே, மேற்கண்ட ஆரூடத்தில் கெடுபலன்கள் வருமாயின், அந்த விஷயத்தைத் தீர ஆராய்ந்து செயல்படவேண்டும். மேலும், அகத்தியப் பெருமானே அதற்கு மிக எளிய பரிகாரங்களை மக்கள் நன்மையுற கொடுத்துள் ளார். அவை பின்வருமாறு:
ஆரூடம் பார்த்த நாள் ஞாயிறு எனில், ஒரு பிடி உணவை பறவைகளுக்கு இட்டு, சூரிய நாராயணப் பெருமாளை நினைக்க, தொல்லை நீங்கும்.
திங்கள்கிழமை- ஏழைக் குழந்தைகளுக்கு பால் தானமளித்தபின் சிவ பெருமானை வழிபட்டால், கெடுதல் நேராது.
செவ்வாய்க்கிழமை- ஏழைக்கு அன்னதானம் செய்தபின், பூவராகப் பெருமாளை மனமார வணங்கினால், கெடுதல் நீங்கும்.
புதன்கிழமை- அரச மரத்தைச் சுற்றிவந்தால் துன்பம் சேராது.
வியாழக்கிழமை- புத்தக தானம்செய்து கிருஷ்ண பரமாத்மாவை வணங்கினால், துன்பம் தொடராது
வெள்ளிக்கிழமை- ஏழைப் பெண் குழந்தைக்கு ஆடை தானம் கொடுத்தபின் தில்லையம்பதி உறையும் சிவகாம சுந்தரியை நினைத்தால், கேடு வராது.
சனிக்கிழமை- ஏழை முதியவருக்கு அன்னதானம் செய்தபின், தர்ம சாஸ்தாவை நினைத்தால் கெடுதல் இல்லை.
அகத்தியர் அருளால் என்றும் அமைதி நிலவும்.!
செல்: 90802 97951