ஒரு ஜாதகத்தை எடுத்ததும் ஜாதக பலத்தைத் தெரிந்துகொள்ள லக்னத்தைப் பார்ப்பர். லக்னாதிபதி பலம்பெற்றுள்ளதா என்பதை அறிய, முதலில் லக்னாதிபதி நின்ற இடம், லக்னாதிபதி நின்ற அதிபதியின் நிலையை கவனிப்பர்.
லக்னாதிபதி நின்ற இடம்
லக்னாதிபதி 1, 4, 10 கேந்திரம், 5, 9 திரிகோணத்தில் இருக்கிறதென்றால் உயர்தர யோகம் தருமெனவும்; 2, 7, 11-ல் இருந்தால் யோகத்தைத் தருமெனவும்; 3, 6, 8, 12-ல் இருந்தால் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அதிகம் சந்திக்கும் நபராக இருப்பார் எனவும் சொல்வர். மேலும் லக்னாதிபதிக்கு சுபகிரகப் பார்வை இருந்தால் சிறப்பென பொதுப்படை யாகப் பலன்பார்க்கும் வழக்கம் உண்டு.
லக்னாதிபதி நின்ற அதிபதி
லக்னாதிபதி நின்ற அதிபதி 4, 5, 9, 10-க்குரிய வராக இருந்தால் ஜாதகர்கள் நல்லவராகவும், மிக யோகமானவராகவும் இருப்பர். 2, 7, 9-க்குரியவராக இருந்தால் மாரகாதிபதியாக இருந்தாலும் சிறப்பையே தரும். லக்னாதி பதி தனது நட்சத்திர சாரம் பெற்றால் வாழ்க்கை முன்னேற்றகரமாக இருக்கும். கடக லக்னாதிபதி சந்திரன் லக்னத்திலேயே ஆட்சிபெற்றால் திடமாக இருப்பார். சிம்ம லக்னாதி பதி சூரியன் லக்னத்திலேயே இருந்தால் ஆதிக்கம் மிக்கவர்.
லக்னாதிபதியுடன் 3, 6, 8, 12-க்குடையவர்கள் இருந்தால் சுற்றியிருப்பவர்களின் பேச்சைக் கேட்காதவர்களாக இருப்பார்கள். லக்னாதிபதி மேஷம், துலா லக்னத்திற்கு 1, 8-க்குடைய வராகவும், ரிஷபம், விருச்சிக லக்னத்திற்கு 1, 6-க்குடையவராகவும், கும்ப லக்னத்திற்கு 1, 12-க் குடையவராகவும் இருப்பதால், சுபகிரக வலு இல்லையென்றால் இரண்டு ஆதிபத்யத்தால் தடைகள், சோதனைகள் ஏற்படும். லக்னாதிபதி பாவ கிரகமாக இருந்து லக்னத்தில் பலம்பெற் றால், மனைவியுடன் கருத்து வேறுபாடு தோன்றும். பாவகிரகங்கள் லக்னாதிபதியுடன் இணைந்தாலோ, பார்த்தாலோ, 3, 6, 8, 12-ஆம் அதிபதிகள் தொடர்பு ஏற்பட்டாலோ பலவித தொல்லைகளையே தரும்.
மேலும் நுணுக்கமாக அறிய, லக்னாதிபதி நின்ற நட்சத்திர அதிபதி 1, 2, 4, 5, 7, 9, 10, 11-க்குரியவராக இருந்தால் சிறப்பானது; 3, 6, 8, 12 ஆகிய நட்சத்திர சாரம் பெற்றால் நன்மை தராது. அதாவது 3-ஆம் அதிபதி என்றால் தயக்கமும், 6, 8-ஆம் அதிபதியாக இருந்தால் நோய், எதிரி, கடனாலும் அடிக்கடி பாதிக்கப்படுவார். 12-ஆம் அதிபதியாக இருந்தால் அதிக விரயத்துடன் இருப்பார் என முடிவுக்கு வந்துவிடலாம்.
ஆனால் மேற்கண்டபடி லக்னம், லக்னாதிபதி யின் பலன் சிலருக்கு நடப்பதில்லை. அதனால் குழப்பம் ஏற்படுகிறது. சிலருக்கு லக்னாதிபதி நன்றாக இருந்து, சுபகிரகப் பார்வை பெற்று, அதற்குரிய தசை நடக்கும்போதும் நற்பலன் பெறாமல் அதிக துன்பத்தை அடைகிறார்கள். அந்த நேரத்தில் நடக்கும் சனி, குருவின் கோட்சாரப் பலன் சரியில்லையென சமாதானப் படுத்த முயன்றாலும், நல்ல கோட்சாரப் பலன் வந்தும் தசையின் நற்பலன் கிடைக்காமல் குழப்பத்தைத் தந்துவிடுகிறது. ஆதலால் காரணங் களை அடிப்படை ஜோதிடத்தில் தேடிக் கண்டறிய முடியாமல், எதையாவது சொல்லி முடிக்கவேண்டி, "உன்னுடைய முன்ஜென்ம கர்மா' என முடிவு சொல்லிவிடுகிறார்கள். துருவித் துருவிக் கேட்டால், "யாராவது செய்வினை செய்திருப்பார்கள். கிரகத்தையும் தெய்வத்தையும் கட்டிவிட்டார்கள். ஆதலால் குருவருள், திருவருள் கிடைக்காமல் போய்விட்டது' என ஜோதிடப் பலனைத் தவிர்த்து, மாந்ரீக உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
உண்மையில், லக்னாதிபதி பலம்பெறுவதைப் பார்க்கும் பலர

உண்மையில், லக்னாதிபதி பலம்பெறுவதைப் பார்க்கும் பலர், லக்னம் ஜாதகத்தில் எந்த நட்சத் திரத்தில் இருக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். லக்னம் நின்ற நட்சத்திராதிபதி ஜாதகத்தில் எந்த நிலையில் பலம்பெற்றுள்ளது, லக்னாதிபதிக்கு நட்பாக உள்ளதா, ஜாதகத்தில் எந்த ஆதிபத்யம் பெற்றுள்ளது என நுணுக்க மாகப் பார்த்தபின்பே ஜாதகரின் பலம், பலவீனத் தைக் கணக்கிட்டுப் பலன்சொல்ல வேண்டும். லக்னாதிபதிக்கு பகை பெற்ற நட்சத்திரத்தில் லக்னம் நின்றால், லக்னாதிபதி பலம் பெற்றா லும் முழு நன்மை, மேன்மை கிடைக்காமல் போய்விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆதலால் லக்னம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறது என்பதையறிந்து, பலத்தைத் தெரிந்து கொள்வதே துல்லியமான பலனைப் பெற வழிவகுக்கும்.
லக்னம் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்தால் கோடீஸ்வரனாகப் புகழடைய முடியும்?
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் லக்னம் நின்று, வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் நல்ல எண்ணம், நற்சிந்தனை, தெளிவாக சிந்திக்கக் கூடிய ஆற்றல்மிக்கவராக இருப்பார். கள்ளங் படமின்றிப் பழகக்கூடியவர்.
பிறர் விரும்பும், போற்றும் குணம், பிறர் பார்த்து வியக்கும் தனித்துவமான வாழ்க்கையை அடைவார். சுப ஆதிபத்தியம் மிக்க குரு, சுக்கிரன், புதன் பார்வையும் பெற்றால் குணத்தாலும், திறமையாலும், பண்பாலும் பெரும் பதவியும் அடைவார். கோடீஸ்வராகப் பிறக்கவும், கோடீஸ்வரராக வாழவும் யோகம் உண்டாகும். நல்ல தசாபுக்திகள் வந்தால், ஏழையாகப் பிறந் திருந்தாலும் மக்களால் போற்றப்பட்டு அழியாப் புகழ்பெறுவார். தேய்பிறைச் சந்திரனாகி சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது வலுத்து, கூட்டு பாவகிரகப் பார்வை பெற்றால் தாழ்ந்த நிலையடைந்து, பரம்பரை புகழையும் இழப்பார்.
குரூரமானவராக இருப்பார். பொறாமை, பிறரைக் கெடுக்கும் எண்ணம், பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் குணக்கேடு ஏற்படும். சந்திரன் கெட்டு மோசமான தசையாக வந்தால், நல்ல பணக்கார பெரிய குடும்பத்தில் பிறந்திருந் தாலும், நாளுக்குநாள் தேய்ந்து வாழ்க்கையே வெறுத்துப் போகுமளவு கஷ்டம் ஏற்படும்.
அஷ்டம, ஏழரைச்சனியும் வந்தால் தற்கொலை எண்ணம், விபத்து ஏற்படும்.
லக்னம் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் நின்றால், பிறருக்கு நல்ல ஆலோசனை வழங்கும் அறிவுத்திறன் மிக்க வராகவும், பிறரின் நிலையறிந்து பேசுபவராக வும், ஏமாற்றாமலும், பிறரிடம் ஏமாறாம லும் வாழ்வார். கடக லக்னம், புனர்பூச நட்சத்திரத்தில் நின்றால் பூரண குருபலம் பெற்றவராக, யாரிடம் எப்போது எப்படிப் பேசவேண்டும்- எப்படி நடக்கவேண்டும் என்பதை அறிந்தவர். எதிரியை நேருக்குநேராக சந்தித்து, லாவகமாக, லாபகரமான காரிய வெற்றியை எதிரியால் பெறுவார். சுக்கிரன் பார்வை இருந்தால் சிரிக்க சிரிக்கப் பேசிமயக்கி காரியம் சாதிக்கக்கூடியவர். ஆபத்துகளை உணர்ந்து அதற்கேற்ப வார்த்தைஜாலம் செய்யக்கூடியவர். வளர்பிறை சுபச்சந்திரன் பார்வை இருந்தால் சாதாரண மனிதனையும் பிறர் போற்றுமளவு உயர்த்திப் பெரும்புகழைத் தரும். புதன் பார்வை இருந்தால் பல்கலை வித்தகர். சாதுர்யமான பேச்சு, எழுத்துத் திறன் உடையவர். எதிரியும் விரும்பும் திறன் படைத்தவராக அழியாப் புகழ் பெறுவார். சுபகிரக கூட்டுப் பார்வை இருந்தால் நல்ல தசாபுக்திகளில் உலகம் வியக்கும் சாதனையாளராவார். பாவகிரகப் பார்வை, சுபகிரக வலுக்குறைந்த நிலையில் இருந்தால், திறமை யிருந்தும் புகழ்பெற முடியாமலும், முன்னேற வேண்டிய நேரத்தில் தாங்கமுடியா இழப்பு களாலும், தகுதிக்கேற்ற வாழ்க்கை வாழ முடியாமல் ஏக்கத்துடன் வாழ நேரும். நினைத்து நினைத்து வருத்தப்படும் காலம் ஏற்பட்டு, வாழ்ந்துகெட்டவர் என்னும் நிலை வரும்.
புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதியில் லக்னம் இருந்தால், அனைத்துத் துறைகளிலும் அனுபவம், அறிவு நிரம்பிய நூலகமாகத் திகழ்வார். குருவின் பார்வை இருந்தால் நுணுக்கமான ஆராய்ச்சி கொண்டவராகவும், அறிவியல் அறிஞராகவும் இருப்பார். பொறுமை, சுறுசுறுப்பு, கற்பனைவளம் கொண்டு, பிறர் மன ஆழத்தைக் கண்டறிந்து செயல்படுவர். பிரபஞ்ச சக்தியை ஆராய்வார். வான்மண்டல ஜோதிட ஞானத்தையும் பெறுவார். சுக்கிரன் பார்வையால் கலைஞானம் கொண்ட பிறவிக் கலைஞராக இருப்பார். இயல், இசை, நாடகத் திறமையுண்டு. சிறந்த ஜோதிடர். பலமாக இருந்தால் முக்காலத்தையும் சொல்லும் சித்தராவார். வளர்பிறைச் சந்திரன் பார்வை கலைஞானியாக்கும். மக்களை அன்னாந்து பார்த்து ரசிக்க வைப்பார். பார் போற்றும் புகழடைவார். யாருமறியாத, யாரும் யோசிக்காத மர்மங்களைக் கண்டறிந்து உலகுக்குச் சொல்வார். தத்துவஞானி. பாவகிரகப் பார்வை, சுபகிரக பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எல்லா துறையிலும் அரைகுறையாக இருந்து, முன்னேறவும் முடியாமல் புகழ்பெறவும் இயலாமல் தற்பெருமை பேசித்திரிவார். மதிப்பு, மரியாதை இல்லாமல், இருப்பதையும் தொலைத்து மனம் வாடுவார். எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டுவார். வாழ்க்கையை வெறுப்பவர்களை மேலும் தூண்டிவிட்டு நோகடிப்பார்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராட நட்சத் திரங்களில் லக்னம் நின்றால் அழகானவராக வும், அழகை ஆராதிப்பவராகவும், அழகின் மீது நாட்டம் கொண்டவராகவும் இருப்பார்கள். சொகுசாக வாழவும் வழி தானாகக் கிடைக்கும்.
உலகை ரசித்து ருசிப்பர். குரு பார்வை பெறும் போது அதிக அலட்டல் இல்லாமல், தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றியிருப்பவரையும் நன்றாக வைக்கவேண்டும் என்னும் நற்குணம் கொண்டவராக்கும். வலிய சென்று உதவுவர். மக்கள்மேல் அக்கறை இருக்கும். மக்களின் உரிமைக்காகப் பாடுபடுவர். அரசாங்க நன்மை, அரசாங்கப் பதவி பெறுவர். புதன் பார்வை இருந்தால், மக்களுக்கு எளிமையாக எடுத்து சொல்லிப் புரியவைக்கும் ஆற்றல் இருக்கும்.
கலைத்துறையில் பல சாதனைகள் புரிய வைப்பார். வளர்பிறைச் சந்திரன் இருந்தால் நகைச்சுவை உணர்வுகளை மக்களுக்குப் பிடித்தபடி கொடுத்து, நாட்டின் அவலங்களை எளிமையாக எடுத்துரைப்பார். எதிரிகளும் ரசிக்கும் திறû0ம கொண்டவர். பன்முகத் திறமை, சிந்தனை கொண்டவர். வலுக்குறைந்த கெட்ட ஆதிபத்யம் கொண்ட சுபகிரகப் பார்வை பாவகிரக வலுப்பெற்றுப் பார்த்தால்- பிறர் ஏளனம் செய்யுமளவு சூழ்நிலை அமையும். எதிரிமுன் வாழ்ந்துகாட்ட முடியாமல், எதிரி அல்லது பிடிக்காதவர் காலடியில் கிடக்க நேரிடும். திறமைக்கேற்ற ஊதியமோ, புகழோ கிடைக்காது. அடுத்தவரின் வளர்ச்சிக்கு இவரது திறமை பயன்படும்.
லக்னம் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் என சுபகிரக நட்சத்திரங்களில் நின்று, சுபகிரகப் பார்வையும் பெற்றால், சுபகிரகம் வலுத்தால் நேர்மையாக, பிறர் பொருள்மீது ஆசையில்லாதவராக, இருப்பதைக்கொண்டு நிம்மதியாக வாழ்வர். நல்ல ஆதிபத்ய தசாபுத்திகளில் எதிர்பராத வளர்ச்சி, மகிழ்ச்சி பெறுவர். பாவகிரக நட்சத்திரங்களில் லக்னம் இருந்து சுபகிரகப் பார்வை, கூட்டு இருந்து சுபகிரகப் பார்வை பெற்றால் அதிகாரமிக்க பதவி கிட்டும். எதிரியை வீழ்த்திவிடும் பராக்கிரமம் மிக்கவவராக்கும். பாவ கிரகங் களுக்குள் நட்பு கிரகங்களின் பார்வை அதிகார பலத்தையும், பகை கிரகங்களின் பார்வை ஆக்ரோஷத்தையும் அதிகப்படுத்தும். லக்னாதி பதி பகை கிரகமாகி பலம்பெற்றால், லக்னம் நின்ற நட்சத்திராதிபதி கிரகத்தின் பலம் குறையும்.
எதிர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்தும்.
பாவகிரகமான சூரியனின் கார்த்திகை, உத்திரம், உத்திராடத்தில் லக்னம் அமர்ந்தால், இளையவராகப் பிறந்தாலும் மூத்தவர்கள் எல்லாருக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து கடமைகள் அனைத்தையும் செய்வார். அவரு டைய பேச்சுக்கு மூத்தவர்கள் கட்டுப்பட்டு நடப்பர். எதிலும் நேர்மையாக நடந்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார். தொழில் செய்யு மிடங்களில் கட்டளையிடும் பொறுப்பிலிருந்து வேலை வாங்குவார். அடக்கும் ஆற்றல், ஆளுமைத் திறனால் அவர் சொல்வதைச் செய்ய ஆட்கள் இருப்பர். சூரியன் பலமின்றி இருந்தாலோ, பாவ கூட்டு கிரகங்களின் பார்வையால் பாதிக்கப்பட்டாலோ எடுபிடி ஆளாகவும், அடிமைபோலவும் வாழநேரும். ஆணவத்தாலும் கெட்ட புத்தியாலும் பொறாமையாலும் வாழ்க்கையை இழப்பர். தசாபுக்திகள் மோசமாக இருந்தால் அரசாங்க தண்டனை, தற்கொலை, விபத்துகளால் பாதிக்கப்படுவர்.
செவ்வாயின் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டத்தில் லக்னம் நின்றால் எளிதில் உணர்ச்சிவசப்பபடக் கூடியவராக இருப்பர். பிடிவாதமாக நினைத்ததை சாதிப்பர். சுபகிரகப் பார்வை பெற்றால் ஊர்மெச்சும் குணம் படைத்தவராகவும், குடும்பப்பற்று மிக்கவராக வும் இருப்பர். கூட்டு சுபகிரகப் பார்வை இருந்தால் எளிதில் புகழடைவர். லக்னாதிபதி பலம்பெற்றால் சுயநலவாதியாக இருப்பர். பாவகிரகப் பார்வை பலமாக இருந்தால் மந்தமாக, சோம்பலாக இருப்பர். பலமின்றி இருந்தால் அடுத்தவருக்கு வேலை செய்யும் போது சோம்பேறிபோல காட்டிக்கொண்டு, தனக்கென்றால் மட்டும் வேகமாக செயல்படுவர்.
நட்புகிரகப் பார்வை இருந்தால் தன்னம்பிக்கை தந்து, எந்த சூழலையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவர். காரியம் முடிந்ததும் கழற்றிவிடவும் செய்வர். தான் சாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவர். சனி பார்வை பெற்றால் முறையற்ற, சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைத் துணிந்து செய்வர். பிரச்சினை வரும்போது தான் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்க, தன்னைச் சார்ந்தவரை சிக்கவைத்து, எளிதாக நல்லவராகக் காட்டிக் கொள்ளும் திறமை மிக்கவர். நல்ல தசாபுக்திகளில் சிக்காமல், கெட்ட தசைகளில் சிக்கிக்கொண்டு தண்டனை பெறுவர்.
சனியின் பூசம், அனுஷம், உத்திரட்டாதியில் லக்னம் அமைந்தால், அடுத்து நடக்கவிருப்பதை எளிதாகக் கண்டறியும் ஆற்றல் மிக்கவர். தைரியசாலி என்பதால் எந்த சூழ்நிலையையும் கலங்காமல் எதிர்கொள்வர். தேவைக்கேற்ப முடிவுகளை எடுப்பர். பிறரை நம்பி வாழாதவர். சுபகிரகப் பார்வை பெற்றால் அதிகாரப் பதவி, அரசாங்க நன்மை, மக்கள் பணி, மக்களால் போற்றப்படும் யோகம் கிடைக்கும். வலுப் பெற்ற சுபகிரகப் பார்வை பெரும்பதவி, பெரிய தொழிலதிபராக மாற்றும். பாவகிரகப் பார்வை பெற்றால் கெட்ட எண்ணம் கொண்டவர். சுயநலத்திற்காக அடிக்கடி மனதை மாற்றிக்கொண்டு தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக் கொள்வார். உள்ளே அழுதா லும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கௌரவம் காப்பார். ஊருக்கே தெரிந்த விஷயம் யாருக்கும் தெரியாதென எண்ணி வாழக்கூடியவர். வெட்கங்கெட்டவர். தேவைக்கேற்றாற்போல் எப்படியும் தன்னை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியாக இருப்பர். நட்புகிரக பாவப் பார்வை இருந்தால், கெட்டவர்களால் நன்மைபெற்று தான் என்ற ஆணவத்துடன் வலம்வருவர். பிறர் மனதை நோகடிக்கும் குரூர எண்ணம் பெறுவர். கூட்டு பாவகிரகப் பார்வை பெற்றால் ஆயுதத்தால் பிறரை மிரட்டி ஆயுதத்தால் அழிவர். கெட்டவர்களில் கேடுகெட்டவராக இருப்பர். தசாபுக்தி நன்றாக அமைந்தால் உலகை மிரட்டும் சக்தியாக இருந்து, கெட்ட தசை வந்ததும் நான்கு சுவற்றுக்குள் முடங்கிப்போவர்.
ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் லக்னம் நின்றால், பலருக்கு ஆச்சரியம்தரும் வகையில் திடீர் வளர்ச்சி அடைவர். சகல உலக சுகங்களையும் திகட்டத் திகட்ட அனுபவிப்பர். பரம்பரை கௌரவம் காப்பர். குலதெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பர். சுபகிரகப் பார்வை பெரும் கோடீஸ்வரராக மாற்றும். பிறரால் கணிக்கமுடியாத அறிவுத்திறன் கொண்டவராக ஆச்சரியப்படுத்துவர். பெண்கள்மீது பற்றுகொண்டு, அவர்களுக் காகப் போராடுபவராக இருப்பர். நல்ல தசாபுக்திகளில் சொந்த ஊரைவிட்டு, வெளிநாடு சென்று பொருளீட்டவும், புகழ்பெறவும் யோகம் கிடைக்கும். எதிர்பாராத புகழும் பணமும் கிடைக்கும். பாவகிரகப் பார்வை இருந்தால் யாரையும் மதிக்காத குணமும், முன்னோர்களைப் பழிப்பவர்களாகவும், பெற்றோர்களை மதிக்காதவர்களாகவும் இருப்பர். திருமணத்திற்குப்பிறகு சங்கடங்களை அனுபவிப்பர். அறிவுரை சொல்பவர்களை மதிக்காமல், தவறு செய்தது மட்டுமல்லாமல் கண்டிப்பவர்களை எடுத்தெறிந்தும் பேசுவர். தான் செய்வதெல்லாம் சரி என்றும், தவறுகளிலிருந்து தப்பித்துக் கொண்டதாகவு தனக்குத்தானே புகழாரம் சூட்டிக் கொள்வர். தானே தன் வாழ்க்கையை சிதைப்பர். கெட்ட தசாபுக்திகளில் யாருமற்ற அனாதையாகி, இருந்த இடம் தெரியாமல் போய்விடுவர்.
கேதுவின் மகம், மூலம், அஸ்வினியில் லக்னம் அமர்ந்தால், இழப்புகளால், அனுபவங் களால் மிகச்சிறந்த தத்துவ ஞானியாவர். ஏமாறப் போகிறவர்களுக்கு காக்கும் கடவுளாகவும், ஏமாந்தவர்களுக்கு உபதேசம் செய்து வாழ வழிசெய்யும் மேதையாகவும் இருப்பர். தற்கொலை எண்ணம் கொண்டவர் களையும் தன் அறிவுரையால் காப்பாற்றுவர். சுபகிரக வலிமை பெற்றால் ஊர்த் தலைவராகவும், சுபபலம் வலுத்தால் உலகம் போற்றுவராகவும் மாறுவர். சாதாரணமாகப் பிறந்து கோடீஸ்வராகவும், சரித்திரம் படைப்பவராகவும் மாறுவர். மக்களை வசீகரிப்பர். பலருக்குப் பணத்தால் உதவியும், குணத்தால் நன்மையும் செய்வர். சுபதசை பெரும் யோகத்தைத் தரும். வலுக்குறைந்த பாவகிரகப் பார்வை குழப்பமான மனநிலையைத் தரும். வலுப்பெற்றால் பைத்தியமாக்கிவிடும். ஆணவமே அழிவிற்குக் காரணமாகும். உலகில் இல்லாததை இருப்பதாகச் சொல்லி, அதைத்தேடி தோல்வியடைவர். அவமானமடைவர். காலங்களை வீணடிப்பர். யாரும் மதிக்கமாட்டார்கள். மந்தபுத்தி தரும். பிறரைக் கெடுக்கும் எண்ணம் மேலோங்கும். ஏமாற்றிப் பிழைப்பர். நன்றி கெட்டவர்.
லக்னம் நின்ற நட்சத்திராதிபதி கிரகத்தின் பலத்தைப் பொருத்தே குணமும், வாழ்க்கையில் சுக- துக்கங்களின் பலனும் இருக்கும். ஆதலால் லக்னத்தின் நட்சத்திராதிபதியை அறிந்து அதனை மேம்படுத்துதலே எதிர்காலத்தை வளமாக்க சிறந்த வழி.
லக்னாதிபதியைவிட, லக்னாதிபதி நின்ற நட்சத்திராதிபதியைவிட, லக்னம் நின்ற நட்சத்திராதிபதி சுபத்தன்மை பெற்றால்தான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
லக்னாதிபதி தசையைவிட சுப ஆதிபத்யம் பெற்ற லக்னம் நின்ற நட்சத்திராதிபதி தசை வந்தால் கோடீஸ்வரராகவும், அழியாப் புகழும் பெறுவர்.
செல்: 96003 53748