லக்னாபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள்! - க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/lucknow-benefits-standing-12-sins-ka-gandhi-murugeshwar

லக்னம்

லக்னாதிபதி லக்னத்தில் வலுத்திருந்தால் சிறிய வயதிலேயே மதிப்பு, மரியாதை கிடைக்கும். ஆளுமைத் திறன் இருக்கும்.

அவருக்குக்கீழே பணிசெய்ய ஆட்கள் தானாக அமைந்துவிடுவர். சுபகிரகமாக இருந்து வலுத்தால் பதவிக்கேற்ற பண்பிருக்கும். லக்னம் நின்ற நட்சத்திராதிபதி லக்னாதிபதிக்கு நட்புகிரகமாக இருந்து சுபத்துவம் பெற்றால், பிறக்கும்போதே கோடீஸ்வரராகவும், வாழ்நாள் முழுவதும் மன்னராகவும் திகழ்வார். கடைசிவரை பதவி, பணம், புகழ் நீண்ட ஆயுளுடன் இருப்பார். லக்னாதிபதி லக்னத்தில் பலம்பெற்றால் நிலையான முடிவெடுக்கும் திறனிருக்கும். குழப்பமில்லா தைரியமானவராக எதையும் சாதிப்பார். லக்னாதிபதி பாவ கிரகமாக இருந்தால் ஆணவ, அதிகாரத் தோரணையுடன் நடப்பார். லக்னத்தில் பாவகிரகங்கள் இணைந்து அல்லது பார்த்து, பகை, நீசம்பெற்றால் இரக்கமற்றவராக நடந்துகொள்வார். நோயாளியாகவும், கடனாளியாகவும், பல எதிரிகளைப் பெற்றவராகவும், ஆயுள்குறை கொண்டவராகவும் இருப்பார். குடும்பக் குழப்பம் இருக்கும். பூர்வீக சொத்துகள் பலவகையில் சிதறிப்போய் விடும். குடும்பப் பாரம்பரியத்திற்கு மாறான குணம் கொண்டவராக இருப்பார்.

இரண்டு

லக்னாதிபதி தன ஸ்தானத்தில் இருந்தால் சிறுவயது முதல் குடும்பத்திற்காக உழைப்பு, சிக்கனம், அக்கறை, உடன்பிறர்ந்தவர்களுக்கு உதவிகள், பெற்றோர்களை கடைசி காலங்களில் கவனித்தல், விட்டுக்கொடுக்கும் பண்பு, கொடுத்த வாக்கை நேர்மையாகக் காப்பாற்றும் எண்ணம் கொண்டவராக இருப்பார். இவருடைய அறிவுரை, ஆலோசனைகள் பலருக்குப் பயன்தரும். ஆட்சிபெற்ற பாவகிரகப் பார்வை இருந்தால் பிடிவாத குணமிருக்கும். உண்மையைப் பேசுகிறேன் என, எல்லார் முன்னிலையிலும் மறைக்காமல் வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடுவார். இவர் சேர்த்துவைக்கும் சொத்து குடும்பத்திற்கு- அதாவது பரம்பரைக்கே தொடர்ந்து தனத்தைத் தரும். பாவகிரக வலிமைபெற்றால் ஜாதகரைப் பழிவாங்குவர். இரண்டாம் இடத்திற்கு பாவகிரகப் பார்வை, இணைவு பெற்றால் கொடுத்தவாக்கை மீறுபவராகவும், பொய்யராகவும் இருப்பார்.

மூன்று

லக்னாதிபதி மூன்றில் நின்றால் உடன் பிறந்தவர்கள்மீது அதீத பற்றுக் கொண்டவர். எதற்கும் அஞ்சாதவர். பராக்கிரமசாலி. இசையறிவு குறைவாக இருந்தாலும் இசைஞானம் மிக்கவர். சகோதரர் சொல்கேட்டு உடனடியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார். வாய்ப் பேச்சால் எதிரிகளை ஏற்படுத்திக்கொள்வார். அடிமை கிடைத்தால் ஆட்டிவைப்பார். எதிலும் நிறைவடைய மாட்டார். பொறாமை குணம் கொண்டவர். பேசிவிட்டு வருத்தப் படக்கூடியவர். பேராசை உண்டு என்பதால், மன நிறைவடைய மாட்டார். சொல்வாக் கும் செல்வாக்கும் இல்லாதவர். இருப்ப தைக்கொண்டு வாழத் தெரியாதவர். பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் உடன்பிறந்தவரால் வஞ்சிக்கப்படுவார். யாருக்கு உதவி செய்தாலும் செய்ந்நன்றி மறப்பார்கள். முன்கோபத்தால் வாழ்க்கையை இழப்பார். சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம் இருக்காது. எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக்கொண்டே இருப்பார். இவரின் நல்ல எண்ணம், நல்லகுணம் பிறருக்குத் தெரியாமலே போய்

லக்னம்

லக்னாதிபதி லக்னத்தில் வலுத்திருந்தால் சிறிய வயதிலேயே மதிப்பு, மரியாதை கிடைக்கும். ஆளுமைத் திறன் இருக்கும்.

அவருக்குக்கீழே பணிசெய்ய ஆட்கள் தானாக அமைந்துவிடுவர். சுபகிரகமாக இருந்து வலுத்தால் பதவிக்கேற்ற பண்பிருக்கும். லக்னம் நின்ற நட்சத்திராதிபதி லக்னாதிபதிக்கு நட்புகிரகமாக இருந்து சுபத்துவம் பெற்றால், பிறக்கும்போதே கோடீஸ்வரராகவும், வாழ்நாள் முழுவதும் மன்னராகவும் திகழ்வார். கடைசிவரை பதவி, பணம், புகழ் நீண்ட ஆயுளுடன் இருப்பார். லக்னாதிபதி லக்னத்தில் பலம்பெற்றால் நிலையான முடிவெடுக்கும் திறனிருக்கும். குழப்பமில்லா தைரியமானவராக எதையும் சாதிப்பார். லக்னாதிபதி பாவ கிரகமாக இருந்தால் ஆணவ, அதிகாரத் தோரணையுடன் நடப்பார். லக்னத்தில் பாவகிரகங்கள் இணைந்து அல்லது பார்த்து, பகை, நீசம்பெற்றால் இரக்கமற்றவராக நடந்துகொள்வார். நோயாளியாகவும், கடனாளியாகவும், பல எதிரிகளைப் பெற்றவராகவும், ஆயுள்குறை கொண்டவராகவும் இருப்பார். குடும்பக் குழப்பம் இருக்கும். பூர்வீக சொத்துகள் பலவகையில் சிதறிப்போய் விடும். குடும்பப் பாரம்பரியத்திற்கு மாறான குணம் கொண்டவராக இருப்பார்.

இரண்டு

லக்னாதிபதி தன ஸ்தானத்தில் இருந்தால் சிறுவயது முதல் குடும்பத்திற்காக உழைப்பு, சிக்கனம், அக்கறை, உடன்பிறர்ந்தவர்களுக்கு உதவிகள், பெற்றோர்களை கடைசி காலங்களில் கவனித்தல், விட்டுக்கொடுக்கும் பண்பு, கொடுத்த வாக்கை நேர்மையாகக் காப்பாற்றும் எண்ணம் கொண்டவராக இருப்பார். இவருடைய அறிவுரை, ஆலோசனைகள் பலருக்குப் பயன்தரும். ஆட்சிபெற்ற பாவகிரகப் பார்வை இருந்தால் பிடிவாத குணமிருக்கும். உண்மையைப் பேசுகிறேன் என, எல்லார் முன்னிலையிலும் மறைக்காமல் வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடுவார். இவர் சேர்த்துவைக்கும் சொத்து குடும்பத்திற்கு- அதாவது பரம்பரைக்கே தொடர்ந்து தனத்தைத் தரும். பாவகிரக வலிமைபெற்றால் ஜாதகரைப் பழிவாங்குவர். இரண்டாம் இடத்திற்கு பாவகிரகப் பார்வை, இணைவு பெற்றால் கொடுத்தவாக்கை மீறுபவராகவும், பொய்யராகவும் இருப்பார்.

மூன்று

லக்னாதிபதி மூன்றில் நின்றால் உடன் பிறந்தவர்கள்மீது அதீத பற்றுக் கொண்டவர். எதற்கும் அஞ்சாதவர். பராக்கிரமசாலி. இசையறிவு குறைவாக இருந்தாலும் இசைஞானம் மிக்கவர். சகோதரர் சொல்கேட்டு உடனடியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார். வாய்ப் பேச்சால் எதிரிகளை ஏற்படுத்திக்கொள்வார். அடிமை கிடைத்தால் ஆட்டிவைப்பார். எதிலும் நிறைவடைய மாட்டார். பொறாமை குணம் கொண்டவர். பேசிவிட்டு வருத்தப் படக்கூடியவர். பேராசை உண்டு என்பதால், மன நிறைவடைய மாட்டார். சொல்வாக் கும் செல்வாக்கும் இல்லாதவர். இருப்ப தைக்கொண்டு வாழத் தெரியாதவர். பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் உடன்பிறந்தவரால் வஞ்சிக்கப்படுவார். யாருக்கு உதவி செய்தாலும் செய்ந்நன்றி மறப்பார்கள். முன்கோபத்தால் வாழ்க்கையை இழப்பார். சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம் இருக்காது. எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக்கொண்டே இருப்பார். இவரின் நல்ல எண்ணம், நல்லகுணம் பிறருக்குத் தெரியாமலே போய்விடும். 6, 8, 12 சம்பந்தமானது கோழையாக்கி தற்கொலை எண்ணத்தைத் தரும். மனம் நொந்தே நோயாளியாவார். கிடைத்த நல்ல வாழ்க்கையைத் தக்கவைக்கத் தெரியாமல் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அடைவார். ஏழைச்சொல் அம்பலம் ஏறாது என்பதுபோல் இவர்களது பேச்சை சபைகளில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட நீதி கிடைக்காது.

நான்கு

நான்காமிடத்தில் லக்னாதிபதி நின்றால் தாய்போல குணம்கொண்டவர். தாய்ப்பாசம் மிக்கவர். தாயாரின் ஆதரவு, ஆசிபெற்று சொகுசான வாழ்க்கை பெறுவார். சொந்தபந்தம் என கூட்டுக்குடும்ப வாழ்க்கை, விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை கொண்டவர். நம்பிவந்தவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். உறவுகளை மதிக்கக்கூடியவர். செல்வந்தர். எண்ணம்போல் வாழ்க்கை அமையும். சுகவாசி. கொடுப்பதை நிறுத்தினால் கெடும். தாய்வழி சொத்துகள் கிடைக்கும். வீடு, வாகன வசதி தானாக அமையும். அனைவராலும் விரும்பத் தக்கவர். நீண்ட ஆயுளும் நிறைவான வாழ்க்கையும் நீடித்த புகழும் அடைவார். நான்காமதிபதி கெட்டு, லக்னாதிபதி பாவகிரகச் சேர்க்கை, பார்வைபெற்றால் சோதனைகளும், வேதனைகளும், போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும். பிடிக்காத வீடு, நிம்மதி கெடுக்கும் உறவுகள், பழுதான வீடு, வாகனம், அடிக்கடி சுகத்தைக் கெடுக்கும் சம்பவங்கள் அமையும். கெட்ட தசாபுக்திகள் நடந்தால் நித்தம் ஒரு பிரச்சினை, சுகமின்றித் தவிக்கும் சூழல், 6, 8, 12-ஆம் அதிபதிகள் சேர்க்கை பெற்றால் நோயால் சுகமிழப்பு ஏற்படும். எதிரி, கடனால் ஊர் மாற்றம், இடமாற்றம், வாகனமாற்றம் செய்யநேரும்.

perumal

ஐந்து

பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதி நின்றால் குலதெய்வ அருள் பூரணமாகப் பெற்றவர். இளம்வயதிலேயே நிதானம், பொறுமை, பெரியவர்களை மதித்து நடத்தல், பிறர்பொருள், பணம், புகழுக்கு ஆசைப்படாதவர். கிடைத்ததைக்கொண்டு எல்லாம் நன்மைக்கே என வாழக் கூடியவர். நல்ல குணத்தை, பொறுமையை சோதித்தால், "சாது மிரண்டால் காடு கொள்ளாது' என விரட்டியடிப்பார். எல்லாரும் வேண்டும்; எல்லாரும் நன்றாக இருக்கவேண்டுமென ஆசைப்படுபவர். அன்பாக, சகிப்புத்தன்மையுடன் விட்டுக்கொடுக்கக்கூடியவர். பரம்பரைப் பெருமைமிக்கவர். கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏமாளியாக இருக்க விரும்பாதவர். எளிமையான வாழ்க்கை வாழக்கூடியவர். எதிலும் நேர்த்தியாக இருக்க முயல்வார். கெட்ட குணங் களை விரும்பாதவர். திடீர் அதிர்ஷ்டத்தால் பெரிய பதவி கிடைத்து திடீர் புகழடைவார். பிள்ளைகள் பிறந்தபின் வாழ்க்கையில் மாற்றம், பிள்ளைகளால் ஏற்றம் உண்டாகும். பிள்ளைகளுக்குத் தேவையானதைச் செய்வார். ஜாதகரால் குழந்தைகளுக்கு அதிகப் பயனுண்டு. 6, 8, 12-ஆம் அதிபதிகள் தொடர்பு ஏற்பட்டால் குணத்தைக் கெடுக்கும். பூர்வீக சொத்துகளை அழிப்பார். பிறர் துன்பத்தை ரசிப்பார். குரூர எண்ணத்தால் யாரும் நெருங்கமுடியா இடத்திலிருப்பார். குலத்தெய்வக் குறையுண்டு. பொறாமை, நோய், எதிரி, கடனால் அடிக்கடி பாதிக்கப்படுவார். விரயத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் தவிப்பார்.

ஆறு

ஆறாம் வீட்டில் லக்னாதிபதி நின்றால் தனக்கு எதிரி தானேதான். தான் பேசும் வார்த்தை, எண்ணம், செயலால் நஷ்டமும் கஷ்டமும் அடைவார். கர்வம், பொறாமை யால் பொதுமக்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுவார். குறுக்குவழியில் எதையும் அடையலாமென்னும் எண்ணம் மேலோங்கும். தனக்கு நிகர் தானே என்னும் ஆணவம் இருக்கும். நோய், எதிரி, கடனால் அவதிப்படுவார். எதிரிகளை சம்பாதித்து எதிரிகளால் பழிதீர்க்கப்படுவார். எதிரி களிடம் அனைத்தையும் இழந்து அடிமையாய் வாழநேரும். நோயால் அடிக்கடி பாதிக்கப்படுவார். உடலில் அறுவைசிகிச்சை செய்யநேரும். லக்னாதிபதி தசையாக இருந்தாலும் தோல்வி ஏற்பட்டு வெற்றியும், பெரிய வெற்றிபெற்ற அதே வேகத்தில் தோல்வியும் அடைந்து, புகழடைந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார். எளிதில் பாதிக்கப்படக்கூடியவர். கடன் கொடுத்தால் வாங்கமுடியாது. வாங்கினால் தரமாட்டார்கள். எடுத்ததற்கெல்லாம் தடையைச் சந்திப்பார். வாழ்க்கைமீது ஒருவகை சலிப்பு இருந்துகொண்டே இருக்கும். எளிதாக எவரையும் பகைத்துக்கொள்வார். நிதானமின்றி முடிவுகளெடுத்து அதன்மூலம் பாதிப்புகளை அடைவார். பாவகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் முறையற்ற வாழ்க்கை, சட்டத்திற்கு, நியாத்திற்குப் புறம்பான காரியத்தை ஈவு இரக்கமின்றி துணிந்துசெய்வார். யாரைப் பற்றியும் கவலைப்படாத சுயநலவாதியாக இருப்பார். நின்ற அதிபதி கெட்டு சுபகிரக வலிமை பெற்றால், எதிரியும் நேசிக்கும் வல்லமை, நற்குணம் நிறைந்தவராய் இருப்பார்.

ஏழு

ஏழாமிடத்தில் லக்னாதிபதி நிற்க, ஜாதக ரால் வாழ்க்கைத் துணைக்கு அதிர்ஷ்டம், ஆதாயம் உண்டு. நண்பர்கள் புடைசூழ வாழக்கூடியவர். சொந்தங்களைவிட நண்பர்கள், துணைவரால் நன்மையடைவார். திடீர் புகழ், பணம் பெறுவார். மக்களால் விரும்பப்படும் தலைவராவார். கலாரசிகர். செய்ய நினைப்பதை சரியாகச் செய்யக்கூடியவர். தன் சந்தோஷத்தை மட்டுமே பூர்த்திசெய்ய விரும்பும் சுயநலவாதி. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத் ததை முடிப்பார். தன் மனதிற்கு சரியெனப் பட்டதைத் துணிந்து செய்வார். பிறரை மயக்கும் சக்திகொண்டவர். யாரை, எப்படி, எந்த நேரத்தில் வேலைவாங்கவேண்டுமென அறிந்து, தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தனித்திறன் மிக்கவர். இவர் உதவிகேட்டால் பிறர் தட்டாமல் செய்துகொடுப்பர். முகராசிக்காரர். துணைவர் அமைவதைப் பொருத்து வாழ்க்கை மாறும். காரியவாதி. பாவகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் சுயநலத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். நெருங்கியவர் விலகிவிடுவர். தானே தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வார். துரோகம் செய்யும் எண்ணத்தால் நல்லவர்களைப் பகைத்து, விலக்கி வைக்கப்படுவார். மனம்நொந்து வாழநேரும். சுயநலத்தால் வாழ்க்கையை இழப்பார். 6, 8, 12-ஆம் அதிபதிகள் தசையில் நோயால், கடனால், எதிரிகளால் விரயம் ஏற்படும். ஆயுள்பங்கம் உண்டு. சனி பார்வை பக்கவாத நோய் தரும்.

எட்டு

லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்தால் உடல்ரீதியான பாதிப்பு, உடல் பலவீனம் கொண்டவர். ஆயுள்பலம் இருந்தாலும் நல்ல எண்ணம், நல்ல புத்தி இல்லாதவர். இல்லாத ஒன்றை இருப்பதாகத் தேடக்கூடியவர். ஏமாந்தவர் கிடைத்தால் அவரை வைத்துக் காலம் தள்ளுவார். அவமானம் அடிக்கடி நிகழும். பணகாரக் குடும்பத்தில் பிறந்தாலும் அனைத் தையும் தன் தவறான நடவடிக்கையால் இழந்துவிடுவார். பலம்பெற்ற சுபகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் ஓரளவு நேர்மையும், நன்மையும் பெறுவார். பூர்வ புண்ணியம் ஐந்தாமிடம் சிறப்பாக அமைந்தால் சொற்ப லாபம் பெறுவார். யாரும் கணிக்காதவற்றைக் கணிக்கும் ஆற்றல், வித்தியாசமான- நுணுக்கமான கலை ஆய்வு கொண்டவர். விபரீதராஜ யோகம் இருந்தால் அமானுஷ்ய சக்திபெற்றவராக இருப்பார். பாவகிரக பலம்பெற்று சம்பந்தம் பெற்றால் குறைந்த ஆயுட்காலம் வாழ்ந்து, கொலை, கொள்ளைகளில் துணிந்து இறங்கக்கூடிய கொடூரமானவராக இருப்பார். புத்திர தோஷத்தால் மனம் வெறுப்பார். நினைத்த வாழ்க்கை வாழாமல்போவார். அரசாங்க தண்டனை கிட்டும். குடும்பம் நடத்த சிரமப்படுபவராக வாழநேரும்.

ஒன்பது

ஒன்பதாம் வீட்டில் லக்னாதிபதி நின்றால், தந்தைக்குப் பிடித்தவராகவும் தந்தையால் யோகம் பெறக்கூடியவராகவும் இருப்பார். பெரியவர்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். நேர்மை, நியாயத்தில் நம்பிக்கை கொண்டு அதன்படி நடக்கக்கூடியவர். பட்டம், பாராட்டு பெறக்கூடியவர். தர்மம் செய்வதில்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கும், இல்லாத, இயலாதவர்களுக்கும் தரவே எண்ணுவார். தெய்வ நம்பிக்கை கொண்டவர். சுபபலம் பெற்றால் வள்ளலாக இருப்பார். சகல ஞானம் கிடைக்கும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் கஞ்சன். எடுத்ததற்கெல்லாம் குறை கூறுவார். பிறரைக் குழப்பிவிட்டு, தன் வாழ்க்கையை கவனமாக வைத்துக்கொள்வார். கெடுக்கும் எண்ணத்தை வெளிக்காட்டாமல் கெடுப்பார். கோள் சொல்லி நம்பியவரை நட்டாற்றில் விடுவார். தன்னைச் சூழ்ந்தவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை விரும்பமாட்டார். முதுகில் குத்துபவர். ஆதலால் இவரிடம் நெருங்கிப் பழகியவர்களும் விலகுவார்கள். குடும்பத்திற்குள்ளேயே தானே முதன்மையாய் வாழவேண்டுமென நினைப்பவர்.

பத்து

லக்னாதிபதி பத்தில் நிற்க, தன்னுடைய உழைப்பால் உயர்ந்தநிலைக்கு வருவார். நல்ல தலைவனாக மக்களால் போற்றப் படுவார். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி சிறப்பாகச் செய்யக்கூடியவர். குடும்பப் பொறுப்பு மிக்கவர். அனைவரையும் அனுசரித்துப் போகக்கூடியவர். தெய்வத்தை முறையாக வழிபடக்கூடியவர். யாரையும் நம்பிவாழாத சுயம்புவாக இருப்பார். பலருக்கு உதாரணமாக வாழ்ந்துகாட்டுவார். அன்பு, கருணை, இரக்கத்தால் புண்ணிய காரியங்கள் செய்வார். கல்வி, ஆன்மிகக் காரியங்களுக்கு உதவக்கூடியவர். இடைவிடாமல் உழைத்து நினைத்ததை முடிப்பவர். உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்து, வீடு, வாகனம், நிலபுலன் கிடைத்து நிம்மதியான- மனநிறைவான வாழ்க்கையை அடைவார். தொழில் பக்தி, தொழில் வெற்றி மிக்கவர். பாவகிரகப் பார்வை, இணைவு சோம்பேறியாக மாற்றி, செய்தொழிலில் பாதிப்பைத் தரும். நடுத்தரமான வாழ்க்கையும் சுமாரான வருமானமும் கிடைக்கும். மனத்திருப்தி கொண்டவர். பலம்பெற்ற பாவகிரக பாதிப்பு இருந்தால் சட்டத்திற்குப் புறம்பான தொழில், வெளிநாட்டு மதத் தொடர்புடைய தொழில் செய்வார். எப்படியும் வாழலாம் என்னும் எண்ணமிருக்கும். எதிலும் முழு ஈடுபாடு காட்டுவார்.

பதினொன்று

லாப ஸ்தானத்தில் லக்னம் இருந்தால் அதிர்ஷ்டம் மிக்கவர். வாழ்க்கையில் நினைத் தது நடக்கும். எல்லா விஷயங்களிலும் நன்மை தானாகத் தேடிவரும். கெட்டது தானாக விலகிவிடும். நல்ல மதிப்பு, மரியாதை கிடைக்கும். மக்கள் வசியம் மிக்கவர். நல்ல பழக்கவழக்கத்தால் பெரியவர்களின் அன்பிற்குரியவராகவும், ஆசி பெற்றவராகவும் திகழ்வார். தீய பழக்கவழக்கத்தைப் பட்டுத் தெரிந்துகொள்வதைவிட, மூத்தவர் சொன்னாலே புரிந்துகொண்டு தவறு செய்யமாட்டார். ஜாதகரின் மூத்த சகோதரருக்கு உதவிகரமாகவும், யோகத்தைத் தரும் உடன்பிறப்பாகவும் உறுதுணையாக இருப்பார். மூத்த சகோதர- சகோதரிகளின் அன்பும், ஆதரவும், புகழும், லாபமும் கிடைக்கும். ஏமாற்றாத எண்ணத்தால் உயர்நிலை பெறுவார். பெண்களால் விரும்பப்படுவார். சிலருக்கு இளைய தாரத்தால் நன்மை கிடைக்கும். இளைய தாரத்தின்மீது பற்றும் பாசமும் கொண்டவராக இருப்பார். இவரால் இளையதாரம் பயனடைவார். பாவகிரகப் பார்வை, இணைவு பெற்றால் பெண்களால் அவமானத்தையும், வீண்பழியையும் சுமக்க நேரும். பிறருக்காகப் பொறுப்பேற்று நஷ்டமடைவார். மூத்த சகோதரர்களால் ஏமாற்றப்படுவார். கூட்டுத்தொழில் நஷ்டத் தைத் தரும். கவனமின்றி இருந்தால் மாரகத் தைத் தந்துவிடும். அதிர்ஷ்டமே துரதிர்ஷ்ட மாகிவிடும்.

பன்னிரண்டு

விரய ஸ்தானத்தில் லக்னம் நின்றால், உழைப்பிற்கேற்ற ஊதியமோ, தகுதிக்கேற்ற பதவியோ, திறமைக்கேற்ற முன்னேற்றமோ, ஆசைக்கேற்ற வளர்ச்சியோ இன்றி அவதிப் படுவார். கிடைத்ததை சேமிக்கத் தெரியாதவரா கவும், பேராசை, ஆடம்பர வீண் செலவுகள் செய்யக் கூடியவராகவும் இருப்பார். சொந்த ஊரைவிட்டு வெளியூர் வாசம் சிறப்பு தரும். தன் பெயரில் சொத்துகள் வைத்துக்கொண்டால் விரயம் ஏற்படும் என்பதால், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் பெயரில் வைக்கவேண்டும். பாவ கிரகங்களின் பலமும் தீய தசையும் நடந்தால் தகுதிக்கேற்ற வேலை செய்யமாட்டார்கள். கீழான தொழில், பாவத்தொழில், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார். முயற்சி என்ற பெயரில் காலவிரயம் செய்வார். அவசர புத்தி என்பதால், எடுத்தோம் கவிழ்த்தோம் என சிந்திப்பார். எடுத்த வேலையை முடிக்கமுடியாமல் திணறுவார். விலகமுடி யாத விஷயங்களில் மாட்டிக்கொண்டு தடுமாறுவார். சொத்துகளை வீண் விவகாரங்களில் முடக்கி, முடங்கி அவதிப்படுவார். லக்னாதிபதி விரயத்தில் இருந்தால் வாழ்நாளில் அடிக்கடி அதிக விரயத்தை சந்திக்க நேரும்.

லக்னாதிபதி பலம் பெறுதல்

லக்னாதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்க்கோத்தமம், லக்னாதிபதி தன் வீட்டைப் பார்த்தல், நட்பு கிரக சாரம் பெறுதல், கேந்திர திரிகோணாதிபதி சாரம் பெறுதல், லக்னாதிபதி நின்ற அதிபதியின் பலம் என பல்வேறு நிலைகளில் கவனித்தே கணக்கிடவேண்டும். மேலும் லக்னம் நின்ற நட்சத்திராதிபதி நல்ல நிலையில் பலம் பெற்றால்தான் ஜாதகர் சிறப்பான வாழ்க்கை யைப் பெறமுடியும்.

bala010121
இதையும் படியுங்கள்
Subscribe