Advertisment

அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் காலச்சக்கர எந்திரம்!

/idhalgal/balajothidam/luck

வான சாஸ்திரப்படி அண்டவெளியானது 360 டிகிரி கொண்ட கோள வடிவமாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த 360 டிகிரி கோள வடிவமானது 30 டிகிரி கொண்ட 12 ராசி மண்டல வீடுகளாக (மேஷம் முதல் மீனம் வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையான 12 ராசி மண்டல வீடுகளையே நவகிரகங்கள் எப்போதும் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கின்றன.

Advertisment

தனிமனிதன் ஒருவன் இந்த புவியில் ஒரு வருடத்திலுள்ள 12 மாதங்களில் ஏதோ ஒரு மாதத்தில் பிறவியெடுக்கிறான்.

yearcircleஅந்த ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டல வீட்டைப் பிரதிபலிப்ப தாகக் கருதப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:

சித்திரை- மேஷம்; வைகாசி- ரிஷபம்; ஆனி- மிதுனம்; ஆடி- கடகம்; ஆவணி- சிம்மம்; புரட்டாசி- கன்னி; ஐப்பசி- துலாம்; கார்த்திகை- விருச்சிகம்; மார்கழி- தனுசு; தை- மகரம்; மாசி- கும்பம்; பங்குனி- மீனம்.

Advertisment

இந்த 12

இந்த 12 மாதங்களும், ராசி வீடுகளும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை. சூரியன் அந்தந்த ராசியின் ஆரம்பத்தில் வரும்போது அந்த ராசி மற்றும் மாதம் துவங்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். சூரியன் ஒவ்வொரு ராசி வீட்டிலும் ஒரு மாதம் சஞ்சரித்து அடுத்த ராசி வீட்டிற்குச் செல்வது இயற்கை. சூரியன் மேஷ ராசியில் துவங்கி மறுபடியும் மேஷ ராசியில் வருவதற்கு ஒரு வருடகாலம் ஆகி, புது வருடப்பிறப்பு என்று கூறுகிறோம்.

இந்த எண் 12 என்பது மானுட வாழ்க்கையில் தொடர்புடையது.

ஒருவர் பிறந்த நாள், நேரத்தைக் கொண்டே ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நாளில் வரும் நட்சத்திரத்தைக் கொண்டு ஜென்ம ராசியும், நேரத்தைக் கொண்டு ஜென்ம லக்னமும் அமைகின்றன. மேலும் அன்றைய நவகிரகங்களின் சுழற்சி நிலைப்பாடும் அந்த 12 ராசி மண்டல வீடுகளில் எங்கு அமைகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது. கிரகங்கள் தான் இருக்கும் ராசி மண்டல வீட்டைப் பொருத்து பலமோ, பலவீனமோ அடைகின்றன என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே ஜாதகமே அந்த நபரது அடிப்படை அஸ்திவாரம் என்று கருதலாம்.

உதாரணமாக, ஒருவர் ஜாதகத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பதாகக் கொள்வோம். (ஐப்பசி மாதப் பிறப்பு). சூரியன் துலா ராசியில் நீசம் என்ற நிலைப்பாட்டை அடைகிறது. மேலும் இந்த சூரியனுடன் அசுப கிரகங்கள் சேர்ந்திருந்து, கூடவே பார்வையும் இருந்தால் சூரிய கிரக தோஷம் (பித்ரு தோஷம்) அமைகிறது.

இந்த பித்ரு தோஷம் போக்க ஜோதிட சாஸ்திரத்தில் பரிகார முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபடுதல், தினமும் சூரிய நமஸ்காரம், சூரிய ஸ்தோத்திரம் (துதி) சொல்லுதல், முதியவர் ஒருவருக்கு தானங்கள் அளித்தல், perumalசூரியனின் அதி தேவதையான சிவபெருமானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து வழிபடுதல் போன்றவை எனலாம். இவ்வாறே ஒவ்வொரு கிரகமும் தோஷம் பெறும்போது அந்த கிரகத்திற்குரிய பரிகாரங்கள் கூறப் பட்டுள்ளன.

அதிக கிரகங்கள் பாதிப்பு பெற்று தோஷங்கள் அமையப்பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகையவர் கள் நவகிரகத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து தோஷ நிவர்த்தி பெறுவது நல்லதே. அதேசமயம் ஒரு எளிய கிரக தோஷப் பரிகார முறையையும் பின்பற்றி பயன்பெறலாம். அதற்கு காலச்சக்கர எந்திரம் பெரிதும் உதவுகிறது.

இந்த அற்புத காலச்சக்கர எந்திரம் புனிதத் தன்மை வாய்ந்தது. 12-ஆம் எண்ணை அடிப்படையாகக் கொண்டது விசேஷம் எனலாம். எல்லா ஜென்ம ராசி மற்றும் ஜென்ம லக்னம் அமைந்தவர்களுக்கும் பொருத்தமாக அமையும்.

இந்த காலச்சக்கர எந்திரம் பெரும்பாலும் நகைக்கடைகளில் "ரெடிமெட்' ஆக கிடைக்காது. தூய வெள்ளியைக் கொண்டு தயாரித்துக் கொள்வதே விசேஷம். தூய செம்பினாலும் செய்து கொள்ளலாம். இந்த எந்திரத்தை முதலில் அன்றாடம் வழிபடும் தெய்வத்தின் முன்வைத்து செய்யவேண்டும். சிறிய அளவில் எந்திர வடிவம் அமையுமாறு வெள்ளிக் கம்பியால் டாலர்போல செய்து மார்பில் அன்றாடம் அணிந்துகொள்வதும் சிறப்பு. மேலும் நல்லநாள், நேரத்தைத் தேர்வு செய்து அணிந்துகொள்வதே நல்லது. பிறந்த தேதி மற்றும் பிறவி நட்சத்திரம் வரும் நாள் சிறப் பானது. கிழமைகளில் புதன், வியாழன், வெள்ளி ஏற்றவை. காலை வேளை நல்லது.

ஆத்திக அன்பர்கள் சிலர் மேற்கூறிய காலச்சக்கர எந்திரம் செய்து அணிந்த சில காலத்திற்குப் பின்னர் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் (மேற்படிப்பு, தொழில் அபிவிருத்தி, உத்யோக உயர்வு, திருமணம் போன்றவை) பெற்றதாகத் தெரிவித்ததே அனுபவப் பூர்வமான உண்மை எனலாம். பெரிய அளவில் பூஜையறையிலும், சிறிய அளவில் டாலராகவும் செய்து உபயோகித் துப் பயன்கள் பல பெறலாம்.

செல்: 74485 89113

bala091118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe