காதல் என்பது ஒரு மென்மையான, அற்புதமான மன உணர்வு. இது பிறப்புமுதல் இறப்புவரை எல்லா வயதினருக்கும், எல்லா பாலினத்திற்கும் வரும் இயற்கை உணர்வு. காதல் என்பது ஒருவரின்மேல் ஒருவர் வைக்கும் அதீத அன்பு. அம்மா, அப்பா குழந்தைகளின்மேல் வைக்கும் அன்பும் காதல்தான். சகோதர- சகோதரிகள் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பும் காதல் தான். ஒரு மனம் யாரிடம் லயிக்கிறதோ அந்த நபரின் உணர்வு, நட்பு தன் வாழ்நாள் முழுவதும் வேண்டுமென்று நினைக்கும்.
இதுவும் இயற்கைதான். பெற்றோர், உடன்பிறந்தவர்களின் நல்லுறவு, நட்பு ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கப் பெற்றால் அவர் பாக்கியசாலி. கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்.
மனித வாழ்வின் மிகமுக்கிய அங்கமான திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது என்பது ஆன்றோர் வாக்கு. தற்காலத்தில் அது பூலோகத்தில்தான் நிச்சயமாகிறது. திருமணத்தை- பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்பத் திருமணம் என இரண்டு வகைப்படுத்தலாம்.
எல்லாருடைய திருமணவாழ்வும் மகிழ்ச்சியாகவே இருக்குமென்று உறுதி சொல்லமுடியாது. இதை மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றித்தர ஒரு ஜோதிடரால் முடியும். நிச்சயமாக மகிழ்ச்சியான, இன்பமான திருமணவாழ்வை ஜோதிடரால் மட்டுமே அமைத்துத் தரமுடியும். ஒரு ஜாதகத்திலுள்ள குறையை சரிசெய்யக்கூடிய அமைப்புகள் உள்ள ஜாதகத்தைப் பொருத்துவதே இதற்கான சிறந்த தீர்வு மற்றும் பரிகாரம். பெற்றோர்கள் ஏற்படுத்தித் தரும் திருமணத்தில் முறையான திருமணப் பொருத்தம் இருக்கும். அதனால் பாதிப்பு மிகமிகக் குறைவே. ஜோதிடரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்துப் பெற்றோரின் விருப்பத் திருமணமா? ஜாத கரின் விருப்பத் திருமணமா என்பதை எளிதாகக் கூறமுடியும். காதல் திருமணம் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன்.
காதலுக்கான காரக கிரகம் புதன். பாவகம் 5. ஒருவரின் ஜாதகத்தில் 5, 7-ஆம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமணவாழ் வைப் பற்றிக் கூறமுடியும். 2, 5, 7, 11-ஆம் பாவகத் தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தத்தை வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாகக் கூறமுடியும். பெற்றோர் களால் நடத்தப்படும் திருமணத்தில் சறுக்கல் ஏற்பட்டால் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் தன் இனத்தவரால் நியாயம் கிடைக்கச்செய்ய முடியும். சமூக அங்கீ காரமும் உண்டு.
என்னிடம் ஜாதகம் பார்க்கவந்த சில பெற் றோர்களின் மன உணர்வே இந்தக் கட்டுரை. பெற்றோர்கள் குழந்தை களின்மேல் வைத் திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை, அன்பு, செல் போன் இந்த மூன்றும்தான் குழந்தைகளின் தவறான நட்பிற்குக் காரணம். சில வருடங்களுக்குமுன்பு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண காலம் பற்றி அறிய ஜோதிடர்களிடம் வந் தனர். இப்பொழுதோ "என் குழந்தை தவறான நட்பில் உள்ளது; இது சரியாகுமா? சரிசெய்ய முடியுமா?' என்று 15 வயது குழந்தையின் பெற் றோர்கூட வந்து நிற்கும்போது பரிதாபமாக உள்ளது. சென்னையைச் சேர்ந்த சில பெற் றோர்கள் முன்ஜாக்கிரதையாக "என் குழந்தை தவறான நட்பிற்குப் போகுமா' என்றும் கேட்கிறார்கள். இன்னும் கொடூரமாக கல்யாணமாகி குழந்தை இருப்பவர்கள்கூட முகம்சுளிக்கச் செய்யும் அளவிற்கு கேடான நட்புடன் இருக்கிறார்கள். என்னிடம் ஜாதகம் பார்க்கவரும் பெற் றோர்களில் பலருக்கு, குழந் தைகள் தவறான நட்பில் இருந்தால்- பெற்றோர்களின் கவனத்திற்கு வராமல் இருந் தால் உண்மையைக்கூறி, குழந் தைகளை எவ்வாறு மீட்பதென்று ஆலோசனை கூறியிருக்கிறேன். சிலர் நீண்டகாலமாக நெருக்கம் ஏற்பட்டபிறகும் வருகிறார்கள்.
திருமணத்திற்குமுன்பு தவறு ஏற்பட்டு வாழ்வை இழந்த சிறுவயதினரையும் அழைத்து வருகிறார்கள்.
குழந்தைகளை நல்வழிப் படுத்திய பெற்றோர்களின் நன்றியைப் பெற்றிருக்கிறேன். ஒரு குழந்தை தவறான நட்பில் ஈடுபடுகிறதென்றால் இரண்டு காரணம் மட்டுமே.
1. குழந்தைகளின்மீதுள்ள அதீத அன்பில் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் ஆதரிப்பது அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது. இந்தவகை பெற்றோர்களின் குழந் தைகள் விளையாட்டாக- பொழுதுபோக்காக தங்களின் நட்பை ஆரம்பித்து முடிவில் தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள்.
2. பல குடும்பங்களில் கணவன்- மனைவி கருத்து வேறுபாட்டால் குழந்தைகளை முறை யாகப் பராமரிக்காமல் இருப்பது. இந்தவகை குழந்தைகள் தங்களின் மன ஆறுதலுக்கு தவறான நண்பரைத் தேர்வு செய்கிறார்கள். தவறான நட்பாக இருந்தால்கூட நண்பர்களின் பொய்யான வார்த்தையைக்கூட நிஜம் என்று நம்பிவிடுகிறார்கள்.
மூன்றாவது வகை ஒன்றுள்ளது. பணக் கார நட்பென்றால் அந்த வரனை முடிப்பதில் ஆர்வமும், வசதியில்லாத வரனென்றால் அதை உதாசீனமும் செய்கிறார்கள். பணம் இருந்தால் தவறுகூட சரியாகிவிடுகிறது. சிறிது காலத்திற்குப்பின், "விவாகரத்து எப்பொழுது கிடைக்கும்? இரண்டாம் கல்யாணம் எப் பொழுது நடக்கும்' என்று ஜோதிடரை அணுகு கிறார்கள். ஒரு வருடத்திற்குமுன்பு, பூ விற்கும் பெண் ஒருவர் தன் மகனின் ஜாதகத்துடன் என்னிடம் வந்தார். அந்த ஜாதகத்தைப் பார்த் ததும், "உங்கள் பையன் தவறான நட்பில் உள்ளான். அதனால் போலீஸ் கேஸ் வரும் வாய்ப்புள்ளது. பையனை கவனமாகப் பாருங்கள்' என்றேன். அதற்கு அவர்,‘"அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். என் பையனும் அந்தப் பெண்ணும் ஃபேஸ்புக்கில் நண்பர் களானார்கள். அந்தப் பெண் கோடீஸ்வர வீட்டுப்பெண். அவள் இல்லாவிட்டால் என் மகன் இருக்கமாட்டான்' என்று கூறியதுடன், "இருவருக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும்?' என்றும் கேட்டார். அந்தப் பையதுக்கு 21 வயது நடந்துகொண்டிருந்தது. "இந்தப் பையனுக்கு 29 வயதில்தான் திருமணம் நடக்கும். மனதை மாற்றுங்கள்' என்றுகூறி அனுப்பினேன்.
மறுநாள் மகன் விரும்பும் அந்த கோடீஸ் வரப் பெண்ணின் பிறந்த குறிப்பைக் கொடுத்து, "இந்தப் பெண் என் பையனை நம்பிவருவாளா?' என்று மறுபடியும் கேட்டார். அந்தப் பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, "இந்தப் பெண் தன் தாய்வழி உறவினரையே திருமணம் செய்யும்'’ என்றேன். மூன்று மாதம் கழித்து மறுபடியும் அதே பெண் தன் கணவருடன் வந்து, "நாங்கள் அந்த கோடீஸ்வரப் பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்கப்போகிறோம். நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள்' என்று கேட்டார். "இப்பொழுது பெண் கேட்கப் போனால் அந்தப் பெண்ணின் ஒரு வருட படிப்பு வீணாகிவிடும். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நான்கு மாதம் கழித்துத் தெரிந்துவிடும். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் என்ன முடிவுசெய்கிறார்கள் என்று பார்ப்போம்'’ எனச்சொல்லி அனுப் பினேன்.
மறுபடியும் அந்த பூக்காரப் பெண் ஒரு மாதத்திற்குமுன் வந்து, ‘"நீங்கள் கூறியபடி இப்போது அவர்கள் என் பையனை மிரட்டுகிறார்கள். அந்தப் பெண்ணும் என்னை மறந்துவிடு என்று கூறுகிறது. சில நேரங்களில் போன்செய்து பேசுகிறது'’ என்று கூறினார். மேலும்,‘"அந்தப் பெண் மாதத்தில் ஓரிரு நாட்கள் ஹாஸ்டலில் விடுப்பெடுத்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து தங்கும். அப்பொழுது என் பையன் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து விட்டால் என் மகனுடன் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? அந்த கோடீஸ்வரப் பெண் எங்களுக்கு மருமகளாக வந்துவிட்டால் இரண்டு தலைமுறைக்கு பணக்கஷ்டமே வராது'’ என்றும் சொன்னார். அதன்பின் அந்த பூக்காரப் பெண்ணை இனி என் அலுவலகத்திற்குள் நுழையக்கூடாது என்று கடுமையாகக்கூறி அனுப்பிவிட்டேன். அந்த பூக்காரப் பெண், "இருவரின் அன்பும் உண்மையானது. திருமணம்செய்து நன்றாக வாழவைப்போம்' என்று கூறியிருந்தால்கூட ஆறுதலாகி இருப்பேன். பணக்கார வீட்டுப் பெண்களை வலைவீச ஒரு கூட்டமே இருக்கிறது. பணம் நீச வேலையைச் செய்யத் தூண்டுகிறது. இதுபோல் பல சம்பவம்.
சேலம் எடப்பாடியைச் சேர்ந்த "பாலஜோதிடம்'’ வாசகர் ஒருவர் 3-3-2018 அன்று காலை 10.52 மணிக்கு சோழிப் பிரசன்னம் பார்க்க வந்தார். மிகமிகமிக முக்கியமான தேவைக்கு மட்டுமே சோழிப் பிரசன்னம் பார்ப்பேன். தனக்கு தொழில் அமைப்பு எப்பொழுதும் சரியாகவே இல்லை என்று மிகவும் வற்புறுத்தி பிரசன்னம் பார்க்கக் கூறினார். அவர் பூஜைப் பொருட் களும் கொண்டு வரவில்லை. என்னிடமிருந்த பூஜைப் பொருட்களைப் பயன்படுத்தி சோழியை வணங்கி உருட்டியதில் ஆருடம் மேஷத்தில் விழுந்தது. உதயமும் ஆருடமும் 2, 12-ஆக வந்ததில் பிரசன்ன வேதையாக இருந்து, ஜாதகருக்கு மாரகம் இருப்பதை சுட்டிக்காட்டியது. ஆருடம் உதயத்தை நோக்கிச் சென்றதால் அவருக்குப் பலனும் கூறினேன்.
ஆருடாதிபதி செவ்வாய் 8-ல் மறைந் திருந்தது. 10-ஆம் அதிபதி சனி 9-ல். பிரசன்னத்தின் தொழில் ஸ்தானாதிபதி, பாதகாதிபதி மற்றும் மகா பாதகாதிபதி சனி 9-ல் நின்று பாதக, மகா ஸ்தானத் தைப் பார்த்ததால், தொழில் முன்னேற்றமின்மைக்கு சரியான முயற்சி இல்லாததும், அதிகப்படியான நிர்வாகச்செலவும் காரணமென தெரிந்தது.
லக்னாதிபதி சுக்கிரன் 11-ல் உச்சம் பெற்று மாந்தியுடன் இருந்தது. 4-ஆம் அதிபதி சூரியன் மகாபாதக ஸ்தானத்தில் நின்று தன் வீட்டைத் தானே பார்க்கிறது. 4-ஆம் அதிபதி சூரியனுக்கு அஷ்டமாதிபதி குரு, பாதகாதிபதி சனியின் பார்வை மகாபாதக ஸ்தானத்திற்கு இருந்ததால், குலதெய்வ அனுக்கிரகமின்மையையும் சுட்டிக்காட்டி, குலதெய்வ வழிபாட்டை சரிசெய்யக் கூறினேன்.
7-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் உச்ச பலம் பெற்றதால், "தொழிலை உங்கள் மனைவி நடத்துகிறாரா? என்ன தொழில்' என்று கேட்டேன். "ஹோட்டல் தொழில். ஹோட்டலுக்குத் தேவையான பொருளை வாங்கிக் கொடுத்துவிடுவேன். ஆள்வைத்து என் மனைவி நடத்துகிறார்' என்றார். 10-ஆம் அதிபதி சனி மற்றும் தொழில்காரகர் சனி தன் வீட்டிற்குப் பின் வீட்டில் மறைந்து, தன் வீட்டைத் தானே பார்க்கிறது. வேலையாட் களை நம்பி நடத்தப்படுவதால் முறையான பராமரிப்பு இல்லாததையும், வருமானம் நிர்வாகச் செலவிற்கே சென்றுவிடுவதை யும் சுட்டிக்காட்டப்பட்டது. உணவகம் சுத்தம் இல்லாமல் இருக்கும்; உணவும் சுத்தமாக சமைக்கப்பட்டிருக்காது என்றுகூறி தொழிலை முறைப்படுத்த சில வழிபாட்டுமுறையும் கூறப்பட்டது.
பிரசன்னத்தின்போது உணர்ந்த சில சகுன, நிமித்தங்களைக் கொண்டும், பிரசன்ன சக்கரத்தைக் கொண்டும் சில உபரி தகவலும் கூறினேன். "ஆருடத்தை குரு பார்க்கிறது. 5-ஆம் இடத்தில் உள்ள சந்திரன் குருவை நெருங் கிக்கொண்டு இருக்கிறது. குரு செவ்வாயை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதால், உங்கள் வீட்டில் 16 நாட்களில் சுபநிகழ்வொன்று நடக்கப்போகிறது.
அந்த சுபநிகழ்வு உங்களுக்கு மனவேதனை தருவதாக இருக்கும்' என்றும் கூறினேன். "சுபநிகழ்வென்றால் என்ன நிகழ்வு' என்று கேட்டார். "உங்கள் குழந்தையின் திருமணம்' என்றேன். "அப்படி எதுவும் நடக்க வாய்ப் பில்லை. எனக்கு ஒரு ஆண், ஒரு பெண் உள்ளனர். பையன் படித்து முடித்துவிட்டு ஒரு மாதமாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறான். பெண் இறுதியாண்டு கல்லூரி படித்துக்கொண்டிருக் கிறாள். நீங்கள் சொல்வதுபோல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை' என்றார். பின்னர் "எந்த குழந்தைக்கு திருமணம் நடக்கும்' என்று கேட்டார். "பெண் குழந்தைக்கு' என்றேன்.'
"எங்கள் பெண் வீட்டுவாசலில் கல்லூரி பஸ்ஸில் ஏறி, வீட்டுவாசலில் வந்து இறங்குகிறது. வாய்ப்பே இல்லை' என்று கூறிச் சென்றவர் 18-ஆம் நாள் காலை போன்செய்து, "நீங்கள் கூறியதுபோல் என் பெண்ணை ரிஜிஸ்ட்டர் ஆபீஸில் பார்த்ததாக என் உறவினர் ஒருவர் வந்து சொன்னார். ஆனால் என் பெண் தினமும் காலேஜ் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறாள்' என்று சொல்லி, மறுபடியும் என்னைப் பார்க்க 23-ஆம் தேதி அப்பாயின்மென்ட் வாங்கினார்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406