Advertisment

காதல் திருமணம் யாருக்கு? கோவை எம். தனம்

/idhalgal/balajothidam/love-marriage-whom-coimbatore-m-crap

லரினும் மென்மையானது காதல் என்பர். காதல் இல்லாமல் இந்த உலகமே இயங்காது என்றும் சொல்லலாம். காற்றும் காதலும் ஒன்றுபோல், உருவமில்லாமல் உணர முடிந்தது மட்டுமே என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.

Advertisment

ஒரு மனிதனை மனிதனாக்கிடக்கூடிய ஒரே விஷயம் காதல் என்ற அன்புதான். இந்த அன்பு ஒருவருக்கு எதிர்பாலினத்தினர்மீது வருதல் இயற்கையின் நியதியாகும்.

Advertisment

dd

மனித வாழ்க்கையில் அன்பு என்பது எதிர்பார்ப்பில்லாத பாசமாகும். இது இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடும். எந்த ஒன்றிலும் பிடிப்பு இல்லாதது போன்ற வெறுமை நம்மைச் சூழ்ந்துகொள்ளும். பொதுவாக எல்லாருக்கும் அவர்கள் ஆசைப்பட்டதுபோல் வாழ்க்கை அமைகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். மண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் காதலில் மூழ்கி வந்தவர்களாகவே இருப்பார்கள். அதில் ஒரு சிலருக்குத்தான் அந்தக்காதல் திருமணம் வரை சென்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருக்கும்.

பெரும்பாலானவர்களின் காதல் கானல் நீர்போல் காணாமல் போயி ருக்கும்.

ஒருசிலரின் காதல் பலப்பல போராட்டங் களைச் சந்தித்து தோல்வியடைந்திருக்கும். ஒருசிலரின் கா

லரினும் மென்மையானது காதல் என்பர். காதல் இல்லாமல் இந்த உலகமே இயங்காது என்றும் சொல்லலாம். காற்றும் காதலும் ஒன்றுபோல், உருவமில்லாமல் உணர முடிந்தது மட்டுமே என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.

Advertisment

ஒரு மனிதனை மனிதனாக்கிடக்கூடிய ஒரே விஷயம் காதல் என்ற அன்புதான். இந்த அன்பு ஒருவருக்கு எதிர்பாலினத்தினர்மீது வருதல் இயற்கையின் நியதியாகும்.

Advertisment

dd

மனித வாழ்க்கையில் அன்பு என்பது எதிர்பார்ப்பில்லாத பாசமாகும். இது இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடும். எந்த ஒன்றிலும் பிடிப்பு இல்லாதது போன்ற வெறுமை நம்மைச் சூழ்ந்துகொள்ளும். பொதுவாக எல்லாருக்கும் அவர்கள் ஆசைப்பட்டதுபோல் வாழ்க்கை அமைகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். மண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் காதலில் மூழ்கி வந்தவர்களாகவே இருப்பார்கள். அதில் ஒரு சிலருக்குத்தான் அந்தக்காதல் திருமணம் வரை சென்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருக்கும்.

பெரும்பாலானவர்களின் காதல் கானல் நீர்போல் காணாமல் போயி ருக்கும்.

ஒருசிலரின் காதல் பலப்பல போராட்டங் களைச் சந்தித்து தோல்வியடைந்திருக்கும். ஒருசிலரின் காதல் மலரும் நினைவுகளாக- நினைவுகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

இந்த நிலையில் ஜாதகரீதியாக யார் யாருக்கு காதல் அமையும் என்று பார்ப்போம்.

காதலைக் கொடுக்கும் ராசியும் லக்னமும்

எல்லா ராசிக்காரர்களுக்கும் லக்னக்காரர்களுக்கும் காதல் வரும். ஆனால், எளிதில் காதல்வசப்படக் கூடியவர்கள் என்று பார்த்தால், ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி ஆகிய ராசி, லக்னக்காரர்கள்தான்.

காதலைக் கொடுக்கக்கூடிய கிரகங்கள்

சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் தான். காதல் எண்ணத்தைக் கொடுக்கும்.

காதலைச் சொல்லும் பாவங்கள்

காதலைச் சொல்வது ஐந்தாம் பாவமாகும். இதனுடன் ஏழாம் பாவம் தொடர்பு பெறும் பொழுது அது திருமணத்தை நோக்கி நகர்கிறது. 11-ஆமிடம் தொடர்பு பெறும்பொழுது அவர்களுடைய ஆசைப்படி திருமணம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

இரண்டாம் இடம் தொடர்பு பெறும் பொழுதுதான் அக்காதல் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும் திருமணமாக அமைகிறது. சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரனின் பார்வை பெறும்போது காதல் திருமணம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் நடைபெறும்.

தசாபுக்தியும் காதலும்

காதல் எண்ணம் தோன்றுவதற்கும், காதலில் விழுவதற்கும் தசா புக்தியும் முக்கிய பங்குவகிக்கிறது. ஐந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தா லும் அந்த ஜாதகருக்கு காதலைத் தந்துவிடும். சுக்கிரன்+புதன்+சந்திரன் இந்த மூன்று கிரகங்களில் ஐந்து, ஏழாம் பாவத்தில் ஒரு கிரகம் நின்று தசாபுக்தி நடத்தும்பொழுதும், களத்திரக் காரக கிரகத்துடன் தொடர்புபெற்று தசாபுக்தி நடத்தும்பொழுதும், ஐந்தாம், ஏழாம் பாவாதிபதியின் தசாபுக்தி நடக்கும்பொழுதும், இந்த பாவத்தின் அதிபதி நின்ற நட்சத்திரத்தின் தசாபுக்தி நடக்கும்பொழுதும் காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

கலப்புத் திருமணம் யாருக்கு?

சாதிவிட்டு வேறு சாதி, மதம்விட்டு வேறு மதம், குலம்விட்டு வேறு குலம் என்று கலப்புத் திருமணமும் நடைபெறுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கும்போது, ஐந்தாம் அதிபதியுடனும், ஏழாம் அதிபதியுடனும், களத்திரக்காரக கிரகத்துடனும் ராகு- கேதுக்களின் சேர்க்கை உள்ள ஜாதகர்களுக்கு கலப்புத் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பும் சூழலும் ஏற்படுகிறது.

சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களுடன் பாவ கிரகங்கள் சேர்க்கை பெறும்பொழுது கலப்புத் திருமணம், மதம் மாறித் திருமணம் என்ற நிலைக்குள் செல்லவேண்டிய சூழல் அமையும்.

ஏழாம் அதிபதியும் களத்திராதிபதியும் வக்ரம் பெறும்பொழுது அவர்கள் துணையை அவர்களே தேர்வுசெய்திடக் கூடியவர்களாக இருப்பார்கள். மூன்று, ஏழு, பதினொன்றாம் பாவகங்கள் ஏதேனும் ஒன்றில் குரு இருந்தால் அவர்கள் தேர்வுசெய்யும் துணையே சரியானவர் என்று நினைத்திடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ஐந்தாம் பாவகத்தில் சனி இருந்தால் காதல் வரும். ஆனால், அவர்களுக்குப் பொருத்தமான துணையை அவர்களால் தேர்வுசெய்ய முடியாமல் போகும்.

மறுமணம் யாருக்கு!

ஒருகாலத்தில் மறுமணம் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நிலையில், இப்போது மறுமணத்திற்காக ஜாதகம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், மறுமணங்களும் அதிகரிக்க ஆரம்பித் துள்ளது.

இரண்டாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் ஆறுக்குரியவருடனும், எட்டுக்குரியவருடனும் தொடர்பு பெறக் கூடியவர்களுக்கும், ஏழாம் அதிபதி பலவீனம் அடைந்தவர்களுக்கும் மறுமணம் என்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

செவ்வாய்+சனி+சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களின் இணைவும் இரண்டாம் திருமண நிலைக்குக் கொண்டுசெல்லும்.

சுக்கிரன்+ராகு ஆகிய இரண்டு கிரகங்களின் இணைப்பு, பார்வை கொண்ட அமைப்பும் இரண்டாவது திருமணத்திற்கு வழிகாட்டுவதாக இருக்கும்.

ஏழாம் இடம் பலம் குறைந்து, ஒன்பதாம் இடம் வலுத்திருப்பதும் இரண்டாவது திருமணத்திற்கு வழியமைக்கும்.

1+7+9+12 ஆகிய நான்கு பாவகங்களும் தொடர்புபெறும் நிலையும் மறுமணத்தைக் கொடுக்கும்.

காதலில் ஏற்படும் பிரச்சினைகள்

ஐந்தாம் அதிபதியுடனும் ஏழாம் அதிபதியுடனும் 6 + 8 ஆகிய பாவகங்கள் தொடர்பு பெறும்பொழுது காதலில் பிரச்சினை, காவல் நிலையம்வரை செல்வது, குடும்பத்தில் பிரச்சினை என்று எந்தவொரு வகையிலாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்களின காதல் பிரிந்து விடுகிறது.

ஐந்தாம் அதிபதி அஷ்டமாதிபதியுடன் சேர்க்கைப்பெறும்போது காதலால் நிறைய அவமானங்களைச் சந்திக்கும் நிலையும் தோன்றுகிறது.

இந்தக் காலத்திலுள்ள அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தை களின் ஜாதகங்களை நன்கு ஆய்வுசெய்து, அவர்களுக்கு ஜாதகத்தில் எந்த மாதிரி யான திருமண வாழ்க்கை உள்ளது என்பதை முன்பே அறிந்து அதற்கேற்றாற் போல் அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது என்பது, அவர்களுக்குரிய சரியான வாழ்க்கையை, அவர்களுடைய விதிக்குரிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதாகும்.

செல்: 90802 73877

bala090824
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe