த்தனைப் பேரிடர்கள் வந்து மனிதனைத் தாக்கி கண்முன்னே பலரை கபளீகரம் செய்தா லும், சில நொடிகள் வருத்தம் தெரிவித்து விட்டு, எப்போதும்போல் தான் நினைத்த செயலை செய்தே தீருவேன் என மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். மரணமில்லா மனிதன் பூமியில் இதுவரை யாருமில்லை என்பதை அறிந்தும், ஒவ்வொருவரும் தனக்கு மட்டும் மரணமில்லாததுபோல நினைத்து, வாழும்வரை அடுத்தவர்களை இம்சித்து வாழ்கிறான். அடுத்தவர் இறப்பை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அலட் சியப்படுத்தி, தனக்கு வேண்டியவர்கள் இறந் தால் மட்டுமே வருத்தம் அடைகிறான்.

அவமானப்படாதவர் உலகில் யாரு மில்லை. தோல்விகளுக்கு வெட்கப்படாமல், தோல்விகளை வெட்கப்பட வைத்து ஓட்டினால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். விபத்திற்கான காரணம் நம்முடைய கவனக்குறைவு மற்றும் மன உளைச்சல்தான்.

இங்கு நடக்கும் அத்தனையும் நிஜமல்ல. எல்லாம் மாறும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதன் "அடுத்து என்ன' என்கிற தேட-ல் இறங்கி, நிகழ்வை மறந்து போகிறான். வறுமை என்பதை மனதிற்குக் கொண்டுசெல்பவன் முட்டாள். பொருளா தாரத்தில் குறைவாக இருப் பவன் தாழ்வானவன் என்னும் மனப்போக்கை முத-ல் நாம் மாற்றிக்கொண்டால்தான் நிம்மதியாக வாழமுடியும். பொய், வதந்தி, பித்தலாட்டம் நெடுநாள் கைகொடுக்காது. பொய்யை ஞாபகம் வைத்துக் கொண்டிருப் பது கடினம். உண்மை எப்படியும் ஓருநாள் வெளிச்சத்திற்கு வந்துவிடும். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் தீரவேண்டும். அதுபோல் தவறு செய்பவன் என்றாவது தண்டனை பெறுவான். தற்கொலை செய்பவன் பலவீனமானவன். ஏன் நம்மால் வாழமுடியாது என்பவனால்தான் சிறப் பாக வாழமுடியும். இத்தனைவிதமான எண்ணங்களையும், தீர்வுகளையும், தீர்ப்புகளையும் எட்டாமிடம் தருகிறது.

எட்டாமிடம்

Advertisment

எட்டாமிடம் ஆயுளைக் குறிக்கும் முக்கியமான இடம் மட்டுமின்றி, விபத்து, அவமானம், வறுமை, அவதூறு, மன நிம்மதி யின்மை, சிறை தண்டனை, தற்கொலை எண்ணம் போன்றவற்றைத் தரும் முக்கிய மான இடமாகும். எட்டாமிடத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்களை கவனிக்க வேண்டும். நல்ல யோகங்கள் இருக்கும் ஜாதகருக்குக்கூட எட்டாமிட கிரகங்கள் பாதிப்பைத் தந்துவிடுகின்றன. பாவ கிரகங்கள் மட்டுமின்றி சுபகிரகம்கூட பாதிப்பைத் தரும். இனி நவகிரகங்கள் எட்டில் நின்று தரும் பலன்களைப் பார்ப்போம்.

சூரியன்

நோய், எதிரி, கடனால் தந்தை அவதிப் படுவார். தந்தையால் நன்மை இல்லாமல் போவது, தந்தை இல்லாமல் இருப்பது, தாயைவிட்டு தந்தை பிரிந்துபோவது போன்ற பலன்களைத் தரும். தந்தை, தந்தைவழி உறவுகளால் அவமானம், தீமை அல்லது அவர்களைவிட்டு விலகி யிருப்பது. தந்தை மரபுவழி நோய், உஷ்ணத் தால் உண்டாகும் நோய்கள், தீயால் கண்டம், வாய்ப் பேச்சால் வம்பு, பிரச்சினைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்வது, முன்கோபத்தால் பலரைப் பகைத்துக் கொள்வது போன்றவை நிகழும். யாருக்கும் உதவ விரும்பாதவராகவும் கஞ்சனாகவும் இருப்பார். அடுத்தவர் பணத்தில் காரியம் சாதிக்க நினைப்பார். அரசாங்க தண்டனை, அரசால் ஆபத்து, அரசியல்வாதிகளால் தொல்லை அனுபவித்தல், புகழை இழத்தல், வெட்டி கௌரவம் பார்ப்பது போன்றவை இருக்கும். வீம்பால் நிம்மதியற்ற வாழ்க்கையைத் தேடிக்கொள்வார்கள். முன்கோபி, எடுத்தெறிந்து பேசும் துணைவர் அமைவார். மாங்கல்ய ஸ்தானம் என்பதால் பெண்களுக்கு ஆகாது. சுபர் பார்வையின்றி செவ்வாயுடன் சேர்ந்தால் கணவருக்கு கண்டத்தைத் தரும்.

Advertisment

சந்திரன்

தாயால் பிரச்சினை, தாயாருக்கு நோய், எதிரி, கடன் பிரச்சினைகள் ஏற்படும். ஜலதோஷம் போன்ற கப நோய், தாய் மரபுவழி நோய், கண் பிரச்சினை, தண்ணீரால் கண்டம் ஏற்படும். மன நிலையில் பிரச்சினை வரும். கற்பனைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்த சிந்தனை, சிந்திக்காமல் செயல் படுதல், முகத்தில் தழுப்பு, சரும நோய்கள் உண்டாகும். தேய்பிறைச் சந்திரனாகி சுபகிர கப் பார்வையின்றி இருந்தால் ஆயுள் குறைவு. எட்டாமிடத்தை சனி பார்த்தால் மறதி இருக்கும். சிந்தனை குறைந்த குழப்பவாதி. கூட்டு பாவகிரகப் பார்வை, இணைவு பைத்தியமாக்கிவிடும். மனம், உடலை பலவீனப்படுத்தும். தாயாரின் பேச்சு குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். குரு பார்வை இருந்தால் கடைசி நேரத்திலாவது யாராவது காப்பாற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும். பிரபலமான துணை கிட்டும். சந்திரன் சுபத் தன்மை பெற்றால் ஊர்மெச்சும் குணமுடைய வராக இருப்பார்.

murugan

செவ்வாய்

சகோதரரால் பிரச்சினை, சகோதர நஷ்டம் ஏற்படும். நிலம் சார்ந்த பிரச்சினைகள், கோர்ட், கேஸ் என அலைய நேரும். ரத்த சம்பந்த மான நோய், தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். பாவகிரகப் பார்வை, அரசுக்கு எதிரான முறையற்ற செயல்களில் ஈடுபடுத் தும். மனநிம்மதியைக் கெடுக்கும். செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பதால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுவார். போக்குவரத்தில் பாதிப்பு, விபத்து, கண்டம் ஏற்படும். களத்திர தோஷத்தைக் கொடுக்கும். பாலாரிஷ்ட தோஷம், அற்ப ஆயுளைத் தந்துவிடும். மாங்கல்ய ஸ்தானமான எட்டில் செவ்வாய் இருப்பது தோஷமாகி திருமண வாழ்க்கையை பாதிக்கும். கணவனை இழத்தல், பிரிதல், கணவனை தாண்டிய உறவுகளைத் தந்து விடுகிறது. குரு பார்வை இருந்தால் எதிரி களை அழிக்கும். அரசாங்க நன்மை, அரசாங்கப் பணி, அரசுப் பணத்தை அனுபவிக்கும் யோகத்தைத் தரும். பாவகிரக பலம்பெற்றால், எந்த தொழில் செய்தாலும் தொல்லைகள் அதிகம் வரும். கூட்டுத் தொழில் ஆகாது. உடனிருப்பவர்களால் வஞ்சிக்கப்படுவர். சிலருக்கு பிடிவாதம், எதிர்வாதம் செய்யும் அடங்காத துணைவர் அமைவார்.

புதன்

அதிகம் படிப்பதா லும், அதிகம் தெரிந்து கொண்டதாலும் நிறைய சங்கடங்கள் ஏற்படும். பெரும்பாலும் மந்தமான வாழ்க்கை யைத் தரும். பிறருக்கு உதவும் பண்பிருந்தா லும் செயல்படுத்துவதில் தடை ஏற்படும். பணத்திற்காக சிறு விஷயங்களில் ரொம்பவே அலட்டிக் கொள்வார். அது பிறருக்கு எரிச்சலை உண்டாக்கும். புரிந்துகொண்டால் நற்பெயர் பெறலாம். ஊரைத் திருத்த முயன்று, தன்னைத் திருத்திக்கொள்ள இயலாத நல்லவராக இருப்பார். தன்னுடைய மந்தபுத்தியால், அறிவாளி துணைவரின்மூலம் அவதிப்படுவார். பாவகிரக வலுப்பெற்றால் பைத்தியம்போல செயல்படுவார். தொடர் தோல்வியால் மாந்த்ரீகம், மந்திர தந்திரங் களைக் கற்று செயல்படுத்த எண்ணுவார். வயிறு, சிறுநீரகக் கல், மூலம், குடல்வால், குடல் சம்பந்தமான நோயால் அவதிப்படு வார். சுபவலுப் பெற்றால் நீண்ட ஆயுளைத் தரும். மனைவிவழி யோகமும், நன்மையும் உண்டாகும். துணைவரை அனுசரித்து வாழ்வது சிறப்பு.

குரு

மறைந்த குரு நிறைந்த அறிவைத் தருவார். யாரும் கணிக்கமுடியாத, கண்டறியாத விஷயங்களைக் கண்டறிந்து உலகத்துக்கு வெளிக்காட்டுவார். உலக ஞானங்களை எளிதில் பெறுவார். சோதனைகள் அதிகம் இருக்கும். அவையனைத்தும் தன்னை அறியவும், உலக மக்களைக் காக்கும் விழிப்புணர்வு பெறவும் வழிவகுக்கும். பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும்படியான எளிய நடையில் தன்னுடைய கண்டுபிடிப்பு களைக் கொண்டு சேர்ப்பார். மனநிலையையும், உடல்நிலையையும் காக்கும் தேவ ரகசிய மந்திரங்களையும், மருத்துவத்தையும், ஆன்மிகத்தையும் கண்டறிந்து போதிப்பார். முன்கோபி. ஆசனவாய் பிரச்சினை, மூலம், இதயம் சார்ந்த வியாதி, தோள்பட்டை சவ்வு பாதிப்பு போன்ற வியாதியைத் தரும். தனிமை விரும்பி. ஆழ்நிலை தியானம் வாய்க்கும். தனிமையில் அளப்பரிய சிந்தனைகள் பிறக்கும். மகான். சகஜமாகப் பழகும் குணமிருக்காது. நம்பியிருந்த நெருங்கிய உறவு கள் துரோகம் செய்வர். புத்திர தோஷத்தைக் கொடுக்கும். பெற்ற பிள்ளைகளால் வேதனை அடைவார். சொத்துகளை பிள்ளை பெயரில் எழுதிவைத்தால் வீணாகும். அல்லது சொத்துகளைப் பறித்துக்கொண்டு கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள். பாவகிரகப் பார்வை தடுமாற வைக்கும். தவறான செயல்கள் செய்து மனநிம்மதி கெடுவர். குருவாக வருபவர்கள், ஆலோசனை தருபவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். குலதெய்வக் குறை, குலதெய்வ வழிபாடுகளை இழந்தி ருப்பர். மனைவி சொல்லைக் கேட்டு நடப்பர். நல்ல துணை வாய்க்கும்.

சுக்கிரன்

சாஸ்திர ஞானத்தைத் தரும். ஆயுள் விருத்தி உண்டு. சுபகிரக வலுப்பெற்றால் மனைவியால் அதிர்ஷ்டம். லட்சியத்திற்குத் துணைநிற்கும் துணைவர் அமைவார். வசதியான மனைவி அமைவார். திருமணத்திற்குப் பின்னால் வசதி வரும். சுபகிரக சம்பந்தம் நன்மையும், பாவகிரக வலு நஷ்டத்தையும் தரும். சிலருக்கு கடன்பட்டு வாழும் நிலை ஏற்படுத்தும். ஆண்களுக்குப் பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் தொல்லை ஏற்படும். காதல் பிரச்சினைகளால் மனம் வெறுக்கும். அடுத்தடுத்த காதலால் அவதியுண்டு. ஒருதலைக் காதலைத் தவிர்க்கவேண்டும். உயிரணுக்கள் பிரச்சினை, பால்வினை நோய்கள், நீரிழிவு நோய், அதன் துணை நோயும் உண்டாகும். திருமணத் தடை, கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம், சண்டை சச்சரவு, பிரிவு, அவமானம், பாதிப்பு ஏற்படும். கெட்டவராகப் பெயர் எடுப்பார். ஆண்களுக்கு பெண் வர்க்கமான தாய், சகோதரி, மனைவி, மகள், தோழி, மனைவியால் தொல்லை, நோய், எதிரி, கடன் பாதிப்பு ஏற்படுகிறது.

சனி

எட்டில் சனி இருப்பது காரகோபாவ நாஸ்தி. ஆயுள் பாதிப்பு தவிர்த்து, பலவித நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுவார். அதிக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும். கடன், நோய், எதிரியால் தொல்லைதான். நல்ல தசாபுக்திகள் இருந்தால் சுமாராக இருக்கும். தொழில்காரகன் சனி எட்டாமிடமான மறைவிடத்தில் இருப்பது, நிலையான தொழில், வருமானமின்றி அவதிப்பட நேரும். உழைப்பிற்கேற்ற ஊதியம், மரியாதை, செல்வாக்கு எங்கும் கிடைக்காது. வருமான இழப்பு தொழில் நஷ்டம், தொழில் சரியாக அமையாமல் அவதிப்படுதல் போன்ற தீய பலன்களைத் தரும். குடும்பத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதம் மன நிம்மதியைக் கெடுக்கும். பாவ வலுக் கூடினால் சில பெண்களுக்கு மாங்கல்ய பாதிப்பைத் தரும். கண், நரம்பு சம்பந்தபட்ட வியாதி உண்டாகும். சிலருக்கு புத்திர தோஷத்தைத் தரும். கீழான குணம் இருக்கும். தன் சாதியைச் சேர்ந்தவர்களுடன் உறவாடுவார். களத்திர தோஷத்தால் திருமணத் தடை, பாதிப்பு, பிரிவு மற்றும் திருமணத்தால் தொல்லைகளை அனு பவிப்பார். வேற்று மொழி, இனம், மதத்தவ ரால் லாபம், வெளிநாட்டு நபர் அல்லது வாழ்க்கை நன்மை தரும். பாவகிரகம் வலுவிழந்து மறைவிடத்தில் நிற்பது பலவித கெடுபலனைத் தடுக்கும். எதிலும் மந்தமான போக்கு, துணைவரால் தொல்லை, வாய்ப் பேச்சால் வம்பு வளர்ப்பார். பொறாமை குணம் கொண்டவராகவும், எதிலும் திருப்தி அடையாதவராகவும் இருப்பார்.

ராகு

எவ்வளவு முயற்சி செய்தாலும் தோல்வியடைந்துகொண்டே இருப்பார். விரக்தியை சில நேரங்களில் தந்துவிடும். பாவகிரக வலுப்பெற்று ராகு தசை நடந்தால் சொல்லமுடியாத சோதனையும் வேதனை யும் ஏற்படும். மரபணுப் பிரச்சினை, பரம்பரை வியாதியால் அவதிப்படுதல், நரம்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டு தொல்லை தரும். நிம்மதியற்ற, நிலையற்ற குடும்ப வாழ்க்கை உண்டாகும். தந்தைவழி பாட்டனால் தொல்லை, இழப்பு, சொத்துப் பிரச்சினை உண்டாகும். துணைவரால் வீண் வாக்குவாதம், சண்டை அடிக்கடி நேரும். குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். இல்லறம் கெட்டு தாரதோஷம் உண்டாகும். திருமண தாமதம், தடை, பிரிவு, அவமானம் உண்டாகும். விஷத்தால் கண்டம், தற்கொலை செய்யுமளவு மன விரக்தி தோன்றும். கொடுத்துக் கெடுக்கும் ராகுவால் சிறைப் படும் நிலை, நீதிமன்றப் போரட்டம் ஏற்படுத்தும். மனநிம்மதியைத் தொலைக்க நேரும். பாவகிரகப் பார்வையால் தொல்லைகள் நிறைந்த வாழ்க்கையே கிடைக்கும். சுபகிரகப் பார்வையால் வெளி நாடு, வெளிநாட்டினர், சொந்தமில்லா வெளிமனிதர்களால் நன்மை உண்டாகும்.

கேது

வயிறு சம்பந்தமான வியாதி, கர்ப்பப்பை, குடல், கல்லீரல், சிறுநீரகக்கல் பாதிப்பு போன்ற நோய்களும், ஆயுதத்தால் அறுவை சிகிச்சையும் ஏற்படக்கூடும். சுபத் தன்மை பெறாத கேது தசை புரட்டி எடுத்து விடும். "ஏன்டா பிறந்தோம்' என்னுமளவு சோதனைகளைத் தருவார். தற்கொலை செய்துகொள்ளுமளவு மனம் வெறுக்கச் செய்யும். ஆனால் அதனைத் தாக்குப்பிடித் துக் கடந்துவிட்டால் வெற்றிமேல் வெற்றி உண்டு. உலக ஞானத்தைக் கொடுக்க கேது பல சோதனைகளைக் கொட்டுவார். பற்றற்ற நிலையைத் தந்து, "நிதானம், பொறுமை இருந்தால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்- யாரிடம் எப்படி நடந்துகொண்டால் வாழமுடியும்' என்பதைப் பட்டுத் தெரியவைப்பார். தந்தை வழி பாட்டியால் தொல்லை, பாதிப்பு, உறவற்ற நிலை ஏற்படும். சுபகிரகப் பார்வையால் சில தீமைகள் குறையும். துணைவரால் யோகமும், அதிர்ஷ்டமும் உண்டு. அறிவாளியான கணவன்- மனைவி அமைவார். சுபர் பார்வை குடும்ப வாழ்க் கையை நன்றாக வைத்திருக்கும். அதேவேளை யில் நாக தோஷத்தால் துணைவர் இழப்பைத் தரும். தாமதத் திருமணம் நன்மை தரும். வாழ்க்கைத் துணைவருக்கு ஏதாவது வாழ்க்கையில் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

பரிகாரம்

எட்டில் நிற்கும் கிரகக் காரகக்காரர்கள் ஜாதகரைவிட்டுப் பிரிந்திருத்தல் தீமையைக் குறைக்கும். சுபகிரகப் பார்வை பெற்று நன்மை யடைய, சுய ஜாதகத்தில் நன்மை தரும் கிர கத்தை அறிந்து, அதன் சுபப்பலனைப் பெறத் தேவையான பரிகாரம் செய்து கொள்வது நன்மை தரும்.