ருவர் நோய்நொடியில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு லக்னாதிபதி வலுவாக இருந்து, அதை சுபகிரகம் பார்க்கவேண்டும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சமாக இருந்து அதை குரு பார்த்தால், அவர் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

லக்னாதிபதியும் சந்திரனும் சேர்ந்து லக்னத்தில் அல்லது கேந்திரத்தில் இருந்து, அவற்றை குரு பார்த்தால், அவர் நீண்ட ஆயுளுடன், நோய்களின் பாதிப்பில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்.

ஒருவர் நோய்த் தாக்கமின்றி நீண்டநாள் வாழ அவருடைய ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் சனி 6, 8, 11-ல் இருந்தால், நீண்ட ஆயுள் கிட்டும். சந்திரனுக்கு 6, 8 அல்லது 11-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

Advertisment

kk

ஜாதகத்தில் சந்திரனும் சனியும் உச்சமாக இருந்து, குரு, சந்திரனைப் பார்த்தால் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

லக்னத்தில் குரு இருந்து, லக்னா திபதி 4-ல் உச்சமாக இருந்தால் ஜாதகர் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ்வார்.

லக்னத்தில் சனி, 3-ல் சந்திரன், 11-ல் குரு இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

லக்னத்தில் உச்ச சந்திரன், 6-ல் செவ்வாய், 7-ல் சூரியன், 11-ல் சனி இருந்தால் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன்- புகழுடன் வாழ்வார்.

லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, 6-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தால், அவர் வாழ்க்கையில் முற்பகுதியில் சிறுசிறு நோய் களுடன் இருப்பார். ஆனால், பிற்பகுதியில் நல்ல உடல்நலத்துடன் வாழ்வார்.

லக்னத்தில் சந்திரன், 6-ல் குரு, 8-ல் சனி இருந்தாலும்; லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்து 5 அல்லது 9-ல் குரு பகவான் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

சூரியன், சந்திரன், புதன் லக்னத் தில் இருந்து 10-ல் சனி இருந்தாலும்; லக்னத்தில் குரு, 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 12-ல் சனி இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

லக்னத்தில் புதன், 6-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தாலும்; லக்னாதிபதி 8-ல், 8-க்கு அதிபதி உச்சமாக இருந்தாலும் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

3-ல் சந்திரன், 5-ல் உச்ச சனி, 8-ல் புதன், சுக்கிரன் இருந்து அதை குரு பார்த்தால், அவர் நீண்ட ஆயுளுடன்- மகிழ்வுடன் வாழ்வார்.

லக்னத்தில் உச்ச சனி, 4-ல் சுக்கிரன், செவ்வாய், 5-ல் சூரியன், 10-ல் குரு இருந்தாலும்; சந்திரனுக்கு 12-ல் குரு, 8-ல் சனி இருந்தாலும் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

லக்னாதிபதி 8-ல் உச்சமடைந்து, சனி பகவானும் உச்சமாக இருந்தால், அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

சந்திரனுக்கு 3-ல் குரு, 6-ல் உச்ச சனி இருந்தாலும்; லக்னத்தில் உச்ச சனி, 5-ல் சந்திரன், 10-ல் குரு இருந்தாலும்; லக்னாதிபதி 5-ல் குருவுடன் இருந்தாலும்; லக்னத்தில் சனி, 8-ல் சந்திரன், குரு இருந்தாலும் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்.

லக்னாதிபதி 10-ல் சுப கிரகத்துடன் இருந்தாலும்; சந்திரனிலிலிருந்து 7-ல் குரு, சூரியன், புதன் இருந்து 11-ல் சனி இருந்தாலும் அவர் பூரண ஆயுளுடன் வாழ்வார்.

லக்னத்தில் குரு, 4-ல் சந்திரன், 6-ல் சனி இருந்தாலும்; லக்னத்தில் சுக்கிரன், 2-ல் சனி, 9-ல் குரு இருந்தாலும் அவர் நீண்ட ஆயுளுடன்- நோய்களின் பாதிப்பில்லாமல் வாழ்வார்.

ஒருவர் வாழும் வீட்டில் வாஸ்து தோஷம் இல்லாமல் இருக்கவேண்டும். முக்கியமாக வீட்டின் வடகிழக்கு சுத்தமாக இருக்கவேண்டும். அவ்வாறிருந்தால், அங்கு வாழ்வார் நோயின் பாதிப்பில்லாமல், நீண்டகாலம் வாழ்வார்.

பரிகாரங்கள்

தினமும் காலையில் சூரியன் உதயமாவதற் குமுன்பு எழுந்திருப்பது நல்லது. காலையில் சூரிய வழிபாடு செய்வது அவசியம். சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நலம் பயக்கும். லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு இருந்தால், அதை மூடிவிடவேண்டும். வடகிழக்கில் கழிவறை இருந்தால், அதை வேறிடத்துக்கு மாற்றவும்.

வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டுடன் இருக்கவேண்டும். இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. வீட்டில் மகா மிருத்யுஞ்ஜய எந்திரத்தை வைத்துப் பூஜித்தால் நோயின்றி நீண்டநாள் வாழலாம்.

செல்: 98401 11534