Advertisment

கடன் பிரச்சினை தீர்ர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

/idhalgal/balajothidam/loan-issues-solved-by-pariharam

ss

வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கைநீட்டி கடன் வாங்குகிறோம். கிரெடிட் கார்டில், தேவையேபடாத பொருட்களைக்கூட வாங்கி குவிக்கிறோம். ஆனால் ஏதோ ஒரு கெட்ட நேரத்தால் மாதா மாதம் வந்திருந்த வருமானம்கூட இல்லாமல் போகின்றது.

Advertisment

குடும்பச் செலவுக்கு வருமானம்போதாத நிலைமை வந்துவிட்ட பிறகு கடனை எப்படி திருப்பித் தருவது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி குடும்ப பாரத்தை சுமந்து பண பிரச்சினையில் சிக்கி விடுகிறோம். வாங்கிய கடனுக்கு, வட்டிக்குமேல் வட்டி, குட்டி போட்டு வளர்ந்து நிற்கும். இந்த கடன் ப

ss

வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கைநீட்டி கடன் வாங்குகிறோம். கிரெடிட் கார்டில், தேவையேபடாத பொருட்களைக்கூட வாங்கி குவிக்கிறோம். ஆனால் ஏதோ ஒரு கெட்ட நேரத்தால் மாதா மாதம் வந்திருந்த வருமானம்கூட இல்லாமல் போகின்றது.

Advertisment

குடும்பச் செலவுக்கு வருமானம்போதாத நிலைமை வந்துவிட்ட பிறகு கடனை எப்படி திருப்பித் தருவது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி குடும்ப பாரத்தை சுமந்து பண பிரச்சினையில் சிக்கி விடுகிறோம். வாங்கிய கடனுக்கு, வட்டிக்குமேல் வட்டி, குட்டி போட்டு வளர்ந்து நிற்கும். இந்த கடன் பிரச்சினையில் இருந்தெல்லாம் தப்பிக்க வேண்டும்என்றால் வருமானத்திற்குஏற்ற செலவு செய்யவேண்டும் பணத்தை சேமித்து வைத்து

Advertisment

விட்டு தேவையான பொருட் களை வாங்கவேண்டும். பேராசைப் படக்கூடாது.

சரி கைநீட்டி கடன் வாங்கியாச்சு. தலைக்குமேல் வெள்ளம் போகிறது. வாங்கிய கடனை எல்லாம் திருப்பித் தர முடியவில்லை என்பவர்கள் ஆன்மிகரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். கடன் பிரச்சினையிலிருந்து சீக்கிரம் வெளிவர, சக்திவாய்ந்த ஒரு பரிகாரத்தைத் தெரிந்துகொள்வோம்.

கடன் தீர பரிகாரம்

பொதுவாகவே கடன் பிரச்சினைக்குகாரணமாக இருப்பது செவ்வாய் பகவான்தான். ஆகவே இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையன்று செய்யவேண்டும். இந்த பரிகாரம் செய்ய கருஞ்சீரகம் நமக்குத் தேவை. மளிகைக் கடைகள், நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும். வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

செவ்வாய்க்கிழமை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஓடுகின்ற ஆறு, நதி அல்லது சமுத்திரம்என எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். இப்போது ஆங்காங்கே மழை பெய்து எல்லா இடத்திலும் தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆகவே இந்த நேரத்தில், இந்த பரிகாரத்தை செய்ய எந்த கஷ்டமும் இருக்காது.

செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் ஓடுகின்ற நதிக் கரையில் நின்றுகொண்டு ஒரு கைப்பிடி அளவு கருஞ்சீரகத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, உங்களுடைய தலையை வலம் இருந்து இடமாக ஆறு முறை சுற்றவேண்டும். கருஞ்சீரகத்தை கையில் வைத்துக்கொண்டு இன்றோடு என்னுடைய கடன் சுமை காணாமல் போகவேண்டும் என்று பிரார்த்தனை வைத்து முருகப்பெருமானை வேண்டி, குலதெய்வத்தையும் வேண்டி அந்தகருஞ்சீரகத்தை அப்படியே ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிடுங்கள்.

ஆறு வாரம் செவ்வாய்க்கிழமை, தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்துவந்தால், உங்கள் கடன் சுமை படிப்படியாக குறைவதை உணர்வீர்கள். செவ்வாய்க்கிழமை காலையில் வரக்கூடிய செவ்வாய் ஓரை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிடுங்கள். மாலை வரக்கூடிய செவ்வாய் ஓரை நேரத்தில் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று 2 மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய்யோ அல்லது நெய்யோ ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கடன் இல்லாத வாழ்க்கையை கொடு முருகா என்று வேண்டுதல் வைக்கவேண்டும்.

செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்துவிட்டு இந்த விளக்கை முருகன் கோவிலில் ஏற்றி, முருகனைஆறு முறை வலம் வரவேண்டும். இந்த இரண்டு பரிகாரத்தையும் சேர்த்தபடி தொடர்ந்து ஆறு வாரம் செய்துவந்தால் உங்கள் கடன்கஷ்டம் குறையும். பரிகாரத்தை தொடர்ந்து செய்து கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவோம்.

செல்: 98425 50844

bala jothidam 22-06-24
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe