சென்ற இதழ் தொடர்ச்சி...
தசை பலன்கொடுக்கும் காலம் சூரிய தசை, செவ்வாய் தசை ஆரம்பித்தவுடன் நற்பலனோ, தீயபலனோ உடனடியாகக் கொடுத்துவிடும். புதன் தசை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாகப் பலன் தரும். குரு தசை, சந்திர தசையின் மையப் பகுதியில் பலனைக் கொடுக்கத் துவங்கும். சுக்கிரன், சனி, ராகு, கேது தசைகள் தசையின் பாதிக்குப் பிறகே பலன்கள் தரும். இவையனைத் தும் பொதுவானவை. ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பைப் பொருத்து தசையின் ஆரம்பம்முதல் கடைசிவரை நற்பலன் நடப்பதுமுண்டு.
தசைப் பலனைக் கணிக்கும் முறை நடக்கும் தசை, அடுத்து நடக்கப்போகும் தசையின் பலனை மேற்கண்ட பொது முறையில் கணக்கிட்டாலும், தசை கிரகத்தின் நிலையை முதலில் அறிந்தால் தான் முழுப்பலனை அறியமுடியும். உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரம் நடக்கும் நாளில் பிறந்தவர்களுக்கு முதல்தசை கேதுதசையாகத்தான் இருக்கும். அதற்காக கேது தசைக்குரிய பொதுப்பலன்கள், கேது தசை நடக்கும் எல்லாருக்கும் ஒரேமாதிரியாக நடக்காது. ஏனென்றால் ஒருவரின் பிறந்த நேரத்தைப் பொருத்து லக்னம் மாறுபடும். லக்னத்திற்கு எந்த ராசியில், லக்னத்திற்கு எத்தனையாவது இடத்தில் கேது இருக்கிறது- சுப, அசுப கிரகச் சேர்க்கை, பார்வை இருக்கி றதா, எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது, அம்சத்தில் பலம்பெறுகிறதா, பலமிழக்கி றதா, லக்னாதிபதிக்கு நட்பா, பகையா, சுபத்தன்மை ஏற்பட்டிருக்கிறதா, நடப்பு கோட்சாரப் பலன், பூர்வபுண்ணிய பலம், சுய ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி, உச்சம், பெற்று சுபவலுப் பெற்றுள்ளதா, நீசம்பெற்று பாவ வலுப்பெற்றுள்ளதா, லக்னத்திற்கு வலுப்பெறுவது நன்மையா, தீமையா என ஒட்டுமொத்த ஜாதகத்தின் நிலையைப் பொருத்தே தசை எத்தனை சதவிகிதம் நன்மை தருமென கணக்கிட முடியும்.
பொதுவாக தசையின் முதல் புக்தியான சுய புக்தியில் நன்மை நடந்தால், தசையில் நன்மை குறைந்தே நடக்குமென்றும்; தசைக்கு பாதிக்குமேல் நன்மை தருமென்றும்; தசையின் வருடங்களை மூன்று நான்காகப் பிரித்தும் பலன் கூறுவது தோராயமாகவும் பொதுப்படையாகவும் மட்டுமே இருக்கும். தசையின் முழுப்பலனையறிய புக்திகளையும் கணக்கிடவேண்டும்.
புக்திப் பலன்
ஒவ்வொரு தசையையும் ஒன்பது பாகங் களாகப் பிரித்து நவ புக்திகளாக வைத்துள்ள னர். நடக்கும் தசையின் முதல் புக்தி சுய புத்தி- அதாவது குரு தசை ஆரம்பித்தால் முதல் புக்தி குரு புக்திதான் சுய புக்தியாகும். ஜாதகத்தில் தசாவின் பலனையறிய அதிபதி நிலையைப் பார்ப்பதுபோல், புக்தியின் நிலையை அறிய தசாநாதன் நிற்கும் இடத்திலிருந்து புக்தி கிரகம் எந்த இடத்தில் இருக்கிறதென பார்க்கவேண்டும். அதாவது தசையின் பலனை முடிவுசெய்பவர் தசையின் அதிபதியான தசை நாயகர்தான். ஆனாலும் புக்தியின் பலன்கள் தசாநாதனுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டில் மறைவு, பகை, நீசம் பெறுவது நல்ல பலனைத் தராது. அதே வேளையில் கெட்டகிரகமாக இருந்து கெட்டால், தரவேண்டிய பலனை மாற்றி தான் கொடுக்கும்.
அந்தரம் என்பது புக்தியை ஒன்பதாகப் பிரிப்பது. சூட்சுமம் என்பது அந்தரத்தை ஒன்பதாகப் பிரிப்பது. பிராணன் என்பது சூட்சுமத்தை ஒன்பதாகப் பிரிப்பது. தேகம் என்பது பிராணனை ஒன்பதாகப் பிரிப்பது.
ஜாதகருக்கு இவ்வாறாகப் பிரித்து நடப்பு நிலவரம், வரப்போகும் நல்ல நேரத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிடலாம். நடப்பு கோட்சாரத்துடன் இணைத்து தினந்தோறும் ஒருவருக்கு நடக்கும் பலனைச் சொல்லிவிட முடியும். ஆனால் ஜாதகர் பிறந்த நேரம் தவறாக- அதாவது பிறந்த நேரத்தின் நிமிடம் மாறினாலும் துல்லியமாகச் சொல்லும் பலன் மாறிவிடும். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை, பிறக்கும் இடத்தில் இருக்கும் கடிகாரம் துல்லியமாகக் காட்டினால் முழுப்பலன் சாத்தியமே.
நவகிரக தசைகளில் ராகு- கேது தசைகள் தவிர ஏழு தசைகளுக்கும், குறிப்பிட்ட கிரகங்கள் தங்கள் புக்திகளில் நன்மை தருவர். அதனை போதகன், வேதகன், பாசகன், காரகன் நன்மைகளை வழங்கவும்; வேதகன் தசாநாதனின் நல்லபலனைத் தரவிடாமல் தடுப்பவராகவும் இருப்பார். தசை அதிபருக்கு 6, 8, 12-ல் போதகன், பாசகன், காரகன் மறைந் தாலும் நற்பலன் கிடைக்காது.
தசையில் தசைக்குரிய போதகன் கொடுக்கவேண்டிய நல்ல பலன்களை எடுத்துச்சொல்லி, போதகனின் புக்தியில் செய்வார். பாசகன் புக்திக்கும் சேர்த்து நற்பலன் வழங்குவார். தசாநாதனுக்கு காரக கிரகம் தன்புக்தியில் நற்பலன் பெருகச் செய்வார். லக்னத்திற்கு யோகமான தசையாக இருந்தாலும் வேதகன் புக்தி வரும்போது நற்பலனைத் தடுத்துவிடுவார். தசாநாதனுக்கு வேதகன் 6, 8, 12-ல் மறைந்தால் வேதகனால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும்.
பரிகாரம்
ஒவ்வொருவரும் தன் ராசிக்கு நடக்கும் கோட்சாரப் பலனைவிட, நடக்கும் தசை, புக்தி அறிந்து நடந்துகொண்டால் நிச்சயம் நன்மைகள் நடைபெறும். கிரக தோஷங்களை கிரகசாந்தி செய்துகொண்டு, பேராசையின்றி தகுதிக்கேற்ப வாழ்க்கையையும் மனதையும் மாற்றிக்கொண்டால், வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந் திருக்கும்.
செல்: 96003 53748