Advertisment

வாழ்க்கையை மாற்றும் மாந்தியின் பலன்கள்! -கோவை எம். தனம்

/idhalgal/balajothidam/life-changing-benefits-manthi-coimbatore-m-crap

ல்லாருடைய வாழ்க்கையிலும் ஒருசில விஷயங்கள் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. நாம் என்னதான் முயற்சி செய்தாலும் அவற்றில் தடைகளையும் பிரச்சினைகளையும்தான் சந்திக்கிறோம். அதற்குக் காரணம் தேடினால் எதுவும் சரியாக நமக்குப் புலப்படாது. நாம் எல்லாவற்றையும் சரியாகத்தான் திட்டமிட்டு செயல்படுவோம்.

Advertisment

ஆனால் அது நடக்கவே நடக்காது.

நம் கண்ணுக்குத் தெரியாத சில விஷயங்கள், காரண காரியங்களால்தான் நாம் தடைகளை சந்திக் கிறோம். அதற்கு என்னதான் காரணம் என்பதை நம் ஜாதகத்தை ஆய்வுசெய்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

Advertisment

ss

நம் ஜாதகத்திலுள்ள மாந்தியின் நிலை அதற்கு ஏதோவொரு விதத்தில் காரணமாகி இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் ராகு- கேதுக்கள்போல் மாந்தியும் ஒரு நிழல் கிரகமே. மாந்திக்கு குளிகன் என்று மற்றொரு பெயரும் உண்டு. சனியின் மைந்தனே இந்த மாந்தி என்பவர் ஆவார்.

மாந்தி என்றாலே ஒருவித பீதியும் பய உணர்வும் தொற்றிக் கொள்கிறது. மாந்தியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

சனியை ஆயுள்காரகன் என்கிறோம். ச

ல்லாருடைய வாழ்க்கையிலும் ஒருசில விஷயங்கள் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. நாம் என்னதான் முயற்சி செய்தாலும் அவற்றில் தடைகளையும் பிரச்சினைகளையும்தான் சந்திக்கிறோம். அதற்குக் காரணம் தேடினால் எதுவும் சரியாக நமக்குப் புலப்படாது. நாம் எல்லாவற்றையும் சரியாகத்தான் திட்டமிட்டு செயல்படுவோம்.

Advertisment

ஆனால் அது நடக்கவே நடக்காது.

நம் கண்ணுக்குத் தெரியாத சில விஷயங்கள், காரண காரியங்களால்தான் நாம் தடைகளை சந்திக் கிறோம். அதற்கு என்னதான் காரணம் என்பதை நம் ஜாதகத்தை ஆய்வுசெய்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

Advertisment

ss

நம் ஜாதகத்திலுள்ள மாந்தியின் நிலை அதற்கு ஏதோவொரு விதத்தில் காரணமாகி இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் ராகு- கேதுக்கள்போல் மாந்தியும் ஒரு நிழல் கிரகமே. மாந்திக்கு குளிகன் என்று மற்றொரு பெயரும் உண்டு. சனியின் மைந்தனே இந்த மாந்தி என்பவர் ஆவார்.

மாந்தி என்றாலே ஒருவித பீதியும் பய உணர்வும் தொற்றிக் கொள்கிறது. மாந்தியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

சனியை ஆயுள்காரகன் என்கிறோம். சனியின் மைந்தனான மாந்தியை மரணக்காரகன் என்று சொன்னால் மிகையாகாது.

மாந்தியைப் பொருத்தவரை அவர் எந்த வீட்டில் நிற்கிறாரோ அந்த வீட்டின் காரகம் கண்டிப்பாகக் கெடும். மாந்தியோடு சேர்க்கை பெறும் கிரகங்களின் உயிர்க் காரகத்தின் உறவு முறைகளில் ஏதேனுமொரு வழியில் குறை யையோ பாதிப்பையோ மாந்தி உண்டாக்கு வார்.

உதாரணத்திற்கு, சூரியனோடு சேர்ந்தால் தந்தையோடும், சந்திரனோடு சேர்ந்தால் தாயோடும், செவ்வாயோடு சேர்ந்தால் சகோதர னோடும், சுக்கிரனோடு சேர்ந்தால் மனைவி யோடும் ஒற்றுமைக் குறைவை உண்டாக்குவார்.

முக்கியமாக மாந்திரீக விஷயங்களுக்கு மாந்தி நன்கு பயன்படுவார். பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட காரியங்களை எல்லாம் மாந்தியைக் கொண்டே செய்வார்கள்.

மாந்திரீகம் செய்பவர்கள் கோட்சார கிரக நிலைகளோடு மாந்தியின் தொடர்பை வைத்துதான் மாந்திரீகக் காரியங்களைக் கையில் எடுப்பார்கள்.

ஜாதகத்தில் மாந்தியோடு ராகுவோ- சந்திரனோ 5 டிகிரிக்குள் சேர்க்கைப்பெற்று பலமிழந்தோ அல்லது மறைவு பெற்றோ இருந்தால் மனோரீதியான பாதிப்புகள் மற்றும் தீய பழக்கங்கள், கெட்ட சகவாசங்களை ஏற்படுத் தும். மனநிலை பாதித்தவர்களின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் எவ்விதத்திலாவது குருவின் தொடர்பில்லாத சந்திரன், மாந்தி தொடர்பிருக்கும்.

குருவின் வீடுகளிலோ அல்லது குருவின் பார்வையோ இருந்தால் இதற்கு விதிவிலக்குண்டு.

முக்கியமாக ஆணுக்கு சுக்கிரனோடும் பெண்ணுக்கு செவ்வாயோடும் மாந்தி சேர்க்கை பெறக்கூடாது. அது திருமண வாழ்க்கையில் திருப்தியின்மையை ஏற்படுத்திவிடும்.

முக்கியமாக 1, 5, 9 எனும் திரிகோணங்களில் மாந்தி அமரக்கூடாது. அப்படியே அமர்ந்தாலும் அது குருவின் வீடாகவோ அல்லது குருவின் பார்வை பெற்றோ இருக்கவேண்டும். இல்லையென்றால் மாந்தி என்கின்ற வில்லாதி வில்லன் வாழ்க்கையையே போராட்டமாக மாற்றிவிடுவார். "ஏன் பிறந்தோம்; எதற்கு இந்த வாழ்க்கை' என்கிற அளவுக்கு விரக்தியான மன நிலையை மாந்தி உண்டாக்கிவிடுவார்.

தன்னோடு சேர்க்கைப்பெறும் கிரகத்தின் காரகத்தை மாந்தி நிச்சயம் கெடுப்பார். புதனோடு சேர்ந்தால் கல்வி பாதிக்கும். குருவோடு சேர்ந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

சுக்கிரனோடு சேர்ந்தால் திருமண வாழ்க்கையில் திருப்தியின்மையையும், தனக்குக் கீழான பெண்களுடன் தொடர்பையும் ஏற்படுத்தும். அதேபோல் பெண்ணுடைய ஜாதகத்தில் செவ்வாயுடன் மாந்தி சேர்க்கைப் பெற்றால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். மாந்தி யாருக்கெல்லாம் லக்னத்தில் இருக்கிறதோ அவர்கள் குடும்பத்தில், இறைவனடி சேர்ந்த முன்னோர்களுக்கு, அவர்களின் பரம்பரையில் சரியாக திதி தர்ப்பணங்கள் செய்யாமல் இருப்பதால் வருகிறது.

லக்னத்தில் மாந்தி இருந்தால், அவர்களுக்கு நிறைய திறமைகள் இருந்தும் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றமடைய முடியாமல் தடை களையும் போராட்டங்களையும் சந்திக்கவேண்டி இருக்கும். மாந்தி எந்த கிரகத்துடனும் சேர்க்கைப் பெறாமல் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை. கிரகங்களுடன் சேர்க்கை பெற்று நெருங்கிய பாகையில் இருக்கும்பொழுது பாதிப்பைத் தருகிறது.

ஒரு கிரகத்துடன் மாந்தி சேர்க்கை பெற்று அந்த கிரகத்தின் தசாபுக்தி நடக்கும்பொழுது மாந்தியால் ஏற்படும் பாதிப்பு அதிக அளவில் இருக்கும்.

மாந்தியின் பங்கு

பிரசன்னம் பார்ப்பதற்கு மாந்தியின் முக்கியத்துவம் நிச்சயமாக வேண்டும். ஏனென்றால், பிரசன்னப் பலன்களையும் முடிவுகளையும் பெரும்பாலும் மாந்தி பகவானே தீர்மானிக்கிறார். கேரளாவில் அதிகளவு மாந்திக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். மாந்தியை வைத்தே பெரும்பாலான பலன்களை எடுப்பார்கள். மாந்தியை வைத்துப் பலன் சொல்வதற்கு கர்மாவின் துணை நிச்சயமாக வேண்டும். மாந்தி பத்தாமிடத்தில் இருந்தால் தொழிலில் கெட்டிக்காரர் களாக இருப்பார்கள். பதினொன் றில் இருந்தால் தனவரவு மற்றும் எதிர்பாராத தனத்தைக் கொடுப்பார். இந்த இரண்டு இடங்களைத் தவிர வேறு எங்கு மாந்தி நின்றாலும், அது குருவின் வீடாகவோ அல்லது குருவின் தொடர்போ இருக்க வேண்டும்.

மாந்தி குருவின் வீடுகளில் நின்றாலோ, குரு பார்வை பெற் றாலோ, மாந்தி நின்ற ராசியின் அதிபதி திரிகோணங்களில் நின்றாலோ அல்லது ஆட்சி, உச்சம் அடைந் தாலோ, மாந்தி நின்ற ராசியாதிபதிக்கு குருவின் தொடர்பு கிடைத்தாலோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

பரிகாரம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில்- முத்தூர் செல்லும் வழியில் மாந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்குசென்று வழிபாடு செய்து வருவதன்மூலமாக மாந்தியின் தோஷத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

செல்: 90802 73877

bala130924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe