Advertisment

துலாம் லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/libra-ascendant-dasa-enlightenment-remedies-prasanna-astrologer-i-anandhi

துலா லக்னத்தினர் உறுதி யான கோட்பாடு உடையவர்கள். யாருக்காவும் எதையும் மாற்றிக் கொள்ளாதவர்கள். அதேநேரத்தில் மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்துகொள்வார்கள்.

Advertisment

அத்துடன் தங்கள் கருத்தை மற்றவர்கள்மேல் திணிக்கவும் தயங்க மாட்டார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாக, மதச் சீர்திருத்தவாதிகளாக பொது ஜனங்களை மிகவும் கவர்ந்து தங்கள் வசப்பபடுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். பரபரப்பான சூழல் இவர்களுக்கு பிடிக்கும். தான் பிறந்த குலத்தின்மேல் அபிமானம் உள்ளவர்கள். சொத்து விருத்தி உடையவர்கள். சொகுசான வீடு, மனை, வாகன யோகம் இருக்கும். சினிமா, கேளிக்கை விஷயங்களில் அதிக நாட்டம் உள்ளவர்கள். உண்மை, நாணயம், சத்தியத் திற்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர். இனி தசாபுக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

சுக்கிர தசை

துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சுக்கிரன் பலம் பெற்று தசை நடத்தினால் தன்னை அழகாக காட்டிக்கொள்ள நேர்த்தியான உடை, சிகை அலங்காரம் செய்து கொள்வார்கள்.

மனஉறுதி அதிகமாக இருக்கும். தான் சொல்வதைதான் பிறர் கேட்க வேண்டும் என்ற பிடிவாத குணம் இருக்கும். தான் எண்ணபடியேதான் சொல்வதை பத்துபேர் கேட்டு நடக்கும் அளவிற்கு கடினமான சூழ்நிலையிலும் சமூகத்தில் தன்னை உயர்ந்தவராக மாற்றிவிடுவர். அவசர புத்தி உடையவர்கள். தன்னை பற்றி பழிச்சொல் சொன்னால் தாங்கிக்கொள்ளமாட்டார்கள். நடிப்பில் ஆர்வம் திறமையும் இருக்கும். கவிதைகள் படிப்பதிலிலும் நகைசுவையை ரசிப்பதிலும் ஆவல் மிகும். நிர்வாகம் செய்வதில் திறமையானவர்கள்.

Advertisment

சுக்கிரன் அசுப பலம்பெற்றால் லக்னாதி பதியே அஷ்டமாதிபதியாக இருப்பதால் எளிதில் செய்வினை, கண் திருஷ்டி தோஷம் பாதிக்கும். தீராத வம்பு, வழக்கு, கடன் பிரச்சனை, நோய், அறுவை சிகிச்சை கண்டம், அவமானம் போன்ற பாதிப்பு இருக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ம

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடவும்.

dd

செவ்வாய் தசை

துலாத்திற்கு செவ்வாய் 2, 7-ஆம் அதிபதி. செவ்வாய் பலம்பெற்று தசை நடத்தினால் பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். திருமணம் தடை அகலும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத்துணை வசதியானவாரக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேசிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதி யாக இருக்கும். எளிய நிலையில் இருந்தாலும் திருமணத்திற்குபிறகு முன்னேற்றமான வாழ்க்கை உண்டு. வாழ்க்கைத் துணையின்மேல் அன்பும் அதிக அக்கரையும் இருக்கும். கணவன், மனைவி இருவருமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் செல்வார்கள். நண்பர்கள், கூட்டுத் தொழில் ஆதாயம் உண்டு. மத்திம வயதினர். சமுதாய மதிப்பு நிறைந்த இடத்தில் சம்பந்தம் செய்வார்கள். செவ்வாய் பலம் குறைந்து தசை நடத்தினால் தம்பதிகளுக்குள் ஈகோ மிகுதியாகும். பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட் டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் வஞ்சிக்கப்படுவார்கள். வயோதிகர்களுக்கு மாரக பாதிப்பு ஏற்படும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரை முருகனை வழிபடவேண்டும்.

குரு தசை

குரு துலாத்திற்கு 3, 6-ஆம் அதிபதி. குரு சுப பலம்பெற்று தசை நடத்தி னால் முறையாக கடன்பெற்று திரும்பச் செலுத்துவார்கள். பெற்ற கடனால் பயன் உண்டு. உடன்பிறந்தவர்களின் ஆதரவு உதவி இருக்கும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்கள். பணம் கொடுத்து உத்தியோகத்தில் சேருவார்கள். நல்ல சமுதாய அங்கீகாரம் நிறைந்த உத்தியோகத்தில் பணிபுரிவார்கள். குரு பலம் குறைந்து தசை நடத்தினால் உடன்பிறந்தவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காக வாழ்நாள் கடனாளியாக மாறுகிறார்கள். உடன்பிறந்தவர்களுடன் சண்டை, சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். முறையற்ற பாகப்பிரிவினையால் பாதிப்பை சந்திப்பார்கள். ஜாமீன், ஆவணங்கள் தொடர்பான பிரச்சினையால் கடன் தேடிவரும். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் உடன்பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்துவிட்டு பின் நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். உத்தியோகத்திற்காக பணம் கொடுத்து ஏமாறுவார்கள். திட்டமிடுதல் இருக்காது. சோம்பேறித்தனம் மிகுதியால் நிலை யான தொழில், உத்தியோகம் இருக்காது. உள்ளுக்குள் பயந்தவராகவும் வெளியில் வீரமாகவும் காட்டிக்கொள்வார்கள்.

பரிகாரம்

வியாழக்கிழமை எமக்கண்டத்தில் விநாயகரை வழிபடவேண்டும்.

சனி தசை

சனி துலாத்திற்கு 5, 6-ஆம் அதிபதி. சனி எந்த நிலையில் இருந்தாலும் குலகௌரவத்திற்காக வாழ்வார்கள். முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை சிறிது, சிறிதாக விற்று ஜீவனம் நடத்துவார்கள். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் இருக்கும் அல்லது பூர்வீகச் சொத்தை விற்று கடன் அடைப்பார்கள். குல தெய்வ கடாட்சம் குறைவுபடும். தாய்மாமாவுடன் வம்பு, வழக்கு இருக்கும். முன்னோர்களின் கர்மவினை நோய் பாதிப்பு மிகுதியாக இருக்கும். இது கடுமையான புத்திர தோஷ அமைப்பு. பெற்ற பிள்ளைகளே எதிரியாக மாறுவார்கள். குழந்தைகளின் இனம் புரியாத நோய் தாக்கம், உயர் கல்வி, திருமணம் போன்றவற்றால் வருமானத்திற்கு மீறி செலவால் கடன்வரும். கெட்ட எண்ணங்களின் தாக்கம் மிகுதியாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப தொழிலில் மாறுதல் செய்யாமல் குண்டு சட்டியில் குதிரை ஒட்டுவார்கள். அல்லது நஷ்டத்திலுள்ள குலத்தொழிலை தூக்கி நிறுத்துகிறேன் என்று மிச்ச மீதி இருக்கும் பெயரையும் கெடுத்து நஷ்டத்தை அதிகரிப்பார்கள். சிலருக்கு நெருடலான அரசு உத்தியோகம் கிடைக்கும். சிலர் அரசியல், கௌரவப் பதவி அல்லது ஆன்மிக செயல்களுக்காவும் கடன்படுவார்கள். முன்னோர்களின் பரம்பரை வியாதி பாதிப்பு உண்டு.

பரிகாரம்

சனிக்கிழமை சனி ஓரையில் முன்னோர் களை வழிபடவேண்டும்.

புதன் தசை

புதன் துலாத்திற்கு 9, 12-ஆம் அதிபதி. பாக்கியாதிபதி மற்றும் விரயாதிபதி. புதன் பலம்பெற்று தசை நடத்தினால் நல்ல ஒழுக்கமும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பார். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. உயர் கல்வி கற்பார்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாக அமையும்.பெயர் சொன்னால் தெரியும்வகையில் குலத்தொழில்மூலம் உலகப்புகழ் பெறுவார்கள். அயல்நாட்டு வாணிகம்மூலம் நல்ல லாபம் உண்டு. நேர்மையாக நடந்துகொள்வார்கள். தந்தைவழியால் முன்னேற்றம் உண்டாகும். ஜாதகரின் தந்தை செல்வச்செழிப்பாக இருப்பார். தந்தையின் சொத்துக்களை காப்பவராக இருப்பார். தந்தையின் சொத்துகளை ஜாதகர் மேலும் விருத்தி செய்வார். குரு தீட்சை பெறுவார்கள். கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்பவர்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலை களுக்குத் தானதர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள்.

புதன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் ஜாதகர் தந்தை மற்றும் தந்தைவழி தந்தை சம்பாதித்த சொத்துக்களை விரையம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார்.பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும். ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக்கம் இருக்காது. பெற்றோர் களுக்கு அவப்பெயரை தேடி வைப்பவர். குலகௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவர்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சுதர்சன ஹோமம் செய்வது நல்லது.

சந்திர தசை

சந்திரன் துலாத்திற்கு 10-ஆம் அதிபதி. தொழில் ஸ்தான அதிபதி. சந்திரன் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் சுயதொழில்மூலம் வருமானம் உண்டு. தொழிலில் நேர்மை, நாணயம் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் பாராட்டும் புகழும் பெறக் கூடியவராக இருப்பார். அரசாங்கத்தில் உயர் பதவி உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். எதிர்பார்ப்பின்றி சேவை செய்பவர்களாக இருப்பார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள். மொத்தில் சமுதாயத்தில் பாக்கியவான்களாக வலம்வருவார்கள். சந்திரன் அசுப பலம்பெற்றால் வாழ்ந்து கெட்டவர்களாகவே இருப்பார்கள். பணக் கார குடும்பத்தில் பிறந் தாலும் வாழ்வில் அனுபவிக் கும் சுகங்கள் குறையும். இயன்றவரை இவர்கள் தங்கள் பெயரில் தொழில் செய்யாமல் இருப்பதே சிறப்பு. பல தொழில் திறமை இருக்கும். ஆனால் எந்த தொழிலும் இவருக்கு பயன்படாது. எந்த வேலைக்கு சென்றா லும் முதலாளிக்கு தன் திறமையால் நிறைய சம்பாதித்து கொடுத்துதான் சொற்ப சம்பளம் பெறுவார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மாரியம்மனை வழிபடவும்.

சூரிய தசை

சூரியன் துலாத்திற்கு லாபாதிபதி மற்றும் பாதகாதிபதி. துலாம் சூரியனின் நீச வீடு என்ப தால் பெரிய பாதகத்தை செய்வதில்லை. எனினும் 7-ல் உச்சம்பெறும் சூரியன் திருமண விஷயத்தில் ஜாதகருக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சூரியன் கேது சாரத்தில் இருந்தால் திருமணத்தால் வம்பு வழக்கையும், சுக்கிரன் சாரத்தில் இருந்தால் மிகக்கால தாமதமான திருமணத்தையும், சுய சாரத்தில் இருந்தால் திருமணமே கேள்விக்குறியாகவும் இருக்கிறது. சூரியனுக்கு அஷ்டம பாதக தோஷம் கிடையாது என்றாலும் சூரியனுக்கு பகை கிரகங்களான சனி, ராகு, கேது சம்பந்தம் இருந்தால் சூரிய தசை புக்தி காலங்களில் பாதகம் தன் கடமையை செவ்வனே செய்கிறது.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சிவனடியார்களுக்கு தொண்டு செய்யவும். ராகு தசை நடப்பவர்கள் நாகாபரணம் தரித்த மாரியம்மனை வழிபடவேண்டும். கேது தசை நடப்பவர்கள் ஸ்ரீ காளகஸ்தி சென்றுவரவும்.

தொடரும்....

செல்: 98652 20406

bala280723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe