பெரும் சொத்துகளை அழித்த பாமர சாபம்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/lay-curse-destroyed-great-property-siddharthasan-sundarji-jeevanadi-influence

ன்று ஜீவநாடி படிக்கவந்த இளைஞனை அமரவைத்து, பிரசன்ன நாடி ஓலையைப் பிரித்துப் படித்தேன். தொழில், வருமானம், சொத்துகள், வியாபாரம் சம்பந்தமாகப் பலன் கேட்கவந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.

assets

பலன் கேட்க வந்த இளைஞர் எதற்காக வந்தார் என்பதை அவரே கூறத் தொடங்கினார்.

""ஐயா, என் ஜீவனத்திற்காகப் பல தொழில்களை செய்துவிட்டேன். எந்தத் தொழிலையும் நிரந்தரமாகச் செய்யமுடியவில்லை. ஏதாவது தடைகள் ஏற்பட்டு, தொழில் முடக்கமாகி விடுகிறது. பிறரிடம் வேலைக்குச் சென்றாலும், நீண்டநாட்கள் தொடர்ந்து வேலை செய்யமுடியவில்லை. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்து வாழ்ந்துவருகிறேன். என் எதிர்கால வாழ்க்கை இருளாகத் தெரிகிறது.

இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பதை யும், நான் என்ன தொழிலைச் செய்தால் நன்மை தரும் என்பதையும் அறிந்துகொள்ளவே, அகத்தியரை நாடிவந்துள்ளேன்'' என்றார்.

அவர் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஜீவ

ன்று ஜீவநாடி படிக்கவந்த இளைஞனை அமரவைத்து, பிரசன்ன நாடி ஓலையைப் பிரித்துப் படித்தேன். தொழில், வருமானம், சொத்துகள், வியாபாரம் சம்பந்தமாகப் பலன் கேட்கவந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.

assets

பலன் கேட்க வந்த இளைஞர் எதற்காக வந்தார் என்பதை அவரே கூறத் தொடங்கினார்.

""ஐயா, என் ஜீவனத்திற்காகப் பல தொழில்களை செய்துவிட்டேன். எந்தத் தொழிலையும் நிரந்தரமாகச் செய்யமுடியவில்லை. ஏதாவது தடைகள் ஏற்பட்டு, தொழில் முடக்கமாகி விடுகிறது. பிறரிடம் வேலைக்குச் சென்றாலும், நீண்டநாட்கள் தொடர்ந்து வேலை செய்யமுடியவில்லை. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்து வாழ்ந்துவருகிறேன். என் எதிர்கால வாழ்க்கை இருளாகத் தெரிகிறது.

இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பதை யும், நான் என்ன தொழிலைச் செய்தால் நன்மை தரும் என்பதையும் அறிந்துகொள்ளவே, அகத்தியரை நாடிவந்துள்ளேன்'' என்றார்.

அவர் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத் தியர் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார்.

""இவன் வம்ச முன்னோர்கள் வசித்த கிராமத்தில், விவசாயம், நிலம், தோப்பு என மிக வசதியாக, பண்ணையாராக வாழ்ந்த வர்கள். சொந்த ஊரிலும், சுற்றுப்புற கிராமங் களிலும் பிரபலமானது இவன் குடும்பம்.

இவர்கள் பண்ணையில், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நிறையபேர் வேலை செய்துவந்தார்கள். அவர்களுக்கு தினசரி கூலி கொடுக்கும்போது, பேசிய கூலிப்பணத்தைக் கொடுக்காமல், குறைத்து தான் கொடுப்பார்கள்.

ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் உள்ளவர்களாதலால், அந்த ஏழை மக்கள் "பேசிய கூலிப்பணத்தைக் குறைக்காமல் கொடுக்கள்' என்று கேட்டால், அவர்களை அடித்து வதைசெய்வார்கள். அதன்பிறகு பண்ணையில் வேலை தரமாட்டார்கள். மனிதர்கள் என்ற நிலையில் மனிதாபிமானம், நியாயம், தர்மம் இல்லாமலேயே வாழ்தவர் கள் இவன் வம்ச முன்னோர்கள்.

இவர்கள் பண்ணையில் வேலைசெய்து, தங்கள் உழைப்பிற்குரிய கூலியை இழந்த பாமர மக்கள், மனம் வெதும்பி இவன் குடும்பத்தினருக்கு சாபமிட்டார்கள்.

அந்த ஏழை மக்கள், "எங்கள் உழைப்பிற்கு முறையாகத் தரவேண்டிய கூலியைத் தராமல் அபகரித்து, நீங்கள் வயல், தோப்பு, வீடு என வசதியாக வாழ்கிறீர்கள். இதுபோன்று பிறரை ஏமாற்றி சம்பாதித்து அடைந்த சொத்துகளை உங்களின் வம்ச வாரிசுகள், சந்ததியினர் அனுபவிக்கமாட்டார்கள். இந்த சொத்துகள் பாமர சாபம் பெற்ற சொத்துகள். இவை அழியும்.

உங்கள் வாரிசுகள் சுயமாகத் தொழில் செய்தாலும், நல்ல வேலைக்காரர்கள் அமையமாட்டார்கள்' என்று இதுபோன்று இன்னும் பலவிதமாக அந்த பாமர மக்கள் வயிறெரிந்து சாபமிட்டனர்.

இவன் குடும்பத்திற்கு அவர்கள் விட்ட சாபம் படிப்படியாக வளர்ந்து, மூன்று தலைமுறைக்கு முன்னால் இருந்த சொத்துகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இவன் தந்தை காலத்திலேயே முற்றிலும் அழிந்துபோய்விட்டது.

இவன் குடும்பத்தினர், சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல், பல ஊர்களுக்குச் சென்று தொழில்செய்து வாழ்கின்றனர். இவனது முன்னோர்களால் கூலிப்பணத்தை இழந்த ஏழைமக்களின் வம்ச வாரிசுகள் இன்று பதவி, பணம், தொழில், சொத்துகள் என அமைந்து மிக வசதியாக வாழ்கிறார்கள்.

இவன் இதுநாள்வரை, தன்வாழ்வில் உண்டாகும் கஷ்டங்களுக்கு, தனக்கு யாரோ ஏவல், பில்லி, சூனியம் செய்துவிட்டார்கள் என்றும்; கிரகதோஷங்கள், குலதெய்வக் குற்றம் தான் காரணம் என்றும் பரிகாரங்களைச் செய்து அலைந்துகொண்டிருக்கின்றான். ஆனால் இவன் செய்த பரிகாரங்களால், இதுவரை எந்த பலனும் இல்லை. இவன் வாழ்வில் மாற்றமும் இல்லை; குறைகளும் தீரவில்லை. இவன் வம்ச முன்னோர்களால் உருவாக்கி வாரிசுகளுக்குத் தரப்பட்ட பாமர சாபதோஷத்தைத் தீர்க்கமுடியாது. ஆனால் தடுத்துக்கொள்ளமுடியும்.

இவன் இனிவரும் காலங்களில் யான் கூறுவதை நடைமுறை வாழ்வில் கடைப் பிடித்து வாழ்ந்துவந்தால், பாமர சாபத் தைத் தடுத்துக்கொண்டு, வாழ்வில் உயர்வடைய முடியும்'' என்று கூறியவர், அந்த இளைஞன் செய்ய வேண்டிய தொழில், தொழிலைச் செய்யவேண்டியமுறை, அதில் சம்பாதித்த பணத்தைச் சேமித்துக் காப்பாற்றும் வழிமுறைகளைக் கூறி ஓலையிலிருந்து மறைந்தார்.

அந்த இளைஞனிடம், ""ஐயா, அகத்தியர் முதலான 18 சித்தர்களும் அவர்களைப் புகழ்ந்து போற்றி, பொங்கல் வைத்து, விரதம் பூஜை செய்து வழிபடுவர்களுக்கும்; அவர் கூறும் நடைமுறைச் செயல்களைக் கடைப்பிடித்து வாழாதவர்களுக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள்.

சித்தர்கள் கூறுவதை நடைமுறை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வர்களுக்கு மட்டுமே உடனிருந்து உதவிசெய்து, காப்பாற்றி வாழ்வில் உயர்த்தி வைப்பார்கள்'' என்று சித்தர்கள் அருளைப் பெறும் வழிமுறைகளை கூறி அனுப்பிவைத்தேன்.

பாமர சாபமானது எவ்வளவு பெரிய சொத்தையும் அழித்துவிடும். எனவே வாரிசுகளுக்கு நாம் இத்தகைய சாபங்களை சேர்த்து வைக்கக்கூடாது.

செல்: 99441 13267

bala111220
இதையும் படியுங்கள்
Subscribe