Advertisment

ஏழு கிரகங்கள் தரும் லட்சுமி கடாட்ச யோகம்! ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/lakshmi-kathaksha-yogam-gives-seven-planets

சென்ற இதழ் தொடர்ச்சி...

குரு

ஒருவர் ஜாதகத்தில் குரு சுபமாக இருந் தால் கிடைக்கும் லட்சுமி கடாட்சங்கள்:

Advertisment

இவர்களது தோற்றம் மரியாதை தரத்தக்க விதத்தில்- வணங்கத்தக்க விதத்தில் இருக்கும்.

இவர்கள் அனேகமாக ஆசிரியர், நீதிபதி, குருக்கள், ஜோதிடர், நிதித்துறை, ஆன்மிகம், மதம் சம்பந்தம் என மதிக்கத்தக்க விதமாகப் பணியாற்றுவார்கள்.

இல்லம் விரும்பத்தக்க அமைதியாக அமையும். இவர்களது வீட்டில் யானைப் படம் இருக்கும்.

எந்த முரடனும், இவர்களது ஒரு சொல்லுக் குக் கட்டுப்படுவான்.

Advertisment

இவர்கள் வீட்டில் அம்சமான பூஜையறை அமைந்திருக்கும். ஒரு பூஜையறையின் நிறைவென்பது அது எத்துணை பெரியது என்பதில் இல்லை. அது எத்துணை நிறைவாக- தெய்வீகத் தன்மையுடன் உள்ளது என்பதைப் பொருத்தே இருக்கும்.

அடிக்கடி தெய்வ தரிசனம் கிடைக்கும். ஏதாவதொரு சித்தர்மேல் வெகு அபிமானமும், இடையறா பக்தியும் இருக்கும்.

இவர்கள் வீட்டினருகில் கோவில், பஜனை மடம், ஆன்மிக வகுப்புகள் என அமைந்திருக் கும். வீட்டில் வாழை, பலா மரங்கள் இருக்கும். மேலும் மிக உயர்ந்த, அடர்த்தியான பெரும் மரங்களும் இருக்க வாய்ப்புண்டு.

இவர்கள் வாழ்வில் மஞ்சள் நிறம் பின்னிப் பிணைந்திருக்கும்.

இவர்களில் அனேகம்பேர் பசு தொடர்பு டையவர்களாக இருப்பார்கள்.

பிறரின் தெய்வீக சந்தேகங்கள், ஆச்சாரம் சம்பந்த குழப்பங்கள், குடும்ப நிகழ்வு சம்பந்த குழப்பங்கள் போன்றவற்றைத் தீர

சென்ற இதழ் தொடர்ச்சி...

குரு

ஒருவர் ஜாதகத்தில் குரு சுபமாக இருந் தால் கிடைக்கும் லட்சுமி கடாட்சங்கள்:

Advertisment

இவர்களது தோற்றம் மரியாதை தரத்தக்க விதத்தில்- வணங்கத்தக்க விதத்தில் இருக்கும்.

இவர்கள் அனேகமாக ஆசிரியர், நீதிபதி, குருக்கள், ஜோதிடர், நிதித்துறை, ஆன்மிகம், மதம் சம்பந்தம் என மதிக்கத்தக்க விதமாகப் பணியாற்றுவார்கள்.

இல்லம் விரும்பத்தக்க அமைதியாக அமையும். இவர்களது வீட்டில் யானைப் படம் இருக்கும்.

எந்த முரடனும், இவர்களது ஒரு சொல்லுக் குக் கட்டுப்படுவான்.

Advertisment

இவர்கள் வீட்டில் அம்சமான பூஜையறை அமைந்திருக்கும். ஒரு பூஜையறையின் நிறைவென்பது அது எத்துணை பெரியது என்பதில் இல்லை. அது எத்துணை நிறைவாக- தெய்வீகத் தன்மையுடன் உள்ளது என்பதைப் பொருத்தே இருக்கும்.

அடிக்கடி தெய்வ தரிசனம் கிடைக்கும். ஏதாவதொரு சித்தர்மேல் வெகு அபிமானமும், இடையறா பக்தியும் இருக்கும்.

இவர்கள் வீட்டினருகில் கோவில், பஜனை மடம், ஆன்மிக வகுப்புகள் என அமைந்திருக் கும். வீட்டில் வாழை, பலா மரங்கள் இருக்கும். மேலும் மிக உயர்ந்த, அடர்த்தியான பெரும் மரங்களும் இருக்க வாய்ப்புண்டு.

இவர்கள் வாழ்வில் மஞ்சள் நிறம் பின்னிப் பிணைந்திருக்கும்.

இவர்களில் அனேகம்பேர் பசு தொடர்பு டையவர்களாக இருப்பார்கள்.

பிறரின் தெய்வீக சந்தேகங்கள், ஆச்சாரம் சம்பந்த குழப்பங்கள், குடும்ப நிகழ்வு சம்பந்த குழப்பங்கள் போன்றவற்றைத் தீர்த்து வைக்கும் இடத்தில் இருப்பார்கள்.

lakshmiyogam

நிறைய ஜாதகர்கள் சற்றே குண்டாக இருப்பார்கள். இரக்கமும், மனித நேயமும், பொறுமையும் இவர்களுடன் பிறந்ததுபோல் இருக்கும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும், இவர்களது மதம் சார்ந்த விரத அனுஷ்டானங்களைக் கண்டிப்புடன் பின்பற்றுவார்கள்.

சுப குரு இத்துணை நன்மை தரும்போது, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, நவகிரக சந்நிதியிலுள்ள குருவுக்கு கொண்டைக் கடலை வைத்து வணங்கவும்.

சுக்கிரன்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபத் தன்மையுடன் இருந்தால் கிடைக்கும் லட்சுமி கடாட்சங்கள்:

அழகான தோற்றம் கொண்டவராக இருப் பார்கள். கண்கள் மிக அழகாக இருக்கும்... இனிமையான வாக்குடையவர்கள்.

இவர்களது வீட்டின் தோற்றம் அழகாக- கவனிக்கத்தக்க அளவில் இருக்கும்.

எத்துணை மோசமான இடத்தில் வாழ நேரிட்டாலும், அத்தனையையும் அழகாக- நேர்த்தியாக மாற்றிவிடுவார்கள்.

இவர்களுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்.

எவ்விதத்திலாவது வைரம் புழங்க வாய்ப்பி ருக்கும். (வைரம் வாங்கி அணிய வசதியில்லை யென்றாலும், வைர விற்பனைப் பிரிவில் வேலை செய்வார்கள்).

கருட தரிசனம் கிடைக்கும். (நேரில் கருட னைப் பார்க்க முடியாவிட்டால், கோவில் கருட தரிசனமாவது கிடைத்துவிடும்.)

வெண்ணிறம் மிகப்பிடிக்கும். சமையலறையில் எப்போதும் ஏதோ வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

பணம் புழங்கும் இடங்களும், உணவு சம்பந்தமான இடங்களும் இவர்களுக்குப் பிடிக்கும்.

புதுவித ஆடைகள், நகைகள் அணிவர்.

வாழ்க்கைத்துணை நன்கு வசியமாவார்.

பூக்கள் உள்ள செடிகள் இவர்கள் வீட்டைச் சுற்றிலும் இருக்கும்.

வயதானாலும் சற்று இளமையாகவே காட்சியளிப்பர். இசை ஈடுபாடு இருக்கும். அலங்காரம் சம்பந்தமான தொழில், இவர்களுக்கு நன்கு வசப்படும்.

ருசியாக- விதவிதமாக சாப்பிடுவதில் அதிக ஆர்வமிருக்கும்.

சிலருக்கு சுருண்ட தலைமுடியாக அமையும்.

வாகன ஈடுபாடு இருக்கும்.

கலை நாட்டம் உடையவர்கள். அழகு, கலை சம்பந்தமான சந்தேகங்களுக்கும், நிதி ஆதாரம் சம்பந்தமான விஷயங்களுக்கும் ஆலோசனை கூறுவார்கள்.

இவர்களுக்கு இளம்வயதுப் பெண்களின் உதவி கிடைக்கும்.

இவ்விதமாக சுக்கிரன் சுபம் பெற்று நன்மை தரத்தக்க அளவில் அமையும்போது, அதற்கு நன்றி கூறும்விதமாக, நவகிரக சந்நிதி யிலுள்ள சுக்கிரனை மொச்சை கொண்டு வணங்கவும்.

சனி

ஒருவர் ஜாதகத்தில் சனி சுபத்தன்மை பெற்றிருப்பின், கிடைக்கும் லட்சுமி கடாட்சங்கள்:

கறுப்பாக இருப்பினும், ஈர்க்கத்தக்க வகையில் களையாக இருப்பார்கள்.

இவர்களுக்கு பழைய வீடு, பழைய வாகனம் தான் பிடிக்கும். அதனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

இவர்கள் பகுதித் தொழிலாளர்கள் இவர்களைத் தலைமையாக ஏற்றுக்கொள்வர்.

எல்லாரும் கறுப்பு நிறத்தை ஒதுக்க, இவர்களுக்கு கறுப்பு, சாம்பல் நிறங்கள் நன்கு ஒத்துவரும்.

இவர்களின் தொழில் பெரும்பாலும் இருட்டான- அழுக்கான இடத்திலேயே அமையும்.

இவர்களது வீடு ஏனோ சற்று உள்ளடங் கிய இடத்தில்- யாரும் எளிதாகக் கண்டு பிடிக்க முடியாதபடி அமையும்.

வீட்டில் எத்துணை லைட் போட்டாலும், அப்போதும் சற்று இருட்டாகத்தான் இருக்கும்.

எதனையும் தூய்மை செய்யும் பணி இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

வீட்டில் கழுதை, ஒட்டகம் படம் இருக்கும்.

வீட்டில் புளியமரம் இருக்கலாம்.

எப்போதும் இவர்களுக்கு வயதான கீழ்நிலை ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

இவர்களின் கஞ்சத்தனம் சேமிப்பைப் பெருக்கும்.

இவர்களது பிடிவாதம் செயல்களை நடத்திக்கொடுக்கும்.

இவர்களது ரகசிய நடவடிக்கைகள் ஒற்றர் வேலையில் முதன்மைபெறச் செய்யும்.

இவர்களில் பலர் விமானம் சம்பந்தமான வேலை செய்வார்கள்.

வீட்டில் அநேகமாக நாய் வளர்ப்பார்கள்.

சுபச்சனி, இவர்களை வேலையில்லாமல் உட்கார வைக்காது. ஒரு வேலை போனால் இன்னொரு வேலை உடனே கிடைக்கும்.

இவர்கள் தொழிலாளர்களின் தலைவராக இருந்தாலும்கூட, பிறரை அதட்டி மிரட்ட மாட்டார்கள்.

இவர்கள் வீட்டில் அதிக வயதானவர்கள் யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள்.

கிராமக் கோவில் சார்ந்த வழிபாட்டில் விருப்பம் அதிகம்.

இத்துணை நன்மை தரும் சுபச்சனிக்கு நன்றி தெரிவிக்க நவகிரக சந்நிதியிலுள்ள சனி பகவானை எள் தானியம் வைத்து வணங்கவும்.

மேற்கண்ட கிரகங்கள் உச்சம், ஆட்சி தான் பெற்றிருக்க வேண்டுமென்று அவசிய மில்லை. நீசமாகி, மறைவாகிக் கெடாமல் இருந்" தால்கூட போதும்; ஓரளவு சுப விஷயம் கிடைக்கும்.

இப்போது உங்களுக்கு ஒன்று தோன்றும். "மனுசனுக்கு இருக்கிற வேலையில், எங்கே போய் எந்த கிரகம் உச்சம், ஆட்சி, சுபம் என்று பார்ப்பது?' என அலுப்பு வரும். இதற்கென ஜோதிடரிடமெல்லாம் போகவேண்டாம். உங்கள் வாழ்வியல் நடைமுறையில் உங்களுக்கே தெரியவரும்.

நீங்கள் ஓரிடத்திற்கு வழிகேட்டோ, உதவி கேட்டோ செல்ல நேரும்போது ஒரு கம்பீர மான பெரியவரோ, ஒரு அரசு ஊழியரோ வழிகாட்டினால் உங்களுக்கு சூரியன் ஓரளவு நன்மை தரத்தக்க அளவில் உள்ளார் என நீங்களே அனுமானிக்கலாம். வயதான பெண்மனி எனில்- சந்திரன்; இளம்வயது பெண்ணெனில்- சுக்கிரன்; இளம்வயது ஆணெனில்- செவ்வாய்.

வயதான கடைநிலை ஊழியர் எனில்- சனி; பக்திப்பழமான பெரியவர் எனில்- குரு; சற்று நகைச்சுவையான ஆள் எனில்- புதன்.

இவ்வாறாக இந்த கிரகங்கள் உங்கள் ஜாத கத்தில் ஓரளவாவது நன்மை தரத்தக்கவிதமாக அமைந்துள்ளது புரியவரும்.

"போன ஜென்மத்தில் செய்த பாவம்தான் இந்த மனிதப்பிறவியே எடுத்திருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் விதவிதமான துன்பமும் துயரமுமாக உள்ளது. அதனைக் கடந்து செல்ல இத்தகைய லட்சுமி கடாட்சம் தரும் கிரகங் களின் துணை அவசியம். இதன்மூலம் இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லையென்று வாழலாம்.

பி.கு: ராகு- கேதுக்களுக்கு சொந்த வீடு இல்லை. இதனால் இவர்களின் ஆட்சி, உச்சம் பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. மேலும் இவர்கள் நிழல் கிரகங்கள். அதனால் மேற்கண்ட பட்டியலிலில் இவர்களைப் பற்றிக் கூறவில்லை.

செல்: 94449 61845

bala271219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe