உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு விஷயம் எப்போதும் அழகாக- அருமையாகக் கூடிவரும்.
மற்ற விஷயங்கள் ஏனோதானோவென்று இருந்தாலும், ஏதோவொரு விஷயம் மிக ஃப்ரெண்ட்லியாக- எளிதாக அமையும். குடும்பத்தினரும், "இவன் இந்த விஷயத்தைக் கைக்கொண்டால் அது சிறப்பாக நிறைவேறிவிடும்' என்பர்.
உங்கள் குடும்பத்திலோ, வியாபாரத்திலோ அரசு சகாயம் வேண்டியிருக்கும். நீங்கள் எத்தனையோ முயற்சித்தாலும், குறிப்பிட்ட நபர் அதில் தலையிட் டால் அது உடனே பலிதமாகிவிடும். இதுபோல் சில பெண்கள் எட்டூர் வாய் பேசுவார்கள். அவர்களிடம் பேசவே பயமாக இருக்கும். ஆனால் அவர்கள் சமையலோ மிகப்பிரமாதமாக இருக்கும். இவர்களின் சமையல் ருசிக்காகவே அவர்களது திட்டுகளை- ஏச்சுக் களைப் பொறுத்துப்போகும் சூழ்நிலை உருவாகும்.
ஜோதிடப்படி, ஒவ்வொருவர் ஜாதகத்திலும் ஏதோ வொரு கிரகம் நற்பலன் தரத்தக்கவகையில் அமைந் திருக்கும். இறைவன் கண்டிப்பான கருணையானவர். அவர் ஒவ்வொரு மனிதரின் பூர்வஜென்ம வினைப்படி, ஜாதக நகர்வுகளை அமைத்துப் படைத்துப் படியளிப் பவர். அதனால் எந்த மனிதருக்கும் ஒரு நல்ல பயனுடைய கிரக விதியை அமைக்காமல் விடுவதில்லை. அதுபோல், நூறு சதவிகித நல்ல பலன்கள் உள்ள ஜாதகத்தையும் இறைவன் கொடுப்பதில்லை.
ஜாதகத்தில் நற்பலன் தரும் கிரகத்தின் அமைப் பின்படி, அதன் பலாபலன் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். அந்த கிரகம் தரும் லட்சுமி கடாட்சம் ஜாத கருக்கு உண்டு. அந்த கிரக தசா வருடங்களில் அல்லது புக்தி மாதக் கணக்கில் அல்லது அந்தரத்தின் நாட்கணக் கில் லட்சுமி கடாட்சம் அமையும். இந்த காலநேரத்தில் நன்மைகளை அதிகமாக எதிர்பார்க்கலாம்.
சூரியன்
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் சுபமாக இருந்து அல்லது சூரியன் சாரநாதராக இருந்து சுபத்தன்மை பெற்றாலோ, உச்ச, ஆட்சியாக அமர்ந்தாலோ சூரிய தசை அல்லது சூரிய புக்தி அல்லது சூரிய அந்தரத்தில் கிடைக்கும் லட்சுமி கடாட்சங்கள்:
அரசுப் பதவி கிடைக்கும்.
அரசியலில் பெரிய மேன்மை புகழ், அதிகாரம் கிடைக்கும்.
இவ்வமைப்பு ஜாதகர்களால், அரசியலில், அரசு விஷயத்தில் எளிதாக வேலையை முடிக்க இயலும்.
இவர்கள் தங்கள் தந்தைக்கு உதவுகிறார்களோ இல்லையோ- இவர்களின் தந்தை இவர்களுக்கு ஓடி ஓடி உதவிசெய்வார்.
இவ்வமைப்பு ஜாதகர்களின் இல்லத்தில், முதுமையான ஆண்கள் திடகாத்திரமாக இருப்பர்.
இவர்கள் கம்பீரமாக இருப்பர். இவர்கள் வீட்டில் சந்தனம், தேக்கு, மூங்கில் மரங்கள் நன்றாக வளரும்.
இவர்களின் எல்லா வேலைகளிலும் கண்டிப் பாக அரசு சம்பந்தம் இருக்கும்.
இந்த ஜாதகர்கள் வீட்டிலும் வெளியிலும் அனைவரையும் அதட்டி விரட்டி வேலை வாங்குவர்.
இன்ன காரணத்துக்கு இவரிடம் பணி கிறோம் என்று தெரியாமலேயே, அனைவரும் இவரிடம் சற்று பவ்யமாக நடந்துகொள்வர்.
இவர்கள் ஆடு மேய்த்தாலும் சரி; அரசாட்சி செய்தாலும் சரி- இந்த வேலையில் இவர்கள்தான் "பட்ங் இங்ள்ற்'- அடித்துக்கொள்ள வேறு ஆளே இல்லையென்னும் அளவில் முதன்மை பெறுவர்.
இவர்கள் வாழும் இல்லம் எப்போதும் அதிக வெளிச்சத்துடன் இருக்கும். சிலசமயம் "உஷ்ணம் தாங்கலை' என்று சொல்லும் அளவுக் குக்கூட அமைந்துவிடும். சூரியன் சுபத்தன்மை பெறுவதால், இவர்களின் பார்வை வயதானாலும் தெளிவாக இருக்கும்.
எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், இவர்கள்தான் முதலிடத்தில் இருப்பர்.
சுப சூரியன், இவர்களுக்கு நிறைந்த தன்னம் பிக்கையைக் கொடுப்பார். ஒருவருக்கு தைரியமும், நம்பிக்கையும் இருப்பதே பெரிய லட்சுமி கடாட்ச மாகும். வழிபாட்டுத் தலங்களில் பொறுப்பாக செயல்படுவர். மருத்துவம் சார்ந்த தொழில் செய்தால், கைராசிக்காரர் என்று புகழப்படுவர். ஆரஞ்சு, ரத்தச்சிவப்பு நிறங்கள்மூலம் பயன் பெறுவர்.
ஆக, ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுபமாக இருப்பின், சூரிய காரக சம்பந்தமான நற்பயன்கள் எப்போதும் மேன்மை தரும். சூரியனுக்கு நன்றி கூறும்விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில், நவகிரக சந்நிதியிலுள்ள சூரிய பகவானுக்கு தாமரையும் கோதுமையும், சிவப்பு சந்தனமும் செலுத்தி வணங்கவும்.
சந்திரன்
ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம், சுபர் பார்வை, சுபர் சேர்க்கை அல்லது சுபரான சந்திரனின் சார கிரகம் என அமைந்திருந்தால் கிடைக்கும் லட்சுமி கடாட்சங்கள்:
இவர்களது கண்கள் அழகாக இருக்கும்.
தாயார் மிக அனுகூலமாக, நல்ல உதவிகள் செய்வார். தாயார் மட்டுமல்ல; மாமியாரின் அனுசரணையும் கிடைக்கும்.
அன்பு ஒன்றே இவர்கள் மொழியாக அமையும்.
மிக கோப உணர்ச்சிகளையும் இவர்களால் கட்டுப்படுத்த இயலும். (இதுவே ஒரு மனிதருக்கு அமையும் மிகப்பெரிய லட்சுமி கடாட்சமாகும்.)
ஆழ்ந்த சிந்தனையுடையவராக இருப் பார்கள். இதனால் எந்த விஷயத்தையும், "எடுத் தேன் கவிழ்த்தேன்' என செயலாற்றாமல், பொறுமையாகக் கைக்கொள்வார்கள்.
தண்ணீர் சம்பந்தம் உள்ளவை மிக அழகாகக் கூடிவரும்.
ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருப் பார்கள். ஒரு மனிதருக்கு நோயற்ற வாழ்வே மிகப்பெரிய பாக்கியமாகும்.
இவர்கள் வீட்டில் ஏதோவொரு பழமரம் இருக்கும். வீடு எப்போதும் மரங்கள் அடர்ந்து ஒருவித குளிர்ச்சியான சூழலில் இருக்கும்.
இவர்கள் ஆணாக இருப்பினும் ஒருவிதத் தாய்மை உணர்வோடு இருப் பார்கள். யாரை சந்தித்தாலும் இவர்களின் முதல் கேள்வி "சாப்பிடுகிறீர்களா?' என்பதாக இருக்கும்.
இவர்களது அழகான கற்பனைகள், வாழ்வியலுக்கு உதவியாக இருக்கும். பயணங்கள் இனிமை தரும்.
வீடு மாறுவதோ அல்லது அலுவலகத்தில் பதவியுடன் மாறுதலோ என எங்கே அலைவ தென்றாலும், ஆசையாக அலுக்காமல் அலைவார்கள்.
இவர்களுக்கு உணவு, நீர் சம்பந்தமான தொழில்களே அதிகமாக அமையும்.
எந்த விஷயத்தையும் எளிதாக உள்வாங் கிக்கொள்வார்கள். இதுவொரு பெரிய ப்ளஸ்ஸாக இருக்கும்.
இவ்விதம் வளர்பிறை சுபச் சந்திரன் அமைந்தால், அவருக்கு நன்றி கூறும்விதமாக நவகிரக சந்நிதியிலுள்ள சந்திரனுக்கு நெல் தானியத்தை பாதத்தில் வைத்து வணங்கவும்.
செவ்வாய்
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றோ, சுபர் சம்பந்தம் பெற்றோ, சுப சாரநாதராக அமைந்தோ இருப்பின் ஏற்படும் லட்சுமி கடாட்சங்கள்:
தைரியலட்சுமி இவர்களுடனேயே இருப்பாள்.
மனை, பூமி யோகமிருக்கும்.
இளைய சகோதரரின் உதவி கிடைக்கும்.
சீருடைப் பணிகள் மிக நன்மை தரும்.
நெருப்புசார் தொழில்கள் மேன்மை தரும்.
ஆயுதங்களின் பயன்பாடு நன்மைதரத்தக்க விதத்தில் அமையும்.
மிருகங்களின் வளர்ப்பு நன்மை தரும்.
தைரியம், இவர்களின் பசியாற்றும் இவர்கள் தொழிலாகவும் ஆகும்.
துணிந்து மனை விற்பனையில் இறங்கலாம்.
அரசுத்துறை அனுசரணையாக அமையும்.
ரத்தம் சம்பந்தமான தொழில்கள் நன்கு அமையும்.
விவசாயம், எக்காலத்திலும் இவர்களைக் கைவிடாது.
மற்ற கிரகங்களின் சுபத்தன்மையைப் பொருத்து, புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகிவிடுவார்கள்.
வீடு கட்டுமானம் நன்கு அமையும்.
இவர்கள் வீட்டினருகில், நெருப்பு சம்பந்தமான ஏதோவொன்று இருக்கும்.
வீட்டிலும் சரி; வேலை பார்க்கும் இடத்திலும் சரி- பாதுகாப்புக்கும் உரிமைக்கும் முதல்குரல் கொடுப்பார்கள். இவர்களைச் சுற்றியுள்ளவர்களின் பத்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் முழு அக்கறை எடுத்துக்கொள்வார்கள்.
இவர்கள் வசிப்பிடத்தில் மின்சாதனம் பழுதுபட்டால், இவர்களே முன்னின்று சரிசெய்துவிடுவார்கள்.
அதிக கோபம் வந்தால் எதிரிகளின் பல்லை உடைத்துவிடுவார்கள்.
விளையாட்டில் மிக ஆர்வம்கொண்டு பதக்கங்கள் வாங்குவார்கள். விளை யாட்டுத்துறை ஆசிரியராக, கோச்சாக வரும் வாய்ப்புண்டு.
இராணுவம், காவல்துறையில் முதன்மை நிலையாக- உத்தரவு கொடுக்கும் நிலையில் இருக்கும் வாய்ப்புண்டு.
இவர்களது சுறுசுறுப்பு பிறரை வியக்கவைக்கும்.
இவர்கள் எத்தனை பொல்லாதவராக இருப்பினும், பிறர் இவர்களை அனுசரித்து நடந்துகொள்வர். ஏனெனில் அவர்களின் ஆபத்து, அவசர காலத்தில் ஓடிப்போய் உதவிசெய்பவர்கள் இவர்களே. அதனால் இவர்களைச் சுற்றியுள்ளவர்கள் இவர்களைப் பார்த்து பயந்தாலும், இவர்களின் நல்ல குணத்தை வாழ்த்துவர்.
இத்தனை நன்மை தரும் சுபச் செவ்வாய்க்கு நன்றி தெரிவிக்க சுப்பிரமணியரை, வேலனை, முருகனை, கந்தனை மனதார வழிபடுங்கள். துவரை வைத்து வழிபடவும்.
புதன்
ஒருவர் ஜாதகத்தில் புதன் பாவிகளுடன் சேராமலிருந்தால் கிடைக்கும் லட்சுமி கடாட்சங்கள்:
இவர்களது அறிவாற்றல் ஆச்சரியம் தரும்வகையில் அமைந்திருக்கும். வாக்கினால் பலனுண்டு. பேச்சு சார்ந்த தொழில்கள் நன்கு அமையும்.
இவர்களது வீட்டினருகே ஏதாவது பள்ளி, கல்லூரி, பயிற்சிக்கூடம் இருக்கும்.
இவர்கள் வீட்டில் பச்சைநிறப் பயன்பாடு அதிகமிருக்கும்.
இவர்கள் வாழ்வியலில் ஏதோ ஒருவிதத்தில் கணித சம்பந்தம் இருந்துகொண்டே இருக்கும்.
பிறரின் வாழ்வுக்கு வழிகாட்டும் நபராக இருப்பார்கள். அது ஆடிட்டர், ஜோதிடர், ஆசிரியர், செய்தித்துறை என ஏதோவொருவிதத்தில் அமையும்.
இவர்களின் நகைச்சுவையுணர்வு நண்பர்களை அதிகரிக்கச் செய்யும். சிலசமயம் அதுவே தொழிலாக அமையும்.
தாய்மாமன் அனுசரணை உண்டு. எப்போதும் இவர்களைவிட வயதில் குறைந்த வர்கள் இவர்களுக்கு உதவிசெய்வர்.
எழுத்து இவர்களுக்கு சோறு போடும். அது கதை, கட்டுரை எழுதுவதாக இருக்கலாம்; செய்தித்துறையாக இருக்கலாம்; அஞ்சல்துறையாக இருக்க லாம்; பேனா கடை வைத்திருக்கலாம்;
பேனா ரிப்பேர் செய்பவராகவும் இருக்கலாம்.
இவர்களுக்கு வம்பு, குசும்பு இவற்றில் ஆர்வம் அதிகமிருக்கும்.
அதனை நல்ல வழியில் திருப்பி, பயன் பெறவேண்டும்.
இவர்கள் கைகளில் எப்போதும் கரன்சி- பண நோட்டுகள் தவழ்ந்துகொண்டே இருக்கும். அது வியாபாரியாக இருப் பதாலோ வங்கியில் பணி செய்வதாலோ இருக்கலாம்.
இவர்கள் வீட்டைச் சுற்றி பசுமையான மரங்கள் இருக்கும். சிலருக்கு பழமரங் களும் அமையும். சிலருக்கு மாடிவீடு அமையும்.
அநேகமாக, இவர்கள் வீட்டில் குதிரைப்படம் இருக்கும்.
தாய்மொழி தவிர, இன்னொரு மொழியும் இவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
பாவிகளுடன் சேராத சுப புதன் இத்தனை நன்மைகளையும் தருவதால், நவகிரக சந்நிதியிலுள்ள புதனுக்கு பச்சைப் பயறு வைத்து வணங்குங்கள்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94449 61845