Advertisment

லக்னமும் அதன் பலன்களும் - 25-1-2019 இதழின் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/laknam-and-its-benefits

லக்னங்களின் பொதுப்பலன்கள்...

துலாம்

ராஜ பூஜிதன். நல்ல குணம், புத்தி, பொறுமை, அறிவு, புகழ் உடையவர். சம்பத்துடையவர். பரிமளப்பிரியர். தனவான். இரக்கமுள்ளவர். சுகமானவர். மனதிற்குள் பயந்தவர். 7, 9, 10, 12, 19, 28 ஆகிய வயதுகளில் நெருப்பு, எதிரி, வைசூரி, நீர் perumalஆகியவற்றால் பீடை உண்டு. இந்த லக்னத்தை சுபகிரகம் பார்த்தால் 85 வயதுவரை வாழ்வார். இந்த லக்னத்துக்கு சூரியன், வியாழன், செவ்வாய் பகை கிரகங்கள். சந்தி ரனும் புதனும் யோகக்காரர்கள். இவர்களிருவரும் கூடியிருந் தால் பிரபல யோகத்தைக் கொடுப் பார்கள். சூரியனும் வியாழனும் மாரகாதிபதிகள். மாரக ஸ்தான மாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மார கத்துக்கு ஒப்பான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

விருச்சிகம்

Advertisment

புத்திமான். தனவான். வெகு மானி. வஞ்சகர். இனிமையாகப் பேசுபவர். உறவினரை வெறுப்பவர். எடுத்த காரியத்தை முடிப்பவர். விஷயப் பிரியர். ம

லக்னங்களின் பொதுப்பலன்கள்...

துலாம்

ராஜ பூஜிதன். நல்ல குணம், புத்தி, பொறுமை, அறிவு, புகழ் உடையவர். சம்பத்துடையவர். பரிமளப்பிரியர். தனவான். இரக்கமுள்ளவர். சுகமானவர். மனதிற்குள் பயந்தவர். 7, 9, 10, 12, 19, 28 ஆகிய வயதுகளில் நெருப்பு, எதிரி, வைசூரி, நீர் perumalஆகியவற்றால் பீடை உண்டு. இந்த லக்னத்தை சுபகிரகம் பார்த்தால் 85 வயதுவரை வாழ்வார். இந்த லக்னத்துக்கு சூரியன், வியாழன், செவ்வாய் பகை கிரகங்கள். சந்தி ரனும் புதனும் யோகக்காரர்கள். இவர்களிருவரும் கூடியிருந் தால் பிரபல யோகத்தைக் கொடுப் பார்கள். சூரியனும் வியாழனும் மாரகாதிபதிகள். மாரக ஸ்தான மாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மார கத்துக்கு ஒப்பான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

விருச்சிகம்

Advertisment

புத்திமான். தனவான். வெகு மானி. வஞ்சகர். இனிமையாகப் பேசுபவர். உறவினரை வெறுப்பவர். எடுத்த காரியத்தை முடிப்பவர். விஷயப் பிரியர். மனைவியிடத்தில் அதிக பிரியமுள்ளவர். 4, 5, 10, 12, 40 வயதுகளில் கண்ட தோஷம், ஜுரம், நெருப்பு, ஜன்னி ஆகியவற்றால் பீடை உண்டு. இந்த லக்னத்தை சுபகிரகம் பார்க்க, 90-வயதுக்குமேல் வாழ்ந்திருப்பார். சூரியன், சந்திரன், வியாழன் நட்பு. செவ்வாய், புதன், சுக்கிரன் பகை. சூரியனும் சந்திரனும் யோகக்காரர்கள். இவர்களிவருவரும் கூடியிருந்தால் பிரபல யோகம். புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் மாரக ஸ்தானமாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்துக்குச் சமமான கண்டத்தைக் கொடுப்பர்.

தனுசு

சத்தியவான். நல்ல குணமுடையவர். வசியமுள்ளவர். சுகவான். யோகக்காரர். நல்ல நண்பர். மேல்நாடுகளில் சஞ்சரிப்பவர். எப்போதும் வேலை பார்ப்பவர். 3, 4, 5, 12, 18, 32, 40, 47 வயதுகளில் கண் நோயாலும், உஷ்ட ரோகத்தாலும் பீடை வரும்.

லக்னத்தை சுபகிரகம் பார்க்க 77 வயதுவரை வாழ்ந்திருப்பார். சூரியனும் செவ்வாயும் நட்பு. சுக்கிரன் ஒருவரே பகை. சூரியனும் புதனும் கூடியிருந்தால் பிரபல யோகம். புதன், சுக்கிரன் மாரகர்கள். இவர்கள் மாரக ஸ்தானமாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்துக்குச் சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

மகரம்

Advertisment

கோடீஸ்வரராக வாழ்வார். உபயோக முள்ளவர். கோபக்காரர். வாய்ஜாலம் உள்ளவர். பரிமளப்பிரியர். மனைவியிடத்தில் அதிக பிரியமுள்ளவர். 3, 4, 5, 7, 8, 10, 12, 32, 37 வயதுகளில் நீர், ஜுரம், விஷம் ஆகியவற்றால் பீடை உண்டு. லக்னத்தை சுபகிரகம் பார்க்க 67 வயதுவரை வாழ்ந்திருப்பார். செவ்வாய், புதன், சுக்கிரன் நண்பர்கள். மாரகர்களான சந்திரன், வியாழன் மாரக ஸ்தானமாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்துக்குச் சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

கும்பம்

நண்பர்களால் பாதிப்படைவார். பெண்களுக்குப் பிரியமுள்ளவர். அகன்ற வயிறுடையவர். சுகவான். திடமுள்ளவர். தன்னையே புகழ்ந்து பேசுவார். குள்ளமானவர். சிவந்த கண்களை உடையவர். ஒருவர் செய்யும் உபகாரத்தை உடனே மறந்து விடுவார். பித்த சரீரமுடையவர். 9, 10, 11, 20, 30, 32 வயதுகளில் ஜுரம், மிகுந்த ஜன்னி, வாதஜுரம், பித்தஜுரம் ஆகியவற்றால் பீடை. இந்த லக்னத்தை சுபகிரகம் பார்த்தால் 80 வயதுவரை இருப்பார். சுக்கிரன், புதன், சனி நண்பர்கள். சந்திரன், செவ்வாய், வியாழன் பகை. சுக்கிரன் ஒருவரே யோகக்காரர். சுக்கிரன், செவ்வாய் கூடியிருந்தால் பிரபல யோகத்தைக் கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய் மாரக ஸ்தானமாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்துக்குச் சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

மீனம்

ஞானி. பிராம்மணர். பெரியோரிடத்தில் பக்தியுள்ளவர். அழகுடையவர். வசதி, திரவியமுடையவர். பரிமளப்பிரியர். வெகு செலவாளி. இரக்கமுள்ளவர். குளிர்ச்சியான கண்களும், காது ரோகமும் உடையவர். 3, 4, 7, 12, 20, 28 வயதுகளில் இருமல், ஜுரம், உஷ்ண ரோகம் ஆகியவற்றால் பீடை... இந்த லக்னத்தை சுபகிரகம் பார்த்தால் 90 வயதுவரை இருப்பார். சந்திரன், செவ்வாய் நட்பு. சூரியன், புதன், சுக்கிரன், சனி பகை. செவ்வாயும் குருவும் யோகக்காரர்கள். செவ்வாயும் வியாழனும் கூடியிருந்தால் பிரபல யோகத்தை அடைவார்கள். சூரியன், புதன், சுக்கிரன், சனி மாரகர்கள். இவர்கள் மாரக ஸ்தானமாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்துக்குச் சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

ரிஷப லக்னக்காரர்களும், மகர லக்னக் காரர்களும் எந்தவொரு பரிகாரமும் இல்லாமல் முன்னேறுவார்கள். இதர லக்னம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பரிகாரம் செய்து முன்னேறலாம்.

பரிகாரம்-1

அந்தந்த லக்னத்திற்குரிய நவதானியங்களை ஒரு துணியில் கட்டி பூஜையறையில் வைத்து வணங்கிவர வேண்டியது நடக்கும்.

பரிகாரம்-2

வசதியுள்ளவர்கள் திருச்செந்தூர் முருகனையும், குருவையும் நேரில் தரிசித்து பலன்களை அடையலாம். (இது ஒரு அனுபவப் பரிகாரம்).

செல்: 94871 68174

bala080219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe