Advertisment

லக்னாதிபதி நின்ற பலன்!

/idhalgal/balajothidam/lagnadipati-standing-fruit

முதல் பாவத்தில் லக்னாதிபதி லக்னத் தில் இருந்தால், ஜாதகர் தன் சுய வீட்டில் இருப்பதால், அவரின் உடல்நலம் நன்றாக இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். நோய் இருக்காது. ஜாதகர் பலசாலியாக இருப்பார்.

Advertisment

வசதி படைத்த மனிதராக இருப்பார்.

‌2-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந் தால், ஜாதகர் உறுதியான உடலைக் கொண்டி ருப்பார். பலசாலியாக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். ஜாதகர் தர்மத்தைக் கடைப் பிடிப்பார். மன்னரைப்போல வாழ்வார். புகழ் பெற்ற மனிதராக இருப்பார். குடும் பத்தை நன்றாக பார்த்துக்கொள்வார். பிள்ளைகளை அக்கறையுடன் கவனிப்பார்.

Advertisment

எப்போதும் குடும்பத்தைப் பற்றிய சிந்தனை யிலேயே இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். எதையும் யோசித்தே பேசுவார்.

3-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் வீரமானவராக இருப்பார். பலசாலியாக இருப்பார். நல்ல நண்பர்

முதல் பாவத்தில் லக்னாதிபதி லக்னத் தில் இருந்தால், ஜாதகர் தன் சுய வீட்டில் இருப்பதால், அவரின் உடல்நலம் நன்றாக இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். நோய் இருக்காது. ஜாதகர் பலசாலியாக இருப்பார்.

Advertisment

வசதி படைத்த மனிதராக இருப்பார்.

‌2-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந் தால், ஜாதகர் உறுதியான உடலைக் கொண்டி ருப்பார். பலசாலியாக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். ஜாதகர் தர்மத்தைக் கடைப் பிடிப்பார். மன்னரைப்போல வாழ்வார். புகழ் பெற்ற மனிதராக இருப்பார். குடும் பத்தை நன்றாக பார்த்துக்கொள்வார். பிள்ளைகளை அக்கறையுடன் கவனிப்பார்.

Advertisment

எப்போதும் குடும்பத்தைப் பற்றிய சிந்தனை யிலேயே இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். எதையும் யோசித்தே பேசுவார்.

3-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் வீரமானவராக இருப்பார். பலசாலியாக இருப்பார். நல்ல நண்பர்கள் இருப்பார்கள். இரக்க குணம் உள்ளவராக இருப்பார். உடன்பிறந்தோர் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் தன் துணிச்சல் குணத்தை பயன்படுத்தி பல செயல்களைச்செய்வார். அவருக்கு பெயர், புகழ் இருக்கும்.

4-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் குறைவாக சாப்பிடுவார். நீண்ட ஆயுள் இருக்கும். அவர் பெற்றோரைக் காப்பார். முன்னோரின் சொத்து கிடைக்கும். பணக்காரராக இருப்பார். பெரிய மனிதர்களுடன் உறவு கொண்டாடுவார். சந்தோஷமாக இருப்பார். பல நல்ல செயல்களைச் செய்வார். துணிச்சல் குணம் இருக்கும்.

dd

5-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் தர்மச்செயல்களைச் செய்வார். அறிவாளியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். சந்தோஷமாக வாழ்வார். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். அவர்களால் புகழ் கிடைக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். தேவையானதை மட்டுமே பேசுவார். அரசரைப்போல வாழ்வார்.

6-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் சந்தோஷமாக இருப்பார். சில நேரங்களில் வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். பணவசதியுடன் இருப்பார். தன் காரியங்களை நல்லமுறையில் செய்வார். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். நன்கு சாப்பிடுவார். தூங்குவார். பிறரைப் பற்றி நினைக்கவே மாட்டார்.

7-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் கம்பீரமாக இருப்பார். மனதில் எப்போதும் சிந்தனை இருக்கும். ஜாதகர் ஆணாக இருந்தால், மனைவி அழகாக இருப்பாள். பெண்ணாக இருந்தால், கணவர் அழகானவராக இருப்பார். எனினும், இல் வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். சில நேரங்களில் ஜாதகருக்கு கோபம் உண்டாகும். தொழிலில் ஈடுபடும்போது, எதைச்செய்வது என்ற விஷயத்தில் குழப்பம் இருக்கும்.

8-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். மனதில் எதை நினைத்தாலும் அதைச் செய்யவேண்டுமென அவர் நினைப்பார். திட்டமிட்டு செயல்படுவார். லக்னாதிபதி பாவ கிரகமாக இருந்து இன்னொரு பாவ கிரகத்துடன் சேர்ந்திருந்தால், கண்ணில் கோளாறு இருக்கும். சுபகிரகமாக இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார்.

9-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் நல்ல குடும்பத் தலைவராக இருப்பார். நல்ல நண்பர்கள் இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் சந்தோஷமாக வாழ்வார். அறிவாளியாக இருப்பார். அவரின் வாழ்க்கை மரியாதைக்குரியதாக

இருக்கும். எதையும் துணிச்ச லாக முடிப்பார்.

10-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் அரச வாழ்க்கை வாழ்வார். உயர்ந்த மனிதர்களுடன் அவருக்கு உறவு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். நன்கு படித்தவராக அவர் இருப்பார். அரசாங்க பதவியில் சிலர் இருப்பார்கள். ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். குரு, தாய், தந்தையை மதிப்பார்.

11-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார். பெயர், புகழுடன் இருப்பார். பலசாலியாக இருப்பார். அவருக்கு வாரிசுகள் இருப்பார்கள். நீண்ட ஆயுள் இருக்கும். பணக்காரராக இருப்பார். நிறைய வாகனங்கள் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இவர் பிறந்தபிறகு, தந்தை பெயர், புகழுடன் இருப்பார்.

12-ஆம் பாவத்தில் லக்னாதிபதி இருந்தால், ஜாதகர் பாவச்செயல் களைச் செய்வார். மனம் ஒரேநிலையில் இருக்காது. பகைவர்கள் இருப்பார்கள். சிலர் தங்களின் ஊரைவிட்டு வெளியே சென்று வாழ்வார்கள். சிலர் வெளிநாடு களில் இருப்பார்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். பாவ கிரகம் லக்னாதிபதியைப் பார்த்தால் அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்திருந் தால், உடல் நலத்தில் பாதிப்பு இருக்கும்.

bala280723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe