Advertisment

அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்! 12 ராசியினருக்கும்...

/idhalgal/balajothidam/lacquer-remedies-0

சென்ற இதழ் தொடர்ச்சி...

கடகம்

கடக ராசியின் சிந்தனாதிபதி செவ்வாய். ராசி விருச்சிகம். இவர்களின் யோசனைகள் எல்லாம் மூடுமந்திரமாகவே இருக்கும். படுரகசியமாக சிந்திப்பார்கள். இவர்களின் எண்ணங்களை யாராலும் புரிந்துகொள்ளவோ, தெரிந்துகொள்ளவோ முடியாது. எல்லா லட்சியங்களும் இவர்களின் தொழில் மேன்மை, கௌரவம் சார்ந்தே இருக்கும்... "எவனை வச்சு எப்படி செய்யலாம்' என்றே புத்தி ஓட்டம் இருக்கும்.

Advertisment

இந்த அரிய சிந்தனைகளை நிறைவேற்றும் இடம் ரிஷபம். அதிபதி சுக்கிரன். இதேவீட்டில் இவர்களின் ராசியாதிபதி சந்திரன் உச்சமடைவார். இவர்களுக்கு ஆயிரம் மட்டமான யோசனைகள் இருந்தாலும், அதனை மிக அழகாக நிறைவேற்றிவிடுவார்கள். 11-ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பின், இவ்விதம் இவர்களின் லட்சியங்கள்- அது நல்லதாக இருக்கட்டும், வேறுவிதமாக இருக்கட்டும்- அலுங்காமல், குலுங்காமல் இருந்த இடத்தில் இருந்தே அம்சமாக நிறைவேற்றிவிடுவார்கள். இதே 11-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் உச்சமடைந்தால், ஆஹா! சூப்பர். அதிர்ஷ்டத்துடன் எண்ணங்கள் நிறைவேறும். "நினைத்தாலே இனிக்கும்' என்பதுபோல நினைத்ததெல்லாம் நிறைவேறும். இவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் தகுதியுள்ள சுக்கிரன் நீசமடைந்தால், முதலிலில் இவர்களுக்கு அதிக சிந்தனையே வராது. லட்சியம் எல்லாம் ஒன்றும் கிடையாது. "குறிக்கோளா? அப்படின்னா என்ன?' என்பது மாதிரி இருப்பார்கள். இது ஒருவகையில் நல்லதுதான். லட்சியம் இருந்தால்தானே நிறைவேறுகிறதா என்று மனம் அலைபாயும். ஒரு யோசனையும் இல்லையென்றால் பழுதே இல்லை பாருங்கள். அசந்து மறந்து ஒன்றிரண்டு ஆசைப்பட்டாலும், அதுவும் நிறைவேறாது... நாளடைவில் விரக்தியில், ஒரு சந்நியாசி மாதிரி ஆகிவிடுவார்கள். இவர்கள் ஆசையெல்லாம் தொழில், வீடு மற்றும் கௌரவம் சார்ந்ததாகவே அமையும். எனவே கடக ராசியில் சுக்கிரன் நீசமானவர்கள் பழமையான மகாலட்சுமி கோவில்களில் வழிபாடு நடத்துங்கள். பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுங்கள். சுக்கிரன் நீசமாகி, எண்ணம் நிறைவேறத் தடையுள்ள கடக ராசியினர், சிறு குழந்தைகளுக்கு இலவச ட்யூஷன் எடுங்கள். இன்றும்கூட அரசு சம்பந்தமான படிவங்களை நிரப்புவதற்குத் தெரியாமல் நிறைய மக்கள் தவிக்கிறார்கள். ஓய்வு நேரத்தில், இப்படிப்பட்ட மக்களுக்கு தகவல் தொடர்பில் உதவுங்கள். உங்கள் எண்ணம் பலிதமாகும் அதிபதி கடக ராசியின் 3-ஆமிடத்தில் நீசமடைவார். 3-ஆமிடம் என்பது தகவல் தொடர்பைக் குறிப்பது. எனவே தகவல் தொடர்பில் மற்றவர்களுக்

சென்ற இதழ் தொடர்ச்சி...

கடகம்

கடக ராசியின் சிந்தனாதிபதி செவ்வாய். ராசி விருச்சிகம். இவர்களின் யோசனைகள் எல்லாம் மூடுமந்திரமாகவே இருக்கும். படுரகசியமாக சிந்திப்பார்கள். இவர்களின் எண்ணங்களை யாராலும் புரிந்துகொள்ளவோ, தெரிந்துகொள்ளவோ முடியாது. எல்லா லட்சியங்களும் இவர்களின் தொழில் மேன்மை, கௌரவம் சார்ந்தே இருக்கும்... "எவனை வச்சு எப்படி செய்யலாம்' என்றே புத்தி ஓட்டம் இருக்கும்.

Advertisment

இந்த அரிய சிந்தனைகளை நிறைவேற்றும் இடம் ரிஷபம். அதிபதி சுக்கிரன். இதேவீட்டில் இவர்களின் ராசியாதிபதி சந்திரன் உச்சமடைவார். இவர்களுக்கு ஆயிரம் மட்டமான யோசனைகள் இருந்தாலும், அதனை மிக அழகாக நிறைவேற்றிவிடுவார்கள். 11-ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பின், இவ்விதம் இவர்களின் லட்சியங்கள்- அது நல்லதாக இருக்கட்டும், வேறுவிதமாக இருக்கட்டும்- அலுங்காமல், குலுங்காமல் இருந்த இடத்தில் இருந்தே அம்சமாக நிறைவேற்றிவிடுவார்கள். இதே 11-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் உச்சமடைந்தால், ஆஹா! சூப்பர். அதிர்ஷ்டத்துடன் எண்ணங்கள் நிறைவேறும். "நினைத்தாலே இனிக்கும்' என்பதுபோல நினைத்ததெல்லாம் நிறைவேறும். இவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் தகுதியுள்ள சுக்கிரன் நீசமடைந்தால், முதலிலில் இவர்களுக்கு அதிக சிந்தனையே வராது. லட்சியம் எல்லாம் ஒன்றும் கிடையாது. "குறிக்கோளா? அப்படின்னா என்ன?' என்பது மாதிரி இருப்பார்கள். இது ஒருவகையில் நல்லதுதான். லட்சியம் இருந்தால்தானே நிறைவேறுகிறதா என்று மனம் அலைபாயும். ஒரு யோசனையும் இல்லையென்றால் பழுதே இல்லை பாருங்கள். அசந்து மறந்து ஒன்றிரண்டு ஆசைப்பட்டாலும், அதுவும் நிறைவேறாது... நாளடைவில் விரக்தியில், ஒரு சந்நியாசி மாதிரி ஆகிவிடுவார்கள். இவர்கள் ஆசையெல்லாம் தொழில், வீடு மற்றும் கௌரவம் சார்ந்ததாகவே அமையும். எனவே கடக ராசியில் சுக்கிரன் நீசமானவர்கள் பழமையான மகாலட்சுமி கோவில்களில் வழிபாடு நடத்துங்கள். பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுங்கள். சுக்கிரன் நீசமாகி, எண்ணம் நிறைவேறத் தடையுள்ள கடக ராசியினர், சிறு குழந்தைகளுக்கு இலவச ட்யூஷன் எடுங்கள். இன்றும்கூட அரசு சம்பந்தமான படிவங்களை நிரப்புவதற்குத் தெரியாமல் நிறைய மக்கள் தவிக்கிறார்கள். ஓய்வு நேரத்தில், இப்படிப்பட்ட மக்களுக்கு தகவல் தொடர்பில் உதவுங்கள். உங்கள் எண்ணம் பலிதமாகும் அதிபதி கடக ராசியின் 3-ஆமிடத்தில் நீசமடைவார். 3-ஆமிடம் என்பது தகவல் தொடர்பைக் குறிப்பது. எனவே தகவல் தொடர்பில் மற்றவர்களுக்கு உதவும்போது எண்ணம், லட்சியம் எல்லாம் நாளடைவில் கொஞ்சமாவது ஈடேறும். உங்கள் இளைய சகோதரி வயதுடையவர்களுக்கும், வாழ்க்கைத்துணையைப் பிரிந்த பெண்களுக்கும் இயன்ற உதவியை (உதவி மட்டும்) செய்யவும். சுக்கிரன் வழிபட்ட ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று வணங்கவும். அங்குள்ள ரங்கநாச்சியாரை வணங்க, நீச சுக்கிர தோஷம் விலகும்.

சிம்மம்

சிம்ம ராசியின் சிந்தனாதிபதி குரு. ராசி தனுசு. தர்ம சிந்தனைகளையும் சற்றே கோக்குமாக்காக சிந்திப்பவர்கள் இந்த ராசியினர். யோசனைக்குரிய குரு 8-ஆம் அதிபதியாகவும் வருவதால் ஏற்படும் விளைவு இது. இவர்களின் லட்சியங்களை நிறைவேற்றும் இடம் மிதுனம். அதிபதி புதன். புதன் எப்போதும் வேக சிந்தனைக்குரியவர். எனவே ஒன்று யோசித்தால், உடனே உடனே அது நிறைவேறவேண்டும் என பரபரப்பவர்கள். எள் என்று நினைத்தவுடனே அது எண்ணெய்யாக வேண்டும் என்ற அதிவேக லட்சிய நிறைவேறும் குணம் உடையவர்கள். இதனால்தானோ என்னவோ சிம்ம ராசியினரை எப்போதும் அவசரக்காரர்கள் என்று அடையாளப்படுத்தி விடுவார்கள். தங்கள் எண்ணம் நிறைவேற தங்கள் குடும்பத்தாரையும், பணத்தையும், சிலசமயம் மிரட்டும் பேச்சுகளையும் பயன்படுத்துவர். சிம்ம ராசியினரின் லட்சியம், எண்ணத்தை நிறைவேற்றும் அதிபதி புதன். அவர் ஆட்சியானாலும் உச்சமானாலும் குறிக்கோள் நிறைவேறும்போது, நல்ல பணம் சம்பாதித்துவிடுவார்கள். இதே புதன் 8-ஆம் வீட்டில் நீசமடைவார். இவர்கள் என்ன யோசித்தாலும், அதற்கு எதிர்மறையாக நடந்துவிடும். சிலசமயம் இவர்களின் யோசனைகள் சிறைச்சாலைக்கும் அனுப்பிவிடும். எனவே புதன் நீசமான சிம்ம ராசியினர் ஆயிரம் யோசனை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து அது நிறைவேற எந்த நடவடிக்கையும் எடுத்துவிடாதீர்கள். சிலசமயம் தீராத அவமானத்தையும் கொடுத்துவிடும். இவ்வாறு புதன் நீசமான சிம்மத்தார் சயனப் பெருமாளை வணங்கவும். கல்வி தடைப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி தொடர உதவவும். ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை செய்யவும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றவும். திருவெண்காடு மற்றும் மதுரை மீனாட்சி அம்மனை வணங்கவும். சிம்மத்தாருக்கு புதன் நீசமானால் காசு பண வரவும் திண்டாட்டமாகிவிடும். அதனால் திருப்பதி வேங்கடாசலபதியையும், குபரே லிலிங்கத்தையும் வழிபடவேண்டும்.

கன்னி

கன்னி ராசியினரின் சிந்தனாதிபதி சனி. ராசி மகரம். சனி என்றாலே சற்று ஸ்லோதான். எனவே இவர்கள் யோசனை செய்வதற்கே அதிக நாள் எடுத்துக் கொள்வர். சிந்திப்பதற்கே அதிகம் தயங்குவர். லட்சிய வேட்கை என்றெல்லாம் இருக்காது. "லட்சியமா? இருக்கு இருக்கு... யோசனை செய்கிறேன்' என்பர். பிரச்சினை வந்துவிடுமோ என தங்களுக்குள்ளேயே அஞ்சுவர். மற்றவர் களோ "இவன் என்னைக்கு யோசிச்சு என்னைக்கு செயல்படுத்துவது?' என நொந்து போய்விடுவர். இவ்வளவு மெதுவாக யோசிப்பார்களே தவிர, இதனை நிறைவேற்றும் அதிபதியோ "ஃபாஸ்ட் ஃபாஸ்ட்' சந்திரன். எனவே ஒன்று முடிக்கவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால், இவர்கள் பேச்சை இவர்களே கேட்கமாட்டார்கள். அவ்வளவு விரைவாக perumalசெய்துமுடித்து விடுவார்கள். என்ன ஒன்று... யோசிக்கத்தான் வருடக் கணக்காகும். இதே சந்திரன் கன்னி ராசிக்கு உச்சமானால், இவர்கள் எண்ணியது பல மடங்கு விருத்தி யுடன் நிறைவேறும். எல்லாரும் பொறா மைப்படும் அளவுக்கு, அதிர்ஷ்டத்துடன் எண்ணியது ஈடேறும்... சந்திரன் கன்னி ராசிக்கு ஆட்சியாக இருந்தாலும், லட்சியம் நிறைவாக நிறைவேறும். பெரும்பாலும் இவர்கள் யோசனைகளை நிறைவேற்ற பெண்களே பெரும் உதவி செய்வர். இதே சந்திரன் நீசமானால், சீரான சிந்தனைகள் இராது. அல்லது இவர்கள் நினைத்தது இவர்களின் தவறான யோசனையால் நிறைவேறாமல் போய்விடும். அல்லது இவர்களின் இளைய சகோதரம் லட்சியத்தைத் தடை செய்வார். சிலசமயம் "கம்யூனிகேஷன் கேப்' எனும் தகவல் தொடர்பில் தவறு ஏற்பட்டும் யோசனைகள் நிராகரிக்கப்பட்டு, நிறைவேறாது. கன்னி ராசியினரின் சிந்தனைகள் பெரும்பாலும் வேலையைப் பற்றிதான் இருக்கும். வேலையைப் பற்றிய கற்பனைகள் தடைப்படும்போது, வாழ்வில் ஒருவித பற்றின்மை வந்துவிடும். சிலர் நோய்களைப்பற்றி சதா சிந்தனை செய்வர். எனவே கன்னி ராசியினருக்கு சந்திரன் நீசமாகி இருந்தால், கண்டிப்பாக அம்பாளை வணங்க வேண்டும். தண்ணீர் சம்பந்தமான உதவிகள் செய்யவேண்டும். கன்னி ராசியினர் யாரெல்லாம் லட்சியம் தடைப்பட்டு இலக்கில்லாமல் நிற்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் கண்டிப்பாக நீர் சார்ந்த குழாய்கள், ஏரிகள், வாய்க்கால், ஆறு போன்றவற்றில் ஏதேனும் சீரமைக்க பெரும் முயற்சி எடுங்கள். குறைந்தபட்சம் உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள குழாயை சரி செய்யலாம். அல்லது அருகிலுள்ள ஓடையில் குப்பை களை அகற்றலாம். இதுபோன்று பரிகாரம் செய்யும்போது, உங்கள் வேலை பற்றிய எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும். அதற்கும் மேலாக சீரான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். எந்தவொரு ஜாதகத்திலும் சந்திரன் கெடக்கூடாது. பரிகாரம் செய்யாவிட்டால் நாளடைவில் "அந்தாளு கொஞ்சம் லூசு' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர். திங்களூர், சோட்டாணிக்கரை பகவதி போன்ற கோவில்களுக்குச் சென்று வணங்கவும்.

துலாம்

Advertisment

துலா ராசியின் சிந்தனை, யோசனைக் குரியவர் சனி. ராசி கும்பம். இவர்களின் யோசனை அனேகமாக வீடு, வாசல், சொத்து சுகம் மற்றும் கல்வி என இதுபற்றியதாக அமையும். இவர்களின் யோசனை உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். வெளியே தெரியாது. இந்த யோசனைகளை நிறைவேற்றுபவர் சூரியன். ராசி சிம்மம். இதிலொரு வேடிக்கை உள்ளது. துலா ராசியினருக்கு சிந்தனா திபதிக்கும் நிறைவேற்றும் அதிபதிக்கும் ஒருவருக்கொருவர் ஆகாது. ஸ்டண்ட்தான். என்னத்தைச் சொல்ல? இவர்கள் ஒன்று நினைத்தால் அது நிறைவேறும்தான். ஆனால் நினைத்த வழியில் அல்லாது வேறுவிதமாக நிறைவேறும். அமைதியாக நினைத்து, ஆர்ப்பாட்டமாக நிறைவேற்றுவர். சிலசமயம் நினைப்பிற்கும், நிறைவேறு வதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்து விடும். குழம்பிப் போய்விடுவர். லட்சியத்தை நிறைவேற்றும் சூரியன் ஆட்சியாக இருந்தால், வெகுகம்பீரமாக நினைத்ததெல்லாம் நிறைவேறும். சூரியன் உச்சமாக இருந்தால், இவர்களின் லட்சியம் நிறைவேற வாழ்க்கைத் துணை பெரும் உதவி செய்வார். இதன்மூலம் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் கணவர் இருக்கிறார் என்றோ, ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின் அவரது மனைவி இருக்கிறார் என்றோ பேட்டி கொடுத்து மகிழ்வர். இதே சூரியன் நீசமாகிவிட்டால் லட்சியம் நிறைவேறத் தடை செய்பவரே இவர்களா கத்தான் இருப்பார்கள். வேறுயாரும் அதற்குக் காரணம் கிடையாது. இவ்வாறு சூரியன் நீசமாகும்போது, துலா ராசியினருக்கு நல்ல வீடோ, மனையோ, வாகனமோ அடைய நினைத்த எண்ணம் நிறைவேறாது. வீடு வாங்கவேண்டுமென நினைத்து, அதனை ஒரு லட்சியமாகவே சிலர் கொண்டிருப்பர். ஆனால் அது நிறைவேறாமல் தட்டிக்கொண்டே போகும். சிலருக்கு கல்விப்பயிற்சி சம்பந்த லட்சியங்களும், பரம்பரைச் சொத்துகள் சம்பந் தமான எண்ணங்களும், அதை நிறைவேற்றும் வழிகளும் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்கும். துலா ராசியின் லட்சியத்தை நிறைவேற்றும் சூரியன் நீசமானால், இவர்கள் கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமைதோறும் விரதமிருந்து சூரியனையும், சிவனையும் வணங்கவேண்டும். முடிந்தமட்டும் கோவில்களில் விளக் கேற்றுங்கள். மின்சார உபகாரம் செய்யவும். கோதுமை தானம் நன்று. முக்கியமாக சிவன் கோவிலில் உழவாரப்பணி, விளக்கேற்றுவது என எவ்வளவு தூரம் பிரார்த்தனை செய்கிறார் களோ, அவ்வளவு நல்லது நடக்கும். லட்சியங் களும் நன்கு பலிலிதமாகும். துலா ராசியினரில் சூரியன் நீசமாகவுள்ள ஜாதகர்கள், தஞ்சாவூர் அருகேயுள்ள சூரிய னார்கோவில், திருக்கண்டியூர் வீரட்டானம் போன்ற தல தரிசனம் செய்து, அங்குள்ள சிவனை வழிபடுதல் நன்று. தந்தை மற்றும் தந்தை வயதுடைய பெரியவர்களை நன்கு கவனிக்கவும். சூரியன் நீசம் என்பது, ஒளி மறைவுக்கு ஒப்பானது. எனவே, பார்வைக் குறைபாடுள்ளவர்கள், பார்வையற்றவர்கள், கண் ஆபரேஷன் செய்யப்போகும் மனிதர்கள், கண் மருத்துவமனை என உங்கள் உதவிகள் கண் பார்வை சம்பந்தமானதாக இருக்கட்டும். உங்கள் உதவியால் அவர்கள் பார்வையில் ஒளிபெறும்போது, உங்கள் வாழ்க்கை வெளிச்சமாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் எண்ண அதிபதி குரு. ராசி மீனம். குரு தர்ம சிந்தனையுடைய கிரகம். அச்சிறப்புள்ள கிரகமே விருச்சிகத்துக்கு லட்சிய அதிபதியாக வந்திருப்பது வரமே. சரி; இவர்களின் இந்த தர்மமிகு சிந்தனையை நிறைவேற்றுபவர் கன்னி புதன். விருச்சிகத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் புதன், கன்னி ராசியில் ஆட்சியும், உச்சமும் பெறுவார். ஆஹா! இவ்விதம் அமைந்துவிட்டால், நீங்கள் என்ன எண்ணி னாலும் உடனே நிறைவேறும். சந்தேகமில்லை. அனேகமாக விருச்சிக ராசியினருக்கு, அவர்கள் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும்- அவர்கள் சொல்லுக்கு மதிப்பு வேண்டும்- நல்ல வீடு அமையவேண்டும்- நல்ல காசுபணப் புழக்கம் வேண்டும்- நிறைய அசையும் சொத்து வேண்டும்- குடும்பத்திலுள்ள எல்லாரும் இவரை அண்டிப் பிழைக்க வேண்டும் என இவ்வாறெல்லாம் லட்சியங்கள் சிறகடிக்கும். புதன் உச்சமாகும்போது இவையனைத்தும் செவ்வனே பலிலிதமாகும். இதே புதன் நீசமானால் அந்தோ பரிதாபம். எண்ணத்தை நிறைவேற்றும் கிரகம் எண்ணங் கள் உண்டாகுமிடத்தில் போய் நீசமாகிவிடும். என்ன சொல்ல? இதில் விஷயம் என்னவென்றால், இவர்கள் உருப்படாத விஷயங்களை எண்ணு வார்கள். அதுவும் பலிலிக்காது. இதுபோன்று புதன் நீசமான விருச்சிகத்தாரை நாளடைவில் சுற்றியுள்ளவர்கள், "இவன் மண்டையில் தினுசு தினுசாக விளங்காத யோசனை வருது பாரு!' என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். மிதுனத்தில் புதன் ஆட்சியாகி அமர்ந்தாலும் அதுவும் ஒன்றும் விசேஷமில்லை. புதன் நீசமான விருச்சிகத்தார், புதன் கிழமை, நவகிரகங்களில் புதன் பகவானை வணங்கவேண்டும். படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கிக்கொடுங்கள். ஆன்மிகப் புத்தகங்களை விநியோகம் செய்யலாம். நிறைய மரங்கள், செடிகள் வளர உதவுங்கள். பச்சை நிற இலை துளிர் விடும்போது புதன் சம்பந்தமான கோளாறுகள் விலகும். புதன் நீசம் பெற்ற விருச்சிகத்தார் திருவெண்காடு, மதுரை போன்ற தலங்களுக்குச் சென்று சேவிக்கவும். தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94449 61845

bala261018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe