Advertisment
/idhalgal/balajothidam/kuperavastu

ப்பார்ட்மென்ட்ஸ் என்பது இப்போதுதான் வந்ததுபோல நமக்குத் தெரியும். 11-ஆம் நூற்றாண்டில் தாரா நகரையாண்ட போஜமன்னர் வைத்தியம், வேதாந்தம், இலக்கணம் போன்ற அனைத்துக் கலைகளிலும் சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் எழுதிய "சமரங்கண சூத்ரதார' என்ற நூலில் ஒரு வீடு (ஏக சாலா) எத்தனை வகையாக அமைக்கலாம் என்றும், இரண்டு அடுக்கு வீடுகள்முதல் எட்டடுக்கு வீடுகள்வரை ஒரு மனையில் எப்படி அமைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏக சாலா, த்வி சாலா, த்ரிசாலா, சதுஸ் சாலா, பஞ்ச சாலா, ஷட் சாலா என பல அடுக்கு வீடுகள் எப்படி நிர்மாணிப்பது என 11-ஆம் நூற்றாண்டிலேயே சொல்லப்பட்டுள்ளது. வாஸ்து என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. அறிவியல்பூர்வமானது.

Advertisment

கடந்த வாரங்களில் மனை அமைப்பு, நால்வகை மனைகள், சுற்றுச்சுவர், கிணறு அமைத்தல்,

ப்பார்ட்மென்ட்ஸ் என்பது இப்போதுதான் வந்ததுபோல நமக்குத் தெரியும். 11-ஆம் நூற்றாண்டில் தாரா நகரையாண்ட போஜமன்னர் வைத்தியம், வேதாந்தம், இலக்கணம் போன்ற அனைத்துக் கலைகளிலும் சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் எழுதிய "சமரங்கண சூத்ரதார' என்ற நூலில் ஒரு வீடு (ஏக சாலா) எத்தனை வகையாக அமைக்கலாம் என்றும், இரண்டு அடுக்கு வீடுகள்முதல் எட்டடுக்கு வீடுகள்வரை ஒரு மனையில் எப்படி அமைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏக சாலா, த்வி சாலா, த்ரிசாலா, சதுஸ் சாலா, பஞ்ச சாலா, ஷட் சாலா என பல அடுக்கு வீடுகள் எப்படி நிர்மாணிப்பது என 11-ஆம் நூற்றாண்டிலேயே சொல்லப்பட்டுள்ளது. வாஸ்து என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. அறிவியல்பூர்வமானது.

Advertisment

கடந்த வாரங்களில் மனை அமைப்பு, நால்வகை மனைகள், சுற்றுச்சுவர், கிணறு அமைத்தல், மனையின் மூலை குறைவுபடுதல், வீட்டுச்சுவர், போர்டிகோ, மாடிப்படிகள் அமைப்பது குறித்து கண்டோம். இனி செப்டிக் டேங்க் எங்கு அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

"செப்டிக் டேங்க் என்பது இக்காலத்தில்தானே- ரிஷிகள் காலத்தில் ஏது செப்டிக் டேங்க்?' என கேள்வி எழலாம். அக்காலத்தில் எருக்குழிகள் எங்கெங்கு அமைக்கலாம் என மனை நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதுபோன்ற இடங்களில்தான் செப்டிக் டேங்க் அமைப்பது பற்றி தற்போது வெளிவரும் மனை நூல்களில் குறிப்பிடப்படுகிறது.

Advertisment

perumalவீடு கட்டும்போது செப்டிக் டேங்க் கட்டக்கூடாது. ஒட்டு முடிந்த பின்னர் செப்டிக் டேங்க் அமைப்பது நல்லது. வீடு ஆரம்பிக்கும்போதே சிலநேரம் வீட்டையொட்டி கட்ட வேண்டியிருக்கும். பில்லரை ஒட்டி செப்டிக் டேங்க் அமைக்கவேண்டி இருக்கும். அதுபோன்ற நேரத்தில் செப்டிக் டேங்க் கட்டிவிட்டு மணல்கொண்டு மூடிவிடவேண்டும். வீடு ஒட்டி பூச ஆரம்பிக்கும்போது மணல்மூடிய செப்டிக் டேங்கை சரிசெய்து கொள்ளலாம்.

சில வீடுகள் முடிக்க முடியாமல் இருப்பதற்கும், செங்கற்களால் கட்டி நின்றுபோவதற்கும், நினைவுத்தூண்போல் கட்டிமுடிக்க முடியாமல் இருப்பதற்கும் செப்டிக் டேங்கை முன்கூட்டியே அமைத்ததும் ஒரு காரணமாகும். முடிந்தவரை செப்டிக் டேங்க் வீடு ஒட்டியபின் கட்டுவதே நற்பலனை அளிக்கும்.

வீட்டிற்கு நேர் வடக்கு அல்லது வடமேற்குப் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்கலாம்.

வடமேற்கில் அமைக்கும்போது கவனமாக அமைக்கவேண்டும். வடக்குச் சுவர் 27 அடி இருந்தால் அதை நான்கு பங்காகப் பிரித்து, வடமேற்கிலிருந்து ஆறு அடி விட்டு செப்டிக் டேங்க் அமைக்க வேண்டும்.வடமேற்கு மூலையில் செப்டிக் டேங்க் அமைக்கக்கூடாது.

வடமேற்கு மூலையை வாயுமூலை எனவும் சந்திரன் திசை எனவும் மனை நூல்கள் தெரிவிக்கின்றன. செப்டிக் டேங்க் அமைக்கும்போது மேற்கண்டவாறு வடமேற்கில் அமைக்காமல் சற்று தள்ளி அமைக்கவேண்டும்.

வீட்டிற்கு வடக்கில் செப்டிக் டேங்க் அமைக்கலாம். ஆனால் வடகிழக்கில் அமைக்கக்கூடாது.

வடகிழக்கு மூலையை குருதிசை என்பர்.

அம்மூலையில் செப்டிக் டேங்க் அமைத்தால் மனநலம் பாதிக்கும். வீட்டிற்கு கிழக்கு திசை இந்திரன் திசையாகும். அந்தத் திசையில் செப்டிக் டேங்க் அமைக்கலாம்.

தென்கிழக்கில் செப்டிக் டேங்க் அமைக்கக்கூடாது. தென்கிழக்கு மூலையில் செப்டிக் டேங்க் அமைத்தால், (அக்னி மூலை பெண்கள் சார்ந்தது. )

அவற்றில் குழிபோன்று இருந்து கழிவுகள் இருந்தால் பெண்களை பாதிக்கும். சுக்கிரன் திசையில் செப்டிக் டேங்க் அமைத்தால் பெண்கள் உடல்நிலை பாதிக்கும்.

தெற்கு திசையை எமன் திசை என்பர். அந்த திசையில் செப்டிக் டேங்க் அமைத்தால் எமனை நேரடியாக அழைப்பது போலாகும். வீட்டிற்கு தென்மேற்கு திசையில் செப்டிக் டேங்க் அமைப்பது ராகு திசையில் அமைப்பது போலாகும்.

அந்த திசையில் அமைத்தால் உடல்நலம் பாதிக்கும். அறுவை சிகிச்சை நடக்கும். சிலருக்கு திடீர் உயிரிழப்புகளும் ஏற்படலாம். தெற்கு சார்ந்த வீட்டின் தென்மேற்கு மூலையில் ராகு திசையில் செப்டிக் டேங்க் இருந்தால் பெண்களுக்கும், மேற்கு சார்ந்த தென்மேற்கு மூலையின் ராகு திசையில் செப்டிக் டேங்க் இருந்தால் ஆண்களுக்கும் உடல்நிலை பாதிக்கும். சிலருக்கு திடீர் விபத்துகளால் இறப்பும் சம்பவிக்கும். மேற்கு திசை வருணன் திசை- செப்டிக் டேங்க் அமைக்கக்கூடாது.

செப்டிக் டேங்க் அமைப்பதில் கவனம் தேவை.

ஒருசில அடிகள் தவறாக அமைத்தாலும் பாதிப்பு ஏற்படும்.

(தொடரும்)

செல்: 94434 80585

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe