விந்தியமலையில் இருந்து கிருஷ்ணா நதிவரை மயன் வாஸ்து கடைப்பிடிக்கப்பட்டது. விந்தியமலைக்கு வடக்கே காஸ்யப வாஸ்து கடைப்பிடிக்கப்பட்டது. திராவிட நாடுகளில் பிருகு வாஸ்து கடைப்பிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே நமது ரிஷிகள் பல நூறு ஆண்டுகள் தவமிருந்து கண்டுபிடித்தது வாஸ்து சாஸ்திரம். வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி ஆகியவற்றை வெளிநாடுகள் காப்புரிமை பெற்றுள்ளன. வேதம், ஆயுர்வேதம், காயத்ரி மந்திரம் உட்பட 40-க்கும் மேற்பட்ட நமது கலைகளை வெளிநாடுகள் காப்புரிமை பெற்றுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தை ஜெர்மன் நாடு காப்புரிமை பெற்றுள்ளது. நமது கலைகளையெல்லாம் வெளிநாடுகள் காப்புரிமை பெறுவது வேதனையான விஷயமாக உள்ளது.

Advertisment

கடந்த வாரங்களில் அடிப்படை வாஸ்துக் குறிப்புகள் பலவற்றைக் கண்டோம். அடுத்து கார்ஷெட், துளசிமாடம், மாட்டுத் தொழுவம், திண்ணை அமைத்தல் குறித்துப் பார்ப்போம்.

வாஸ்துப்படி அமைத்த வீட்டில் நோய்நொடி இல்லாமல் நாம் வாழ துளசிமாடம் அவசியம். துளசிச் செடி எந்த இடத்தில் வளர்ந்திருக்கிறதோ, அங்கே மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்வதாக பத்மபுராணம் சொல்கிறது. துளசிமாடம் தென்மேற்கில் கட்டவேண்டும். மாட்டுத் தொழுவத்திற்கு வடமேற்கு மூலையில் எருக்குழி அமைக்கவேண்டும். வேறு எந்த திசைகளிலும் எருக்குழி அமைக்க வேண்டாம். முடியாத நிலையில் வீட்டின் வடக்கில் அமைக்கலாம். வைக்கோல்போர் வீட்டின் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம்.

kuberavastu

Advertisment

கார்ஷெட் வடக்கு சரிவுடன் அல்லது கிழக்கு சரிவுடன் அமைக்கலாம். கார்ஷெட் தென்மேற்கு மூலையில் வீட்டை ஒட்டாமல் அமைக்கவேண்டும். தென்மேற்கில் அமைக்கப்படும் கார்ஷெட் வீடுபோன்ற அமைப்பில்கூட இருக்கலாம். வீட்டின் தரைத்தளத்தைவிட உயரமாக அமைத்து, வடக்கு மற்றும் கிழக்கு சரிவுடன் அமைக்கலாம். தென்கிழக்கில் அமைக்க வேண்டியிருந்தால், வீட்டின் தரைத்தளத்தைவிட உயரமாகாமல் அமைக்கவேண்டும். வடக்கு அல்லது கிழக்கு சரிவுடன் வீட்டை ஒட்டாமல் கார்ஷெட் அமைக்கலாம். தென்கிழக்கில் அமைக்கப்படும் கார்ஷெட்டும் வீடுபோன்ற அமைப்பில் கட்டலாம். ஆனால் வடமேற்கில் கார்ஷெட் அமைத்தால் நான்கு கால்கள் மட்டுமே இருக்கவேண்டும். வடக்கு அல்லது கிழக்கு சரிவுடன் கூரை அமைத்து கார்ஷெட் அமைக்கலாம். ஆனால் வீட்டின் தரைத்தளத்தைவிட மிகக்குறைந்த அளவு உயரத்தில் தளம் அமையவேண்டும். வீடு போன்று வடமேற்கு மூலையான சந்திரன் திசையில் அமைக்கக்கூடாது.

தெற்குப் பார்த்த வீடுகளில் வீட்டின் முன்புறம் வலுவான திண்ணை அமைக்கலாம். தெற்குதிசை எமன் திசையாகும். அந்த திசையில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் வீட்டின் தரைத்தளத்தைவிட உயரமாக திண்ணைகள் அமைத்து வீடுகட்டலாம். எமன் திசையில் திண்ணை அமைத்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம். கடன் வந்துசேராது. எதிரிகள் பலமிழப்பர். தெற்கு திசை பார்த்த வீடுகளில் திண்ணைகள் அமைத்து வீடுகட்டினால் வீடும் கம்பீரமாக இருக்கும். இடப்பிரச்சினை மற்றும் நாகரிகம் காரணமாக இப்போதுள்ள வீடுகளில் திண்ணை அமைப்பதில்லை. ஒருசிலருக்கு படுக்கையறையில் (தென்மேற்கு படுக்கை அறையில்) திண்ணை போன்ற அமைப்பைக் கட்டி அதில் தூங்கும் பழக்கம் உள்ளது. மேற்குப் பார்த்த வீடுகளிலும் திண்ணைகள் அமைக்கலாம்.

ஆனால் வடக்கு, கிழக்குப் பார்த்த வீடுகளில் திண்ணைகள் போன்ற அமைப்பு கூடாது. வடகிழக்கு குரு திசையாகும். அங்கு திண்ணை அமைத்தால் குரு திசை பாதிக்கும். வருமானத்தடை உண்டாகும். மேற்கு, தெற்குப் பார்த்த வீடுகளில் திண்ணைகள் கட்டி நோயின்றி வாழ்வோம்.

(தொடரும்)

செல்: 94434 80585