Advertisment

கோடிகளைக் குவிக்கும் குபேர ஜாதக பூஜை சூட்சமம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/kupera-jataka-pooja-accumulates-crores-k-kumara-sivacharya

ணவசதி இல்லாதவர்களும், பொருளா தாரத்தில் பலவீனமாக உள்ளவர்களும், எப்படி யாவது அனைவரும் பாராட்டும்படி தொழிலதிபர் ஆகிவிடவேண்டுமென்று முயற்சிசெய்து, வங்கியில் கடன் வாங்கி ஒரு தொழிலைத் தொடங்கிவிடுகின்றனர்.

Advertisment

நாள், நட்சத்திரம் பார்த்து வாடகைக்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கம்பெனியைத் தொடங்கினால் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக ஓடுகிறது. அடுத்துவரும் மாதங்களில் லாபம் கிடைக்காமல் நட்டம் வந்துவிடுகிறது. சுபநாளில் தொடங்கி ஒரு சுபவேளையில் மூடுவதற்கா கம்பெனி தொடங்குகிறோம்? தன் பெண்ணின் திருமணத்திற்கு ஒரு ஆண்மகனைத் தேர்ந்தெடுக்கப் பல ஜாதகங் களைப் புரட்டிப் பார்க்கும் தந்தை, தான் தொடங்க வுள்ள தொழில் வெற்றிகரமாக நடந்து லாபமீட்ட தன் ஜாதகத்தில் கிரக நிலைகளை ஆராய்ந்து பரிகாரம் தேட மறந்து விடுகிறார். விதி விளையாடி விடுகிறது. இதற்கு அவரவர் ஜனன ஜாதகங் களிலுள்ள விசேஷ யோகங்களை அறிந்து செயல்பட வேண்டும்.

Advertisment

dd

ஒருவருக்கு தொடக்க வயதிலேயே யோக வாழ்க்கை கூடுகிறது. சிலருக்கு அறுபது வயது வரை சுமாரான வாழ்க்கை நிலைத்துப் பழகி விடுகிறது.

ஐந்து விதிகள் கூறும் உண்மை ஒரு நாள் என்பது ஐந்து அம்சங் களோடு வந்து செல்கிறது.

திதி- இதை சரியாகக் கணித்துப் பயன்படுத்தினால் தலைவிதியையே நல்லதாக மாற்றிவிடும்.

யோகம்- தேகத்திற்கு சக்தி ஊட்டக் கூடியது. நல்ல வளர்ச்சியை ஏற்படுத்த உதவுகிறது. 27 வகையில் வருகிறது.

வாரம்- வரம் தருகிற நோக்கில் தினமும் சூரியனால் மாற்றி தரப் படுகிறது. கிழமை என்ற பெயரில் வந்து போகிறது.

கரணம்- "கரணாக் காரிய சித்தி' என்பது ஜோதிட ரகசியம். இதைத் தவறாகக் கணித்துத் தொழில் தொடங் கினால் குட்டிக்கரணம் போட்டு விழவேண்டியதுதான். பதினோரு கரணங்கள் நம்மைச் சுற்றிவருகின்றன.

நட்சத்திரம்- ஒருவரது வாழ்க்கையை பிரகாச மாக மின்னவைப்பதற்கு இது உதவுகிறது. பிறக்கும் போது உள்ள நட்சத்திரத்தைப் பொருத்து வாழ்க்கை ஒளிபொருத்தியதாக அமைந்து

ணவசதி இல்லாதவர்களும், பொருளா தாரத்தில் பலவீனமாக உள்ளவர்களும், எப்படி யாவது அனைவரும் பாராட்டும்படி தொழிலதிபர் ஆகிவிடவேண்டுமென்று முயற்சிசெய்து, வங்கியில் கடன் வாங்கி ஒரு தொழிலைத் தொடங்கிவிடுகின்றனர்.

Advertisment

நாள், நட்சத்திரம் பார்த்து வாடகைக்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கம்பெனியைத் தொடங்கினால் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக ஓடுகிறது. அடுத்துவரும் மாதங்களில் லாபம் கிடைக்காமல் நட்டம் வந்துவிடுகிறது. சுபநாளில் தொடங்கி ஒரு சுபவேளையில் மூடுவதற்கா கம்பெனி தொடங்குகிறோம்? தன் பெண்ணின் திருமணத்திற்கு ஒரு ஆண்மகனைத் தேர்ந்தெடுக்கப் பல ஜாதகங் களைப் புரட்டிப் பார்க்கும் தந்தை, தான் தொடங்க வுள்ள தொழில் வெற்றிகரமாக நடந்து லாபமீட்ட தன் ஜாதகத்தில் கிரக நிலைகளை ஆராய்ந்து பரிகாரம் தேட மறந்து விடுகிறார். விதி விளையாடி விடுகிறது. இதற்கு அவரவர் ஜனன ஜாதகங் களிலுள்ள விசேஷ யோகங்களை அறிந்து செயல்பட வேண்டும்.

Advertisment

dd

ஒருவருக்கு தொடக்க வயதிலேயே யோக வாழ்க்கை கூடுகிறது. சிலருக்கு அறுபது வயது வரை சுமாரான வாழ்க்கை நிலைத்துப் பழகி விடுகிறது.

ஐந்து விதிகள் கூறும் உண்மை ஒரு நாள் என்பது ஐந்து அம்சங் களோடு வந்து செல்கிறது.

திதி- இதை சரியாகக் கணித்துப் பயன்படுத்தினால் தலைவிதியையே நல்லதாக மாற்றிவிடும்.

யோகம்- தேகத்திற்கு சக்தி ஊட்டக் கூடியது. நல்ல வளர்ச்சியை ஏற்படுத்த உதவுகிறது. 27 வகையில் வருகிறது.

வாரம்- வரம் தருகிற நோக்கில் தினமும் சூரியனால் மாற்றி தரப் படுகிறது. கிழமை என்ற பெயரில் வந்து போகிறது.

கரணம்- "கரணாக் காரிய சித்தி' என்பது ஜோதிட ரகசியம். இதைத் தவறாகக் கணித்துத் தொழில் தொடங் கினால் குட்டிக்கரணம் போட்டு விழவேண்டியதுதான். பதினோரு கரணங்கள் நம்மைச் சுற்றிவருகின்றன.

நட்சத்திரம்- ஒருவரது வாழ்க்கையை பிரகாச மாக மின்னவைப்பதற்கு இது உதவுகிறது. பிறக்கும் போது உள்ள நட்சத்திரத்தைப் பொருத்து வாழ்க்கை ஒளிபொருத்தியதாக அமைந்துவிடும். நல்ல சுப நட்சத்திரம் பார்த்துத் தொழில், வியாபாரம் தொடங்குவதால் ஒருவரது வாழ்க்கை வானில் தோன்றும் நட்சத்திரத்திற்கு ஒப்பாக உயர்நிலையில் அமையும்.

இந்த ஐந்து பஞ்சாங்க விதிகளைக் கணிப்பதே புரியாத ஒருவகை தந்திரம்தான். நாளைக் கணிக்கும் முறையை ஜக இலக்கணம் என்பர் சான்றோர். உதாரணமாக, ஒரு முகூர்த்தத்தைக் கனிப்பதாக வைத்துக்கொண்டால், நாளின் எல்லா காரணி களையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்கிறோம்.

அதேபோல் நாம் பணபலம் உடையவர்களாக, கோடீஸ்வர யோகம் பெற்றவர்களாக ஆவதற்கு ஜனன ஜாதகத்தில் தனம் ஈர்க்கும் குபேர யோகம் பெற்றிருக்கவேண்டும் என்பது, கிரகநிலை ஆய்வுசெய்த ஜோதிட ஆராய்ச்சியாளர்களின் வாதமாக இருக்கிறது.

குபேர ஜாதக யோகம்

எல்லா குடும்பங்களிலும் காலமும் நேரமும் சிலசமயங்களில் சரியாக அமையாதபோதுதான் கஷ்டங்கள் வருகின்றன. அதிலும் பொருளாதார நெருக்கடி, சொல்லமுடியாத வறுமை, கடன்சுமை வந்து வாட்டுகிறது. காரணம் நமது ஜாதகங்களில் அமையும் நவநாயகர்களே என்று நம்பிக்கை கொள்கிறோம்.

அவ்வாறு பணக்கஷ்டம் வரும் காலகட்டங்களில் குபேரனின் ஜாதகத்தை 12 ராசிகளுக்கு ஏற்றபடி வண்ணங்களில் எழுதி பூஜையறையில் வைத்து வணங்கிவர, ஆச்சரியப்படும்படியான பணவரவு உண்டாகும் என்பது உண்மை. நமது ராசிக்கேற்ற நிறங்களே நமது வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வண்ணங்கள் புறஊதாக் கதிர்களாக நம் விரல் நுனியிலிருந்து வருவதாக ஆய்வர்கள் கூறியுள்ளனர்.

வண்ண ஜாதகம் எழுதும் விதி!

கைகளால் வரையப்பட்ட லட்சுமி குபேர ஜாதகத்தைப் பல ஜோதிடர்கள், பூஜகர்கள் பூஜை யறையில் வைத்து, பலவகை மந்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் பலன் சுமாராகவே வருகிறது. வெற்றிதரும் குபேரன் ஜாதகத்தை எழுத சரியான விதிமுறை அறிவோம்.

பௌர்ணமி, வெள்ளி, வியாழன் மாலை 5.00-8.00 மணிவரையுள்ள காலங்கள் பொதுவாக லட்சுமி யோகம் தரும் என்பார்கள். அவற்றில் வியாழன் மாலை 5.00-8.00 மணி காலகட்டத்தில் குபேரன் ஜனன ஜாதகத்தை மஞ்சள், பொன்நிறம், வெண்மை நிறம்கொண்ட அட்டை களில் பேனாவால் நீல மை கொண்டு எழுதவேண்டும். குபேர காயத்திரியுடன் குபேர சிந்தாமணி மந்திரம் ஜெபித்துக் கொண்டு எழுதலாம்.

இப்படி குபேரனது ஜனன ஜாதகத்தைத் தனது ராசிக்கான நிறத்தில் எழுதி தனது கட்டைப் பையிலும், வேலைக்கான ஃபைலிலும் வைத்துக்கொண்டு தன் வேலையில் ஈடுபட்ட, கனடா தமிழருக்கு பல மில்லியன்கள் ஜாக்பாட் அதிர்ஷ்டப் பரிசாகக் கிடைத்துவிட்டது. இந்தப் பேரதிர்ஷ்டம் எப்படி வந்தது என்று கேட்டதற்கு, வில்லியம் ஹேமன் என்ற அந்த 32 வயது இளைஞர், தன் ஜாதகத்தையும் குபேரன் ஜாதகக் கட்டத்தையும் காட்டி, துள்ளிக் குதித்தார். அத்துடன் பணபலம் மிக்க நாடான அமெரிக்காவின் கணினிமூலம் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் ஜாதகக் கட்டத்தையும் நம்பிக்கையோடு தன்னிடம் வைத்துக்கொண்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் ஜனித்த ஜாதகங்கள் அவயோகங் களைத் தரும்போது பிறரது யோக ஜாதகங்கள் இணைந்தால் அது விரைவில் யோகங்களைப் பெற்றுவிடுகிறது.

12 ராசிகளுக்கு குபேர ஜாதக வண்ணங்கள்

மேஷம்- பச்சை, நீலம், சிவப்பு.

ரிஷபம்- ஊதா, வெளிர்நீலம், பாசி.

மிதுனம்- நீலம், மஞ்சள், ரோஜா.

கடகம்- பொன்நிறம், வெளிர்நீலம், இளஞ்சிவப்பு.

சிம்மம்- மஞ்சள், ரோஜா, கலப்பு.

கன்னி- நீலம், பொன்நிறம், கரும்பச்சை.

துலாம்- பவழ நிறம், கரும்பச்சை, நீலம்.

விருச்சிகம்- பொன்நிறம், பச்சை, ஊதா.

தனுசு- வெளிர்நீலம், சிவப்பு, கலப்பு.

மகரம்- இளம்பச்சை, மஞ்சள், கருமை.

கும்பம்- நீலம், கருஞ்சிவப்பு, பொடி நிறம்.

மீனம்- சிவப்பு, வான்நீலம், கலப்பு.

முதல் நிறம் வெளிக் கட்டத்தையும், இரண்டாம் நிறம் எழுத்தையும், மூன்றாவது நிறம் ஜாதகக் கட்டத்தையும் குறிக்கிறது.

"ஸ்ரீகுபேரன் ஜனன ஜாதகம்' என தலைப்பில தொடங்கி, "திரேதாயுகம் 5064-ஆம் ஆண்டு, ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசி 8, மங்கள வாரம் 27 நாழிகை 42 1/2 வினாடிக்கு பூராட நட்சத்திரம், மீன லக்னத்தில் ஸ்ரீ குபேரன் சுப ஜனனம்' என்ற வாக்கியத்தை இரண்டாவது நிறத்திலும், ஜாதகக் கட்டத்தை மூன்றாவதாக உள்ள நிறத்திலும் எழுதவேண்டும். மேலும் சில அதிர்ஷ்ட யோகக் குறியீடுகளை யும் நான்கு மூலைகளிலும் இடவேண்டும்.

குபேரனை அறிந்து அழைப்போம்

பிரம்மதேவனின் மகனான புலஸ்திய மகரிஷியின் மகன் விவஸ்வாரா. இவரது மகன்தான் நிதிகளது அதிபன் குபேரன். இலங்கை வேந்தன் இராவணன் குபேரனுக்கு மாற்றான் தாய் மகனாவார். புலஸ்திய மகரிஷி, "தன் பிள்ளைவழிப் பேரனாகிய குபேரனை மன்னரைப்போல மரியாதை கொடுத்து வழிபடுவோர் இந்தக் கலியுகத்தில் செல்வச் செழிப்புடன் விளங்குவார்கள்' என்ற ரகசியத்தைச் சொல்லிச் சென்றுள்ளார். கலசம் வைத்து நவநிதிகளோடு செய்யப்படும் பூஜையிலிருந்து ஜாதக வழிபாட்டு முறை சற்று வித்தியாசமானது.

வரலட்சுமி விரதத்தன்று லட்சுமியை வீட்டுக்கு அழைப்பதுபோல, வீட்டிலுள்ள தனியறையில், தெற்கிலிருந்து பார்க்கும்படியாக வடக்கு திசையிலுள்ள அலமாரியில் "ஸ்வாகதம்... ஸ்வாகதம் ஸ்ரீலட்சுமி குபேரா!' என்று மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் எழுதி வைக்கவேண்டும்.

காக்கி என்ற மஞ்சளும் கருநிறமும் கலந்த உறையில் "ஸ்ரீஐஸ்வர்யம் லட்சுமி கடாட்சம்' என்ற வாசங்களை எழுதி, அதனுள் பூஜைசெய்த குபேரன் ஜாதகத்தை வைத்து தென்முகம் பார்க்கும்படி வைக்க வேண்டும்.

குபேரன் அழைப்பு என்ற நிகழ்வு நடந்து மூன்று மாதங்கள் வரை வீட்டில் கணவன்- மனைவிக்குள் சண்டையோ, சச்சரவோ, பிரச்சினைகளோ செய்யக்கூடாது. எதிர்பாராதவிதமாக இறப்பு, தீட்டுகள் வந்துவிட்டால் தொடங்கிய பூஜையை விட்டுவிட்டு, 32 நாட்கள் கழிந்தபிறகு மீண்டும் விநாயகர், குரு வழி பாட்டுடன் தொடங்குதல் வேண்டும்.

வீட்டுத் தோட்டம், மாடியறையின் வெளிப்பகுதியில் வில்வமரம் (மணி பிளான்ட்), கல்லால மரம், லட்சுமி வாசம் செய்யும் விருட்சம் நெல்லி மரம், துளசிச்செடி, பஞ்ச வில்வங்களை ஒட்டு இல்லாமல் வளர்த்துவர, குபேரன் வந்து நிரந்தரமாக தங்குமிடமாக மாறிவிடும்.

தினமும் மண் அகலில் பசு நெய்விட்டு சந்தனம், குங்குமம் இட்டு, தீபமேற்றி, ஊதுபத்தி ஏற்றி, சிவப்பு மலர் வைத்து, லட்சுமி குபேரனை ஈர்க்கும் குபேர சிந்தாமணி துதிபோல் 108 ஆவர்த்தி முறை படித்து ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

சௌபாக்கியக் கோப்புகள்

நாம் விரும்பும் ஸ்ரீ சௌபாக்கியம், கடாட்சம், ஐஸ்வர்யம், சுப்ரபாதம் என்ற வாசகங்கள் குபேரனுக்குப் பிடித்தமாக உள்ளது. அதில் உங்கள் செயல் வெற்றிபெற, வீடுகட்ட, கம்பெனி தொடங்க, கடன் அடைய, வெளிநாட்டு வேலை, தொழில் தொடர்பு சம்பந்தமான கோப்புகளில் (ஃபைல்), ஒரு தாளை நடுவே வைத்து முன் அட்டையில் வலம்புரி கணபதி, சௌபாக்கிய லட்சுமி, குபேரன் ஜாதகம், அதில் பொருள் ஈர்க்கின்ற சிந்தாமணி மந்திரவரிகளைத் தங்கள் ராசி வண்ணத்தில் எழுதி, இந்த உலகத்தில் பொருளாதார பலம்கொண்ட பில்கேட்ஸ் ஜாதகத்தை பின்னம் இல்லாமல் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும். குபேரன் மூத்திரையை பசுமை நிறத்தில் வரைந்து ஒட்டவேண்டும்.

தேவர் கூட்டம் கூறிய செல்வப்பேறு அருளும் மகாலட்சுமி துதியான "ஓம் நமோ லட்சுமியை' என்று தொடங்கி, "ரமணீ மண்டலோத்தமா' என்று முடிவது வரையுள்ள பத்து வரிகளை (இரண்டு அனுவாகப் பகுதி) எழுதி வைத்துக் கொள்ளவேண்டும். இந்தத் துதி குபேரனுக்குப் பிரியமானது; மகரிஷிகள் துதித்தது.

ஜாதக விசேஷமும் குபேரன் வாசமும்

குபேரன் ஜாதகத்தை வழிபடுவது சரி; ஏன் பில்கேட்ஸ் ஜாதகக் கட்டத்தை கோப்பில் வைத்து சிறப்பிக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பில்கேட்ஸ் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளைப் பார்த்தால் புரிந்துவிடும். குரு சுகஸ்தானத் தில் சூரியன் வீட்டிலும், ராஜ கிரகம் சூரியன், சுக்கிரன், சனி சேர்ந்தும், புகழ் தரும் சந்திரன் குரு வீட்டில் லாப ஸ்தானத்தி லும் அமர்ந்திருக்கக் காணலாம்.

சனி தசையில் உத்திரட்டாதியில் பிறந்த உலகக் கோடீஸ்வரர். இவரது ஜாதகம் இணைக்கப் படும்போது நமது ஜாதகமும் பலமாகி ஜென்ம லாபம் கிடைக் கிறது.

எல்லா இல்லங்களுக்கும் குபேரன் வாசம்செய்து செழிப்பு உண்டாகட்டும்.

செல்: 95511 84326

bala011124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe