மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் அவசிய மானது. இளம்வயதில் படிப்பை முடித்த பின்னர் வேலைக்குச் சென்றோ, சொந்த தொழில், வியாபாரம் செய்தோ பணம் ஈட்டுகிறார்கள். வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க படிப்பும் வேலைத்திறமையும் போதுமானது.
அதேசமயம் வியாபாரம், தொழில் என்றால் பணமுதலீடு, உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை தேவைப்படும். தவிரவும் லாப- நஷ்டங்களை எதிர்கொள்ளும் மனப் பக்குவமும், கடும்போட்டிகளை சமாளிக்கும் சாமர்த்தியமும் வேண்டும். வியாபாரத்தில் வெற்றிபெற அதிர்ஷ்டமும் கைகூடி வரவேண்டும் என்பதே பொது நம்பிக்கை. இதனை ஜோதிட சாஸ்திரம் சுட்டிக் காட்டவல்லது. எதையும் நேரம் காலம் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதே முதுமொழி. இது தொழில், வியாபாரத்திற்கு அதிகம் பொருந்தும்.
புது முயற்சிகளை மேற்கொள்ள அதிர்ஷ்டத் தின் முதல்படியாகக் கருதப்பட வேண்டிய வற்றின் பட்டியல் பின்வருமாறு:
மாதங்கள் (தமிழ்): சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனி மற்றும் புரட்டாசி மாத விஜயதசமி.
திதிகள்: வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, ஏகாதசி, துவாதசி.
நட்சத்திர தினங்கள்: அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, திருவோணம், ரேவதி.
யோகங்கள்: அமிர்தயோகம், சித்தயோகம்.
லக்னம்: சர லக்னங்கள்.
லக்ன சுத்தம்: 4, 8, 12-ஆம் இடங்கள். மேலும் ஜென்ம நட்சத்திர நாள், கிழமை, சந்திராஷ்டம தினம், கரி நாள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். நேரங்களில் ராகு காலம், எமகண்டம் தவிர்க்கப்பட வேண்டியவை.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மேற்கூறிய பரிந்துரைகள் முழுமையாக அனுசரிக்க முடியாமல் மாறுபாடாக அமையவேண்டி வந்தால் கவலைப்படத் தேவையில்லை; அவற்றிற்குரிய பரிகாரங்களையும் தான தருமங்களையும் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
இவற்றுடன் எண்கணித சாஸ்திர அறிவுரைப்படி, ஐந்தாம் எண்ணில் பிறந்து புதன் கிரக ஆதிக்கம் பெற்றவர்கள் வியாபாரத்தில் ஈடுபட அதிக தகுதி படைத்த வர்கள் என்று கருதப்படுகிறது. மேலும் வியாபார நிறுவனத்தின் பெயரும் உரிமையாளரின் பெயரும் பொருத்தமாக அமைவது விசேஷம்.
குபேர எந்திரம், குபேர மந்திரம்
வாஸ்து சாஸ்திரப்படி எட்டுத் திக்கு களிலும் அஷ்டதிக் பாலகர்கள் அமைந்து காவல்புரிகிறார்கள். இவற்றில் வடக்கு திசைக்கு குபேரமூலை என்று பெயர்.
குபேர பகவான் இத்திசையின் அதிபர் ஆவார். ஐஸ்வர்யங்களை அள்ளித் தருபவர் இவரே. எனவே ஒருவர் செல்வநிலையைப் பெற குபேர பூஜை மற்றும் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டியது அவசியம். வியாபாரத்தின் முக்கிய நோக்கம் பொருளீட்டி மேன்மேலும் முன்னேற்றம் அடைவதே. இதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பஞ்சாங்க சுத்தியுள்ள ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை வேளையில் ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை மேற்கொள்வது உத்தமம். வேறு சுபமான நாட்களிலும் இந்த பூஜையைச் செய்யலாம். வடக்கு திக்கில் குபேரனுடைய பிரதிமை அல்லது படத்தை வைத்து பூஜை செய்யலாம். அல்லது தர்ப்பைகளாலான ஒரு கூர்ச்சத்தை வைத்து அதில் குபேரனை ஆவாகனம் செய்து பூஜை செய்யலாம். இத்துடன் மகாலட்சுமி பூஜையும் சேர்த்துச் செய்வதே மரபு.
குபேர மந்திரம்
"ஓம் யட்சாய குபேராய வைஸ்ரவணாய
தன தான்ய அதிபதயே தனதான்யம்
ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா.'
பொன்னையும் பொருளையும் அளிக்கும்படி குபேர பகவானை மனதாரத் துதித்து வேண்டுகிறேன் என்பதே இதன் உட்பொருள்.
குபேர எந்திரம்
எப்படிக் கூட்டினாலும் எண் 72 என்று வருமாறு அமைப்பு பெற்றுள்ளது. மிகமிக அதிர்ஷ்டமானதும் தெய்வாம்சம் கொண்டதுமான எண் 72 என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய எந்திரம் பொறித்த குபேர எந்திரம் கடைகளில் கிடைக்கும்; வாங்கிப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
அல்லது தூய செப்புத் தகட்டில் மேற்கூறிய குபேர மந்திரம் மற்றும் எந்திரம் செய்து கொள்ளலாம். அதற்கு கண்ணாடி பிரேம் போட்டு கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி வைக்கலாம். அதற்கு அனுதினமும் குங்குமம், சந்தனம் அலங்கரித்து, மலர் சாற்றி மேற்கூறிய துதியை உச்சரித்து வணங்கி வரலாம். இதனை அதிக நேரம் தேவைப்படாத எளிய பூஜை முறை எனலாம்.
செல்: 74485 89113