திகாலை எழுந்தவுடன் பசுவையாவது, தனது முகத்தையாவது, வலது உள்ளங்கையையாவது முதலில் பார்க்கவேண்டும்.

Advertisment

வீட்டில் தினமும் காலை- மாலை இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும். நல்லெண்ணெய் தீபமேற்றுவது மிகவும் சிறந்தது. காலையில் முடியாவிட்டால் மாலை நேரமாவது சுவாமி படத்திற்குமுன் தீபமேற்றி வழிபடவேண்டும்.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் தீபமேற்றி அதை வழிபட்டு, மகாலட்சுமியையும் வழிபட்டு வரவேண்டும்.

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மாலையில் ஸ்ரீசத்யநாராயணரை துளசி, செண்பக மலர் கொண்டு அர்ச்சித்து, பால் பாயசம், கல்கண்டு நிவேதனம் செய்து வழிபட செல்வம் பன்மடங்கு பெருகும்.

Advertisment

வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பூ, பழம், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மருதாணி கொடுக்க, பாக்கியங்கள் பெருகும்.

laskhmi

வைரம், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மகாலட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். இதனால் இவற்றைப் பெற்ற பாக்கியசாலிகள், வாழ்நாளில் தாமே அவற்றை உபயோகிக்கவேண்டும். பிள்ளைகளுக்குக்கூட அன்பளிப்பாகக் கொடுக்கக்கூடாது. அவர்களுக்குப் புதிதாக வாங்கித் தரலாம். தான் உபயோகித்தவற்றை தன் காலத்திற்குப் பிறகே வாரிசுகளுக்குச் சென்றடைய வகை செய்யவேண்டும்.

பணவரவு அதிகரிக்க பணப்பெட்டி, அலமாரியை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி அமைக்கவேண்டும்.

வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

வரும் செல்வத்தை மதித்துப் போற்றவேண்டும்; வராத வருமானத்தை எண்ணி ஏங்கக்கூடாது.

வரவு- செலவு கணக்கை முறையாகச் செய்தால் செல்வம் சேரும்.

வாடகை, மளிகை, பால் என்று பலவழிகளில் பணத்தைப் பிறருக்குக் கொடுக்கும்போது தலைப்பகுதியை தம் பக்கம் வைத்துக்கொண்டு "சீக்கிரமே வேறுவழியில் என்னிடம் வந்துசேர்' என்று மனதுக்குள் எண்ணி பிரியாவிடை கொடுத்துத் தரவும்.

ஏற்கெனவே இருக்கும் பணம் தான் புதிய செல்வத்தை ஈர்க்கும். எனவே பர்சில், வங்கியில், பீரோவில் பணவறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தூய்மையற்ற இடத்தில் லட்சுமி தங்கமாட்டாள். எனவே வீடு, அலுவலகம் என்று எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

நாள்தோறும் கீழ்க்காணும் குபேர மந்திரத்தை குறைந்தது ஏழுமுறை உச்சரித்து குபேர தேவனை வணங்கிவர, செல்வம் நிச்சயம் பெருகும்.

"ஓம் யட்சாய குபேராய

வைச்ரவணாய தனதான்ய

அதிபதயே தனதான்யம்

ஸம்ருத்திம்மே தேஹி தாபய

ஸ்வாஹா.'

அல்லது வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து "குபேரரே போற்றி' என்று 108 முறை உச்சரித்து குபேரரை வணங்கிவர செல்வம் குவியும்.

மேலும் சாப்பாட்டிற்கு ருசியான ஊறுகாய் இருந்தால், தரித்திரம் இருக்காது என்றும், கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் விருத்தி அடையும் என்றும் கூறப்படுகிறது.

சுபகாரியம் நல்லபடியாக நிறைவேற...

சுபகாரியம் வளர்பிறை நாட்களில் அமைவது சாலச்சிறந்தது.

சுபகாரிய தினம் அஷ்டமி, நவமி திதிகள் தவிர்த்த சுப திதிகளாக இருத்தல் வேண்டும்.

குறிப்பாக பஞ்சமி திதி மற்றும் திரயோதசி திதி நாட்களில் மேற்கொள்ளப்படும் காரியங்கள் வெகு காலம் நிலைத்து நின்று நற்பலன்களை அளிக்கக்கூடியவை.

சுபகாரிய தினம் சந்திராஷ்டமம் மற்றும் கரிநாளாக இருக்கக்கூடாது.

சுபகாரிய தினம் அமிர்த, சித்தயோகம் நிறைந்ததாக அமைய வேண்டும்.

சுபகாரியம் செய்யும் நேரம் குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஓரைகளில் அமைய வேண்டும். செவ்வாய், சனி ஓரைகள் தவிர்க்கப்பட வேண்டும். ராகு காலம், எமகண்ட நேரங்கள் அமையக்கூடாது.

சுபகாரியத்திற்குச் செல்ல முதலில் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கிச் செல்வதே நல்லது.

சுபகாரியம் தொடங்கும்முன்னரே குலதெய்வம் மற்றும் மூதாதையரை வணங்கிய பிறகே செய்ய வேண்டும்.

செல்: 74485 98113