மனையின் வாஸ்து மண்டலம் எனக்கொண்டு 62 பாகங்களாகப் பிரித்தனர். அந்த 62 பாகங்களில் பூஜையறை, வாயில், படுக்கையறை, சமையலறை, ஹால் அமைப்பு உள்ளிட்டவற்றை எந்த பாகத்தில் அமைக்கலாம் என மனை நூல்கள் தெரிவிக்கின்றன.
ஈசான்யம் சார்ந்த சிகி, திதி, அதிதி, பர்ஜன்யன், ஆபன், ஜயந்தன், ஆயவத் ஸன் ஆகிய பகுதிகள் வளர்ந்தால் பெண்களும் ஆண்களும் புகழ்பெறுவர். திரைப்படத்துறையினர், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இலக்கியத்துறை சார்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் புகழ் மிகமிக அவசியம். இவர்கள் ஏதேனும் ஒரு சிறிய தவறு செய்தால், ஒரே நாளில் பெற்ற புகழை இழந்துவிடுவர். தவறே நிகழ்ந்தாலும், நல்ல பெயரை வீடு அமைப்பின்மூலம் பெற இயலும். மேற்கண்ட ஈசான்யம் சார்ந்த மண்டலங்கள் சரியாக இருந்தால் தொடர்ந்து புகழ்பெற்றுக்கொண்டே இருக்கலாம்.
அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறுவரா என்பதை வீட்டைக் கணித்தாலே கண்டுபிடித்துவிடலாம்.
இனி, வீட்டிற்கு டி.வி ஸ்டேண்ட், செல்ப், கபோர்டு எங்கெங்கு அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
ஹாலில் தெற்குச் சுவர் மற்றும் மேற்குச் சுவரில் செல்ப், கபோர்டு டி.வி ஸ்டேண்ட் அமைக்க வேண்டும். குபேர திசையில் டி.வி ஸ்டேண்ட் அமைத்தால், வடக்குப் பார்த்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். தொடர்ந்து வடக்குப் பார்த்து சாப்பிட்டால் விஷமாகும். எனவே வடக்குப் பார்த்து சாப்பிடுவது கூடாது. மேலும் ஹாலின் சந்திரன் திசையின் அக்னி மூலையில் கபோர்டு, செல்ப், டி.வி ஸ்டேண்ட் அமைக்கலாம். வீட்டின் கிழக்குப் பகுதி இந்திரன் திசையாகும். அந்த திசையில் பாரம் கூடாது. இந்திரன் திசை ஆணுக்குரிய பாகம். குபேர திசை பெண்ணுக்குரிய பாகம். இந்த இரண்டு பாகங்களிலும் கபோர்டு கூடாது.
படுக்கையறைகளிலும் தற்போது ஹால் அமைப்பிற்குக் கூறியதுபோலவே கபோர்டு, செல்ப் அமைக்கலாம். ஹால் அல்லது படுக்கையறையில் உள்ள ஈசானிய பாகத்தில் செல்ப், கபோர்டு ஏதும் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் அம்மூலை குறைவுபட்டு தோஷம் உண்டாகும். பொதுவாக ஏதாவது ஒரு மூலையை வீடுகளின் சுவரை வளர்த்து அந்த இடத்தில் கபோர்டு அமைப்பார்கள். அவ்வாறு அமைப்பதும் தோஷமாகும்.
ஹாலிலில் வருண திசையின் மையத்தில் மட்டும் சுவர் இடத்தை வளர்த்து கபோர்டு அமைக்கலாம்.
எமன் திசையில் மையத்தில் மட்டும் சுவரின் இடத்தை வளர்த்து கபோர்டு அமைக்கலாம். பிள்ளையார் மூலை, தீ மூலை, ஈசான்ய மூலைகளை வளர்த்து கபோர்டு அமைக்கக்கூடாது.
பொதுவாக நாம் குடியிருக்கும் வீடானது நில அருள்பெற்ற வீடாக இருக்கவேண்டும். வீடு சக்தி மிக்கதா, இல்லையா என்பதை வீட்டிலிலிருந்து ஒருசில மணித்துளிகளில் வாஸ்து நிபுணர்களால் அறியமுடியும். சக்திமிக்கதாக இல்லையெனில் அவ்வீட்டில் வசிப்போர் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பர். வீட்டினைத் தாமே மாற்றியமைத்து நற்பலன் பெற முயற்சிப்பது, அரைகுறை வைத்தியர் மருத்துவம் பார்த்தலுக்கு இணையானது.
தொடர்ந்து பத்து வருடங்கள் வசிக்கும் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடைப்பட்டுக்கொண்டே வந்தாலும், தொடர்ந்து வளர்ச்சி குறைந்துகொண்டே இருந்தாலும், உடல்நிலை சரியில்லாமல் போனாலும், விரயச் செலவுகள் தொடர்ந்து இருந்தாலும் வாஸ்துக் குறைபாடே காரணமாகும். பொதுவாக மேஸ்திரி கட்டும் வீடுகளில் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம் மட்டுமே வாஸ்து அமைப்பு இருக்க வாய்ப்புள்ளது. வாஸ்து நிபுணர்களைக் கொண்டு கட்டப்படும் வீடுகளில் 60-லிருந்து 90 சதவிகிதம் வரை வாஸ்துப்படி அமைக்கலாம். இருக்கும் இடத்தைப் பொருத்து இந்த சதவிகிதம் மாறுபடும். நூறு சதவிகிதம் வாஸ்துப்படி வீடுகள் அமைக்கக்கூடாது; அமைக்கவும் முடியாது. அதுபோன்று அமைத்தால் அது கோகிவிலாகிவிடும். ஊழ்வினையை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு சிறு குறை நம் வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும்.
வாஸ்துப்படி வீட்டை அமைத்து நிம்மதியாக வாழ்வோம்.
(தொடரும்)
செல்: 94434 80585