கிருஷ்ண பகவானின் நண்பர் குசேலர் தரித்திரத்தின் கோரப்பிடியில் சிக்கி வாடிக்கொண்டிருந்தபோது, அவருக்கு கிருஷ்ண பகவான் ஆசி வழங்கி, விஸ்வகர்மாவின் மகன் மயனால் வேறொரு வீடு அமைத்துக்கொடுத்தார். அந்த வீடு வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டப்பட்டது.

Advertisment

அவ்வீட்டுக்கு குசேலர் சென்றதும், குபேர வாழ்க்கை பிரகாசித்தது. ஜாதகப்படி கடுமையான பாதிப்புகள் இருந்தாலும் வாஸ்துப்படி வீடு அமைத்துக்கொண்டால் கிரகங்களின் கெடுபலனைத் தடுத்துக்கொள்ளலாம்.

திருமூலர் தமது திருமந்திரத்தில், "இறைவன் ஐந்து பூதங்களைப் படைத்து, ஐந்து யோனிகளைப் படைத்து "சிவாயநம' என்ற அஞ்செழுத்தில் அமர்ந்து நின்றான்' என பாடியுள்ளார். எனவே பஞ்சபூதங்களின் ஆற்றலைக் கொண்டுவரும் வகையில் வீட்டினை அமைத்துக்கொள்ள வேண்டும்.

"மனையது பெற்றுக்கட்டில் வடக்கோடு கிழக்கு நன்றாம்தனமுறும் செல்வம் உண்டாம் தரணியில் இனிது வாழ்வர்அனலுறும் தெற்குமேற்கு அறைந்தனர் ஆகாதென்றுகனமுயர் மயனார் தாமும் கருணையாற் கூறினாரே' என்பது "சில்பரத்தினம்' நூலின் பாடல்.

Advertisment

sivanமயன் கூறியதாகச் சொல்லப்படும் இந்நூலின் பாடலைப் பார்த்தால் வடக்குதிசை, கிழக்குதிசை பார்த்த வீடுகளில் வசிப்போருக்கு பல்வேறு தன தானியங்கள் உண்டு; செல்வங்கள் உண்டு. இவ்வுலகத்தில் இனிது வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வடக்கு வாயில் பெண்களுக்கான வாயிலாகவும், குபேர வாயிலாகவும் உள்ளது. கிழக்கு வாயில் ஆண்களுக்கான வாயிலாக உள்ளது. அமைச்சர்கள், நடிகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் புகழ்பெற விரும்புபவர்கள் கிழக்குப் பார்த்த வாயில்களை அமைத்துக்கொள்ளலாம். காவல்துறை, ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தலைமை ஏற்றுச்செல்வபவர்களுக்கு மேற்கு வாயில் உகந்ததாக இருக்கும். தெற்கு வாயிலை சுபவாயில் என்பர். தெற்குப் பார்த்த வாயில் சரியாக அமைந்தால் திருமணங்கள் விரைவில் நடைபெறும்.

வீட்டு வாயில் அமைக்கும் போது, முதலில் வடக்கு வாயில் அமைக்க முயலவேண்டும். முடியவில்லை எனில் கிழக்கு; அதுவும் இல்லையெனில் மேற்கு; கடைசியாக தெற்கு வாயில் அமைக்கலாம். எல்லா திசைகளும் நல்ல திசைகளே. இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்குப் பார்த்த வாயில் உள்ள வீடுகளில் தோஷம் இருந்தாலும் பாதிப்புகள் இருக்காது. ஆனால் மேற்கு மற்றும் தெற்குப் பார்த்த வாயில் உள்ள வீடுகளில் தவறான அமைப்பு குறைவாக இருந்தாலும் பாதிப்புகள் அதிகம் இருக்கும். எனவே வாஸ்துப்படி மேற்கு மற்றும் தெற்குப் பார்த்த வாயில்களை அமைத்துக்கொண்டால் நல்ல பலன்களைப் பெறலாம்.

கடகம், விருச்சிகம், மீன ராசிக்காரர்களுக்கு கிழக்குப் பார்த்த வாயிலும்; ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்களுக்கு தெற்கு வாயிலும்; மிதுனம், துலாம், கும்பராசிக்காரர்களுக்கு மேற்கு வாயிலும்; மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு வடக்கு வாயிலும் ஏற்றவை என மனைநூல்கள் தெரிவிக்கின்றன. உங்களது ராசி ஒன்றும், பிள்ளைகள் ராசி வேறொன்றுமாக இருக்கும். எந்த ராசி அடிப்படையில் வாயில் அமைப்பது என கேள்வி எழலாம். முடிந்தவரை வடக்குப் பார்த்த வாயில் அல்லது கிழக்குப் பார்த்து அமைக்கலாம். முடியவில்லையெனில் மேற்கு மற்றும் தெற்குப் பார்த்த வாயில் உள்ள வீடுகளை முழுக்க முழுக்க வாஸ்து பார்த்து அமைத்து நிம்மதியாக வாழலாம்.

Advertisment

வாயிலின் அமைப்பு கொண்டே வாழ்க்கை எவ்வாறு இருக்குமென கணிக்கலாம். வாஸ்து சாஸ்திரத்திற்கும், மனையடி சாஸ்திரத்திற்கும் வாயில் அமைப்பதில் சில முரண்பாடுகள் உண்டு. மனையடி சாஸ்திரத்தில் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு வாயில் அமைப்பது கணக்கிடப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. கிரகங்களுக்கும் நமது உடலுக்கும் தொடர்புள்ளது. வீட்டிற்கும் பஞ்சபூதத்திற்கும் தொடர்புள்ளது. எனவே வாஸ்து சாஸ்திர அடிப்படையில் வாயில் அமைப்பதே சரியானதாக இருக்கும்.

வடக்குப் பார்த்த வாயில் அமைக்கும் போது கம்பீரமாக, உயரமாக இருக்கும் வகையில் அமைக்கவேண்டும். வடக்கு குபேர திசை என்பதால் வாயில் உள்கூடு உயரமாக இருக்கவேண்டும். தெற்கு எமன்திசை என்பதால் பின்புற வாயில் சிறிதாக இருக்கவேண்டும். வடக்கு வாயில் மட்டுமே போதுமானது. பின்புற வாயில் தேவையெனில் நேராக அமைத்துக்கொள்ளலாம். வீட்டின் மையத்தில் வாயில் அமைக்கக்கூடாது. வடக்குப் பார்த்த வீட்டின் மையத்தில் வாயில் இருந்தால் லாபமும் நஷ்டமும் மாறிமாறிவரும். வடக்கு வாயில் உள்ள வீடுகள் ஏறுமுகமாக இருக்கவேண்டும்.

வடக்குப் பார்த்த வீடுகளுக்கு வடமேற்கு வாயில் ஆகாது. அது சந்திரன் திசை. அதனால் சஞ்சலமான மனநிலை இருக்கும். எனவே வடக்குப் பார்த்த வீடுகளுக்கு குரு திசையான வடகிழக்கை ஒட்டி வாயில் அமைப்பதே நன்று. இருபத்தேழு அடி அகலமுள்ள வடக்குப் பார்த்த வீடு இருக்குமானால், வடகிழக்கு மூலையிலிருந்து இரு அடி விட்டு வாயில் அமைக்கலாம். வீட்டின் பின்புறம் வாயில் அமைக்க வேண்டுமெனில், வீட்டின் பின்புறம் அக்னி மூலையில் சமையலறை அமைக்க நேரிடும். சமையல் மேடை இரண்டு அடி பயன்படுத்த வேண்டும். எனவே, வடகிழக்கு மூலையிலிருந்து இரண்டேமுக்கால் அடி விட்டு நுழைவு வாயில் அமைக்கவேண்டும்.

பின்புற (தெற்கு) வாயில் தேவையில்லை எனில், வடகிழக்கு மூலையிலிருந்து ஒன்றரை அடி விட்டு அமைப்பது நல்ல பலன் தரும். முன்புற வாயிலும் பின்புற வாயிலும் ஒரே நேராக இருக்க வேண்டும்.

வடக்கு சார்ந்த வீடுகளுக்கு வடகிழக்கு மூலையில் வடக்கு வாயில் அமைத்து, பின்புற வாயில் தெற்கில் அமைப்பது தவறு. தென்மேற்கில் அமைப்பதும் தவறு. வடகிழக்கு வாயிலுக்கு நேராகப் பின்புறம் தென்கிழக்கில் அமைப்பதே சரியானது.

(தொடரும்)

செல்: 94434 80585