பஞ்சபூதங்களின் ஆற்றல் கிடைக்கும் வகையில் வீடுகட்டுவதே வாஸ்து ஆகும். அவ்வாறு வீடு அமைத்தால் இயற்கையையொட்டி அமைத்துள்ளோம் எனப்பொருள். இயற்கைக்கு எதிராக வீடு கட்டினால் கெடுபலன்களும் அதிகமாக இருக்கும்.
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளில் நீர், காற்று ஆகியவற்றின் அடிப்படையில் வாஸ்து கணிக்கின்றனர். பஞ்சபூதங்களில் ஒன்றான நீர், நமது வீட்டின் கிணறு மற்றும் போர், சம்ப் அமைப்போடு தொடர்புடையது. நிலம் நமது வீட்டின் தரையமைப்போடு தொடர்புடையது. காற்று, கதவு, ஜன்னல்கள் அமைப்போடு தொடர்புடையது. நெருப்பு அடுப்பறையோடு தொடர்புடையது. ஆகாயம் நமது வீட்டின் ஹால் அமைப்போடு தொடர்புடையது.
கடந்த வாரங்களில் மனையின் தன்மை, மண் பரிசோதனை, மனையி

கடந்த வாரங்களில் மனையின் தன்மை, மண் பரிசோதனை, மனையின் மூலைமட்டம், மனையின் மேடுபள்ளம் ஆகியவற்றையும், அதன் பலன்களையும் பார்த்தோம். இவ்வாரத்தில் மனை வாங்கியபின் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
மனை வாங்கியவுடன் மூலைமட்டம் பார்க்கவேண்டும். ஒருசிலர், மனை வாங்கியவுடன் அதை ஆக்கிரமிப்பு செய்துவிடுவார்கள் என்றெண்ணி கேட் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்துவிடுவர். அதுபோன்று அமைத்தால் அம்மனை பாழாகும். எப்போது நான்கு பக்கமும் சுவர் அமைத்து கேட் அமைக்கின்றோமோ அப்போதே வீடுகட்ட ஆரம்பிக்க வேண்டும். மனை பாதுகாப்பிற்காக இதுபோன்ற சுற்றுச்சுவர் கட்டக்கூடாது. பாதுகாப்பிற்கு வேண்டுமானால் முள்வேலி அமைத்துக்கொள்ளலாம். ஆனால், நான்கு மூலைகளும் அரை அடி அளவில் இடைவெளிவிட்டு அமைந்திருந்தால் தோஷமில்லை. நான்கு மூலைகளிலும் வேலி இணைந்திருந்தாலும் உடனே நாம் வீடுகட்ட வேண்டும்.
வீடு கட்ட காலதாமதமாகும் நிலை இருந்தால், மேற்கண்டவாறு நான்கு மூலைகளிலும் அரை அடி அளவில் இடைவெளிவிட்டு கம்பிவேலி அமைத்து, பாதுகாப்பிற்கு கேட் அமைக்கலாம்.
வடக்குப் பார்த்த மனைவாங்கி வீடு கட்டுகிறோம் என்றால், வடக்கு முழுவதும் காலியாக விட்டுவிட்டு இதர மூன்று திசைகளிலும் சுற்றுச்சுவர் எழுப்பி அதன்பின் வீடுகட்ட வேண்டும்.
கிழக்குப் பார்த்த மனையாக இருந்தால் கிழக்கு மட்டும் சுவர் அமைக்காமல், மற்ற மூன்று திசைகளிலும் சுற்றுச்சுவர் அமைத்து வீடுகட்டத் தொடங்கலாம்.
மேற்குப் பார்த்த மனையாக இருந்தால் மேற்குப் பகுதி மட்டும் சுவர் அமைக்காமல் மற்ற மூன்று திசைகளிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். மேற்கு திசையில், தென்மேற்கு திசையிலிருந்து மனையின் மையப்பகுதிவரை- அதாவது மேற்குவரை சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும். வடமேற்கு மூலை வழியாகச் சென்று வீடுகட்டத் தொடங்கலாம்.
தெற்குப் பார்த்த மனையாக இருந்தால் தெற்குப் பகுதியை விட்டுவிட்டு மற்ற மூன்று திசைகளிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தெற்கு திசையில் மட்டும், தென்மேற்கு மூலையிலிருந்து தெற்குவரை சுவர் அமைத்து, தென்கிழக்குப் பகுதி வழியாகச் சென்று வீடுகட்ட வேண்டும்.
பொதுவாக சுற்றுச்சுவர் அமைத்தவுடன் வீடுகட்ட ஆரம்பித்துவிட வேண்டும். சுற்றுச்சுவர் கட்டி வருடக்கணக்கில் விட்டுவிட்டு பின் வீடு கட்டுவது தோஷமாகும்.
மனை வாங்கியவுடன் சுற்றுச்சுவர் எழுப்புவது அவசியமாகும். வசதி இல்லாதவர்கள் குறைந்தபட்சம் வேலிகள் அமைக்கவேண்டும். வீடுகட்டி முடிவுற்றதும் கண்டிப்பாக சுற்றுச்சுவர் இருக்கவேண்டும்.
2,000 வருடங்கள் கடந்தும் திருக்கோவில்கள் சிறப்புடன் விளங்குவதற்கு அவற்றின் சுற்றுச்சுவர்கள்தான் காரணமாகும். சுற்றுச்சுவர்கள்தான் தோஷங்களை நீக்குவதாகவுள்ளது. வெளியில் உள்ள தாக்கம், சுவர்கள் மூலம் தடுக்கப்படுகிறது. அதபோல சுற்றுச்சுவர் எழுப்பிய பின்னர் வீடுகட்டுவதால் அவை காலம் கடந்து நிற்கும். வீடுகட்டியபின் சுற்றுச்சுவர் அமைக்கும்போது ஈசானியம் அடுத்த மனைவரை வளர்ந்திருக்கும். வீடுகட்டி குடிபோன பின் ஐந்து அல்லது பத்து வருடம் கழித்து சுற்றுச்சுவர் அமைத்தால் ஈசானியம் குறைவுபட்டு தோஷமாகிறது. எனவே, சுற்றுச்சுவர் அமைத்த பின்னரே வீடு கட்ட வேண்டும்.
(தொடரும்)
செல்: 94434 80585