6
அடுத்து வீடு கட்டும்போது அமைக்கப்படும் சன்ஷேட் பற்றி பார்ப்போம். வீட்டின் சன்ஷேட் வடக்குப் பகுதியில் இரண்டு அடி வளர்த்துக் கட்டியிருந்தால் தெற்குப் பகுதியில் ஒன்றரை அடி வளர்த்துக்கட்டலாம். அதேபோன்று கிழக்குப் பகுதியில் இரண்டு அடி வளர்த்து சன்ஷேட் கட்டியிருந்தால் மேற்குப் பகுதியில் ஒன்றரை அடி வளர்த்து சன்ஷேட் அமைக்கலாம். வடக்கு சன்ஷேடைவிட தெற்குதிசை சன்ஷேட் குறைவாக இருக்கவேண்டும். காரணம் எமன் திசை வளரக்கூடாது. அதேபோன்று கிழக்கு சன்ஷேட்-ஐவிட மேற்கு சன்ஷேட் குறைவாக இருக்கவேண்டும். காரணம், வருணன் திசை வளர்ந்து இந்திரன் திசை குறைவுபடக்கூடாது.
வடக்குப் பார்த்த வீடுகளில் போர்டிக்கோ அமைத்து தெற்குப்புறம் சன்ஷேட் குறைந்த அளவோ அல்லது சன்ஷேட் இல்லாமலோகூட இருக்கலாம். போர்டிக்கோ அமைக்கும்போது வடகிழக்கு போர்டிக்கோ நீண்டிருக்கலாம
6
அடுத்து வீடு கட்டும்போது அமைக்கப்படும் சன்ஷேட் பற்றி பார்ப்போம். வீட்டின் சன்ஷேட் வடக்குப் பகுதியில் இரண்டு அடி வளர்த்துக் கட்டியிருந்தால் தெற்குப் பகுதியில் ஒன்றரை அடி வளர்த்துக்கட்டலாம். அதேபோன்று கிழக்குப் பகுதியில் இரண்டு அடி வளர்த்து சன்ஷேட் கட்டியிருந்தால் மேற்குப் பகுதியில் ஒன்றரை அடி வளர்த்து சன்ஷேட் அமைக்கலாம். வடக்கு சன்ஷேடைவிட தெற்குதிசை சன்ஷேட் குறைவாக இருக்கவேண்டும். காரணம் எமன் திசை வளரக்கூடாது. அதேபோன்று கிழக்கு சன்ஷேட்-ஐவிட மேற்கு சன்ஷேட் குறைவாக இருக்கவேண்டும். காரணம், வருணன் திசை வளர்ந்து இந்திரன் திசை குறைவுபடக்கூடாது.
வடக்குப் பார்த்த வீடுகளில் போர்டிக்கோ அமைத்து தெற்குப்புறம் சன்ஷேட் குறைந்த அளவோ அல்லது சன்ஷேட் இல்லாமலோகூட இருக்கலாம். போர்டிக்கோ அமைக்கும்போது வடகிழக்கு போர்டிக்கோ நீண்டிருக்கலாம். ஆனால் வடமேற்கு போர்டிக்கோ நீண்டிருந்து வடக்கு திசையான குருதிசை வளராமல் இருந்தால் கெடுபலன் இருக்கும். எப்படி இருந்தாலும் வீட்டின் மேற்புறமிருந்து பார்க்கும்போது வடகிழக்கு மூலை குறைவுபடாமல் இருக்கவேண்டும்.
தெற்குப் பார்த்த வீடுகளில், தென்கிழக்கில் இருந்து தென்மேற்குவரை போர்டிக்கோ அமைக்கவேண்டும். தென்கிழக்கு மட்டுமே போர்டிக்கோ அமைப்பது அல்லது தென்மேற்கே மட்டும் போர்டிக்கோ அமைப்பது தவறாகும். தென்கிழக்கில் மட்டும் அமைத்தால் பிள்ளையார் மூலை குறைவுபடும். தென்மேற்கில் மட்டும் அமைத்தால் ராகு திசை வளர்வது நல்லதல்ல. எனவே தெற்குப் பார்த்த வீடுகளுக்கு தென்கிழக்கு மூலையில் இருந்து தென்மேற்குவரை போர்டிக்கோ அமைக்கவேண்டும். தெற்கு வாயிலுள்ள வீடுகளுக்கு இதுபோன்று போர்டிக்கோ பத்து அடி அளவில் அமைத்தால், அதே அளவு வீட்டின் பின்புறமான வடக்குதிசையில் (குபேர திசையில்) பத்து அடி அகலத்தில், வடகிழக்கிலிருந்து வடமேற்குவரை சன்ஷேட் அல்லது கூரைகள் அமைக்கவேண்டும். அந்த பகுதி காலியாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய அங்கு நெருப்பு ஏதும் மூட்டக்கூடாது.
அதேபோன்று மேற்குப் பார்த்த வீடுகளுக்கு போர்டிக்கோ அமைக்கும்போது, வடமேற்கு மூலையிலிருந்து தென்மேற்குவரை அமைக்கவேண்டும். வடமேற்கு மூலையில் மட்டுமே போர்டிக்கோ அமைத்தால், ராகு திசையான தென்மேற்கு குறைந்து தோஷம் உண்டாகும். மேற்கு போர்டிக்கோ வடமேற்கிலிருந்து தென்மேற்குவரை பத்து அடி அகலத்தில் அமைத்தால், அதே பத்து அடி அகலத்தில் வீட்டின் பின்புறம் கிழக்கு திசையில் (இந்திரன் திசை) வடகிழக்கிலிருந்து தென்கிழக்குவரை சன்ஷேட் அல்லது கூரைகள் அமைக்கவேண்டும்.
சந்திரன் ஒவ்வொரு ராசியில் இருக்கும் போது மனையெடுக்கும் (வீடு கட்டத் தொடங்கும்) நாளின் பலன்களை மனை நூல்கள் தெரிவிக்கின்றன.
மேஷ ராசியில் மனையெடுக்க மேன்மையும் புகழும்; ரிஷப ராசியில் மனையெடுக்க மரணமும்; மிதுன ராசியில் மனையெடுக்க வீண்பழிகளும்; கடக ராசியில் மனையெடுக்க பொன், பொருளும்; கன்னி ராசியில் மனையெடுக்க செல்வமும் புகழும்; துலா ராசியில் மனையெடுக்க அனைத்து பாக்கியங்களும்; விருச்சிக ராசியில் மனையெடுக்க வறுமையும்;
தனுசு ராசியில் மனையெடுக்க வீண்விரயங்களும்; மகர ராசியில் மனையெடுக்க வறுமையும்;
கும்ப ராசியில் மனையெடுக்க மகிழ்ச்சியும்; மீன ராசியில் மனையெடுக்க அதிக செல்வமும் கிட்டுமென்று பொதுவாக மனைநூல்கள் தெரிவிக்கின்றன.
இனி மாடிப்படிகள் அமைப்பது குறித்துப் பார்க்கலாம்.
மாடிப்படிகள் அமைக்கும்போது கடிகார முள் இயக்கம்போல் அமைய வேண்டும். திருக்கோவில்களில் நாம் எவ்வாறு வலம் வருகிறோமோ அதேபோன்று பிரதட்சிண முறையில் அமைக்கவேண்டும்.
வடக்குப் பார்த்த வீடுகளில் வடமேற்கில் மாடிப்படிகள் அமைக்கலாம். வடகிழக்கு மூலையான குரு திசையில் போர்டிக்கோவும், வடமேற்கு மூலையான (கொடிக்காமூலை) சந்திரன் திசையில் மாடிப்படியும் அமைக்கலாம். வீட்டினுள்ளே அமைத்தாலும் வடமேற்கில் மாடிப்படிகள் பிரதட்சிண முறையில் அமைக்கவேண்டும். வடமேற்கில் அமைக்கப்படும் மாடிப்படிகள் சுவரையொட்டி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று லேண்டிங் கொடுத்து, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் வகையில் அமைக்கவேண்டும். மாடிப்படி அகலம் ஆறு அடி என்றால் வடகிழக்கு போர்டிக்கோ ஆறு அடி அல்லது அதற்குமேல் இருக்கலாம். குறைவுபடக்கூடாது. எப்படி இருந்தாலும் மாடிப்படி அகலமோ அல்லது அதைவிட அதிகமாகவோ போர்டிக்கோ அமைக்கவேண்டும். வடகிழக்கு மூலையான குரு திசை எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
(தொடரும்)
செல்: 94434 80585