ஞ்ச பூத ஆற்றல் கிடைக்கும்வகையில் வீடு அமைப்பதே வாஸ்து ஆகும். நாம் பல்லாண்டு வாழும் வகையில் திறமைமிக்கவர்களைக் கொண்டு வீடு அமைக்கவேண்டும். நீர்- திருவானைக்காவல்; நிலம்- திருவாரூர்; நெருப்பு- திருவண்ணாமலை; காற்று- திருக்காளஹஸ்தி; ஆகாயம்- தில்லை என பஞ்சபூத ஆற்றல் கொண்ட கோவில்கள் உண்டு.

Advertisment

பஞ்சபூத ஆற்றல் நம் விரல்களிலும் உள்ளது. சுண்டு விரல்- நீர்; மோதிரவிரல்- நிலம்; நடுவிரல்- ஆகாயம்; சுட்டு விரல்- காற்று; பெருவிரல்- நெருப்பு. பெருவிரலின் நெருப்பையும், சுட்டுவிரலின் காற்றையும் இணைத்து சின்முத்திரை செய்து, ரிஷிகள் தவமிருந்து வலிமை பெற்றனர். எனவே பஞ்சபூத ஆற்றல் கொண்டு நம் வீட்டையும் பலமுள்ளதாக்குவோம்.

kuberar

வீடு கட்டும்போது எந்த மூலையிலிருந்து ஆரம்பிப்பது என்பதை இனி பார்ப்போம்.

Advertisment

வீடு கட்ட தூண் அமைப்பதற்கான குழிகளை வடகிழக்கில் ஆரம்பிக்க வேண்டும். வடக்கில் தூண்களுக்கான குழிகள் அமைக்கவேண்டும். அதன்பின்னர் கிழக்கே குழிகள் அமைக்கவேண்டும். அதன்பின் மேற்கே குழிகள் அமைக்கவேண்டும் கடைசியாக தெற்கே அமைக்கவேண்டும். தூண் அமைக்கும்போது தெற்கே முதலில் அமைக்க வேண்டும். அதன்பின் மேற்கு, அதற்கடுத்து கிழக்கு, கடைசியாக வடக்கு திசையில் தூண் அமைக்கவேண்டும். காரணம், முதலில் தோண்டுவது வடக்கு. பொதுவாக முதலில் ஈசான்யத்தில் குழிகள் தோண்டலாம். அடுத்து கிழக்கு (இந்திரன் திசை) திசையில் குழிகள் தோண்டலாம். அடுத்து மேற்கு, தெற்கு என தோண்ட வேண்டும். மூடும்போது முதலில் எமன் திசையான தெற்கு திசையில் தூண் அமைத்து மூடவேண்டும். அடுத்து மேற்கு, கிழக்கு, கடைசியாக வடக்கில் தூண் அமைக்கலாம்.

வீட்டு மனைக்கு என்ன விதிகளோ அதே விதிகள் வீடு கட்டுவதற்கும் பொருந்தும். நாம் கட்டும் வீடு சதுரமாகவோ, நீள் சதுரமாகவோ அமைக்கலாம். எந்த ஒரு மூலையும் வளர்வது கூடாது. வீட்டுச்சுவர் எழுப்பும்போது முதலில் தெற்கு திசையான எமன் திசையில் சுவர் அதிகமாக எழுப்புதல் வேண்டும்.

அடுத்து வருண திசையான மேற்கு திசையில் எழுப்புதல் வேண்டும்.

அடுத்து இந்திரன் திசையான கிழக்கில் எழுப்ப வேண்டும். கடைசியாக வடக்கு திசையில் சுவர் எழுப்பவேண்டும். அஸ்திவாரம் போட்டு ஒரு மாதம் சென்ற பின்னர்கூட சுவர் எழுப்பலாம். ஆனால் சுவர் எழுப்பியபின் உடனே மூடிவிடவேண்டும். நீண்டகாலம் ஒட்டாமல் இருக்கக்கூடாது.

(தொடரும்)

செல்: 94434 80585