குபேர வாஸ்து! 22

/idhalgal/balajothidam/kubera-vastu-22

வாஸ்துப்படி கற்பகம், ஆதாயம், விரயம், திதி, வாரம், நட்சத்திரம், யோனி, ராசி, அம்சம், வம்சம், கணம், கண், சூத்திரம், யோகம், வயது, தாரா என்ற சூத்திரங்களின் அடிப்படையில் அக்காலத்தில் வீடுகள் அமைத்தனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாதாரணமாக, மனையின் நீள அகலத்தைப் பெருக்க வேண்டும். அதை எட்டால் வகுக்க வேண்டும். மீதிவருவது ஆதாயம் எனக் கொள்ள வேண்டும்.

thirumal

மீதி இல்லை எனில் எட்டு எனக் கொள்ள வேண்டும். மீதி ஒன்றெனில் நன்மையும், இரண்டு எனில் மத்தி

வாஸ்துப்படி கற்பகம், ஆதாயம், விரயம், திதி, வாரம், நட்சத்திரம், யோனி, ராசி, அம்சம், வம்சம், கணம், கண், சூத்திரம், யோகம், வயது, தாரா என்ற சூத்திரங்களின் அடிப்படையில் அக்காலத்தில் வீடுகள் அமைத்தனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாதாரணமாக, மனையின் நீள அகலத்தைப் பெருக்க வேண்டும். அதை எட்டால் வகுக்க வேண்டும். மீதிவருவது ஆதாயம் எனக் கொள்ள வேண்டும்.

thirumal

மீதி இல்லை எனில் எட்டு எனக் கொள்ள வேண்டும். மீதி ஒன்றெனில் நன்மையும், இரண்டு எனில் மத்திமப் பலனும், மூன்றெனில் நன்மையும், நான்கெனில் மத்திமமும், ஐந்தெனில் நன்மையும், ஆறு எனில் மத்திமப் பலனும், ஏழு எனில் நன்மையும், எட்டு எனில் மத்திமப் பலனும் உண்டாகும். இவ்வொரு பலனை வைத்து மட்டும் பார்க்கக்கூடாது. மேற்கண்ட பதினாறு அம்சங்களும் கணக்கிட்டு, அவற்றில் ஒன்பது அம்சம் அல்லது அதற்குமேல் அம்சங்கள் இருந்தால் நல்லபலன் கிடைக்கும்.

என்னதான் வாஸ்துப்படி அமைத்தாலும் லாபம் வரவில்லை; விரயங்கள் வருகின்றன; வளர்ச்சி ஏதும் இல்லை என கருதுபவர்களின் வீடுகளில் கண்டிப்பாக ஏதாவது ஒரு குறை இருக்க வாய்ப்புள்ளது. அது சிறிய குறைதானே என அலட்சியமாக இருந்திருக்கலாம்.

களவு போகும் வீடுகள் பற்றிப் பார்க்கும்போது, தெற்குப் பார்த்த வீடுகளில் முன்புறம், மேற்கு- தெற்கு படி அமைப்புடன் மூடியிருந்து, அதற்கு எதிர்திசை தெற்கு- கிழக்கு மூடாமல் இருந்தால் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

வீட்டின் கிழக்கில் சந்து இருந்து, வடக்குப் பார்த்த வீட்டின் பின்புறம் சுவர் முடிவுற்றதும் தெற்கில் கேட்டமைத்து தோட்டத்திற்குச் செல்லும் வழியாக இருந்தால் திருடு போகும். அப்பார்ட்மென்ட்ஸ் வீடுகளைப் பொருத்தவரை, தெற்குப் பார்த்த வீடுகளில் முன்புறம் தெற்கு, மேற்கு மூடப்பட்டிருந்து, அதற்கு எதிர்திசை மூடப்படாமல் பால்கனி போன்ற அமைப்பிலிருந்தால் களவுபோகும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட பலனோடு அக்னிமூலை பிழையால் தீவிபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஒரு வீட்டில் திருடுபோய் இருந்தால் அவ்வீட்டை உடனே மாற்றியமைக்க வேண்டும். குடும்பத்தில் எவருக்காவது கிரகப்பலன் சரியில்லை என்றால் அந்த வீட்டில் மீண்டும் திருடுபோக வாய்ப்புள்ளது. அதேபோன்று வர்த்தக நிறுவனத்திலும் மேற்குப் பார்த்த கடை எனில், கடையின் பின்புறம் தவறான வாயில் அமைப்பு அல்லது கேட் அமைப்பு இருந்தாலும், கிழக்குப் பார்த்த வர்த்தக நிறுவனம் எனில், கிழக்கு சார்ந்த சுக்கிர திசையான தென்கிழக்கில் வழி அல்லது கேட் இருந்தாலும் அந்தக் கடையில் திருடு போகும். வாஸ்துப்படி வீடு அமைத்து திருட்டைத் தடுப்போம்.

(தொடரும்)

செல்: 94434 80585

bala140918
இதையும் படியுங்கள்
Subscribe