குபேர வாஸ்து! 20

/idhalgal/balajothidam/kubera-vastu-20

வீதி உயர்ந்து வீடு தாழ்ந்திருந்தால் பலன் என்னவென்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன.

"வீதி உயர்வாகி வீடதுவே தாழ்வானால்,

ஊதியம் போய்விடும் சத்ருக்கள் புக்கில் புகுவர்

நோய் கவலை என்றுரைக்கும் நூல்'

என குறிப்புகள் உள்ளன. வீதி உயர்ந்து வீடு தாழ்ந்திருக்கக்கூடாது. உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலை எடுத்துக்கொள்வோம். கம்பீரமான இத்திருக்கோவலி காலப்போக்கில் வடக்கு சாலை உயர்ந்துவிட்டதால் பஞ்சபூத ஆற்றலை இழந்து, நில அருளை இழந்து, நம்மிடம் ஒரு ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு சிறிய பிள்ளையார் கோவிலில்கூட ஈர்ப்பு அதிகம் இருக்கும். இத்திருக்கோவிலில் ஈர்ப்பு

வீதி உயர்ந்து வீடு தாழ்ந்திருந்தால் பலன் என்னவென்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன.

"வீதி உயர்வாகி வீடதுவே தாழ்வானால்,

ஊதியம் போய்விடும் சத்ருக்கள் புக்கில் புகுவர்

நோய் கவலை என்றுரைக்கும் நூல்'

என குறிப்புகள் உள்ளன. வீதி உயர்ந்து வீடு தாழ்ந்திருக்கக்கூடாது. உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலை எடுத்துக்கொள்வோம். கம்பீரமான இத்திருக்கோவலி காலப்போக்கில் வடக்கு சாலை உயர்ந்துவிட்டதால் பஞ்சபூத ஆற்றலை இழந்து, நில அருளை இழந்து, நம்மிடம் ஒரு ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு சிறிய பிள்ளையார் கோவிலில்கூட ஈர்ப்பு அதிகம் இருக்கும். இத்திருக்கோவிலில் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது. நூறு வருடங்கள் கழித்து சாலை உயரம் எப்படி அமையும் என கருத்தில்கொண்டு தரைத்தளம் உயரமாக அமைக்கவேண்டும்.

vastu

மனையடி சாஸ்திரத்திற்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் சில இடங்களில் முரண்பாடு உள்ளது. உலக அமைப்பில் நிலப்பரப்பிற்கேற்ப வாஸ்து மாறுபடுகிறது. நமது நாட்டு வாஸ்து சாஸ்திரம் அடுத்த நாட்டிற்குப் பொருந்துமா என்றால் கண்டிப்பாக இல்லை.

இந்திய துணைக் கண்டத்தை மூன்று பிரிவாகப் பிரித்துதான் வாஸ்து சாஸ்திரங்கள் இயற்றப்பட்டுள்ளன. திராவிட நாடுகளைப் பொருத்தவரை பிருகு முனிவரின் வாஸ்து சாஸ்திரம் ஏற்றதாக உள்ளது. எல்லா திசைகளுமே நல்ல திசைகள்தான். முதலில் வடக்கு, அடுத்து கிழக்கு, அடுத்து மேற்கு, கடைசியில் தெற்கு, இதுபோன்று வாயில் அமைக்கலாம். அதேசமயம் கிழக்கு மற்றும் வடக்குப் பார்த்த வீடுகள் தவறான அமைப்பில் இருந்தாலும் மெதுவாகத்தான் பாதிக்கும்.

ஆனால் மேற்கு மற்றும் தெற்குப் பார்த்த வீடுகள் சிறிய தவறுகள் இருந்தாலும் மிகக்கடுமையாக பாதிக்கும். தொடர்ந்து ஒரு வீட்டில் உயிரிழப்புகள் மிகக் கொடூரமாக இருந்தால் வாயில் அமைப்பு, வீட்டில் உள்ள மேடு பள்ளங்கள் போன்றவையே காரணமென்று அறிய வேண்டும். விபத்துகள், கொடூர உயிரிழப்புகள் அதோடு நின்றுவிடாது. அவை தொடர்கதையாக இருக்கும். எனவே வாயில் தவறுகள், பூமிக்கு அடியில் பள்ளங்கள், தவறான அடுப்பறைகள், தவறான மேடுபள்ளங்களை சரிசெய்தால் விபத்துகள் நடப்பதைத் தடுத்துக் கொள்ளலாம்.

கடந்த இதழில் பூஜையறை எங்கு அமைக்கலாம் என்று பார்த்தோம். இனி எங்கு அமைக்கக்கூடாது என்பதைப் பார்ப்போம்.

பூஜையறைகளை குறிப்பிட்ட திசைகளில் அமைக்கமுடியாதவர்கள் பிரம்மஸ்தனமான ஹாலில் அமைத்து வழிபடலாம்.

அக்னி மூலையும், வாயுமூலையும் பூஜையறைக்கு உகந்தவையல்ல. பூஜையறையானது நமது நிம்மதிக்காக அமைக்கப்படுவது.

அதனை வீட்டினுள் அமைந்த கழிவறையை ஒட்டி அமைப்பது அல்லது பூஜையறைக்கு மேல் குடோன் அமைப்பது, பூஜையறைக்கு மேலே மாடிப்படி அமைப்பது தவறானதாகும்.

பூஜையறை சரியாக அமைந்தால்தான் நிம்மதியாக இருக்கமுடியும், பூஜையறை தவறாக இருந்தால் நிம்மதியுணர்வு இருக்காது.

வாஸ்துப்படி அமைத்தும் நிம்மதியில்லை என நினைப்போர் தாம் வசிக்கும் வீடு அந்தந்த திசைக்கு நேராக இருக்கிறதா என பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் திருமணத்தடைகள், வருமானம் வந்தாலும் ஏதோ தடுப்பது போன்ற ஒரு நிலை இருக்கும்.

எனவே திசை நோக்கி வீடு இருக்கிறதா, பஞ்சபூதங்கள் ஆற்றல்களைப் பெறும் வண்ணம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். சில நேரங்களில் சிறிய வாஸ்துக்குறைபாடுகூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)

செல்: 94434 80585

bala170818
இதையும் படியுங்கள்
Subscribe