சிக்கும் வீடானது நாம் படிப்படியாக வளர்ச்சி பெறும் வகையில் அமையவேண்டும். கிரக பலத்தையும் ஊழ்வினையையும் நம்மால் மாற்றமுடியாது. அதன் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும்.

Advertisment

ஆனால் மந்திர உச்சரிப்புகள், தெய்வ வழிபாடுகள் மூலமாக கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

அதேபோல வாஸ்துப்படி வீடுகளை அமைத்து கிரகங்களின் கெடுபலனைக் குறைத்துக் கொள்ளலாம்.

கடந்த வாரம் அடுப்பறையை வீட்டின் அக்னி மூலையான தென்கிழக்கு மூலையில் அமைக்கவேண்டும் என்பதைப் பார்த்தோம். பொதுவாக கிழக்குப் பார்த்து சமைக்கும் வகையில் அடுப்பறை அமைப்பே நல்ல பலனளிக்கும். நகரங்களில் சூரியன் மறையும் திசையான மேற்குப் பார்த்தும் சமைக்கலாம் என கட்டடப் பொறியாளர் சமாதானம் சொல்லிலி, மேற்குப் பார்த்துச் சமைக்கும் வகையிலும் அமைத்துவிட்டனர். இதனால் கெடுபலன் ஏதுமில்லை என்றாலும், கிழக்குப்பார்த்து சமைப்பதே நல்லபலனை உண்டாக்கும். மேற்குப்பார்த்து சமைப்பதால் மத்திமப் பலன் மட்டுமே உண்டு. அதனால் லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை.

Advertisment

kuberavastu

சமையல்மேடை வடக்கு சுவரில் ஒட்டக்கூடாது. வடக்கு குபேர திசையாகும். அங்கு அதிக எடையுள்ள பொருள் இருத்தல் கூடாது. வடக்கு சுவரோடு ஒட்டி சமையல்மேடை அமைக்கும்போது வடக்கு பாரமாகிவிடும். எனவே வடக்கு சுவரை ஒட்டாமல் ஒரு அடி அல்லது இரண்டு அடி விட்டு அமைக்கலாம். சமையல் மேடைக்கு வடக்கில் சிங்க் (தொட்டி போன்ற அமைப்பு) அமைத்து சமையல் மேடை அமைக்கலாம்.

சமையல் பொருட்கள், தானியங்கள், மளிகைப் பொருட்களை சமையலறையில் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களில் செல்ப் அமைத்து வைக்கலாம். வடக்கு மற்றும் கிழக்குச் சுவர்களில் செல்ப் அமைத்து அதில் எடையுள்ள பொருட்களை வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். இதேபோல் ஹால் மற்றும் படுக்கையறைகளில்கூட மேற்கு மற்றும் தெற்குப் பகுதியிலுள்ள சுவர்களில் மட்டுமே செல்ப் போன்ற அமைப்பு இருக்கவேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் கூடாது.

Advertisment

வீட்டின் தென்கிழக்கு திசையில் அமைக்கும் சமையல் அறையில், மேற்குப் பகுதியில் பாதி அளவுக்கு மச்சி போன்ற அமைப்பு ஏற்படுத்தலாம். அல்லது தெற்குப் பகுதியில் பாதி அளவில் மச்சி போன்ற அமைப்பு ஏற்படுத்தலாம்.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அவ்வாறு அமைப்பது கூடாது.

"அக்னியில் கிருத்திகை நட்சத்திரத்தில் தோன்றியவரும், சிவந்த கல்யாண முருங்கைப் பூவிற்கு ஒப்பான தேகத்தை உடையவரும், சக்தியாயுதத்தைக் கையில் கொண்டுள்ளவரும், குண்டலம், ஹாரம் முதலிலிய ஆபரணங்களை தரித்தவரும், பச்சை நிற ஆடையுடுத்தியவரும், குரங்கைக் கொடியாகவும் வாகனமாகவும் உடையவரும், ஸ்வாஹா தேவியின் கணவரும், "இ'காரத்தை பீஜாட்சரமாக உடையவரும், சர்வதேவமுகமாக அமர்ந்திருப்பவருமான "அக்னியே நம; ஜாதவேதஸே நம; பாவகாய நம; ஹூதாசனாய நம' என்று அக்னிபகவானை அர்ச்சித்து, தென்கிழக்கில் அடுப்பறை அமைத்து அக்னியின் ஆற்றலைப் பெறலாம். பிற திசைகளில் இருந்தால் (வாயுவேயம் தவிர) தவறான பலனளிக்கும்.

வீட்டின் வடகிழக்கு மூலையான ஈசான்ய மூலையில் அடுப்பறை அமைத்தல் கூடாது. அவ்வாறு அமைத்தால் குடும்ப வளர்ச்சி குறைவுபடும். கெடுபலன்களாக அமையும். கிழக்குதிசையில் இருப்பது மத்திமமான பலன் தரும். தென்மேற்கு திசையான நிருதி மூலையில் அடுப்பறை இருந்தால் நமக்குத் தொடர்ந்து கஷ்டங்கள் இருக்கும். ஒன்று போனால் அடுத்தது வரும். மேற்கு திசையான வருணன் திசையில் அடுப்பறை இருந்தால் மத்திமப்பலன் கிடைக்கும். லாபமோ நஷ்டமோ இருக்காது.

(தொடரும்)

செல்: 94434 80585