Advertisment

குபேர வாஸ்து! - 13

/idhalgal/balajothidam/kubera-vastu-0

ஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு. வீட்டில் நெருப்பு இருக்கவேண்டிய இடங்கள் குறித்து மனைநூல்கள் தெரிவிக்கின்றன சூரியனிலிருந்து வெப்பத்தையும், ஒளியையும் பூமி ஏற்றுக்கொண்டு நிலைத்திருக்கிறது. சூரியன் இல்லையெனில் பூமி உருவாகியிருக்காது. அந்த வெப்பம் நாம் வசிக்கும் இடத்தில் எங்கெங்கு இருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

Advertisment

நெருப்புக்கும் அடுப்பறைக்கும் தொடர்புள்ளது. ஒரு வீட்டில் அடுப்பறை உரிய இடத்தில் இருந்தால் எதிரிகள் வலுவிழந்துவிடுவர். எதிரிகளால் வெல்ல முடியாது. அடுப்பறை தவறாக இருந்தால் எதிரிகள் நம்மைவிட வலுவாக இருப்பர். எதிரிகளுக்கு பயந்து நாம் வாழ்க்கை நடத்தவேண்டி

ஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு. வீட்டில் நெருப்பு இருக்கவேண்டிய இடங்கள் குறித்து மனைநூல்கள் தெரிவிக்கின்றன சூரியனிலிருந்து வெப்பத்தையும், ஒளியையும் பூமி ஏற்றுக்கொண்டு நிலைத்திருக்கிறது. சூரியன் இல்லையெனில் பூமி உருவாகியிருக்காது. அந்த வெப்பம் நாம் வசிக்கும் இடத்தில் எங்கெங்கு இருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

Advertisment

நெருப்புக்கும் அடுப்பறைக்கும் தொடர்புள்ளது. ஒரு வீட்டில் அடுப்பறை உரிய இடத்தில் இருந்தால் எதிரிகள் வலுவிழந்துவிடுவர். எதிரிகளால் வெல்ல முடியாது. அடுப்பறை தவறாக இருந்தால் எதிரிகள் நம்மைவிட வலுவாக இருப்பர். எதிரிகளுக்கு பயந்து நாம் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கும். அக்காலத்தில் போருக்குச் செல்லும் முன்னர் வெற்றிபெறுவதற்காக ஹோமங்கள் செய்வர். அப்படிச் செய்யும்போது அதை உரிய இடத்தில் செய்தும், அக்னி பகவானின் ஆற்றலை வலுவாக்கிக் கொண்டும் எதிரிகளை வீழ்த்தினர். தற்காலத்தில்கூட அரசியல் பிரமுகர்கள் தேர்தலுக்குமுன்பு உரிய ஹோமங்கள் செய்து, அக்னி பகவானின் ஆற்றலை வலுவாக்கிக்கொண்டு வெற்றி பெறலாம். ஒரு வீட்டில் அக்னியின் ஆற்றல் வலுவாக இல்லாமலிருந்தால் எதிர்த்து நிற்பவர்களை வெற்றிகொள்வது சிரமமாக இருக்கும். அரசியல் சார்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், எதிராளிகள் இல்லாமல் இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக அக்னி பகவானின் ஆற்றல் கிடைக்கும் வகையில் அடுப்பறை அமைக்கவேண்டும்.

kuberavastu

அடுப்பறை என்பது வீட்டின் தீ மூலையான அக்னிமூலையில் இருக்க வேண்டும். இதனை சுக்கிர திசை என்றும் கூறுவர். வீட்டின் தென்கிழக்கு மூலையில் அடுப்பறை இருந்தால் நல்ல பலனளிக்கும். கிழக்குப் பார்த்து சமைக்கும் வகையில் இருக்கவேண்டும். அடுப்பறை தென்கிழக்கு மூலையில் அமைந்திருந்து, நெருப்பின் அனல் வீட்டின் தென்மேற்கு மூலைவரை பரவுமானால் கெடுபலன் ஏற்படும். அதுபோல் நெருப்பின் அனல் வீட்டின் வடகிழக்கு மூலைவரை பரவுமானால் அனைத்து செல்வங்களும் குறைந்துபோகும்.

எனவே அடுப்பறை என்பது கதவோடு அறைகள் ஒட்டுவரை முழுமையாக மூடியிருக்கவேண்டும். நெருப்பின் அனல் அடுப்பறையை விட்டு ஜன்னல் வழியாகச்செல்லும் வகையில் வீடு அமையவேண்டும். திறந்த வெளியில் மேடையமைத்து சமையல் செய்யக்கூடாது. மொத்தத்தில் அடுப்பறை முழுவதும் மூடப்பட்ட நிலையில், ஒரு வாசல் அமைத்தும் கிழக்கில் ஜன்னல் அமைத்தும் இருக்கவேண்டும்.

சமையல் அனல் முழுவதும் தென்கிழக்கு அடுப்பறையிலுள்ள ஜன்னல் வழியாகச் சொல்லும் வகையில் இருக்கவேண்டும்.

ஒருவேளை தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைக்க முடியவில்லையெனில் வேறு எந்த திசைகளில் அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம். தெற்குப் பார்த்த வீடுகளில் தென்கிழக்கு மூலையில் அடுப்பறை அமைக்கமுடியாத நிலை இருக்கும். எனவே வீட்டின் வாயுமூலையான வடமேற்கு திசையில் அமைக்கவேண்டும். வடமேற்கு மூலையில் கிழக்குப் பார்த்து சமைக்கும் வகையில் மேடை அமைக்க வேண்டும். நெருப்பின் அனல் வடக்கு ஜன்னல் வழியாகச் செல்லும் வகையில் அமைக்கவேண்டும். வெறும் மேடை மட்டும் அமைத்து வடமேற்கில் சமைக்கக்கூடாது. இதுபோன்று சமைக்கும்போது வடகிழக்கு மூலைவரை அனல் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அனைத்து செல்வங்களும் படிப்படியாகக் குறையும். நெருப்பு இருந்தால், நான்கு பக்கச் சுவர்களும் தரையிலிருந்து மேல் ஒட்டுவரை மூடியிருக்க வேண்டும். இதுபோன்று வடமேற்கு சமையலறை இருந்தால், தொடர்ந்து விருந்து சமைக்கும்படி நேரும். மகிழ்ச்சி உண்டாகும்.

(தொடரும்)

செல்: 94434 80585

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe