கிழக்குப் பார்த்த வீடுகளில் தென்கிழக்கில் மாடிப்படி அமைக்கலாம். சுவரை ஒட்டாமல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று லேண்டிங் கொடுத்து, பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லவேண்டும். பிரதட்சிண முறையில் மாடிப்படிகள் அமையவேண்டும். போர்டிக்கோவைப் பொருத்தவரை கிழக்கு திசையில் வடகிழக்கு வளர்ந்திருக்கலாம். மாடிப்படி அகலம் ஆறு அடி எனில் போர்டிக்கோ அளவும் ஆறு அடி அல்லது அதற்குமேல் இருக்கவேண்டும்.

Advertisment

வடகிழக்கு மூலையான குரு திசை எவ்வகையிலும் குறைவுபடக்கூடாது. கிழக்குப் பார்த்த வீடுகளில் வீட்டின் உள்ளேயும் தென்கிழக்கில் இதேபோன்ற அமைப்பில் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

lakshmi

தெற்குப் பார்த்த வீடுகளில் வீட்டின் உள்அமைப்பில்தான் மாடிப்படி அமையவேண்டும். தென்மேற்கிலும் இருக்கலாம். மாடிப்படி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச்சென்று, பின் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச்செல்லும் வகையில், பிரதட்சிண முறையில் மாடிப்படிகள் அமையவேண்டும். வீட்டின் வெளிப்புறம் தென்மேற்கில் அமைத்தால், பிள்ளையார் மூலை கீழே அமைந்து தென்கிழக்கு மூலையான சுக்கிரன் திசை உயர்ந்துவிடும். எனவே தெற்குப் பார்த்த வீடுகளில் கண்டிப்பாக வீட்டு உள் அமைப்பில்தான் மாடிப்படி அமைக்கவேண்டும்.

மேற்குப் பார்த்த வீடுகளில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கில் மாடிப்படிகள் அமைக்கலாம். தென்மேற்கில் அமைக்கும்போது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று லேண்டிங் கொடுத்து, பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வகையில், பிரதட்சிண முறையில் மாடிப்படி அமைக்கவேண்டும். மேற்குப் பார்த்த வீடுகளில் வீட்டிற்கு உள் அமைப்பில்தான் மாடிப்படிகள் அமைக்கவேண்டும். மேற்கில் போர்டிக்கோ அமைத்து, வெளிப்புற மாடிப்படி தென்மேற்கில் அமையும்படி மேற்குப் பார்த்த வீடுகளில் அமைக்கக்கூடாது.

வடக்குப் பார்த்த வீடுகள், கிழக்குப் பார்த்த வீடுகளுக்கு வீட்டின் வெளிப்புறத்திலும், உள்ளேயும் மாடிப்படிகள் அமைக்கலாம். ஆனால் மேற்கு மற்றும் தெற்குப் பார்த்த வீடுகளில் வீட்டின் வெளியே மாடிப்படி அமைக்க முடியாது. கெடுதலான பலன் ஏற்படும்.

அப்படி வெளிப்புறம்தான் அமைக்கவேண்டுமெனில் மாடிப்படி கூண்டுபோல் அமைத்துப் பயன்படுத்தவேண்டும். வீட்டின் மேற்புறத்திலிருந்து பார்க்கும்போது தென்மேற்கு பள்ளமாக இருக்கக்கூடாது. எனவே தெற்கு மற்றும் மேற்குப் பார்த்த வீடுகளில் மாடிப்படி அமைக்கும் போது கவனத்துடன் அமைக்கவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்குப் பார்த்த வீடுகளில் முறையே வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் மாடிப்படி அமைக்கும்போது, அதன் கீழுள்ள பகுதியை குடோனாகவோ கழிவறையாகவோ பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் வாயுமூலையான சந்திரன் திசையும், தீ மூலையான சுக்கிரன் திசையும் வளர்ந்ததாக இருக்கும். அது நற்பலனை பாதிக்கும்.

(தொடரும்)

செல்: 94434 8058