Advertisment
/idhalgal/balajothidam/kubera-vasthu-6

வேத உபநிடதங்களில் கன்வர், பாதராயணர், விஸ்வாமித்திரர், காசியபர், கஷிவான், பருநீதர், ஜமதக்னி, வாமதேவர் போன்ற ரிஷிகள் பற்றி அறியமுடிகிறது. இவர்களுள் காசியப முனிவரே "காஸ்யப வாஸ்து' சாஸ்திர நூலை நமக்காக அருளியுள்ளார்.

Advertisment

"வீடு என்பது யாகம் செய்யும் வீடாக இருக்க வேண்டும்; செல்வங்களின் இருப்பிடமாகவும் இருக்க வேண்டும். அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தரத்தக்கதாக இருக்கவேண்டும்' என வேதங்கள் சொல்கின்றன.

ஒருசிலர் சில வீடுகளைப் பார்க்கும்போது "ராசியில்லாத வீடு' என்பார்கள். எனவே நமது வீடு ராசியோடுதான் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

kubererகடந்த வாரங்களில் பல்வேறு வாஸ்துக் குறிப்புகளைப் பார்த்துவிட்டோம். தற்போது வீட்

வேத உபநிடதங்களில் கன்வர், பாதராயணர், விஸ்வாமித்திரர், காசியபர், கஷிவான், பருநீதர், ஜமதக்னி, வாமதேவர் போன்ற ரிஷிகள் பற்றி அறியமுடிகிறது. இவர்களுள் காசியப முனிவரே "காஸ்யப வாஸ்து' சாஸ்திர நூலை நமக்காக அருளியுள்ளார்.

Advertisment

"வீடு என்பது யாகம் செய்யும் வீடாக இருக்க வேண்டும்; செல்வங்களின் இருப்பிடமாகவும் இருக்க வேண்டும். அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தரத்தக்கதாக இருக்கவேண்டும்' என வேதங்கள் சொல்கின்றன.

ஒருசிலர் சில வீடுகளைப் பார்க்கும்போது "ராசியில்லாத வீடு' என்பார்கள். எனவே நமது வீடு ராசியோடுதான் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

kubererகடந்த வாரங்களில் பல்வேறு வாஸ்துக் குறிப்புகளைப் பார்த்துவிட்டோம். தற்போது வீட்டின் எல்லையில் எங்கெங்கு மரங்கள் இருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

Advertisment

ராகு திசையில் வலுவான மரங்களை வளர்க்கலாம். ராகு திசை முதல் வருணன் திசை, சந்திரன் திசை வரை மரங்கள் வளர்க்கவேண்டும். ராகு திசையிலிருந்து எமன் திசை, சுக்கிரன் திசை, இந்திரன் திசைவரை மரங்கள் வளர்க்கலாம். இவ்விடங்களில் எல்லாம் வலுவான பெரிய மரங்களை வளர்க்கலாம். மற்ற இடங்களில் மரங்களை வளர்க்கக்கூடாது. இதன்படி வளர்த்தால் கண்டிப்பாக வீடு வளர்ச்சியடையும். கடன் வந்து சேராது. நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். மனநிறைவோடு இருக்கலாம். தெற்கு எமன் திசை என்பர். அவ்விடம் அதிக காலியாக இருந்தாலும், ராகு திசை மற்றும் சுக்கிரன் திசை அதிக காலிலியாக இருந்தாலும் வீட்டின் உரிமையாளர் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்குள்ளாக அந்த வீட்டை விற்றுவிடுவார். கடனோடு செல்வார். அந்த பரம்பரையின் அடையாளம் இல்லாமல் போகும். எனவே கண்டிப்பாக காலிலியாகவுள்ள மேற்கண்ட இடங்களில் மரங்களை வளர்த்தால் வளர்ச்சி பெறலாம்.

வாஸ்து பற்றி எல்லாரும் தமக்குத் தெரிந்த தகவல்களை மற்றவரிடம் கூறுதல் கூடாது. அதனால் நமக்கு தோஷம் உண்டாகும். காரணம் யாதெனில், ஊழ்வினை காரணமாக, அதன்வழி ஜாதகரீதியாக அவரவர் செய்த பாவபுண்ணியங்களால் அவரவர் படும் கஷ்டநஷ்டங்களை நாம் தடுப்பதுபோலாகிவிடும். எனவே அதற்கென வாஸ்து பார்ப்போரைக் கொண்டு பலனடைவதே உசிதமாகும். வாஸ்து, ஜாதகம், எண்கணிதம், கைரேகை பார்ப்போருக்கென்று வாக்குப்பலிலிதம் இருக்கவேண்டும். அவர்களால்தான் மேன்மையடையமுடியும். தாமாகக்கூறி அதனால் வீட்டை மாற்றியமைத்தவருக்கு பொருளாதார நஷ்டமோ இழப்போ ஏற்படக்கூடும். எனவே அரைகுறையாக வாஸ்துப் பலன் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.

வாஸ்து என்பதனால் கிரக பலத்தின் கெடுபலனைத் தடுத்துக்கொள்ள முடியுமே தவிர முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது. அதன் பாதிப்பு, வாஸ்துப்படி அமைந்த வீட்டில் தாங்கிக்கொள்ளும் வகையில் இருக்கும்.

சலவைக்கல் எங்கெங்கு பதிக்கலாம் என்பதைப் பார்ப்போம். சலவைக் கல்தானே என்ற அலட்சியம் வேண்டாம். ஈசான்யம் என்ற குரு திசையில் சிமென்ட் கட்டைகள் கட்டி, அதன்மீது சலவைக்கல் வைப்பது கூடாது. அதுபோன்று அமைத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவுபடும்.

கிராமங்களில் கொடிக்கா மூலை எனப்படும் வாயுமூலையான சந்திரன் திசையிலும், பிள்ளையார் மூலையிலும், அக்னிமூலையிலும் கட்டைபோன்று சிமென்டினால் கட்டிய அமைப்பில் சலவைக்கல் வைக்கலாம்.

ஒவ்வொரு திசையிலும் வீடு மட்டும் உயர்ந்து, வீட்டிற்கு வெளிப்புற நான்கு திசைகளும் ஒரே சீராக சமதள அளவில் சற்று பள்ளமாக இருப்பதை கூர்மபிருஷ்ட அமைப்பு என்று சொல்வர். உதாரணத்திற்கு, திருக்கோவில்களை ஆய்வு செய்தால் தரைத்தளம் உயர்ந்து கம்பீரமாக இருக்கும். சுற்றிவரும் பாதை சமமாக இருக்கும். மேடுபள்ளம் இருக்காது. இதைத்தான் கூர்மபிருஷ்ட அமைப்பு என்று கூறுவர்.

இதுபோன்ற அமைப்பில்தான் சலவைக்கல் அமைக்கவேண்டும். வாஸ்துப்படி புதியதாக வீடுகளைக் கட்டியும், பழைய வீடுகளை மாற்றியமைத்தும் வளமோடு வாழ்வோம்.

முற்றும்

செல்: 94434 80585

bala121018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe