குபேர வாஸ்து! 23

/idhalgal/balajothidam/kubera-vasthu-5

முற்காலத்தில் வீடுகட்டும்முன் கருப்பம் பேழை செய்து, அதற்குப் படையலிட்டு மனையின் ஈசான்ய மூலையில் பூமிக்கடியில் அமைத்து வீடு கட்டினர். தற்போது இம்முறை மறைந்துபோனது.

vasthuகருப்பம்பேழையை நல்ல மண், நண்டு தோண்டிய மண், யானையின் தந்தத்தால் கீறிய மண், புற்றில் இருக்கும் மண், குளத்து மண், எருதின் கொம்பால் கீறிய மண் ஆகியவற்றைச் சேர்த்து கருப்பம்பேழை செய்யவேண்டும். கருப்பம்பேழையில் நடுவில் ஒரு அறையும், அதனைச் சுற்றி நான்கு அறைகள் அல்லது ஆறு அறைகள் அல்லது எட்டு அறைகள் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். நடு அறையில்

முற்காலத்தில் வீடுகட்டும்முன் கருப்பம் பேழை செய்து, அதற்குப் படையலிட்டு மனையின் ஈசான்ய மூலையில் பூமிக்கடியில் அமைத்து வீடு கட்டினர். தற்போது இம்முறை மறைந்துபோனது.

vasthuகருப்பம்பேழையை நல்ல மண், நண்டு தோண்டிய மண், யானையின் தந்தத்தால் கீறிய மண், புற்றில் இருக்கும் மண், குளத்து மண், எருதின் கொம்பால் கீறிய மண் ஆகியவற்றைச் சேர்த்து கருப்பம்பேழை செய்யவேண்டும். கருப்பம்பேழையில் நடுவில் ஒரு அறையும், அதனைச் சுற்றி நான்கு அறைகள் அல்லது ஆறு அறைகள் அல்லது எட்டு அறைகள் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். நடு அறையில் பொன்னும், சுற்றியுள்ள அறைகளில் பஞ்சலோகம், தானியங்களும் இட்டுவைக்கவண்டும். ஒன்பது வகையான ரத்தினங்களையும் அதிலிட்டு நெய்வேத்தியம், பூஜைகள் செய்து ஈசானிய மூலையில் வைக்க, அவ்வீட்டில் செல்வமும், நிறைந்த வாழ்வும் உண்டாகுமென மனை நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறையானது தற்போது சடங்காக மாறி, நகைக்கடைகளில் பெயரளவிற்கு கற்களை வாங்கி அடியில் வைக்கும் பழக்கம், தங்கத்தகடு, எந்திரத்தகடு வைக்கும் வழக்கமுமாக மாறிவிட்டது.

கடந்த வாரங்களில் பல வாஸ்துக் குறிப்புகளைப் பார்த்துவிட்ட நிலையில், இங்கு திண்ணை அமைப்பு பற்றிக் காண்போம்.

தற்போது திண்ணை வைத்த வீடுகள் கட்டப்படுவதில்லை. முந்தைய தலைமுறையில் திண்ணை வீடுகளே அதிகம். திண்ணை வீடுகள் தெற்குப் பார்த்த- மேற்குப் பார்த்த வீடுகளுக்கு நல்ல பலனை அளிக்கும். ஆனால் வடக்கு மற்றும் கிழக்குப் பார்த்த வீடுகளுக்கு தவறான பலன்களை அளிக்கும். வடக்குப் பார்த்த வீடுகளில் ஈசானியப்பகுதியில் திண்ணையும், நடுவில் வீட்டிற்குச் செல்லும் வழியும், சந்திரன் திசையில் திண்ணையும் இருந்தால், அவ்வீட்டில் லாபம் ஒரு பங்கும், நஷ்டம் இரு பங்குமாக இருக்கும். படிப்படியாக வளர்ச்சி குறையும். கிழக்குப் பார்த்த வீடுகளில் ஈசானியத்திலும் சுக்கிர திசையிலும் (தீமூலை) திண்ணை இருந்து, நடுவில் வீட்டிற்குச் செல்லும் வழி இருந்தாலும் மேற்கண்ட பலனே இருக்கும். தெற்கு திசை எமன் திசை என்பர். தெற்குப் பார்த்த வீடுகளில் ராகு திசையான தென்மேற்கிலும், தென்கிழக்கு திசையான சுக்கிர திசையிலும் திண்ணை இருந்து, சுக்கிர திசையில் வீட்டிற்குச் செல்லும் படி இருந்தால் நல்ல பலனை அளிக்கும். வளம் கொழிக்கும். நோய்நொடி இல்லாமல் இருக்கலாம்.

மேற்குப் பார்த்த வீடுகளில் ராகு திசையிலும், சந்திரன் திசையான வடமேற்கிலும் திண்ணை இருந்தால் நற்பலன் அளிக்கும். ஆனால் மேற்குப் பார்த்த வீடுகளில் மேற்கண்ட திண்ணை அமைப்போடு தோட்டத்தில் அக்னி மூலையான சுக்கிரன் திசை மேடாக இருக்கவேண்டும். இவ்வமைப்பும் நல்ல பலனை அளிக்கும். நோய்நொடி இல்லாமல் வளமோடு வாழலாம்.

தற்போது சிலாப் அமைத்து திண்ணைகள் அமைக்கின்றனர். அதுபோன்று அமைத்தாலும் மேற்கண்ட பலன்கள் திசைக்குத் தகுந்தவாறு மாறுபடும். திண்ணை வைத்த பழமையான வீடுகள் கம்பீரமாக இன்றும் இருக்கின்றன. தவறான திண்ணை அமைப்புள்ள வீடுகள் பாழடைந்து வாரிசுகள் பாதிப்புடன் இருப்பதைப் பார்க்கிறோம்.

(தொடரும்)

செல்: 94434 80585

bala210918
இதையும் படியுங்கள்
Subscribe