Advertisment

குபேர வாஸ்து! வாஸ்து இராமு 21

/idhalgal/balajothidam/kubera-vasthu-4

வாஸ்துக் கடவுளான விஸ்வகர்மா, மயன், அநிருத்தர் போன்றவர்களுக்கு ஆலயங்களில் விக்ரகங்கள் உள்ளன. ஒருசில கோவில்களில் கர்ப்பகிரகங்களில்கூட இறைவனுக்கு அடுத்ததாக வாஸ்துக் கடவுளை நிர்மாணித்துள்ளனர். இந்தியப் பிரதேசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து அதன்வழி வாஸ்து சாஸ்திர நூல்கள் இயற்றப்பட்டன. விந்திய மலையி−ருந்து கிருஷ்ணா நதிவரை மயன் வாஸ்துவும், விந்தியமலைக்கு வடக்கில் காஸ்யப வாஸ்துவும், திராவிட நாடுகளுக்கு பிருகு வாஸ்துவும் கடைப்பிடிக்கப்பட்டது.

Adverti

vastu

வாஸ்து சாஸ்திரத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் தாமே வீட்டைஅமைத்து மிகவும் கஷ்டப்படுபவர்களும் இங்குண்டு. கடந்த வாரத்தில், ஒரு சிறிய குறைகூட பெரிய அளவு பாதிக்கும் என தெரிவித்திருந்தோம். ஈசான்யம் என்பது இறைவனுக்குரிய மூலை. இந்த மூலையை நாம் அறிந்தோ அறியாமலோ விட்டிருக்கலாம். அதனால் ஏற்படும் இழப்புகள் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதவை. எனவே பல்லாண்டு காலம் வாழப்போகும் நமது வீடு சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

கோடிக்கணக்கில் செலவுசெய்து நின்றுபோன கட்டடங்கள், வர்த்தக நிறுவனங்களின் சரிவுகள் போன்றவற்றுக்கு வாஸ்துக் குறைபாடே காரணமாகும். ஒரு மிகப்பெரிய நடிகர். அவரது துணைவியாரும் நடிகை. அவர்கள் வட்ட வடிவில் வீடுகட்டிக் குடியிருந்தனர். ஒருசில ஆண்டுக்குள்ளாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்தனர். தற்போது சில மாற்றங்களை அமைத்து சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கிரகபலத்தால் பொருள் இழப்பு, திருடுபோகுதல் பாதி என்றால், கட்டியவீடு சரியில்லை என்றாலும் பொருள் இழப்பு, திருடுபோகும் நிலை ஏற்படும்.

வடக்குப் பார்த்த வீடுகளுக்கு பின்புறத் தோட்டத்தையும் முக்கியமாகப் பார்க்க வேண்டும். தோட்டத்தில் கிழக்கு சார்ந்த அக்னி மூலையில் கேட் அல்லது வழி இருந்தால் திருடுபோகும். அல்லது வடக்கு முன்புறம் உள்ள கட்டடத்திற்கு அவ்வீட்டை ஒட்டாமல் கிளை வீடு தெற்குப் பகுதியில் சிறியதாகக் கட்டி, முன்புற வீட்டிற்கும் பின்புற வீட்டிற்கும் அக்னி மூலையில் வழி இருந்தால் அந்த வீட்டில் கண்டிப்பாகத் திருடுபோகும்.

அப்பார்ட்மென்டில் கிழக்குப் பார்த்த வீடுகளுக்கு இரு வழி அமைத்திருப்பர். வடகிழக்குப் பகுதியில் கேட் இருக்கும். தென்கிழக்குப் பகுதியில் கேட் இருக்கும். இதுபோன்று இருந்தால் லாபம் ஒரு பங்கும், நஷ்டம் ஒரு பங்கும் இருக்கும் அது மட்டுமல்லாமல் திருடும்போகும். நெருப்பு பிடித்தலுக்கு ஆக்னேய திசையின் தவறான அமைப்பே காரணமாகும். பல்வேறு வீடுகளில் கொள்ளை அடிப்பதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் வீட்டு அமைப்பே காரணமாகும். மற்ற திசைகளின் குறைபாடுகளால் திருடுபோவது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)

செல்: 94434 80585

bala310818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe