"விமானார்ச்சன கல்பம்' என்ற நூல், கட்டடம் நிர்மாணிக்கும் இடத்தில் பூப்பரீட்சை எப்படி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. பூமியை நன்கு பரீட்சிக்க உகந்த ஒரு மாதத்தில், சுக்லபட்சத்திலோ, கிருஷ்ணபட்ச முதல் மூன்று நாட்களிலோ பூமியை பரீட்சை செய்ய வேண்டும். தீபம், தாமரை மலருடன் கூடிய குடத்தைத் தாங்கியிருப்பவளுமாகிய கன்னிகையுடன் சென்று, பூப்பரீட்சை செய்யும் இடத்தை வலம்வந்து பின் சகுனத்தைப் பார்க்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வாஸ்து என்பது தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் எல்லாரும் நமக்கு அருளியது.
கிரக பலத்தை நாம் மாற்றமுடியாது. ஊழ்வினை காரணமாக நமக்கு வரும் பலனை நம்மால் தடுக்கமுடியாது. ஆனால் வாஸ்துப்படி அமைக்கப்பெற்ற வீடுகள்மூலம் கிரகங்களின் கெடுபலன் வேகத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.
கடந்த

கடந்த வாரங்களில் பல வாஸ்துக் குறிப்புகளைப் பார்த்தோம். இந்த வாரம் ஹால் அமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஹால் பகுதியின் மேற்புறம் நாம் பார்க்கும்போது அதன் அமைப்பு சதுரமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ இருக்க வேண்டும். இவ்வமைப்பு தவிர வேறுவகையில் இருந்தால் அதன் பலன்களையும் கெடுபலன் எனில் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதையும் பார்ப்போம்.
வடக்குப் பார்த்த வீடுகளுக்கு ஹால் அமைப்பு சதுரமாகவோ அல்லது நீள்சதுரமாகவோ இருந்தால் நல்ல பலனளிக்கும். வீட்டின் வடகிழக்கு மூலையான குரு திசையில் மட்டும் ஹால் வளர்ந்திருந்தால் மிக நல்ல பலனளிக்கும். ஆனால் குபேர திசை எனப்படும் சந்திர திசை வளர்ந்திருந்தால் மனம் தெளிவில்லாமல் குழப்பமாக இருக்கும். அல்லது தவறான எண்ணங்கள் ஏற்பட்டு அதன்வழி செல்ல நேரிடும்.
நல்ல எண்ணங்கள் உள்ளவர் தவறான அமைப்புள்ள வீட்டில் வசித்தால் தவறான பழக்கங்கள், செய்கைகள் என அனைத்தும் மாறிவிடும். இதுபோன்ற பலன்கள் இருந்தால் உடனே வீட்டை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். தவறினால் ஆண்டுகள் செல்லச் செல்ல தவறான பழக்கங்கள் அதிகரித்து, சமுதாயத்தில் மிகப்பெரிய தலைக்குனிவை சந்திக்க நேரிடும்.
ஹால் அமைப்பும், வாயில் அமைப்பும், முக்கியமாக வீட்டின் மூலைகளும் குறைந்துபோனால் குழந்தைகள் இல்லாமல் போய்விடும். அல்லது வாரிசு இருந்தாலும் அவை தங்காமல் போய்விடும். ஆண் வாரிசுகள் இறந்தால் அல்லது பிரிந்திருந்தால் அவ்வீட்டில் அடுத்த சில வருடங்களில் இதுபோன்ற பலன்கள் தொடர்ந்திருக்கும். மருத்துவத்தை மட்டுமே நம்பி குழந்தைக்காக செலவு செய்யாமல், வீட்டை தகுந்த வாஸ்து நிபுணர்களின் உதவியோடு திருத்தியமைத்து நல்ல பலனை அடைய வேண்டும்.
தெற்குப் பார்த்த வீடுகளுக்கு ஹால் அமைப்பு சதுரமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ இருக்கலாம். ஆனால் வாயிலை நோக்கி ஹால் வளரக்கூடாது. அவ்வாறு சுக்கிர திசையான வாயிலை நோக்கி ஹால் வளர்ந்திருந்தால் (தென்கிழக்கை ஒட்டி) கெடுபலன் இருக்கும். நிருதி மூலையான ராகு திசையில் ஹால் வளர்ந்திருந்தாலும் கெடுபலன் ஏற்படும். கிழக்குப் பார்த்த வீடுகளில் சதுரமான அல்லது நீள் சதுரமான ஹால் அமைப்பு இருக்கலாம். குரு திசையான வடகிழக்கை ஒட்டி கிழக்குப் பார்த்த வாயில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஆண்களுக்கு பெயர், புகழ்பெறும் பாக்கியம் ஏற்படும்.
அதுபோன்ற வீடுகளில் வசிக்கும் ஆண்கள் தவறே செய்திருந்தாலும், அவர்கள் செய்கின்ற இதர காரியங்களால் மிகப்பெரும் புகழ்பெறுவர். சமூகத்தில் கெட்ட பெயர் என்றும் ஏற்படாது. மேற்குப் பார்த்த வாசல் உள்ள வீடுகள் ஆண்களுக்கான நல்ல பலனைக் கொடுக்கும். மேற்குப் பார்த்த வீடுகளில் சதுரமாகவோ அல்லது நீள்சதுரமாகவோ ஹால் இருந்தால் நல்ல பலன் ஏற்படும். ஆனால் மேற்கு வாயிலை (வடமேற்கு) ஒட்டி ஹால் அமைப்பு வளர்ந்திருந்தால் தவறான பலனைக் கொடுப்பதாக இருக்கும்.
அதேபோன்று ராகு திசையான பிள்ளையார் மூலை வளர்ந்திருந்தால் வீண் கவலை இருக்கும்.
வீடுகளில் சின்னச்சின்ன குறைகள்கூட இல்லாமல் அமைத்து நிறைவான வாழ்க்கை வாழ்வோம். செவிவழிச் செய்தியாகவும், படித்த செய்திகளின் அடிப்படையிலும் வீட்டை மாற்றியமைக்க முற்படாமல், வாஸ்து நிபுணர்களைக் கொண்டு வசிக்கும் வீட்டை சரியாக அமைத்து நிம்மதியான- வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்த வாரம் ஹால் அமைப்பு தவறாக இருந்தால் எப்படி தடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.
(தொடரும்)
செல்: 94434 80585