தேவர்களுக்கெல்லாம் முதல்வன்- சிவப்பரம்பொருளாகிய நம் இறைவன் திசைபத்திலும் திகழ்பவன்.
விரிந்த கடல் சூழ்ந்த ஏழு உலகையும் கடந்து நிற்பவன். இப்படிப்பட்ட அளப்பரிய ஆற்றல் படைத்த நம் தலைவனை உணர்ந்தறியக் கூடியவர் எவருமில்லை. "உலகம் நெருப்புக் கோளமாக இருந்து குளிர்ந்தது; பின் இங்கே உயிர்கள் தோன்றி வளர்ந்தன' என்கிறது விஞ்ஞானம்.
இச்செய்தியினை முன்பே திருமூலர் அழகாகச் சொல்லியிருக்கிறார். உயிர்கள் உடலிலும், கடல் நடுவிலும், காட்டிலும், மலையிலும், ஏழு உலகங்களில் எல்லா இடங்களிலும் அளவோடு நெருப்பு இருக்கச் செய்தான். அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தான். அஞ்செழுத்தால் பல யோனி படைத்தான். அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்களை அஞ்செழுத்தால் அமர்ந்து நின்றானே என்கிறார். இறைவன் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களைப் படைத்தான்.
அந்த ஆற்றலை திருக்கோவில்களுக்கும் வீடுகளுக்கும் கொண்டு வருவதே வாஸ்து சாஸ்திரம்.
கடந்த வாரத்தில் ஹால் அமைப்பு பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் தவறான ஹால் அமைப்பினை எப்படி தடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.
ஹால் அமைப்பு தவறானால் பெயர் கெடும்; நோய் வந்து சேரும்; சுபநிகழ்வுகள் இல்லாமல் போகும். விரயச்செலவுகள் வந்துசேரும். "வீடு வாஸ்துப்படி அமைத்து நல்ல பலன் இல்லையே' என்று கூறுபவரும் உண்டு. வாஸ்து என்பது கிரகங்களின் கெடுபலன் இருக்கும்போது நமக்கு விரயமில்லாமல் காக்கும். கிரகங்களின் நல்ல பலன் இருக்கும்போது இருபங்காக பலன் வந்துசேரும். உதாரணமாக, கிரகபலத்திற்கு பெரிய கண்டம் இருப்பதாக இருந்தால், அது சிறிய அளவில் வைத்திய செலவோடு நின்றுவிடும். தாமே வாஸ்துப்படி அமைத்து அதனால் நல்ல பலன் இல்லையே என்று வருத்தமடைவதில் பயனில்லை. நல்ல வாஸ்து நிபுணரைக் கொண்டு வீட்டினை மாற்றி அமைத்து நலமோடு வாழ்வோம்.
ஹால் அமைப்பானது நான்கு திசைகளிலும் நடுவில் வளர்ந்தால் கெடுபலன் அளிக்கும். ஒவ்வொரு திசையிலும் அல்லது ஏதாவது ஒரு திசையின் வீட்டின் நடுவில் வளர்ந்தால் கெடுபலன் ஏற்படும். வீட்டின் குரு திசை வளர்ந்தால் செல்வம் வளரும்.
அக்கினி திசை ஹால் வளர்ந்தால் மானம் போகும்; மரியாதை இழக்கும். ராகு திசை வளர்ந்தால்- தெற்கு சார்ந்த ராகு திசை எனில் பெண்களுக்கும், மேற்கு சார்ந்த ராகு திசை எனில் ஆண்களுக்கும் உடல்நிலை பாதிக்கும். பொதுவாக சதுரமாக அல்லது நீள் சதுரமாக ஹால் இருந்தால் எந்தக் கெடுபலனும் இல்லை.
ஹால் அமைப்பு வட்டமாக இருந்தால் நிம்மதியற்ற உறக்கம் இருக்கும். சதுரம், நீள்சதுர ஹால் அமைப்பு நிம்மதியான உறக்கம் தரும். இவை படுக்கையறைக்கும் பொருந்தும். மேற்கு சார்ந்த சந்திரன் திசையில் ஹால் வளர்ந்தால் தவறான வழிக்கு இட்டுச்செல்லும்.
ஒரு வீட்டைப் பார்த்ததுமே அந்த வீட்டில் குறைந்தபட்சம் ஐந்து வருடம் வசித்திருந்தால், அவ்வீட்டினுடைய நல்ல பலனையும் கெடுபலனையும் கணித்துவிடலாம். வீடுகட்டி ஒவ்வொரு வருடமும் சிறிதேனும் வளர்ச்சி இருந்தால் அவ்வீடு வாஸ்துப்படி அமைந்துள்ளது என அறியலாம். ஒவ்வொரு வருடமும் படிப்படியாக பொருளாதாரம் மற்றும் அனைத்து செல்வங்களும் குறைவு ஏற்பட்டால் அவ்வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்பதை உணரலாம்.
ஹாலில் எந்த ஒரு மூலையும் வெட்டுப்படக்கூடாது.
அதுபோன்று வெட்டுப்பட்டால் வாஸ்துக் குறைபாடு ஏற்படும். வீடு நூறு சதவிகிதம் வாஸ்துப்படி இருந்தால் அது கோவிலாகிவிடும். இயல்பாகவே நாம் வாஸ்துப்படி அமைத்தாலும் கட்டடப்பணி மேற்கொள்பவர்களால் ஆங்காங்கே குறைகள் ஏற்படும் நிலை உள்ளது. புதிய வீட்டை அல்லது பழைய வீட்டை வாஸ்துப்படி அமைத்து நிம்மதியாக வாழ்வோம்.
செல்: 94434 80585