வியாசர் வகுத்த நான்கு வேதங்களில் உட்பிரிவுகள் பல உள்ளன. அவற்றில் கூறப்படும் விஷயங்கள் அனைத்தும் சத்தியமாகும். இவற்றில் பயனற்ற ஒரு எழுத்துக்கூட சொல்லப்படவில்லை. பெரியோர்கள் மந்திரங்களைச் சொல்லிப்லி பூஜைகள்செய்து நல்ல பலனை அடைந்திருக்கிறார்கள்.
மந்திரங்களைச் சொல்லிமழையையும் பொழியச் செய்துள்ளனர். உடல் பிணிகளையும் போக்கியுள்ளனர். பூஜைகள் சிறப்பாகச் செய்ய எழுந்தவையே வேத அங்கங்களில் ஒன்றான கல்ப சூத்திரங்களாகும். இறைவனின் வழிபாட்டுத் தலத்திற்கு வாஸ்து இலக்கணம் படைத்தவர்கள் ரிஷிகள். மனிதர்கள் வசிக்கும் இல்லங்களுக்கான லட்சணங்களையும் நமக்கு அருளியுள்ளார்கள். அதன்வழி நாமும் சென்று நிம்மதியோடு வாழ்வோம்.
கடந்த இதழ்களில் பல்வேறு விஷயங்களைப் பார்த்துவிட்டோம். இந்த வாரம் மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் படுக்கையறை எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
மனிதர்களுக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும். அதற்கு தென்மேற்கு மூலைதான் ஏற்ற இடமாக உள்ளது. அவசரமான இவ்வுலகில், அமைதியற்ற பரபரப்பான வாழ்வியலிலில் உடலுக்கும் மனதிற்கும் அசதியைப் போக்கி வலிலிமையைச் சேர்க்கும் இடமாக படுக்கையறை உள்ளது. நிம்மதியான உறக்கம் இருந்தால்தான் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். எனவே நல்ல உறக்கம் வேண்டுமெனில் ராகு திசையான நிருதிமூலையில் குடும்பத்தலைவர் படுக்கவேண்டும். படுக்கையறையில் இளநீல வண்ணம் தீட்டவேண்டும். அமைதியான உறக் கம் ஏற்படும். மாணவர்கள் கிழக்கிலும், நடுத்தர வயதினர் மேற்கிலும், பெரியவர்கள் தெற்கிலும் தலைவைத்துப் படுப்பது நல்லது. பொதுவாக தெற்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது. வடக்கில் தலைவைத்தல் கூடாது. கிராமங்களில், "வடக்கில் தலைவைத்தால் வாரிக்கொண்டு போகும்' என பழமொழிகூட சொல்வார்கள். வாரிக்கொண்டுபோவது என்பது செல்வத்தை மட்டுமல்ல; உடல்நலத்தையும்தான். எனவே வடக்குப்பார்த்து உணவருந்தவும் தலைவைத்து உறங்கவும் கூடாது.
படுக்கையறையில் தெற்கு மற்றும் மேற்குச் சுவர்களில் செல்ப் அமைத்துக் கொள்ளலாம். படுக்கையறைகளில் லாப்ட் அமைக்கும்போது, தெற்கு மற்றும் மேற்குச் சுவர்களில் வடக்கு அல்லது கிழக்கு ஒட்டாமல் அமைக்கலாம். வீட்டின் தென்மேற்கு மூலையில் குடும்பத்தலைவரும், மேற்கு அறைகளில் பிள்ளைகளும் படுக்கும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். தென்மேற்கு மூலையில் குடும்பத்தலைவர் படுப்பதோடு, அவ்வறையில் பொன்பொருள் வைக்கும் பீரோவையும் வடக்குப் பார்த்து அமைக்கலாம். பத்திரங்கள், சான்றுகள் வைக்கும் பீரோவை கிழக்குப் பார்த்து அமைக்கவேண்டும். செல்வம் சேரும். வீட்டை வாஸ்துப்படி அமைக்காமல் வெறும் பீரோவை மட்டும் வைப்பதால் பலன் ஏதுமில்லை.
குடும்பத்தலைவர் படுக்கும் அறைகளில் கழிவறை, குளியலறையைத் தவிர்க்கவேண்டும். வீட்டின் வடமேற்கு மூலையில் கழிவறை, குளியலறை அமைத்துப் பயன்படுத்தலாம். அம்மூலையான வாயுமூலையில் பிள்ளைகள் படுக்கலாம்; பிள்ளைகள் படிக்கலாம். குழந்தை பெற்றவர்கள் அல்லது அறுவைசிகிச்சை பெற்றவர்கள் வாயுமூலையில் படுக்கலாம்.
படுக்கக்கூடாத மூலைகள் உண்டு. அக்னிமூலையான சுக்கிர திசையில் படுத்தல்கூடாது. ஈசான்ய மூலையான குருதிசையில் படுத்தல் கூடாது. வீட்டின் இந்த திசைகளில் படுத்தால் நிம்மதியற்ற உறக்கமே இருக்கும். வீட்டின் இதர அறைகளைவிட, குடும்பத்தலைவர் படுக்கும் தென்மேற்கு மூலை தரைத்தளம் முக்கால் அடி உயரமாக அமைத்து, படுக்கையறையாகப் பயன்படுத்தினால் நோய் நொடிகள் இன்றி- கடனின்றி வாழலாம்.
(தொடரும்)
செல்: 94434 80585