Advertisment

குபேர வாஸ்து! 16

/idhalgal/balajothidam/kubera-vasthu-1

த்தராயன காலம் என்பது தை மாதம்முதல் ஆனிமாதம் வரையுள்ள காலமாகும். தட்சிணாயன காலம் என்பது ஆடிமாதம்முதல் மார்கழி மாதம் வரையுள்ள மாதமாகும். மனைபுகக் கூடாத மாதங்கள் எவையென சில்ப ரத்னாகரம் மனை நூல் கூறுகிறது. பங்குனி, ஆனி, புரட்டாசி மாதங்களில் குடிபுகுதல் கூடாது. இம்மாதங்களை தவிர்க்கவேண்டும். இம்மாதங்கள் கூனிமாதம் எனவும் கூறுகிறது. தொடர்ந்து கட்டுவதிலோ, வீடுகள் மாற்றி அமைப்பதில் தடை ஏதும் இல்லை. வீடுகட்டும்போது பழைய கதவு, ஜன்னல்கள், நிலைகளை பயன்படுத்தக்கூடாது. நாம் கட்டும் வீட்டுக்கு எதிரிலுள்ள கூரை நூறு வருடங்களுக்குப்பின் எப்படி உயரப்போகிறது எனக் கணக்கிட்டு தற்போதே அஸ்திவாரத்தை உயர்த்திக் கட்டவேண்டும். வீட்டைவிட சாலை எப்போதும் தாழ்ந்திருக்கவேண்டும்.

Advertisment

"வீதி உயர்வாகி வீடதுவே தாழ் வானால் ஊதியம் போய்விடும் சத்ருக்கள் புக்கில் பருகுவர்நோய் கவலை என்றுரைக்கும் நூல்' என மனை நூல்கள் தெரிவிக்கின்றன. எனவே வீதியைவிட வீடு எப்போதும் உயர்ந்திருக்கவேண்டும்.

வீட்டிற்கு எந்தெந்த வீதிகள் நல்லபலன் அளிக

வீட்டிற்கு எந்தெந்த வீதிகள் நல்லபலன் அளிக்கும் என பார்ப்போம். வீட்டிற்கு வடக்கு வீதி மிக நல்ல பயனை அளிக்கும். வீட்டிற்கு கிழக்கு வீதி அமைந்தாலும் வீட்டில் வசிப்பவர் புகழோடு வாழ்வர். வீட்டிற்கு மேற்கு மற்றும் வீட்டிற்கு தெற்கு வீதி இருப்பின் நாம் கட்டும் வீடு கண்டிப்பாக மனையின் தென்மேற்கினை ஒட்டி அமையவேண்டும். வீட்டிற்கு வடக்கும், கிழக்கும் வீதி அமைந்திருந்தால் மிக அதிர்ஷ்டமான மனையாக இருக்கும். மேற்கு வருணன் திசை, தெற்கு எமன் திசை. நமது வீட்டிற்கு மேற்கு அல்லது தெற்கு வீதி வந்தாலோ அல்லது மேற்கும், தெற்கும் வீதி வந்தாலோ வீட்டிற்குமுன் கண்டிப்பாக மரம் வளர்க்க வேண்டும். குறிப்பாக தென்மேற்கில் மரங்கள் வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் தோஷம் நீங்கும்.

kuberavastu

Advertisment

வீட்டிற்கு வடக்கு வீதி இருந்தால் பெண்களுக்கு நல்ல பலனை அளிக்கும். வடக்கு குபேர திசையாகும். வடக்கு வீதி இருந்தால் வர்த்தகம் பெருகும். தனம், தான்யம் வசதிகளுடன் வாழ்வர். கிழக்கு இந்திரன் திசையாகும். வீட்டிற்கு கிழக்கு வீதி இருந்தால் வழக்கறிஞர்கள், நடிகர்கள், நாட்டை ஆளும் அமைச்சர்கள், மருத்துவர்கள் ஆகியோர் மிகவும் புகழோடு விளங்குவர். தெற்கு எமன் திசையாகும். எனவே தெற்கு வீதி இருந்தால் வீதிக்கு எதிரே கண்டிப்பாக வீடு இருக்கவேண்டும். தெற்கே வீதி இருந்து தொடர்ந்து தெற்கு முழுவதும் இடம் காலிலியாக இருந்தால் அங்கு வசிப்பவர்களுக்கு கெடுபலன் ஏற்படும். தெற்குப் பார்த்த வீடுகளுக்கு எதிரே கண்டிப்பாக வீடு இருக்கவேண்டும். எதிரே வீடுகளே இல்லையெனில் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் வீட்டையே விற்கக்கூடிய கஷ்டங்கள் உருவாகும்.

இதனைத் தவிர்க்க தெற்கே வரிசையாக உயரமாக, வலுவான மரங்கள் அமைக்க வேண்டும். தெற்குப் பார்த்த வீடுகளுக்கு எதிரே தொடர்ந்து காலிலியாக மனைகள் இருந்தால் வலுவான மரங்களை நிறைய வைத்து தோஷங்களை நீக்கலாம். மேற்கு வருணன் திசையாகும். மேற்கு வீதி இருந்தால் ஆண்களுக்கு நல்ல பலன் அளிக்கும். மேற்கில் வீதி இருந்து மேற்குப் பார்த்த வீடுகளுக்கு எதிரே வீடுகள் இல்லாமல் மனைகளாக இருந்தால் ஆண்களுக்கு கெடுபலனை அளிக்கும். ஒருவேளை காலிலிமனைகள் இருந்தால் வீட்டின் தென்மேற்கு மூலையில் இருந்து மேற்குவரை கண்டிப்பாக மரங்கள் வரிசையாக, வலுவானதாக, மிகப் பெரியதாக, நெருக்கமாக அமைக்கவேண்டும்.

இதுபோன்று மரங்கள் வளர்த்தால் அரண்கள் போல் இருந்து நம்மைக் காக்கும்.

இப்போது வீதி அமைப்பைப் பற்றி பார்ப்போம்.

சாலைகள் வீட்டை விட உயரக்கூடாது. அப்படி உயர்ந்தால் வீட்டிற்கு கெடுபலன் அளிப்பதாக இருக்கும். ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டிய திருக்கோவில்களுக்கு எதிரே உள்ள சாலைகள் தற்போது உயர்ந்துவிட்ட காரணத்தினால் புகழ்பெற்ற திருக்கோவில்கள்கூட வளர்ச்சியில்லாமல் நில அருள் இழந்து போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோவிலுக்கு வடக் கிலுள்ள சாலை உயர்ந்து கோவில் சாலைக்கு தெற்கு பள்ளத்தில் அமைந்ததுபோல் உள்ளது. வடக்கு குபேர திசையாகும். இதனால் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோவில் நிலஅருள் இழந்து காட்சிப் பொருளாக இருப்பதுபோல் உள்ளது. தற்கால சிறிய சிற்ப திருக்கோவில்களில் உள்ள பக்தர்கள் கூட்டம், ஆற்றல் இவை யெல்லாம் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோவிலிலில் இல்லாதது, வடக்கு குபேர திசை சாலை உயர்ந்தது மட்டுமல்ல காரணம். திருக்கோவில் கட்டிய பின்னர் அதற்கடுத்த சந்ததியினர் கிணறுகளை தவறான இடத்தில் அமைத்ததும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் வீதி உயர்ந்து திருக்கோவில்கள் தரைத்தளம் தாழ்ந்துபோனது கோவில் வளர்ச்சி குறைவுபடக் காரணமாகிறது. இதே இலக்கணம்தான் நமது வீட்டிற்கும். எனவே சாலை உயர்ந்துவிட்டால் நமது வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துவது அவசியமாகிறது. ஆனால் இவை மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்குப் பொருந்தாது. காரணம் மேற்கு வருணன் திசை, தெற்கு எமன் திசையாகும். மேற்குப் பார்த்த வீடுகளுக்கு எதிரே உள்ள சாலை உயர்ந்து இருந்தால் தோஷமில்லை. அவை நல்ல பலனையே அளிக்கும். தெற்குப் பார்த்த வீடுகளுக்கு எதிரே உள்ள சாலை மிகவும் உயரமாக இருந்து தெற்குப் பார்த்த வீடு தாழ்வாக இருந்தால் தோஷம் இல்லை. தெற்கு எமன்திசை, எனவே தெற்கு சாலை உயர்ந்து தெற்கும் பார்த்த வீடுகள் தாழ்ந்து இருக்கலாம். இதுபோன்ற அமைப்புகள் நல்ல பலனை அளிக்கும்.

(தொடரும்)

செல்: 94434 80585

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe